Friday, November 11, 2011

(பகுதி-10)என் உயிர் நீ தானே....


கடந்த பதிவில்-
சுதனின் உடல் நிலையில் வெகுவாக முன்னேற்றம் ஏற்பட்டது...சுதனின் காலை அகற்றத்தேவையில்லை என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்...புஸ்பா நிம்மதிஅடைந்தாள்...
இனி.....
சுதன் குணமாகி முகாமுக்கு வந்து சேர்ந்தார்,கொஞ்சக்காலம் முகாம் வாழ்க்கை பிறகு வன்னியில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர்த்திய போது சுதனும்,புஸ்பாவும்,அவர்கள் முன்பு இருந்த காணியில் குடியேரவில்லை.அங்கே புஸ்பாவின் அம்மா,வெள்ளையன்,ரதி,மூக்காயி போன்றோர் மட்டும் அங்கே மீளக்குடியேறினர்,சுதனும்,புஸ்பாவும்,தங்கள் குழந்தைகளுடன்,சுதனின் உறவினர் ஓருவரின் காணியில் வேறு ஓரு ஊரில் அதாவது சுதனின் சொந்த ஊரிற்கு அருகில் இருக்கு ஓரு ஊரில் வசிக்கத்தொடங்கினர் 






அங்கும் சுதன் கடை ஓன்றைவைத்து,வயல்களும் செய்தும் தனது பொருளாதாரத்தை உயர்ந்த தொடங்கினார்...


ஆனாலும் தன்னை வாழவைத்த தான் புஸ்பாவுடன் எதுவுமே இல்லாதவனாக வந்த போது ஆதரவுதந்த அந்த ஊரை சுதன் மறக்கவில்லை ஓரு முறை அங்கு வந்து எல்லோறையும் பார்த்துவிட்டு சென்று இருக்கின்றார்..


சில மாதங்கள் சென்றது ஊரிற்கு ஓரு செய்தி வந்தது சுதன் மருந்து குடிச்சி செத்துப்போய்ட்டானாம் இதான் ஊரில் பேச்சு...ஊரில் உள்ள எல்லோறும் கிளம்பி சுதனின் செத்தவீட்டிற்கு சென்றனர்..




சுதன் அங்க ஓரு பெண்ணுடன் தொடர்பு என்று புஸ்பா அடிக்கடி சண்டை பிடிப்பாளாம் ஓரு நாள் அப்படி சண்டை பிடித்த போது வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்துகுடித்துவிட்டாராம்.வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சுதன் இறந்துவிட்டாராம்...




முறையற்ற தவறான கள்ளக்காதலினால் ஏற்பட்ட விளைவை பாருங்கள் தந்தையை இழந்து நிற்கும் சுதனின் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும்.
முறையான கல்வி அறிவு இல்லாமையே பல தவறுகளுக்கு காரணம்,சுதன் வாழ்ந்த சமூகத்தில் இன்று பல குழந்தைகள் பாடசாலைக்கு செல்கின்றார்கள் அவர்கள் கல்வியில் முன்னேறி அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும் ஆரோக்கியமான கல்வி அறிவுள்ள ஓரு சமூதாயம் கட்டி எழுப்படவேண்டும்.
(முற்றும்)


பலர் கேட்டு இருந்தார்கள் இந்தத்தொடரில் யுத்தம் பற்றியும்,அவல நிலைகள் பற்றியும் விரிவாக எழுதலாமே என்று இந்தத்தொடரின் நோக்கம் கல்வி அறிவு குறைந்த ஓரு சமூகத்தில் கள்ளக்காதல்கள் போன்ற தவறான உறவுகளினால் ஏற்படும் விளைவுகளை சொல்வதுதான் எனவே நான் மையக்கருத்தை மட்டுமே வைத்து கதையை நகர்த்திச்சென்றேன்...இதன் மூலக்கதை உண்மைச்சம்பவம் என்பதால்.சுதன் வன்னியில் வாழ்தவர் என்பதாலும் யுத்தம் பற்றி சில விடயங்களை தவிர்கமுடியவில்லை அதனால் சில சம்பவங்களை குறிப்பிட்டுள்ளேன்.
மூலக்கதையை எடுத்து கதை சுவாரஸ்யத்துக்காக காதல் காட்சிகள் வரும் இடங்கள் போன்ற சில இடங்களில் வர்ணனை செய்துள்ளேன்.
இந்தத்தொடரின் நோக்கம் தவறான உறவுகளினால் ஏற்படும் விளைவுகளை சொல்வதுதான் இந்தத்தொடரை தொடர்ந்து வாசித்து ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி.
நன்றி...


