Sunday, July 22, 2012

சண்டே ஸ்பெசல்-காதலிக்காக காத்திருந்த பொழுதுகள்

”காதல் வந்தால் சொல்லியனுப்பு உயிரோடு இருந்தால் வருகிறேன்” என்ன பீல் பண்ணி ராஜ் பாடுறான் என்று நினைக்கிறீங்களா பதிவை படிக்க மேட்டர் விளங்கும் 
சின்ன வயசில் என் கூட படிச்ச நம்ம தோஸ்த்து ஒருத்தனுக்கு காதல் வந்திடுச்சி.காதலுனா சும்மா ஒங்கவூட்டு எங்க வூட்டு லவ்வு இல்லை ஒலக மகா லவ்வு.பயபுள்ள ராத்திரி பகலா அந்த பிகரு பெயரை சொல்லி பொழம்பிகிட்டு இருக்கும்.அவளை வர்ணிக்கிரதும் அவ பெயரை சொல்லி சொல்லி சந்தோச படுறதுமே பயபுள்ளைக்கு நாளாந்த கடமை.

                             

நண்பர்களுக்கு காதல் வந்தால் அவனுக்க கொடுக்கிற இம்சைக்கு டாகுதரின் இறா படம் எம்புட்டோ மேல்.பத்துவாட்டி வேனும்னாலும் இறாபடம் பாக்கலாம் ஆனா காதல் வந்த நண்பனுடன் ஒரு நிமிடம் கூட சமாளிக்கமுடியாது என்னாமா வுடுவானுங்க பீலா ஏதோ ஒலக காதல் காவியம் ரேஞ்சுக்கு இருக்கும் அவனுங்க இம்சை.

ஒரு நாளு நம்ம பய கேட்டான் ஏண்டா வாயேன் அவள் வூட்டு பக்கம் போயிட்டு வருவோம்.அவன் அங்க போயி என்னா செய்வான்னு எனக்கு நல்லாவே தெரியும் அவ வூட்டு ரோட்டால ஒரு நாலு அஞ்சு தடவை அங்கிட்டும் இங்கிட்டுமாக போயிட்டு வருவான் அப்பறம் திரும்பி வந்திடுவோம் அம்புட்டுதான்.ஆனால் பயபுள்ள ஏதோ தலதீபாவளிக்கு மாமியார் வூட்ட போறமாதிரியே கேட்டான்.

சரி நமக்கும் ஒரு பொழுது போக்கா இருக்குமேனு நானும் அவன் கூடப் போனேன்.

ஒரு சைக்கிளில் என்னை ஏத்திகிட்டு அவ வூடு இருக்கும் தெருவுக்கு போனோம். ஒரு நாலு அஞ்சு கிலோ மீட்டர் சைக்கிள் மிதிச்சிருப்பான் பயபுள்ளைக்கு மூச்சு வாங்குது, சரி போகட்டும் நண்பன் தானே என நெனைச்சு நான் வாங்கி சைகிளை ஓட்டினேன்.

அவ தெருவுக்குள் நுழைஞ்சதும் தான் எனக்கு புரிஞ்சுது அது ஒரு மணல் ரோட்டு. முழங்கால் புதையிர அளவுக்கு ரோட்டு எல்லாம் மணல்.ஆனாலும் நம்ம பயல் வுட்டானா டேய் ப்ளீஸ் மச்சான் ப்ளீஸ் என்று கெஞ்சு கூத்தாடி கூப்பிட்டான். நானும் நண்பனுக்காக ஒரு கீலோமீட்டர் அந்த மணல் ரோட்டில் சைக்கிளை ஓட்டி சென்றேன்.அவ வீடு கிட்ட போனதும் பய சொன்னான் சரி ராஜ் திரும்பு போவோம் என்று

எனக்கு  நல்லா வாயில வந்தது ஏண்டா..............................என்ன .....................க்கு  இந்த மணல் ரோட்டால இம்புட்டு கஸ்டப் பட்டு நான் சைக்கிள் மிதிச்சேன் எனக்கு அவள் வீட்டுல அட்லீஸ் குடிக்க தண்ணியாவது வேண்டித்தா?

டேய் அப்புடி எல்லாம் தண்ணி வேண்ட முடியாதுடா நான் அவளை லவ்வுவதே அவளுக்கு தெரியாது.ஆனாலும் அவள் தெருவில் அவள் வூட்டுக்கு முன்னால் ஒரு நாலு அஞ்சு தடவை போய் வந்தால் ஏதோ அவளே என் கூட வார மாதிரி ஒரு பீலிங்டானு பயபுள்ள ஆரம்பிச்சுது. ஜயோ சாமி ஆளவிட்டா போதும்னு மீண்டும் திரும்பி சைக்கிளை அந்த மணல் ரோட்டால நாக்கு தொங்க மிதிச்சேன்...........

இது நடந்தது 2005 இல் சரி இப்ப அந்த பொண்ணு எங்க அந்த பயபுள்ள எங்கனு கேட்கிறீங்களா? பிறகு இப்படி லவ் இருந்தா வெளங்குமா அந்த பொண்ணுக்கு இப்ப கல்யாணம் ஆகிடுச்சி. ஆனால் நம்ம பயபுள்ள கடைசிவரைக்கும் அந்த பொண்ணுகிட்ட லவ்வ சொல்லவேயில்லை.

இப்படி நண்பர்களுக்கு காதல் வந்தால் அவஸ்தை படுவது நண்பர்கள்தான். டாகுதரின் பாதி,இறா, போன்ற படங்களை திரும்பி பார்க்க சொன்னா எம்புட்டு இம்சையோ அதே போல காதல் வந்த நண்பர்களின் இம்சை தாங்கமுடியாது இந்த பீலிங் உங்களுக்கும் இருந்தால் நீங்களும் என் நண்பனே 
*********************************************************************************
இன்றைய தினம் வெளியான இன்னும் ஒரு பதிவை படிக்க கிளிக்-பட்டையை கெளப்புது புரட்சி எப் எம் ஒரு இனைய வானொலியின் உதயம்

Post Comment

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சில நண்பர்களுக்கு, தூது அனுப்பிய அவரின் நண்பருடன் கல்யாணம் ஆனதுண்டு... haa.. haa.. (த.ம. 1)

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

ஆமா பாஸ் அப்படியும் நடந்திருக்கிறதுதான்

நன்றி பாஸ்

ம.தி.சுதா said...

காதலுக்காக உதவுவது இம்புட்டு சிரமமா... ராசு...

K.s.s.Rajh said...

@♔ம.தி.சுதா♔

ஹி.ஹி.ஹி.ஹி............

நன்றி பாஸ்

Anonymous said...

உண்மை தான் சகோ. காதலிப்பவர்கள் நண்பர்களுக்கும் கொடுக்கும் டாச்சர் இருக்கே .. என் நண்பனும் அப்படித் தான் அவன் காதலி ட்யுசன் முடித்து 8 மணிக்கு வருவாள் என்பதால் கடலைமிட்டாய், பொறி எல்லாம் வாங்கித் தருவதாக ஆசைக் காட்டி ஏமாற்றி எங்களை 6 மணிக்கே நடு ரோட்டில் காவல் இருக்க செய்வான். கடைசியில் கடலைமிட்டாயும் கிடைக்காது ஒன்னும் கிடைக்காது .. ரோட்டுல போறவாரவங்ககிட்ட திட்டுத் தான் கிடைக்கும் ..

அம்பாளடியாள் said...

இப்படி நாலு நண்பர்கள் தொடர்ந்தால் அவர்களுக்கு இனி உங்கள்
பதில்?....
காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேனா!!.......:)
நன்றி சகோ பகிர்வுக்கு

Anonymous said...

இப்பவே இப்டி ரொம்ப ஃபீல் பண்ணி எழுதுரியே, அப்போ எப்டி ஃபீல் பண்ணி இருப்ப?....

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails