என் நட்பு வட்டாரத்தில் பெண்கள் பெரிதாக இல்லை என் கூட பாடசாலையில் படித்த சிலர் பேர் தொலைபேசியில் கதைப்பார்கள்,சிலர் பேஸ்புக்கில் அவ்வப்போது சட் பண்ணுவார்கள் ,தற்போது என் வலைப்பதிவை படித்து பல சகோதரிகள் நட்பாக இருக்காங்க.
படிக்கும் போதும் பொண்ணுங்களிடம் அவ்வளவு நட்பாக இருந்தது இல்லை அவர்களுடன் எதாவது விவாதம் செய்து கொண்டே இருப்பேன்..
நான் விவாதிக்காவிட்டாலும் பொண்ணுகளே எதாவது ஓரு விவாதத்தை கொண்டுவருவார்கள்..நம்ம ராசி அப்படி...
அப்படி என்கூட விவாதம் செய்யும்,என்கூட அடிக்கடி சண்டை போடும் என்கூடப்படித்த ஓரு நண்பி பற்றிய பதிவுதான் இது...
தர்சினி என்கூட 8 ம் வகுப்பில் இருந்து உயர்தரம் வரை என்னுடன் படித்தவள்...பேரழகி என்று சொல்லமுடியாவிட்டாலும் அழகான பெண்தான்...இவளுக்கு எனக்கும் பாடசாலையில் ஓரே சண்டைதான்...பொதுவாக நம்ம பசங்க பொண்ணுங்களுக்கு ஓரு பட்டப்பெயர்வைத்துதான் கூப்பிடுவார்கள்...அதே போல இவளுக்கும் ஓரு பெயர்வைத்திருந்தார்கள்..எல்லோறும் அந்தப்பெயரைவைத்துதான் இவளை அழைப்பார்கள்.நான் இவளுக்கு ஓரு பெயர் வைத்திருந்தேன் ரீமாசென்.
11ம் வகுப்பில் எங்களின் வகுப்பாசிரியரை எங்கள் வகுப்பில் பல பசங்களுக்கு பிடிப்பது இல்லை..காரணம் வகுப்பில் பசங்க என்ன கதைத்தாலும் வகுப்பாசிரியருக்கு தெரிந்துவிடும்....சில பசங்க எங்கள் கூட சேர்ந்து கதைத்துவிட்டு ஆசிரியரிடம் போட்டுக்கொடுத்துவிடுவாங்க...இதனால் ஆசிரியரிடம் போட்டுக்கொடுக்கும் பசங்க மேல எங்களுக்கு கொஞ்சம் காண்டு(கோபம்).சிலவேளைகளில் பொண்ணுங்களும் ஆசிரியரிடம் போட்டுக்கொடுப்பதுண்டு.
ஓரு நாள் எங்கள் தமிழ் பாட ஆசிரியர் வரவில்லை என்ற படியால் அந்த பாடவேளைக்கு அதிபரிடம் அனுமதிவாங்கி கிரிக்கெட் விளையாட போய்விட்டோம்.பொண்ணுங்கள் சிலர் நூலகத்துக்கு போய்விட்டார்கள் சில பொண்ணுங்க வகுப்பில் இருந்தாங்க..
நானும் இன்னும் ஓரு நண்பனும் கிரிக்கெட் விளையாடாமல் வகுப்பில் வந்து இருந்தோம்...
அப்போது தர்சினி வகுப்பில் வந்து சொன்னால் ராஜ் ஓருத்தரையும் விளையாடவேண்டாமாம் வகுப்பில் வந்து இருக்கட்டாம் போய் சொல்லிட்டு வா என்றாள்..அவள் என்கிட்ட சொன்னதுக்கும் ஓரு காரணம் இருக்கு அப்ப நான் தான் வகுப்பின் லீடர் ஆனாலும் பதிலுக்கு நான் கேட்டேன் ஏன் நீங்க போய் சொல்லவேண்டியதுதானே ஏன் என்கிட்ட சொல்லுறீங்க...
அதற்கு அவள் எங்கள் வகுப்பாசிரியர் தான் சொன்னவர்.என்று சொன்னாள் .நானும் பதிலுக்கு அவர் என்கிட்ட சொல்லவில்லை உங்க கிட்டதானே சொன்னார் நீங்களே போய்ச்சொல்லுங்க என்று..
தர்சினியும் கோபமாக நீ ஏன் வகுப்பில் இருக்கிற என்று எனக்குத்தெரியும்...என்று கோபமாக சொல்லிவிட்டு போய்விட்டாள்.
அவள் நேர வகுப்பாசிரியரிடம் போய் போட்டுக்கொடுத்துவிட்டாள்.
வகுப்பாசிரியர் என்னை செமயாக திட்டினார்
அதிபரிடம் அனுப்பிவிட்டார்..பின்னாலே வகுப்பாசிரியரும் வந்து அதிபரிடம் சேர் இவன் நான் வகுப்புக்கு எல்லோறையும் வரச்சொல்ல சொல்லமுடியாது என்று சொன்னானாம் என்று போட்டுக்கொடுத்தார்...
அதிபர் வகுப்பாசிரியரை அனுப்பிவிட்டு என்னிடம் கேட்டார் என்ன நடந்தது என்று நான் சொன்னேன் இல்லை சார் தலையிடி என்று படுத்திருந்தேன் அப்ப தர்சினி வந்து வகுப்பாசிரியர் எல்லோறையும் கூட்டிட்டு வரச்சொன்னாதாக சொன்னாங்க எனக்கு சரியான தலையிடி அதான் நீங்களே போய் கூட்டிட்டு வாங்க என்று சொன்னன் அதைத்தான் அவள் வகுப்பாசிரியரிடம் போய் சொல்லிவிட்டாள் என்று அதிபரிடம் சொல்லி மன்னிப்பு கேட்டேன்.
அதிபரும் சரி இனி இப்படி செய்யாதே என்று சொல்லி மன்னித்து அனுப்பிவிட்டார்...
இப்படி எனக்கும் அவளுக்கும் பாடசாலைக்காலங்களில் ஓரே சண்டைதான் எதாவது ஓரு விடயத்தில் பிரச்சனை வந்துவிடும்...
10,11,ம் வகுப்புகளில் படிக்கிற போது பொண்ணுங்களிடம் பெரிதாக பேசுவது இல்லை ஆனால் உயர்தரம் படிக்கும் போது சகஜமாக பேசுவதால் தர்சினிக்கும் எனக்கும் சண்டை பெரிதானதே தவிர குறையவில்லை.நான் எதாவது சொன்னால் அவள் அதுக்கு எடக்கு மடக்காக எதாவது சொல்லுவாள்.அதே போல அவள் எதாவது சொன்னாள் நான் அதுக்கு எதாவது எடக்கு மடக்காக பதில் சொல்வேன்.
நான் முன்பு சொன்னது போல அவளுக்கு நான் ரிமாசென் என்று பெயர் வைத்திருந்தேன் அல்லவா ஒரு நாள் நான் பாடசாலைக்கு லேட்டாக வந்தேன்(பெரும்பாலும் உயர்தரம் படிக்கும் போது லேட்டாகத்தான் வருவது வழமை)அப்போது தர்சினிதான் பாடசாலைக் கேட்டை பூட்டினாள்(காலையில் குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு பாடசாலைக் கேட்டை பூட்டிவிடுவார்கள் அதற்கான பொறுப்பை மாணவ தலைவர்களிடம் கொடுத்திருந்தார்கள்,அன்று தர்சினியின் முறை).நான் கேட்டை திறங்க தர்சினி என்றேன்.முடியாது ஏன் நீ லேட்டா வந்த? திரும்பி போனால் தான் உங்களுக்கு புத்திவரும் என்று சொல்லிவிட்டு போனாள். கொஞ்ச தூரம் போனவள் என்ன நினைத்தாளோ திரும்ப வந்து கேட்டை திறந்தாள்.
நான் பேசாம வந்திருக்கனுமா இல்லையா ஆனால் எனக்கு வாய் சும்மா இருக்கவில்லை
நான் -நீங்க பாட்டுக்கு கேட்டை பூட்டுறீங்க ஆனா ஏன் லேட்டா வந்தேன் என்று கேட்க மாட்டிங்களா ?
தர்சினி-எனக்கு காரணம் தேவையில்லை நீ அதிபரிடம் சொல்லு
நான் -இதை எல்லாம் அதிபரிடம் சொல்ல முடியாது உங்க கிட்டதான் சொல்ல முடியும்
தர்சினி-அப்படி என்ன காரணம்
நான் - விடிய விடிய உங்கள் படம் பார்த்திட்டு(நடிகை ரிமாசென் நடித்த படம்) இரவெல்லாம் தூங்கவில்லை அதுதான் லேட்டாகிடுச்சி..
நான் அப்படி சொன்னதுதான் தாமதம் இரு உனக்கு செய்யுறன் வேலை என்று நேராக அதிபரின் அலுவலகம் நோக்கி சென்றாள்.
நாம் பம்மி பம்மி சென்று பேசாமல் வகுப்பறையில் அமர்ந்துவிட்டேன்.சிறிது நேரத்தின் பின் என்னை அதிபர் அழைத்தார்.ஏன் லேட்டா வந்த லேட்டா வந்ததுக்கு தண்டனை உண்டு பாடசாலைவிட்டதும் கிணற்றடியை சுத்தம் செய் என்று சொன்னார்.அப்பதான் எனக்கு நிம்மதி நல்ல காலம் அவள் எதையும் சொல்லவில்லை தப்பித்தேன் சாமி என்று வேகமாக வகுப்பறைக்கு வந்துவிட்டேன். என்னைக் கண்ட தர்சினி ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தாள் அதுதான் அவ்வளவு பயம் இருக்குதானே பிறகு ஏன் வீண் பந்தா என்று பக்கத்தில் இருந்த நண்பியிடம் சொல்லி சிரித்தாள்.
பிறகு ஒரு நாள் நான் ஓரு கதை எழுதிக்கொண்டு இருந்தேன் ஓரு நாள் நண்பன் ஓருத்தன் அதை எடுத்து வகுப்பில் எல்லோறிடமும் காட்டிவிட்டான்.
அதை படித்துவிட்ட தர்சினி சொன்னாள் ஏன் ராஜ் உனக்கு வேறவேலை இல்லையா? தூக்கிப்போட்டுவிட்டு பிரயோசனமாக ஏதும் வேலை இருந்தால் பார் என்று..என் எழுத்துக்களுக்கு வந்த முதலாவது விமர்சனம் அதுதான்
இப்படி இருக்கும் போது பாடசாலையில் தலமை மாணவ தலைவர்களை தெரிவு செய்வது வழமை உயர்தர வகுப்பில் இருக்கும் மாணவர் தலைவர்களில் அவர்கள் எவ்வளவு காலம் மாணவர் தலைவராக இருந்தார்கள்..அவர்களின் செயற்பாடுகள்,போன்றவற்றை வைத்து ஆண்களில் ஓரு தலமை மாணவர் தலைவரையும்,பெண்களில் ஓரு தலமை மாணவத் தலைவரையும் தெரிவு செய்வார்கள்.
அப்படி தெரிவின் போது சில ஆசிரியர்களின் புதிதாக உயர்தரத்திற்கு மட்டும் எங்கள் பாடசாலைக்கு வந்த இருவரை தலமை மாணவ தலைவர்களாக தெரிவு செய்து உத்தியோக பூர்வமாக அறிவித்தும் விட்டார்கள்.அவர்கள் இருவரும் கலைப்பிரிவில் படிக்கும் புதிதாக வந்த மாணவர்கள்
எங்கள் வர்தக பிரிவில் இருந்து தர்சினியும்,இன்னும் ஓரு பையனும்,போட்டியில் இருந்தும் அவர்களை தெரிவு செய்யவில்லை.
இதனால் நாங்கள் அதிபரிடம் இந்த தெரிவுக்கு எதிராக முறையிட்டேம்.
அதிபரும் எங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டார் ஆனால் ஆசிரியர்கள் தெரிவு செய்துள்தால் இருவரையும் மாற்றினால் அது அழகில்லை. எனவே ஓருவரை மாற்றலாம்..ஆண்களுக்கான தலமை மாணவ தலைவரை மாற்றலாமா இல்லை பெண்களுக்கான தலமை மாணவ தலைவரை மாற்றலாமா என்று சொல்லுங்கள் என்றார்...
இந்தக்கோரிக்கையை அதிபரிடம் கொண்டு சென்ற எங்களுக்கு ஆண்களுக்கான தலமை மாணவத்தலைவரை மாற்றுவதில் விருப்பம் இல்லை காரணம் அப்படி மாற்றினால் அடுத்தாக அனுபவத்தின் அடிப்படையில் நியமிக்கவேண்டும் என்றால் எங்கள் வர்த்தக பிரிவில் படிக்கும் நண்பனைத்தான் நியமிக்கவேண்டும்.அவன் கொஞ்சம் பந்தா காட்டும் பேர்வழி எனவே இவனை விட ஆசிரியர்கள் தெரிவு செய்த நண்பனே மேல்.எனவே பெண்களுக்கான தலமை மாணவ தலைவரை மாற்றி...அதற்கு தர்சினியை நியமிக்குமாறுஅதிபரிடம் கூறினோம்.
அதிபரும் தர்சினி நீண்டகாலமாக பாடசாலையில் மாணவதலைவராக இருந்துவந்ததால் எந்த மாற்றுக்கருத்தும் சொல்லாமல் தர்சினியை பெண்களுக்கான தலமை மாணவதலைவராக நியமித்தார்..
இந்த விடயத்தை அதிபரின் கவனத்துக்கு கொண்டு போனதில் முன் நின்று செயற்பட்டவன் நான் என்பதால்.தர்சினிக்கு முன்பு பெண்களுக்கான தலமை மாணவ தலைவராக ஆசிரியர்களால் தெரிவு செய்யப்பட்ட அந்த கலைப்பிரிவு நண்பி என்னுடன் அதற்குப்பிறகு கதைப்பது இல்லை...பாடசாலைக்காலம் முழுவதும் அவள் என்னுடன் கதைக்கவில்லை
தர்சினிக்கு பெரும் சந்தோசம் என்னிடம் வந்து கதைத்தாள்
ராஜ் உன்னுடன் எவ்வளவு சண்டை பிடித்திருகின்றேன் வகுப்பில் நீ செய்யும் பல சேட்டைகளை ஆசிரியர்களிடம் போட்டுக்கொடுத்திருக்கின்றேன் ஆனால் நீ எனக்கு ஆதரவாக கதைத்துள்ளாய்..மன்னிச்சுக்கொள் என்றாள்
நான் தர்சினியை பார்த்து சொன்னேன் அட என்ன நீங்க நாங்கள் எல்லாம் நண்பர்கள் இந்த பாடசாலைக்காலம் முடிந்ததும் ஓவ்வொறுவரும் ஓவ்வொறு திசையில் போய்விடுவோம்...ஆனால் எமது நினைவுகள் மட்டும் எம்முடன் இருக்கும்.அதிலும் பலரை மறந்துவிடுவோம்.எனவே நண்பர்கள் என்றால் சண்டை இருக்கும் சந்தோசம் இருக்கும்.சோகம் இருக்கும் வலிகள் இருக்கும்..அப்பதான் நட்பு இனிக்கும் என்று ஓரு பிட்டை போட்டேன்
அதுக்கு பிறகு பாடசாலைக்காலம் முடியும் வரை என்னுடன் அவள் ஓரு நாள் கூட சண்டை போட்டது இல்லை.
மனிதவாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை நாம் சந்திப்போம் அதில் பலரை நாம் மறந்துவிடுவோம். சிலரை வாழ்நாளில் மறக்கமுடியாது அப்படி என் நினைவுகளில் என்றும் நிற்கும் ஓரு நண்பி தர்சினி.