இன்றைய தகவல்-இன்றைய திகதி ஓரு வித்தியாசமான திகதி 
அதாவது 11-11-11(2011)இதே போல இனி 100 ஆண்டுகளுக்கு பிறகுதான் வருமாம்...ஆம் 2001 இல இருந்து இப்படி பல சிறப்பான திகதிகளை நாம் கண்டிருக்கின்றோம்-
1-1-1(2001)
2-2-2(2002)
3-3-3(2003)
4-4-4(2004)
5-5-5(2005)
6-6-6(2006)
7-7-7(2007)
8-8-8(2008)
9-9-9(2009)
10-10-10(2010)
11-11-11(2011)
இன்னும் ஓரு வருடம் குறிப்பிட முடியும் அதாவது 12-12-12(2012),2013 இல் குறிப்பிட முடியாது. இனி 100 வருடங்களுக்கு பிறகு தான் இப்படி திகதிகள் வரும் எமது வாழ்நாளில் இப்படி அமைந்தது சிறப்புதான்.இன்றைய திகதியில் 11-11-11 ல் என் தளத்தில் 111வது பதிவு வெளியாகியுள்ளது நான் கூட பதிவை எழுதி வெளியிட்ட பின்புதான் பார்த்தேன். இது எதேர்ச்சையாக அமைந்தது  என்றாலும் சிறப்பு பெறுகின்றது..



என் உயிர் நீ தானே தொடரின் முன்னைய பகுதிகளைப்படிக்க
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
பகுதி-4
பகுதி-5
பகுதி-6
பகுதி-7
பகுதி-8
பகுதி-9

Post Comment

30 comments:

Anonymous said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

M.R said...

சிந்திக்கும் திறன் வேண்டும் .எதையும் முடிவெடுக்கும் முன். கதை வாசித்தேன்


த.ம 2

தேதிக்கு ஒத்த பதிவின் இலக்கம் வாழ்த்துக்கள்

Unknown said...

குட் நல்லா இருக்கு உங்க எழுத்து நடை அசத்துங்க

Mohamed Faaique said...

எல்லாவற்றையும் விட டாப் மேட்டர் உங்க 111வது பதிவும் இன்றைய திகதியும்தான்...

கள்ளக் காதல், கலாச்சார சீரழுவுக்கெல்லாம் படிப்பறிவில்லததுதான் காரணம்’னு சொல்ல முடியாது நன்பரே!! படித்தவர்கள் எல்லாம் யோக்கியமானவர்களில்லையே!! படிப்பறிவு குறைந்த முன்னைய காலத்தை விட, இப்பொழுது பாவங்கள் அதிகம் நடக்கிறேதே!!! இது ஜஸ்டு என் கருத்து..

தனிமரம் said...

வேதாளம் முருக்கை மரம் ஏறுவிட்டது என்பதைப் போல சுதன் போன்றோரின் ஆதித உணர்வுகளால் குடும்பம் என்ற உறவு சீர்குழைவதற்கு பிரதான காரணம் கல்வி அறிவு இன்மையே என்பதை சாடி அழகாய் தொடரை நகர்த்தி முடித்திருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன
லாபம் சுதனின் முட்டாள்தனமான முடிவுகள் இத்தனை துயரங்களின் பின்பும் வழிமாறிச் செல்லும் செயல்கள் மரணத்தில் தானே முடியனும் பாவம் புஸ்பா போன்று உணர்ச்சியின் என்னத்தில் ஓடி வந்து குடும்பம் என்ற நதியில் கரைபுரலும் பெண்களுக்கு இந்த முடிவுதான் அதிகம் வரும் என்பதையும் அழகாய் சொல்லிச் சென்ற தொடர்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட் தொடருங்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த நாள் எல்லோருக்கும் ஒரு வித்தியாசமான நாளாக அமைந்து விடுகிறது..

வாழ்த்துக்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த நாள் எல்லோருக்கும் ஒரு வித்தியாசமான நாளாக அமைந்து விடுகிறது..

வாழ்த்துக்கள்...

Unknown said...

மாப்ள நல்லா இருக்கு நன்றி!

சக்தி கல்வி மையம் said...

கள்ளக்காதளினால் ஏற்படும் விளைவுகளை விளக்கிய தொடர்..

பாராட்டுக்கள்..

சென்னை பித்தன் said...

சோகமா முடிச்சுட்டீங்க.

குறையொன்றுமில்லை. said...

கதை தொய்வில்லாமல் சொல்லிச்சென்றவிதம் ரொம்ப நல்லா இருந்தது.

Yoga.S. said...

காலை வணக்கம்!பதினொன்று!பதினொன்று!பதினொன்று வாழ்த்துக்கள்,கூடவே நூற்றுப் பதினோராவது பதிவுக்கும்!சிறந்த ஒரு விழிப்பூட்டும் கதை தொடராக எழுதி சிறப்பாக முடித்திருக்கிறீர்கள்!பாராட்டுகள்!மேலும் இன்று காலை அதிர்ச்சியூட்டும் ஒரு செய்தியும் குடாவிலிருந்து!ஹெரோயின் பாவனையில் யாழ்.மாணவர்கள்.முளையிலேயே கண்டு பிடித்திருக்கிறார்கள்.பார்ப்போம்,

rajamelaiyur said...

அருமையான தொடர் ..

rajamelaiyur said...

அருமையான தொடர் ..

rajamelaiyur said...

உங்களுக்காக இன்று

உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்

தனிமரம் said...

யுத்த சூழ்நிலையில் இருக்கும் சாமானிய மக்களின் உணர்வுகளைத் தொடராகத் தந்து எண்ணங்களையும் உணர்வுகளையும் உங்கள் எழுத்து மூலம் ஊர்களின் ஊடே பயனித்த அனுபவத்தை தந்தற்கு சிறப்பு நன்றிகள் ராச் நீண்ட பின்னூட்டம் எழுத ஆவல் இருந்தாலும் மற்றவர்களுக்கு சலிப்பைக் கொடுக்கக் கூடாது என்பதால் இத்துடன் மீண்டும் வாழ்த்துக்களும் நன்றிகள் கூறி விடை பெறுகின்றேன்.

பாலா said...

கதையில் இருந்து சிறிதளவும் பிசகாமல் கூட அப்போதிருந்த யுத்தம் பற்றிய நிகழ்வுகளை சொல்லி இருக்கலாம். சரி விடுங்க. எழுதிய வரை அருமைதான்.

MANO நாஞ்சில் மனோ said...

ஆச்சர்யமா இருக்குய்யா உங்களுக்கு இது 111 வது பதிவு இயற்கையா அமைஞ்சி இருக்கே வாழ்த்துக்கல்ய்யா...

MANO நாஞ்சில் மனோ said...

ஆச்சர்யமா இருக்குய்யா உங்களுக்கு இது 111 வது பதிவு இயற்கையா அமைஞ்சி இருக்கே வாழ்த்துக்கல்ய்யா...

F.NIHAZA said...

தொடர் நல்லா இருந்தது....மூலக்கரு சமூகத்துக்கு அத்தியவசியமானதுதான்....

Unknown said...

முதற் கண் தங்களின் 111 வது
பதிவுக்கு உளங் கனிந்த வாழ்த்துக்கள்!
சோகமான முடிவு
என்றாலும் உண்மை வரலாறு
ஆயிற்றே

புலவர் சா இராமாநுசம்

முற்றும் அறிந்த அதிரா said...

கதையை நல்லாக் கொண்டு வந்து முடிச்சிருக்கிறீங்க ராஜ். இருப்பினும் முடிவு மனதை நெருட வைத்துவிட்டது... தப்பான முடிவுக்குப் போயிட்டார் சுதன்.

இன்று 111 பதிவைப் போட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி!
சுதன் தன்னுடைய தவரான பழக்கத்தால் வாழ்க்கையை தொலைத்தார்..

நீங்களும் கதையை சீக்கிரம் முடித்துவிட்டீர்களே!!??

Unknown said...

கனக்க மிஸ் பண்ணிட்டன் தல :(

நிரூபன் said...

முடிவில் சோகமும், வேதனையும் தான் மிஞ்சுகிறது.
ஆனாலும் சமூகத்திற்கு நற் கருத்தினைச் சொல்லும் கதையினைத் தந்திருக்கிறீங்க.

Unknown said...

அருமையான தொடர் முடிவுக்கு வந்துள்ளது.தொடரின் மூலமாக சமூகத்துக்கு நல்ல ஒரு கருத்தை சொல்லி இருக்கீங்க.

Mahesh said...

வணக்கம் அண்ணே
உங்கல் ப்லாகில் நான் படித்த இரண்டாவது தொடர் கதை
இந்தத்தொடரின் நோக்கம் தவறான உறவுகளினால் ஏற்படும் விளைவுகளை சொல்வதுதான்///
ம்ம்ம் அதில் முழு வெற்றி பெற்றீர்கல் சொல்லலாம்...

ஆணா... ஆனா...
படிக்கும் போது தலைப்பை கொஞ்சம் மாத்தி வெச்சு இருக்கலாமோ தோனிச்சு...

எனிவே ரொம்ப நல்லா எழுதி இருக்குரீங்க...

K.s.s.Rajh said...

@mahesh

மிக்க நன்றி பாஸ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails