கடந்த சில நாடகளாக சகுனி படம் பற்றி பலர் பலவிதமாக கருத்துக்களை சொல்லி வருகின்றனர்.பலரது விமர்சனங்களில் சகுனி அவ்வளவு நல்ல பெயரை பெறவில்லை.ஆனாலும் அது அவ்வளவு சப்பை படமா?
எவ்வளவோ மொக்கை படம் எல்லாம் பார்த்திட்டம் இதை பார்க மாட்டமா?சரி பார்ப்போம் என படம் பார்த்தேன்..
படத்தின் கதை-(அப்படி எதாவது இருக்கா)கார்த்தியின் சொந்த ஊரில் இருக்கும் அவரின் வீட்டை ரயில்வே ட்ராக் போடுவதற்காக இடிக்க போகின்றார்கள்.கார்த்தி சென்னைக்கு போய் அங்கு மினிஸ்டரை சந்தித்து மனுகொடுத்து தன் வீட்டை காப்பாத்த வருகின்றார்....அங்கு பலரால் ஏமாற்றப் படும் கார்த்தி.பின் கிங் மேக்கராக மாறி அரசியலில் எவ்வளவு மாற்றங்களை உண்டு பண்ணுகின்றார்.கடைசியில் தன் வீட்டை மீட்டாரா இல்லையா என்பதுதான் கதை.
சந்தாணத்தின் பாத்திரம் தான் படத்தை ஓரளவு தூக்கி நிறுத்துகின்றது.
அதைவிட இந்த படத்தில் ஹீரோயின் என்ற ஒருவர் இருக்காரா?ஹீரோக்களுக்காக படம் பார்க்க வரும் ரசிகர்கள் எந்தளவோ அதுக்கு சமமாக ஏன் அதுக்கும் மேல ஹீரோயினுக்காக படம் பார்க்க வரும் ரசிகர்கள் இருக்காங்க(நாங்க தான்)ஹி.ஹி.ஹி.ஹி.....சோ இதுல ஏதோ பசிக்கிற குழந்தைக்கு மிட்டாயை காட்டி இதுதான் மிட்டாய் ஆனா தரமாட்டேனு சொல்லுற மாதிரி இருக்கு ஹீரோயின் பாத்திரம்.
நாங்கெல்லாம் ஜஸ்வர்யாராயிக்காகவே 50 வாட்டி ஜோதா அக்பர்,சிம்ரனுக்காக 20 வாட்டி கோவில் பட்டி வீரலட்சுமி,நக்மாவுக்காக 15 வாட்டி பாட்ஷா,ஜோதிகாவுக்காக...10 வாட்டி சந்திரமுகி.அஞ்சலிக்காக 5 வாட்டி மங்க்காத்தா,ஹன்சிக்காவுக்காக 1 வாட்டி வேலாயுதம்(ஹி.ஹி.ஹி.ஹி) பார்தவங்க எங்க கிட்ட ஹீரோயினை சும்மா ஒரு சில சீன்ல காட்டினா அந்தப் படம் பார்பமா? ஹி.ஹி.ஹி.ஹி.......
![]() |
இவங்க தான் சகுனி பட ஹீரோயின் ஹி.ஹி.ஹி.ஹி...... |
அப்பறம் கார்த்தி தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர்.அவரது படங்கள் எல்லாம் உடனே பார்த்துவிடுவேன் ஆனால் அவரின் ஏனைய படங்களுடன் ஓப்பிடும் போது சகுனி சறுக்கல் தான்.
படத்தின் அனுஷ்கா,ஆண்ட்ரியா,பாத்திரம் எல்லாம் ஏன் என்று தெரியவில்லை.அது எல்லாம் தேவையே இல்லை.
பிரகாஸ்ராஜ் படத்திற்கு நல்ல தேர்வு.ஆனாலும் வழமையான படங்களில் பார்க்கும் அதே வில்லத்தன நடிப்புதான்.இவரின் பாத்திரத்தையாவது கொஞ்சம் மெருகூட்டியிருக்கலாம்.
சில காட்சிகளில் வந்தாலும் நாசர் மனதை அள்ளுகின்றார்.ராதிகாவின் பாத்திரம் பரவாயில்லை.
ஹீரோயின் அம்மாவாக வரும் ரோஜா,அப்பறம் கிரண்,இப்படி நட்சத்திர பட்டாளம் படத்தில் இருந்தும் படம் பெருசா ரசிக்கும் படி இல்லை.
பாடல்கள் பரவாயில்லை ஆனாலும் பெரிதாக மனதில் ஒட்டவில்லை.
அதற்காக படம் முழுவதும் மொக்கை என்றும் இல்லை பார்கலாம்.
ஆனால் கொஞ்சம் மெருகூட்டியிருந்தால் பக்கா கமர்சியல் படமாக இருந்திருக்கும் ஜஸ்ட் மிஸ்.
|
16 comments:
மொக்கையில்ல பார்க்கலாம்...!ஒரு தடவை!
அதென்ன கொக்கை....பேச்சு வழக்கா...?ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா...?
படம் சுமார் ரேஞ்ச்தான்,பாடல்களும் அப்பிடித்தான், ஆனா இவங்க டிவி வழியே கொடுக்கிற பில்ட்அப்களை பார்த்தால் ...... முடியல
@வீடு சுரேஸ்குமார்
சாரி பாஸ் மொக்கைதான் ஸ்பெலிங் மிஸ் ஆகிடுச்சி நன்றி பாஸ்
@ Shanmugan Murugavel said...
படம் சுமார் ரேஞ்ச்தான்,பாடல்களும் அப்பிடித்தான், ஆனா இவங்க டிவி வழியே கொடுக்கிற பில்ட்அப்களை பார்த்தால் ...... முடியல
////
உண்மைதான் பாஸ்
நன்றி பாஸ்
படம் பார்த்துவிட்டீங்க ?ம்ம் இப்ப நான் படம் எல்லாம் பார்க்கிறது இல்ல திருந்திவிட்டனோ விசில் பார்த்து!ஹீஹீகொர்ர்ர்ர்!
படம் இன்னும் பார்க்கவில்லை நண்பரே ! இனிமேல் தான் .... பகிர்வுக்கு நன்றி நண்பரே !
எனக்கும் உங்கள் கருத்துதான். படம் குப்பை, திராபை என்று சகட்டு மேனிக்கு திட்டுகிறார்கள். ஆனால் அவ்வளவு மோசமில்லை. உங்கள் விமர்சனத்தில் மெருகு கூடி இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே
நான் பார்த்தேன்.60 புள்ளி போட்டேன்
@தனிமரம்
ஹி.ஹி.ஹி.ஹி.........நன்றி பாஸ்
@ திண்டுக்கல் தனபாலன் said...
படம் இன்னும் பார்க்கவில்லை நண்பரே ! இனிமேல் தான் .... பகிர்வுக்கு நன்றி நண்பரே !
////
நன்றி பாஸ்
@ பாலா said...
எனக்கும் உங்கள் கருத்துதான். படம் குப்பை, திராபை என்று சகட்டு மேனிக்கு திட்டுகிறார்கள். ஆனால் அவ்வளவு மோசமில்லை. உங்கள் விமர்சனத்தில் மெருகு கூடி இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே
////
மிக்க நன்றி பாஸ்
@
Athisaya said...
நான் பார்த்தேன்.60 புள்ளி போட்டேன்
////
நன்றி சகோ
வணக்கம் ராசு மிக நிண்ட நாளுக்கப்புறம் சந்திக்கிறேன்...
உண்மைய சொன்னால் நான் இன்னும் படம் பார்க்கவில்லை ஆனால் பலரது விமர்சனம் படித்து விட்டேன்.. இதற்காக நேரம் ஒதுக்க மனமில்லை... நேரம் கிடைக்கையில் பார்க்கலாம்..
படத்துக்கான விமர்சனம் நல்லா இருக்கு
ஆனால் எனது இன்னொரு பாடலுக்கான
விமர்சனம் தெரிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன் சகோ .
@♔ம.தி.சுதா♔
வாங்க பாஸ் எப்படி சுகம்?
நன்றி பாஸ்
//// அம்பாளடியாள் said...
படத்துக்கான விமர்சனம் நல்லா இருக்கு
ஆனால் எனது இன்னொரு பாடலுக்கான
விமர்சனம் தெரிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன் சகோ/////
நன்றி அக்கா
Post a Comment