Saturday, November 05, 2011

(பகுதி-9)என் உயிர் நீ தானே


கடந்த பதிவில்-இருந்தாலும் வயிறு என்று ஓன்று இருக்கின்றதே....எனவே
இடம்பெயர்கின்றவர்களின் பொருட்களை வாகனத்தில் ஏற்றிவிடும் வேலையை தொடங்கினார்கள் சுதனும்,வெள்ளையனும்,கடுமையான ஷெல்கள் விழுகின்ற போதும்..,உயிரை கையில் பிடித்துக்கொண்டு வேலை செய்தனர்....இனி......



அவர்கள் இருந்த ஊரில் கடுமையாக ஷெல் விழத்தொடங்கியதால் வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்து சென்றனர்..இப்படி மாறி மாறி கடைசியில் புது மாத்தளன் என்னும் இடத்தில் வந்து விட்டனர்...இனி போவதற்கு அடுத்தது முள்ளிவாய்க்கால் என்ற ஓரு இடம் மட்டும்தான் இருக்கு....



சுதன் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு...ஓரு சிறிய
கடைவைத்தார்,அதற்கு வெள்ளையன் உதவியாக இருந்தான்,

அந்த நெருக்கடியான யுத்த சூழலை வன்னியில் வாழ்ந்த ஓவ்வொறு மனிதனும் மறக்க நினைக்கின்ற மறக்கமுடியாத சோகங்கள் அவை...உணவுப்பொறுட்களின் விலை தங்கத்தைவிட பல மடங்கு அதிகரித்தது.ஓரு வீட்டில் 10 கிலோ அரிசி இருந்தால் அவன் தான் அப்ப பணக்காரன்.100 பவுன் தங்கம் இருந்தாலும் அவன் அப்ப ஏழைதான்.காரணம்,ஓரு குறுகிய பிரதேசத்தில் மக்கள் ஓடுங்கிவிட்டதால்.உணவுத்தட்டுப்பாடு வெகுவாக அதிகரித்தது.


அரசகட்டுப்பாட்டு பகுதியில் இருந்து ஒரு கப்பல் உணவுப்பொருற்களை ஏற்றிக்கொண்டு புது மாத்தளனுக்கு வரும்..


உணவு ஏற்றிக்கொண்டு வரும் கப்பல் அங்கே யுத்ததினால் காயம் அடைந்த அல்லது கடுமையான நோய்களினால் பாதிக்கப்பட்டர்களை ஏற்றிக்கொண்டு அரசகட்டுபாட்டு பகுதிகளுக்கு செல்லும்.
அதிலும் வயோதிபர்கள் மற்றும் கர்ப்பிணிப்பெண்கள் ,கடுமையாக காயம் அடைந்த மக்கள் ,போன்றோரை மட்டும் தான் புலிகள் செல்ல அனுமதிப்பார்கள்.


பொருற்களின் விலை உயர்வடைந்தாலும் சுதன் ஓரளவு மலிவான விலையிலேயே தன் கடையில் விற்பனை செய்து வந்தார்.....ஊரில் தனக்கு உதவிய பலரிடம் அவன் காசு கூட வேண்டுவது இல்லை...




யுத்தம் உக்கிரம் அடைந்தது அந்த நேரத்தில் பல மக்கள் புலிகளின் கட்டுபாட்டு பகுதிகளில் இருந்து அரசகட்டுபாட்டு பகுதிக்குள் போகத்தொடங்கினர்.....யுத்தம் கடைசியில் முடிவுக்கு வரும் தறுவாயில் எஞ்சிய மக்கள் முள்ளிவாய்காலில் தஞ்சம் அடைந்தனர்..


பல உயிர்களை காவுவாங்கியது யுத்தம். பலர் அங்கங்களை இழந்தார்கள்.
மரணத்தைவிட மரணபயம் கொடுமையானது ஆனால் வன்னிமக்கள் மரணபயத்துக்கும் பழகிவிட்டதால் அவர்களின் மன உறுதியை மரணபயத்தால் ஜெயிக்கமுடியவில்லை.




சுதனின் கடைக்கு முன்னால் விழுந்து வெடித்த ஷெலில் சுதனும் காலியில் காயம் அடைந்திருந்தார்.
ஓருவாறு யுத்தம் முடிவுக்கு வந்தது. வன்னி மக்கள் அனைவரும் வவுனியாவில் நலன்புரி முகாங்களில் தங்க வைக்கப்பட்டனர்...சுதனின் குடும்பம்,வெள்ளையன் குடும்பம்,மூக்காயி போன்றவர்கள் அனைவரும் ஓரே  நலன்புரி முகாமில் தான் இருந்தார்கள்,புஸ்பாவின் தங்கை தங்கம் மட்டும் தான் வேறு முகாமில் இருந்தாள்....




