சவ்ரவ் கங்குலி கிரிக்கெட் உலகில் இந்தப் பெயரை தெரியாதவர்கள் எவறும் இருக்க முடியாது,உலகில் தோன்றிய தலைசிறந்த இடதுகை துடுப்பாட்ட வீரர்களில் கங்குலியும் ஒருவர்,உலக கிரிக்கெட் கேப்டன்களில் கங்குலிக்கு என்றும் தனி இடம் உண்டு,தனது அசாத்தியமான ஆளுமை திறனால் இந்திய அணியை உலக கிரிக்கெட் அரங்கில் உயர்த்திய பெருமை இவருக்கே.
ஷேவாக்,ஷகிர்கான்,யுவராஜ் சிங்,ஹர்பஜன் சிங்,தோனி,உட்பட பல இளம் வீரர்களை உருவாக்கியவர்.இந்திய கிரிக்கெட்டில் சச்சின் என்ற நாமம் எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகின்றதோ.இனி ஒரு வீரர் சச்சினுக்கு நிகராக இந்திய கிரிக்கெட்டில் உருவாகுவார் என்பது சந்தேகமே,ஆனால் சமகாலத்தில் சச்சினுக்கு இணையாக புகழ்பெற்ற ஒரு வீரர் என்றால் நிச்சயம் அது கங்குலிதான்.சச்சின் அளவுக்கு சாதனைகள் படைக்காவிட்டாலும் கங்குலி கிரிக்கெட்டில் படைத்த சாதனைகள் ஏராளம்.ஏன் சச்சின் செய்யாத பல சாதனைகளை கங்குலி படைத்திருக்கின்றார்.
சச்சின்,கங்குலி,ராவிட்,போன்ற ஜாம்பவான்கள் சமகாலத்தில் விளையாடியதே இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரும் கெளரவம்,
ரசிகர்களினால் தாதா,கொல்கத்தா இளவரசன்,என்று செல்லமாக அழைக்கப் படும் கங்குலி,ரசிகர்களில் மிகப்பெரும் ஆதரவை பெற்ற வீரர் என்றால் அது மிகையாகாது.அது இவர் சிறப்பாக ஆடும் போதும் சரி இவர் சறுக்கியபோதும் சரி இவரது ரசிகர்களுக்கு இவர்மேலான ரசனை சற்றும் குறையவில்லை.
கிரேக் சப்பல் என்ற பயிற்சியாளர் இந்திய கிரிக்கெட்டில் ஆடிய கபடியில் கேப்டன் பதவியில் இருந்து மட்டும் இல்லாமல் அணியை விட்டே ஓரம் கட்டப் பட்ட தாதா மீண்டும் அணிக்கு திரும்பி தன்னை தூற்றியவர்கள் எல்லாம் போற்றும் படி ஆடி,சிறப்பாக கெளரவமான முறையில் ஓய்வு பெற்று சென்றார்.இவர் மீளவும் வந்து ஆடிய காலங்களில்,சச்சின்,ராவிட்,போன்ற வீரர்களின் சாராசரியைவிட இவரது சராசரி அதிகமாகும்.
கங்குலி ஒரு வித்தியாசமான மனிதர் எத்தனையோ பேருக்கு ரோல் மாடல்.கங்குலிக்காகவே கிரிக்கெட் பார்கத்தொடங்கியவர்கள் பலர். அவர் ஓய்வு பெற்றதும் கிரிக்கெட்டை பார்க்காமல் நிறுத்தியவர்கள் பலர்.
உலக கிரிக்கெட் அணிகள் கங்குலியின் தலைமைத்துவத்தை கண்டு அஞ்சின என்பது மறுக்க முடியாத உண்மை.கங்குலி இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற போது இந்திய அணி பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியிருந்த நேரம் முழுவதும் இளம்வீரர்களைக் கொண்ட ஒரு அணியை உலக அரங்கில் நிமிரவைக்க வேண்டிய சுமை கங்குலி தலையில் சுமத்தப்பட்டது.அந்த சுமையை சுமந்து அதில் வெற்றியும் கண்ட தன்னிகரில்லாத தலைவன் எங்கள் தாதா.
கங்குலியை சிலருக்கு பிடிக்காமல் போகலாம்,அதுக்கு காரணம் அவரது எதற்கும் தலைவணங்காத குணமாக இருக்கலாம்.ஆனால் அதுதான் கங்குலியின் ப்ளஸ் பாயிண்டும் கூட.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிரடியான மாற்றங்களை தனது அற்புதமான தலைமைத்துவத்தால் ஏற்படுத்தி இந்திய அணியின் வளர்சிக்கு வித்திட்ட தாதா பற்றி நான் முன்பே ஒரு தொடர் எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். குறிப்பிட்டு சொன்னால் நான் வலைப்பதிவு எழுதவந்ததே இவர் பற்றிய ஒரு தொடர் எழுதவேண்டும் என்பதற்காகத்தான்.என் சின்னவயது முதல் இன்றுவரை இவர் மீதான அபிமானம் சிறிதும் மாறவில்லை.கிரிக்கெடையும் தாண்டி பலவிடயங்களில் கங்குலியை எனக்கு பிடிக்கும்.குறிப்பாக இவரது ஆளுமை திறன், அசால்ட்டாக முடிவெடுக்கும் தன்மை,அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை இப்படி சொல்லிக்கொண்டேபோகலாம்.
இது எனது கனவுத்தொடராகும் இந்த தொடர் தாதா ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையும்.
அதைவிட தாதா ரசிகர்கள் இல்லாத கிரிக்கெட்டை நேசிக்கும் ரசிக்கும் ஓவ்வொறுவரையும் நிச்சயம் கவறும் என்று நம்புகின்றேன்
என் தளத்தில் எழுதியபதிவுகளில் இதுவரை 48 கிரிக்கெட் பதிவுகளை எழுதியுள்ளேன்.ஆனால் கிரிக்கெட் சம்மந்தமான தொடர் எழுதுவது இது இரண்டாவது முறை இதற்கு முன் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பற்றிய ஒரு தொடரை எழுதியிருக்கின்றேன்.ஆனால் அப்போது நான் புதியபதிவராக இருந்தாலும் பலரது வரவேற்பை பெற்ற தொடர் அது.அந்த வகையில் இந்தத்தொடருக்கும் உங்கள் ஆதரவு இருக்கும் என்று நம்புகின்றேன்.
உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்காதா சரி இந்த தொடரை ஒரு கிரிக்கெட் பதிவாக பார்காதீர்கள் ஒரு மனிதனின் தன்னம்பிக்கை அவனது வெற்றியின் அடையாளம்.கங்குலியின் வரலாறு ஓவ்வொறு மனிதனும் தனது தொழிலில் எப்படி இருக்கவேண்டும்,எப்படி இருக்க கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம்.
எனவே கிரிக்கெட் பிடிக்காதவர்களுக்கும் இந்த தொடர் நிச்சயம் பிடிக்கும் வாசித்துப்பாருங்கள்.
எனக்கு வருவதை நான் எழுதுகின்றேன் அதற்கான அங்கீகாரம் உங்கள் கைகளில்
அன்புடன்
கே.எஸ்.எஸ்.ராஜ்
(தொடரும்)
உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்காதா சரி இந்த தொடரை ஒரு கிரிக்கெட் பதிவாக பார்காதீர்கள் ஒரு மனிதனின் தன்னம்பிக்கை அவனது வெற்றியின் அடையாளம்.கங்குலியின் வரலாறு ஓவ்வொறு மனிதனும் தனது தொழிலில் எப்படி இருக்கவேண்டும்,எப்படி இருக்க கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம்.
எனவே கிரிக்கெட் பிடிக்காதவர்களுக்கும் இந்த தொடர் நிச்சயம் பிடிக்கும் வாசித்துப்பாருங்கள்.