இன்று அவள் இந்த உலகில் இல்லை எங்கள் மண்ணுக்காக மரணித்த உறவுகளில் அவளும் கலந்துவிட்டாள்.அவளுக்கு இந்த பதிவு சமர்ப்பனம்.
”மரணம் என்பது உடல்களை பிரிக்கலாம் ஆனால் நட்புக்கு என்றும் மரணம் இல்லை”
படம்-பதிவில் உள்ள படம் நடிகை ரிமா சென் உடையது
முஸ்கி-இது ஒரு மீள் பதிவு முன்பு நான் புதிய பதிவராக இருந்த போது எழுதிய பதிவு தற்போது இதை நான் முன்பு எழுதி பாதியில் நின்ற என் ப்ரண்டப் போல யாரு மச்சான் தொடரின் இரண்டாம் பகுதிக்காக மீள் பதிவாக தருகின்றேன்.அதைவிட முன்பு சுருக்கமாக இந்த பதிவை எழுதியிருந்தேன் இப்போது முழுமையாக பதிவிட்டுள்ளேன்.
என் ப்ரண்டை போல யாரு மச்சான் தொடரின் முன்னைய பகுதியான பகுதி-1 படிக்க இங்கே கிளிக்-என் ப்ரண்டை போல யாரு மச்சான்? பகுதி-1
|
15 comments:
மீள்பதிவு என்றாலும் வாசிக்க தோன்றியது.
நட்பு பற்றி பேசுவது என்றால் யாருக்குத்தான் கசக்கும்.
@மனிதன்
நன்றி பாஸ்
ஏற்கெனவே ஒருமுறை படித்திருந்தாலும்
மீண்டும் முழுவதும் படித்தேன்
இிறுதி வரிகள் மனம் கனக்கச் செய்து போனது
//// Ramani said...
ஏற்கெனவே ஒருமுறை படித்திருந்தாலும்
மீண்டும் முழுவதும் படித்தேன்
இிறுதி வரிகள் மனம் கனக்கச் செய்து போனது
////
வருகைக்கு நன்றி பாஸ்
தம்பிக்கு ரோசாப்பூ வேணுமோ?
வணக்கம்,ராஜ்!இது தான் அதுவா?இல்ல,அது தான் இதுவா?
@ Yoga.S. said...
தம்பிக்கு ரோசாப்பூ வேணுமோ////
ஹி.ஹி.ஹி.ஹி.............
@
Yoga.S. said...
வணக்கம்,ராஜ்!இது தான் அதுவா?இல்ல,அது தான் இதுவா?
////
இது அதுவும் இல்லை அது இதுவும் இல்லை அது வேற
நெஞ்சம் கனத்தது இறுதியில் ..
அன்பரே FOLLOWERS WIDGET தெரிய வில்லையே ஏன்
@PREM.S
////அன்பரே FOLLOWERS WIDGET தெரிய வில்லையே ஏன்
////அதில் சின்ன பிரச்சனை உள்ளது விரைவில் சரி செய்கின்றேன் பாஸ்
நன்றி
மீள் பதிவு என்றாலும் பள்ளிக்கால நட்பு மறக்க முடியாது!ம்ம்ம்
அருமையாக இருந்தது! ஆனால் இப்போ ப்லாக் படிச்சிட்டு இருப்பாங்கன்னோ, இல்ல வேற எங்கையோ இருப்பாங்கன்னோ நெனச்சேன்! ஆனா, என்ன பன்றது? தர்சினியோட கேரக்ட்டர் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு! இதயம் கணத்தது..... நன்றி!
முதலும் வாசித்தேன், ஆனாலும் எத்தனை தடவையானாலும் மறுபடியும் வாசிக்க தோன்றும். அதே அனுபவங்கள் எனக்கும் :(
நன்றாக கதையை கொண்டு வந்தீர்கள். அழகா சென்டிமெண்டா பிட்டு எல்லாம் போட்டீங்க. ஆனா கடைசியில குண்டை தூக்கிப் போட்டுட்டிங்களே?
Post a Comment