சுதனுக்கு காலில் ஏற்பட்ட காயம் கடுமையானதாக இருந்தால் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.சுதனின் காலை அகற்றவேண்டி வந்தாலும் வரலாம் என்று வைத்தியர்கள் கூறியதால்.புஸ்பா மிகுந்த கவலையில் இருந்தால்,வெள்ளையன்,ரதி,மூக்காயி,போன்றோர்கள் சுதனை வந்து வைத்தியசாலையில் பார்த்துச்சென்றனர்.புஸ்பாவின் தங்கை தங்கம் மட்டும் வரவில்லை அவள் வரவேண்டும் என்றும் புஸ்பா எதிர்பார்கவில்லை காரணம் தன் கணவனுக்கு அவளுக்கும் முன்பு தொடர்பு இருந்தாலும்.இப்போது அவள் கலியாணம் செய்து நன்றாக இருக்கின்றாள் எனவே அவள் சுதனை பார்க்க வரக்கூடாது என்றுதான் புஸ்பா நினைத்தாள் அதேபோல தங்கமும் வரவில்லை.




சுதனின் உடல் நிலையில் வெகுவாக முன்னேற்றம் ஏற்பட்டது...சுதனின் காலை அகற்றத்தேவையில்லை என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்...புஸ்பா நிம்மதிஅடைந்தாள்...
(தொடரும்)


படங்கள்-கூளுள்


முன்னைய பகுதிகளைப்படிக்க
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
பகுதி-4
பகுதி-5
பகுதி-6
பகுதி-7
பகுதி-8

Post Comment

26 comments:

தனிமரம் said...

கதையில் இத்தனை பாத்திரங்களையும் ஒரு பகுதிக்குள் அடக்கிவிட்டீர்களே சகோ யுத்தத்தின் கொடுய தருணங்களை இன்னும் மெருகேற்றி இருந்தால் இந்தத் தொடர் இன்னும் காத்திரமாக வரலாற்றின் இன்னொரு பக்கக்தில் இருக்கும்!

தனிமரம் said...

கப்பலுக்குக் காத்திருக்கும் தருனத்தின் கொடிய வேதனையை உங்கள் பார்வையில் இன்னும் சிறப்பாக்களாம் பாஸ் துயரங்களை மீளவும் சொல்வதால் நம் துயரங்கள் இன்னும் பலருக்குத் தெரிய வரும்.
நல்ல தொடர் ஏன் இந்த அவசரம் மீண்டு  வந்த தருணங்கள் முகாம் விடயங்கள் அதில் உங்கள் பார்வையை இப்படி ஒரு காவியத்தை பார்த்துப் பார்த்து செதுக்குங்க பாஸ்!
தொடர்ந்து கலக்குங்க தொடர்கின்றேன் தொடரை!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

போர்களத்தில் பாதையில் ஒரு கதையின் பணயம்...

நெருடலாக மனம் கணக்கிறது நண்பரே...

Shanmugam Rajamanickam said...

எப்புடிங்க தொடர்ந்து எழுத முடியுது....

சக்தி கல்வி மையம் said...

சுதன்?

சேக்காளி said...

அத்தனை பாகத்தினையும் முதலில் படித்துக் கொள்கிறேன்.

MANO நாஞ்சில் மனோ said...

கண்களில் ரத்தம் வழிகிறது நண்பா.....கொடுமையிலும் கொடுமை, கண்ணீர் நதியாக வழிகிறது....

குறையொன்றுமில்லை. said...

ஒரு யுத்தம் பல சாமான்ய ஜனங்களுக்கு எவ்வளவு துயரை சந்திக்க வைக்கிறது. கொடுமை.

K.s.s.Rajh said...

@தனிமரம்

அண்ணன் இந்தத்தொடரின் நோக்கம் யுத்தத்தின் வலிகளை சொல்வது இல்லை.ஓரு கல்வியறிவு குறைந்த ஓரு சமூகத்தில் தவறான முறையற்ற உறவுகளினால் ஏற்படும் விளைவுகளைச்சொல்வதுதான் இந்தத்தொடரின் நோக்க என்ன சுதன் அவர்களின் கதை உண்மைக்கதை என்பதால் சில வற்றை தவிற்கமுடியாமல் உள்ளது...

K.s.s.Rajh said...

@
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
போர்களத்தில் பாதையில் ஒரு கதையின் பணயம்...

நெருடலாக மனம் கணக்கிறது நண்பரே.////

ஆம் பாஸ் யுத்தத்தின் வலிகள் கொடுமையானவை....

K.s.s.Rajh said...

@
சண்முகம் கூறியது...
எப்புடிங்க தொடர்ந்து எழுத முடியுது.../////

எதைக்கேட்கிறீங்க என்று விளங்கவில்லை..இந்தத்தொடரை கேட்டீங்க என்றால்.இது எங்கள் ஊரில் வாழ்ந்த ஓருவரின் கதை எனவே ஊரில் கேள்விப்பட்ட விடயங்களை வைத்து எழுதுகின்றேன்

K.s.s.Rajh said...

@ !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
சுதன்?////

சுதன் என்பவர் எங்கள் ஊரில் வாழ்த ஓரு அண்ணன் பாஸ் அவரை பற்றிய கதைதான் இது......

K.s.s.Rajh said...

@
சேக்காளி கூறியது...
அத்தனை பாகத்தினையும் முதலில் படித்துக் கொள்கிறேன்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
கண்களில் ரத்தம் வழிகிறது நண்பா.....கொடுமையிலும் கொடுமை, கண்ணீர் நதியாக வழிகிறது...////

வன்னி மக்கள் மீது யுத்தம் ஏற்படுத்திய வலிகள் கொடுமையானது பாஸ்

K.s.s.Rajh said...

@
Lakshmi கூறியது...
ஒரு யுத்தம் பல சாமான்ய ஜனங்களுக்கு எவ்வளவு துயரை சந்திக்க வைக்கிறது. கொடுமை/////
ஆம் மேடம்

K.s.s.Rajh said...

அன்புக்குறிய நண்பர்களே.
இந்தத்தொடரின் நோக்கம் யுத்தத்தின் வலிகளை சொல்வது இல்லை.

ஓரு கல்வியறிவு குறைந்த ஓரு சமூகத்தில் தவறான முறையற்ற கள்ளக்காதல்களினால்
ஏற்பட்ட விளைவுகளைச்சொல்வதுதான் இந்தத்தொடரின் நோக்கம்.

சுதன் எங்கள் ஊரில் வாழ்த ஓருவர் அவரது கதை உண்மைக்கதை என்பதால் சிலவற்றை தவிர்கமுடியாமல் உள்ளது

நன்றி

Mohamed Faaique said...

கடைசி யுத்த காலகட்டத்தை எத்தனை வார்த்தகளில் சொன்னாலும், அதை உணர்தவர்களின் வலியை உணர முடியாது...

சென்னை பித்தன் said...

மனம் கனக்கச்செய்யும் பதிவு.

கோகுல் said...

பல உயிர்களை காவுவாங்கியது யுத்தம். பலர் அங்கங்களை இழந்தார்கள்.
மரணத்தைவிட மரணபயம் கொடுமையானது ஆனால் வன்னிமக்கள் மரணபயத்துக்கும் பழகிவிட்டதால் அவர்களின் மன உறுதியை மரணபயத்தால் ஜெயிக்கமுடியவில்லை.
//

மச்சி,இந்த வரிகளைத்தாண்ட ரொம்ப நேரம் பிடித்தது.

Yoga.S. said...

எதுவும் சொல்வதற்கு வார்த்தை வரவில்லை.

சுதா SJ said...

ஹும்..... நன்றாக தொடர் போகுது நண்பா...... யுத்தம் பற்றிய பகுதி மனசை கணக்கா செய்யுது..... இறுதி யுத்தம் பற்றிய தகவல்களை அங்கிருந்து வந்த சொந்தங்கள் சொல்லிய தகவல்கள் போலவே உங்கள் கதையும் நகர்வது உங்கள் கதையின் உண்மை தன்மைக்கு சிறு சான்று..... அடுத்தடுத்த பகுதிகளில்
இறுதி யுத்தம் பற்றிய தகவல்களை தொடரில் அதிகம் வழங்கலாமே..... உங்களால் முடியும்.

சுதா SJ said...

அட என்ன இன்னைக்கு ஒரு பொன்னும் வந்து ஓட்டு கேக்கவில்லை......... ஹே... ஹே...

Unknown said...

//ஓரு கல்வியறிவு குறைந்த ஓரு சமூகத்தில் தவறான முறையற்ற கள்ளக்காதல்களினால்
ஏற்பட்ட விளைவுகளைச்சொல்வதுதான் இந்தத்தொடரின் நோக்கம்.//

மிக நன்றாக உள்ளது.கதையின் கருபொருளோடு மட்டும் பயணிப்பது.

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் மச்சி,

உயரமான கொஞ்சம் பொது நிறமான ஆள் தானே இக் கதையில் சுதன் என்ற பெயரில் வரும் நபர்.
அடிக்கடி வெத்திலை போடுவாரே...

இவரின் கடை எனக்கு நினைவிருக்கிறது மச்சி.

நிரூபன் said...

மச்சி, நான் என்றால் இந்தப் பாகத்தை இரண்டு பகுதிகளுக்கு மேல் எழுதியிருப்பேன். பல விடயங்களைச் சொல்லியிருக்கலாம். உணவிற்கு நாங்கள் அல்லாடியது,
ஷெல் விழும் போது பதுங்கிய நினைவுகள், போராளிகளின் தியாகங்கள், மக்களின் பின் தள உதவிப் பணிகள், இதற்கும் அப்பால் இலைக் கஞ்சியும், பருப்பும் சோறும் சாப்பிட்ட நினைவுகள். இதனை விட இந்திய உணவுக் கப்பல் வந்தது உணவு பறித்த நினைவுகள், வணங்காமண் கப்பல் வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்த நினைவுகள்
இப்படிப் பல விடயங்களைச் சொல்லியிருக்கலாம்.


இப்படியான தொடர்களின் போது கொஞ்சம் நிதானமாக நிறைய விடயங்களைப் பதிவாக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் மச்சி.

நிரூபன் said...

எம் அவலங்களினூடே சுதனின் வாழ்வையினையும், போருக்குப் பின்னரான சுதனின் நிலையினையும் சொல்லிச் செல்கிறது இத் தொடர்.

அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails