தனது 11வது ஒருநாள் போட்டியில் அப்போதைய இந்திய கேப்டன் அசாருதீனால் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக சச்சினுடன் கங்குலி களம் இறக்கப் பட்டார் அதன் பின் கங்குலி-சச்சின் ஜோடி உலகின் மிகச்சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியாக பல ஆண்டுகள் திகழ்ந்தார்கள்.
சச்சினும் கங்குலியும் ஒரு நாள் போட்டிகளில்,இணைப்பாட்டமாக 136 இன்னிங்சில் 6609 ஓட்டங்களைக் குவித்திருக்கின்றார்கள் இது மகத்தான சாதனையாகும்.
1997ல் ஒரு நாள் போட்டிகளில் தனது முதலாவது சதத்தை இலங்கை அணிக்கு எதிராக தனது 32வது ஒருநாள் போட்டியில் கங்குலி பெற்றார்.
கங்குலியிடம் ஒரு மகத்தான சாதனை இன்றுவரை உள்ளது அதாவது 97 செப்டம்பரில் டோரோண்டோவில் பாகிஸ்தானுக்கெதிராக,ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் நான்கு போட்டிகளில் ஆட்டநாயகன் விருது பெற்றார். 222ஓட்டங்கள் & 15விக்கெட்டுக்கள்.தொடரின் சிறப்பாட்ட வீரரும் இவரே.
இதில் என்ன சாதனை என்றால் தொடர்ச்சியாக நான்கு ஒருநாள் போட்டிகளில் ஆட்டநாயகன் விருதினை வென்ற ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் இன்றுவரை கங்குலி மட்டும்தான்.
கங்குலிக்கு இன்னும் ஒரு பெருமை உண்டு ஒரு மெகா உலக சாதனையை தடுத்த பெருமை.அதாவது 1997ல் சென்னையில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் சயின் அன்வர் ஒரு புதிய சாதனையை நெருங்கினார் அதாவது 194 ஓட்டங்களை விளாசியிருந்தார் இன்னும் 6 ஓட்டங்களை விளாசினால் கிரிக்கெட் உலகில் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் பெற்ற வீரர என்ற சாதனையை படைத்திருப்பார்.
ஆனால் துரதிஸ்ட வசமாக அவர் 194 ஓட்டங்களை பெற்றிருந்த போது தூக்கி அடித்த பந்து கங்குலியின் கையில் கேட்சாக மாறியது ஒரு மெகா வரலாற்று சாதனை தடுக்கப் பட்டது.
ஆனால் ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டம் பெற்ற சயிட் அன்வரின் இந்த 194 ஓட்டங்கள் சாதனை பல ஆண்டுகள் பல ஜாம்பவான்களாலும் முறியடிக்கப் படமுடியாமல் கிட்டதட்ட 12 ஆண்டுகள் நிலைத்திருந்தது அதன் பின் ஸிம்பாவேயின் அதிகம் பிரபலம் இல்லாத கவன்ரி 2009 இல 194 ஓட்டங்களை பெற்று சச்சின்,சனத்,கங்குலி போன்ற ஜாம்பவான்களால் அருகில் வந்தும் முறியடிக்க முடியாத சாதனையை சமப்படுத்தினார் ஆனால் துரதிஸ்ட வசமாக அவராலும் முறியடிக்க முடியவில்லை.
பின் ஜாம்பவான் சச்சின் 2010 இல் இரட்டை சதம் விளாசி சயிட் அன்வரின் சாதனையை முறியடித்தது குறிப்பிடத்தக்கது பின் ஷேவாக் சச்சினின் சாதனையை முறியடித்ததும் குறிப்பிடத்தக்கது.
1999இல் உலகக் கோப்பை போட்டிகளில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டம் ஒன்றில் கங்குலி 183 ஓட்டங்களை விளாசினார்,அவருடன் இணைந்து ராகுல் ராவிட்டும் 145 ஓட்டங்களைப் பெற ஒரு வரலாற்று சாதனை உருவானது அதாவது இரண்டாவது விக்கெட்டுக்கு பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டம் இதுதான் அதைவிட உலகக்கோப்பை தொடரில் பெறப் பட்ட அதிகூடிய இணைப்பாட்ட சாதனையாக இன்றுவரை நிலைத்திருக்கின்றது கங்குலி,ராவிட் பெற்ற இந்த 318 ஒட்டங்கள் இணைப்பாட்ட சாதனை.
