விசாரனைகள் புதிதல்ல பல தடவைகள் சந்தித்து இருப்பதால் மனசில் பயம் ஏதும் இல்லை ஆனால் ஏன் கிருபா என்ற நபரை ஏன் தேடுகின்றாய் என்றால் என்ன சொல்லுவது.பலவாறு சிந்தித்துக்கொண்டே அவர்கள் வரச்சொன்ன இடத்திற்கு சென்றேன்.
அங்கே ஒரு இருபத்தி எட்டு முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு அதிகாரி என்னைக் கண்டதும் என்ன என்று கேட்டார்.நான் சொன்னேன் இப்படி விசாரணைக்கு வரச்சொன்னீங்க என்று.ஒக்கே என்று சொல்லிவிட்டு
எதிரே இருந்த கதிரையில் அமரச்சொல்லிவிட்டு சென்றுவிட்டார் ஒரு பத்துநிமிடம் கழித்து வந்தார்.
உன் பெயர் என்ன?(உரையாடல்கள் அவர்களது மொழியிலே இருந்தது)
சேர் எனக்கு தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிதான் தெரியும்? எனவே தமிழில் இல்லை ஆங்கிலத்தில் கேளுங்கள்
என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு தமிழில் பேசத்தொடங்கினார்?
உன் பெயர் என்ன?
ராம்......ராம்சரன்
ஊரு-இந்த ஊர்தான் சேர்
அப்ப அழகா புரிக்கு ஏன் போகிறாய்
அங்க ஒரு கோர்ஸ் படிக்கிறன் சேர்
படிக்கிறாயா என்ன கோர்ஸ்?
வெளிநாட்டு மொழித்தகமைக்கான ஒரு கோர்ஸ் சேர்
சரி? ஏன் கிருபா என்ற நபரை பற்றி விசாரித்தாய் யார் அவர்? உனக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம் ஏன் அவரை பற்றி விசாரித்தாய்?
கேள்விகளை அடுக்கிக்கொண்டுபோனார்?
பதில்கள் இலகுவாக சொல்லிவிடக்கூடியதுதான்.ஆனால் நான் சொல்லும் பதிலினால் வைஸ்னவி அக்காவுக்கு ஏதும் பிரச்சனைகள் வந்துவிடக்கூடாது ஒரு பெண் ஒரு ஆணைத்தேடுகின்றாள் என்றால்.அவளை தப்பானவளாகத்தான் பார்க்கும் இந்த சமூகம் அதற்கு அந்த அதிகாரியும் விதிவிலக்காக இருக்கமுடியாது. அதைவிட வைஸ்னவி அக்காவுக்கு வீண் பிரச்சனைகள் ஏற்படவும் வாய்புண்டு எனவே வருவது வரட்டும் எதுனாலும் என்னுடன் போகட்டும் வைஸ்னவி அக்காவை இதில் கோத்துவிடக்கூடாது என்று தெளிவாக முடிவெடுத்துக்கொண்டேன்
என்ன பதிலைக்காணாம் ஏன் விசாரித்தாய்? அவரது கம்பீரக்குரல் என் சிந்தனையை கலைத்தது.
அது அது வந்து சேர்.சின்ன வயசில் எனக்கு அவரை தெரியும்.அதன் பிறகு நீண்டகாலமாக தொடர்புகள் இல்லை இப்போது அழகாபுரியில் இருப்பதாக கேள்விப்பட்டேன் அதுதான்.
எனது பதில் அவருக்கு திருப்திகரமாணதாக இல்லை போல
உண்மையை சொல்லு என்று சற்று மிரட்டல் தொணியில் கேட்டார்?
நான் திரும்பவும் அதே பதிலை சொன்னேன்
அவருக்கு என் பதிலில் நம்பிக்கை இல்லை மறுபடியும் உண்மையை சொல்லு என்று கேட்டுக்கொண்டேயிருந்தார்..
நானும் ஆறு பட வடிவேல் ஸ்டைலில் ஆறா எந்த ஆறு ஓ அந்த ஆறா? என்பது போல சொன்ன பதிலையே திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டு இருந்தேன்
அவருக்கு கோபம் தலைக்கேறியது மேசைக்கு கீழேயிருந்து ஒரு பீ.வீ.சி பைப்பை எடுதார்.
மரியாதையாக உண்மையை சொல்லிடு ஏன் கிருபா என்ற நபரை பற்றி விசாரித்தாய் என்றார்?
நான் முதல் சொன்ன அதே பதிலை சொன்னேன்.
அவ்வளவுதான் கையில் வைத்திருந்த பீ.வீ.சி பைப்பால் ஒங்கி ஒரு அடிவிட்டார்.
அடி முகத்தில் படப்போகின்றது என்பதை உணர்ந்துகொண்ட நான் அதை கையால் மறித்தேன்
அது அவருக்கு மேலும் கோபத்தை அதிகரித்துவிட்டது
மறுபடியும் இன்னும் ஒரு அடி அடித்தார் அதையும் கையால் மறித்துவிட்டேன். என் கையில் பீ.வீ.சி பைப் கீறியதில் கையில் இருந்து குருதி வந்துகொண்டு இருந்தது.
அவர் அடித்ததை நான் மறித்ததும் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற அவர் பூட்ஸ் காலால் எட்டி முகத்தில் உதைத்தார் கதிரையில் இருந்த நான் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட அவருக்கு வசதியாக போய்விட்டது.
அவரது ஆத்திரம் தீரும் மட்டும் பூட்ஸ் காலால் உதைத்தார்.
பார்கெட்டில் இருந்த ஒரு சிகரட்டை பற்றவைத்துக்கொண்டு கேட்டார் வெளியால் போயிட்டு வருவேன் மரியாதையாக உண்மையை சொல்லிவிடு இல்லைனா துலைச்சி போடுவன் என்று சொல்லிவிட்டு வெளியால் போய்விட்டார்.
உதடு கிழிந்து குருதி வந்துகொண்டு இருந்தது உடம்பெல்லாம் பூட்ஸ் அடையாளம் பதிந்துபோய்விட்டது.மெதுவாக கையை ஊன்றி எழுந்து நின்றேன் நிற்கமுடியவில்லை அருகில் இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டேன்.
செல்போன்.பர்ஸ் எல்லாம் வேண்டிவிட்டார்கள்.எனவே அங்கே உணவு கொடுக்க வந்திருந்த ஒருவரின் செல்போனை வேண்டி எனக்கு தெரிந்த இன்னும் ஒரு அதிகாரிக்கு போன் செய்து விடயத்தை சொன்னேன்.அரைமணித்தியாளத்தில் வருவதாக சொன்னார்.
எனக்கு சிறிது நம்பிக்கை துளிர்விட்டது.ஆனால் அதற்குள் வெளியால் சென்ற என்னை விசாரித்த அதிகாரி வந்துவிட்டார்.மனசில் சிறிய பயம் தொற்றிக்கொண்டு விட்டது.மறுபடியும் அடிக்கப்போகின்றாரோ என்று.
ஆனால் நான் எந்த பிறவியில் செய்த புண்ணியமோ நான் போன் செய்த அதிகாரி வந்துவிட்டார்.அவர் வந்து என்னைவிசாரித்த அதிகாரியிடம் எனக்கு தெரிந்த பையன் தான் பிரச்சனையில்லாதவன்.ஏதோ தெரிந்த ஆளைத்தான் விசாரித்து இருக்கான் பிரச்சனையில்லை விட்டுவிடுங்கள் என்று சொல்லவும்.என்னை அடித்த அதிகாரியும் சரி என என் போன் நம்பர்.அட்ரஸ் எல்லாம் வாங்கி வைத்துவிட்டு போ என்று அணுப்பிவிட்டார்.
வீட்டிற்கு வந்து அப்படியே படுத்துவிட்டேன்.நல்ல காலம் அன்று சனிக்கிழமை என்பதால் அன்றும் அடுத்தநாளும் கிளாஸ் இல்லை இனி திங்கள் கிழமைதான் கிளாஸ் எனவே.கல்லூரிக்கு போகத்தேவையில்லை இதனால் நொண்டி நொண்டி நடப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்விகளுக்கு பதில்சொல்லத் தேவையில்லை,வைஸ்னவி அக்காவிடமும் விடயத்தை மறைத்துவிடலாம்.
அவருக்காக நான் அடிவாங்கினேன் என்று அறிந்தால் மிகவும் வேதனைப்படுவார் அவருக்கு மனக்கஸ்டங்களை கொடுக்ககூடாது
அத்துடன் அவருக்காக அடி வாங்கினேன் என்றால் என் மேல் அனுதாபம் ஏற்படும்.எனக்கு தேவை அவரின் அனுதாபம் இல்லை அவரின் அன்புதான் எனவே அவரிடம் இருந்து இதை மறைப்பது என்று முடிவு செய்து அதை அவரிடம் அப்போது மறைத்துவிட்டேன்.ஆனால் இப்போது இந்த உலகில் எங்கோ ஒரு மூலையில் இருந்து அவர் இந்த தொடரை படித்தால் அறிந்து கொள்ளப்போகின்றார் அதை தவிக்கமுடியாது.ஆனால் அப்போது அதை நான் அவரிடம் மறைத்தது என் மனசாட்சிக்கு சரி என்றே பட்டது.
சரி விடயத்துக்கு வருவோம் எவ்வளவு நேரம் படுத்திருந்தேன் என்று தெரியவில்லை எழுந்த போது மறுநாள் காலைவிடிந்திருந்தது.என்னுள் இப்போது ஒரு வைராக்கியம் வேண்டின அடிக்காவது எப்படியும் கிருபா என்ற அந்த நபரை கண்டுபிடித்துவிடவேண்டும்.என்று நினைத்துக்கொண்டேன்.
அன்று பின்னேரம் வைஸ்னவி அக்காவிடம் இருந்து போன்.என்ன ராம் செய்யுறீங்க அவர் பற்றி ஏதும் தகவல் கிடைத்ததா என்று?.
இல்லை தேடிக்கொண்டு இருக்கின்றேன் நண்பர்களிடம் சொல்லியிருக்கின்றேன் எப்படியும் கண்டு பிடித்துவிடலாம் யோசிக்காதீர்கள் என்று அவருக்கு ஆறுதல் சொன்னேன் ஆனால் மனசு முழுக்க சிந்தனை எப்படி கண்டுபிடிக்கப்போகின்றேன் என்று.
அப்போதுதான் வைஸ்னவி அக்கா அந்த செய்தியை சொன்னார்.கிருபாவின் போட்டோ ஒன்று கிடைத்திருக்கின்றது ராம்.(கோவில் திருவிழா வீடியோவில் இருந்து கிடைத்திருக்கின்றது.) நாளைக்கு க்ளாஸ்க்கு வாங்க தருகின்றேன் என்று.
எனக்கு இப்போது இன்னும் நம்பிக்கை துளிர்விட்டது எப்படியும் கண்டுபிடித்துவிடலாம் என்று.
மறுநாள் க்ளாஸ்க்கு சென்றேன் காலில் சிறிது வலியிருந்தாலும் யாரும் கண்டு பிடித்துவிடக்கூடாது என்பதால் இயல்பாக இருப்பது போல காட்டிக்கொண்டேன் ஆனால் வர்ஷிகா கண்டுபிடித்துவிட்டாள்
யாரு புதுஷா ஒரு கேரக்டர் கதையில் நுழையுது என்று பாக்குறீங்களா? புதுசு இல்லை ஏற்கனவே அறிமுகமான கேரக்டர் தான் முன்பு சொன்னேன் நான் ஒருத்தியை காதலித்துக்கொண்டு இருந்தேன் என்று.அவள் தான் வர்ஷிகா.
வர்ஷியிடம் உண்மையை சொல்லமுடியாது காரணம் அவள் ஏற்கனவே சொல்லிவிட்டாள் வைஸ்னவி அக்கா விடயத்தில் அவருக்கு உதவி செய்தாய் என்றால் துலைச்சுப்போடுவன் என்று.அத்தோடு எனக்கு வைஸ்னவி அக்காவுக்கும் ஏதோ தவறான உறவு இருப்பதாக வேறு அவளுக்கு சந்தேகம் இப்படி இருக்க வைஸ்னவி அக்காவுக்காக அடிவாங்கினேன் என்று சொன்னால் என்னாகும் நினைச்சு பார்க்கவே ரணகளமாக இருந்தது எனவே.
பைக்கால விழுந்துட்டன் என்று அவளிடம் சொன்னேன்.
நேற்று சொன்னது போல வைஸ்னவி அக்கா கிருபாவின் போட்டோவை கொண்டு வந்து தந்தார்.அவரது ஜபோட்டில் ஸ்கிறீன் வோல்பேப்பராக கிருபாவின் படத்தைதான் செட் பண்ணியிருந்தார்.நான் அந்த படத்தில் உள்ளவரை சிறுது நேரம் உற்றுப்பார்த்தேன்.
பார்த்த உடன் பெண்கள் மயங்கிவிடும் அளவுக்கு அவர் ஒன்றும் பேரழகன் எல்லாம் கிடையாது.பெண்களை கவரும் காந்தசக்தி ஏதும் அந்த முகத்தில் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.அதுவும் வைஸ்னவி அக்கா போல ஒரு பேரழகி இவர் மேல் காதலாகி கசிந்துருகும் அளவுக்கு அவர் நிச்சயம் கவர்சிகரமானவராக இல்லை.ஆனால் அவரிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது.ஒரு அழகுப் பதுமையை அவர் கவர்திழுத்திருக்கின்றார் என்றால் நிச்சயம் அவரிடம் ஏதோ ஒரு சக்தியிருக்கின்றது.ஒரு வேளை வைஸ்னவி அக்கா சொல்வது போல பூர்வ ஜென்ம பந்தமாக கூட இருக்கலாம்.அதைவிட பெண்களை கவரும் ஆண்மகன் பேரழகனாக இருக்கவேண்டியது இல்லை அவனது அகம் அழகாக இருந்தாலே போதும் பெண்களுக்கு பிடித்துப்போகும் என்று எங்கோ படித்ததாக ஞாபகம்.
என்ன ராம் என்ன யோசனை என்று வைஸ்னவி அக்கா என் மெளனம் கலைத்தார்.
இல்லை அக்கா உங்களை போல ஒரு சூப்பர் பிகர் மடங்கும் அளவுக்கு இவர் ஒன்றும் ஒர்த் இல்லை என்று தோன்றுகின்றது என்றேன்.
ஹலோ பாஸ் உங்கள் கிட்ட அவர் பற்றி அபிப்பிராயம் கேட்கவில்லை.அவரை கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை அதை மட்டும் பாருங்கள் என்றார் நகைச்சுவை கலந்த தொணியில்.
சரி சரி கூல் நாம் சும்மா சொன்னேன்.கண்டுபிடித்திடலாம் யோசிக்காதீங்க
இல்லை ராம் எனக்கு பயமாக இருக்கு ஒரு வேளை அவரிடம் என் மனசை பறிகொடுத்ததை சொல்லாமலே வெளிநாட்டுக்குபோய்விடுவேனோ என்று?
அப்படி எல்லாம் நடக்காது நிச்சயம் கண்டுபிடித்துவிடலாம் யோசிக்காதீங்க
இல்லை ராம் எனக்கு அந்த மனுசனை பாக்குற போது எல்லாம் நான் என்னையே மறந்து போய்விடுவேன்
அந்த மனுசன் என்று கிருபா பற்றிகுறிப்பிடும் போது வைஸ்னவி அக்காவை பார்த்தேன் ஒரு பெண் காதல் வயப்பட்டு இருக்கும் தருனத்தை மிக அருகில் இருந்து நான் பார்த முதல் சந்தர்ப்பம் அது.வார்தைகளால் வர்ணிக்க முடியவில்லை காதலால் அந்த அழகு தேவதையின் முகம் சிவந்துபோய் கொள்ளை அழகாக காட்சியளித்தது.
என் உயிர்த்தோழி எமக்கிடையில் இருக்கும் கலங்கம் இல்லாத நட்பு என்பதை எல்லாம் மறந்து ஒரு கனம் நானே அவர் அழகில் தடுமாறிப்போனேன்.ஒரு பெண் காதல் வயப்பட்டு அந்த உணர்வை வெளிப்படுத்தும் தருணம் அதுவும் அவள் பேரழகியாக இருந்தால் நான் மட்டும் அல்ல துறவிகளும் அந்த நொடியில் தடுமாறிப்போய்த்தான் விடுவார்கள்
என்ன பாஸ் அப்படி பாக்குறீங்க என்று என் சிந்தனையை கலைத்தார் வைஸ்னவி அக்கா?
இல்லை நீங்க கிருபா பற்றி சொல்லும் போது உங்கள் முகம் மேலும் அழகாகின்றது அதுதான் பார்துகிட்டு இருந்தேன்
அடிங்க.........யோவ் ராம் நான் பீல்பண்ணி அவர் பற்றி சொல்லிகிட்டு இருக்கேன் நீ என்னைய சைட் அடிக்கிறியா பிச்சி புடுவன் பிச்சு ராஸ்கோல் என்று செல்லமாக திட்டினார்.
ஹி.ஹி.ஹி.ஹி.........சரி சொல்லுங்க என்றேன் பவ்வியமாக
அது அந்த பயம் இருக்கட்டும் என்று தொடர்ந்தார்.
கடந்த திருவிழாவின் போது நான் சாமி கும்பிட்டுக் கொண்டு போய்க்கொண்டு இருக்கின்றேன்.எதிரே பஞ்சாமிருத சட்டியை தூக்கிகிட்டு அந்த மனுசன் வருகிறான்.மிக அருகில் அவரது கண்களை சந்தித்தேன் ராம்.அந்த நொடி அதுவும் என்னை பார்தது.அப்போது அதனுடன் ஒரு ஜென்மம் வாழ்ந்துவிட்டதை போல உணர்ந்ததுகொண்டேன் ராம்......
சில நேரங்களில் வைஸ்னவி அக்கா இப்படித்தான் கிருபாவை அந்த மனுசன்,அது.இது என்று ஒருமையில் செல்லமாக குறிப்பிடுவார்.
இவ்வளவு பீல் பண்ணுறீங்க அக்கா நிச்சயம் எவ்வளவு ரிஸ்க் எடுத்தாலும் நான் அவரை கண்டுபிடித்து தாறேன்..
கவனம் ராம் உங்களுக்கு இதனால் ஏதேனும் பிரச்சனைகள் வந்துவிடக்கூடாது உங்கள் சேப்டி முக்கியம்.
ஒக்கே அக்கா என்று சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக்கொண்டு கல்லூரிவாசலுக்கு வரவும் அங்கே வர்ஷி நின்றுகொண்டு இருந்தால்
ஆஹா இவள் கிளாஸ் முடிந்ததும் போய்விட்டாள் என்று அல்லவா நினைத்தேன் எப்படி திரும்பி.ஜயையோ அப்ப வைஸ்னவி அக்காவிடம்கதைத்துக்கொண்டு இருந்ததை பார்த்திருப்பாளோ.
செத்தடா மவனே என்று நினைத்துக்கொண்டே.
என் வர்ஷி பஸ் வரலையா என்றேன்?
பஸ் வாரது இருக்கட்டும் க்ளாஸ் முடிந்து ஒருமணித்தியாளம் ஆகிட்டு இவ்வளவு நேரம் நீங்க என்ன செய்து கொண்டு இருந்தீங்க ?
இல்லை வைஸ்னவி அக்காவுக்கு ஒரு மணிகுத்தான் பஸ் சோ அதான் அவங்க கூட கதைத்துக்கொண்டு இருந்தன்.
ஒ அப்ப இதுதான் வழமையாக நடக்குது போல.?
இல்லை வர்ஷி.......... இன்று மட்டும் தான் கதைத்துக்கொண்டு இருந்தேன்
இங்க பாருங்க நீங்க யாருடன் கதைத்தால் எனக்கு என்னப்பா நல்லா கதையுங்க ஏன் பஸ்சில கொண்ட ஏத்தி விட்டுட்டும் வந்திருக்கலாமே ?
ஜயோ வர்ஷி?
என்ன?
ஏன் இப்படி கதைக்குறீங்க?
நான் அப்படித்தான் கதைப்பன்? என்ன செய்வீங்க?
நான் சண்டை போடவிரும்பல
ஒ சண்டை வேற போடுவீங்களா என்னுடன்?
ஏன் வர்ஷி சும்மா லூசுமாதிரி கதைக்குறீங்க. வாங்க வீட்ட போவோம் என்று அவளை அழைத்துக்கொண்டு போய் பஸ்சில் ஏற்றிவிட்டேன்.போகும் போது சொன்னாள் நாளைக்கு கிளாஸ்க்கு வாங்க உங்களுக்கு இருக்கு என்று?
சரி சரி நீ போம்மா? வெயில்ல நிண்டால் நீ கருத்துருவடி ஏஞ் செல்லம் என்று மாயி பட வடிவேல் ஸ்டைலில் சொன்னேன்.
நான் சொன்னது அவளுக்கு சிரிப்பை வரவழைத்துவிட்டது சிரித்துவிட்டாள்
தாங்ஸ் தலைவா என்று வடிவேலுக்கு ஒரு நன்றியை சொல்லிக்கிட்டேன்.
அப்போது என் செல்போன் சிணுங்கியது
அழகா புரியில் இருக்கும் என் நண்பன் ஒருவன் தான்
டேய் ராம் நீ சொன்ன கிருபா பற்றி ஒரு தகவல் கிடைச்சிருக்கு எங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள ஒரு கோவிலில் அப்படி ஒருவர் பூசை செய்கின்றாராம் நாளைக்கு காலையில் வா போய் பார்ப்போம் என்றான்.
சரிடா நாளைக்கு போய் பார்போம் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினேன்
(தொடரும்)
|
6 comments:
தம்பி ராஜ்!நலமா?///கதை நன்றாக விடு(எழுது)கிறீர்கள்!///உங்கள் ஆக்கங்களில்,உங்கள் தானைத் 'தலைவி'யையே பதித்து அழகு பாருங்கள்,"நிக்காஹ்" ஆகி விட்ட எங்கள்(ஆ.வி.+என்)'நஸ்' செல்லம் வேண்டாம்,ஹ!ஹ!!ஹா!!!
@Subramaniam Yogarasa
நல்ல சுகம் ஜயா நீங்கள் எப்படி இருக்கினறீர்கள்.ஹா.ஹா.ஹா.ஹா. என் தானைத்தலைவியின் போட்டோ இணைக்க ஆசைதான் பட் கூகுள்ள அவங்க வெட்கப்படுறமாதிரி போட்டோ இல்லைங்கோ உங்க தலைவி நஸ் செல்லம் போட்டோதான் சிக்குச்சி
அவங்க(நஸ்)எங்களுக்கு "மட்டும்" தான் செல்லம்,பீ கேர்புல்!
@Subramaniam Yogarasa
ஆத்தாடி ரொம்ப கோவக்காரராக இருப்பீங்களே ?
K.s.s.Rajh said...ஆத்தாடி ரொம்ப கோவக்காரராக இருப்பீங்களே ?க்கும்..................////K.s.s.Rajh said...அவங்க வெட்கப்படுறமாதிரி போட்டோ இல்லைங்கோ!///வெக்கப்படத் 'தெரியாது' ன்னு ஓப்பினா சொல்லுங்க,ராசா!
@Subramaniam Yogarasa
தெரிஞ்சிடுச்சா தெரிஞ்சிடுச்சா
Post a Comment