ஒரு நாள் போட்டிகளில் இதுவரை இரண்டு முறை மாத்திரமே 300 ஓட்டங்களுக்கு மேல் இணைப்பாட்டம் பகிரப்பட்டுள்ளது.அந்த இரண்டு முறையும் இந்திய வீரர்களால் நிகழ்த்தப் பட்டுள்ளது மேலும் சிறப்பு ஆம் சச்சின்,ராவிட் நியூஸ்லாந்துக்கு எதிராக குவித்த 331 ஓட்டங்களே இன்றுவரை ஒரு நாள் போட்டிகளில் எந்த ஒருவிக்கெட்டுக்குமான அதிகூடிய இணைப்பாட்ட சாதனையாகும்.
கங்குலிக்கு இன்னும் ஒரு பெருமையும் உண்டு மிகக்குறைந்த ஒரு நாள் போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்தவர் என்ற சாதனைதான் அது 272 போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்து வரலாறு படைத்துள்ளார் தாதா.
ஒருநாள் போட்டிகளில் உலக அளவில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கங்குலி 4-ம் இடத்தில் உள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள், 100 விக்கெட்டுகள், 100 கேட்ச்கள் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ள 3-வது வீரர்.
1997, 1999 மற்றும் 2000 ஆகிய ஆண்டுகளின் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன் குவித்த வீரர் என்ற பெருமை.
ஒருநாள் போட்டிகளில் 22 சதங்கள் அடித்து, அதிகபட்ச சதமடித்த 4-வது வீரர் என்ற பெருமையும், ஒருநாள் போட்டிகளில் 94 அரைசதங்கள் அடித்து அதிகபட்ச அரைசதமடித்த 2-வது வீரர் என்ற பெருமை.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் டெண்டுல்கருடன் கங்குலி துவக்க வீரராக களமிறங்கியபோது, இருவரும் இணைந்து மொத்தமாக 136 இன்னிங்ஸ்களில் 6,609 ரன்களை குவித்துள்ளனர்.
ஒருநாள் போட்டிகளில் மிகக் குறைந்த காலக்கட்டத்தில் 7,000 ரன்கள், 8000 ரன்கள், 9,000 ரன்கள் ஆகியவற்றைக் கடந்த வீரர்கள் பட்டியலில் கங்குலி முதலிடம்.
ஒருநாள் போட்டிகளில் சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாமிடம். இவர் விளாசியவை 190 சிக்ஸர்கள்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் தாதாவின் சாதனைகளை
1999 உலகக்கோப்பை போட்டிகளில் இலங்கைக்கு எதிராக தாதா விளாசிய 183 ஓட்டங்கள்
(தாதா இன்னும் வருவார்)
இந்த தொடரின் முன்னைய பகுதிகளை படிக்க-
தொடர் அறிமுகம்
பகுதி-1
முஸ்கி-இனைய இணைப்பு பிரச்சனை காரணமாக சீராக பதிவுகள் வெளிவருவதில் தாமதம் ஆகின்றது மன்னிக்கவேண்டும் நண்பர்களே
இந்த தொடரின் முன்னைய பகுதிகளை படிக்க-
தொடர் அறிமுகம்
பகுதி-1
முஸ்கி-இனைய இணைப்பு பிரச்சனை காரணமாக சீராக பதிவுகள் வெளிவருவதில் தாமதம் ஆகின்றது மன்னிக்கவேண்டும் நண்பர்களே
|
8 comments:
ஆஹா... நல்லதொரு தொகுப்பு... அவரின் பெருமைக்கு பெருமை சேர்க்கிறது உங்களின் பதிவு....
பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 1)
என் தளத்தில் : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”
நிறைய செய்திகளை சொல்லிக்கொண்டு போகிறீர்கள். கங்குலி என்ன செய்து விட்டார்? என்று கேட்பவர்களுக்கு கண்டிப்பாக புரியும் அவர் என்ன செய்தார் என்று
@திண்டுக்கல் தனபாலன்
நன்றி பாஸ்
@ பாலா said...
நிறைய செய்திகளை சொல்லிக்கொண்டு போகிறீர்கள். கங்குலி என்ன செய்து விட்டார்? என்று கேட்பவர்களுக்கு கண்டிப்பாக புரியும் அவர் என்ன செய்தார் என்று
////
நிச்சயமாக பாஸ்
நன்றி பாஸ்
நிறைய தகவல்கள். தாதாவைப் பற்றிய புள்ளி விவரங்கள். அருமையாகத் தொகுத்துத் தந்து வருகிறீர்கள் ராஜ். அருமை. தொடருங்கள்.
@பால கணேஷ்
நன்றி பாஸ்
தாதா-வைப் பற்றி இவ்வளவு தகவல்கள் வேறு யாரும் கொடுக்க முடியாது என்று நினைக்கிறேன்.
வாழ்த்துகள்.
@வெங்கட ஸ்ரீநிவாசன்
நன்றி பாஸ்
Post a Comment