எனக்கு வருவதை நான் எழுதுகின்றேன் அதற்கான அங்கீகாரம் உங்கள் கைகளில்
அன்புடன்
கே.எஸ்.எஸ்.ராஜ்
(தொடரும்)
|
26 comments:
வணக்கம் சொந்தமே..முதலில் உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....சிறப்பாக தொடருங்கள்.நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும் சொந்தமே..வாழ்த்துக்கள்.சந்திப்போம்.!
@Athisaya
நன்றி சொந்தமே
மிகவும் எதிர்பார்த்த தொடர்... ஆரம்பமே அசத்தல்... தொடருங்கள் நண்பரே ! (TM 3)
எனக்கு இந்த பந்து மீது அதிகம் விருப்பு இல்லை ஆனால் தன்நம்பிக்கைக்கு அவரைப்பிடிக்கும்!தொடருங்கள்
கிரிக்கெட்டின் தல பற்றிய தொடரை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். கங்குலி என்றுமே மாஸ்தான்
SOURAV இன் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவர். இப்படி ஒரு தொடரை நீங்கள் எழுத போகுறீர்கள் என்று தெரிந்த நாளில் இருந்து தினம் உங்களின் Fb and blog ஐ தவறாமல் ஒரு நாளைக்கு பல முறை visit பண்ணினேன்.. நிச்சயம் SOURAV பற்றிய தொடர் வெற்றியடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. என் மனமார்ந்த வாழ்த்துக்கள். All the very best..
கங்குலிக்காகவே கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியவர்கள் பலர். அவர் ஓய்வு பெற்றதும் கிரிக்கெட்டை பார்க்காமல் நிறுத்தியவர்கள் பலர்.
100% உண்மை
யாருக்கும் தலைவணங்காத குணம், எனக்கும் ரொம்பவே பிடிக்கும் சிறந்த கப்டன் அதில் சந்தேகம் எதுவுமில்லை.
வணக்கம் அண்னா...
கிரிக்கெட் பிடிக்காதவர்களுக்கும் இந்த தொடர் நிச்சயம் பிடிக்கும் வாசித்துப்பாருங்கள்.///
ம்ம்ம் தொடர்ந்து எழுதுங்க்அ வாசிக்குரோம்.
nice. plz visit here
http://newsigaram.blogspot.com/2012/07/blog-post.html
@திண்டுக்கல் தனபாலன்
நன்றி பாஸ்
@தனிமரம்
நன்றி பாஸ்
@பாலா
நன்றி பாஸ்
@dhanu
மிக்க நன்றி சகோ
@Shanmugan Murugavel
நன்றி பாஸ்
@mahesh
நன்றி பாஸ்
@sigaram bharathi
நன்றி சகோ
கண்டிப்பாக வருகின்றேன்
//கெளரவமான முறையில் ஓய்வு பெற்று சென்றார்//
காமெடி பண்ணாதீங்க பாஸ்
எதற்க்கும் தலை வணங்காத //
அப்படீன்னா அவரு மெக்கல்லம் Captaincy-ல வெளயாடிருக்க கூடாது
@dhanu
////கங்குலிக்காகவே கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியவர்கள் பலர். அவர் ஓய்வு பெற்றதும் கிரிக்கெட்டை பார்க்காமல் நிறுத்தியவர்கள் பலர்.
100% உண்மை
////
இந்த வரிகளை எழுதும் போது என் கண்கள் கலங்கிவிட்டன பாஸ் இதை நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை சவ்ரவை அவ்வளவு பிடிக்கும்..நன்றி பாஸ்
@மௌனகுரு
Sourav மெக்கல்லம் Captaincy-ல விளையாடியதற்கு காரணம்.. he loves cricket more than anything.. Sourav கு பதவி ஆசை என்றும் இருந்ததில்லை.
@மௌனகுரு
நான் சொல்லவேண்டிய பதிலை மேலே நண்பர் சொல்லியிருக்கார் பாருங்க பாஸ்
எவ்வளவு சோசனைகளைக் கடந்தாலும் அதற்கெல்லாம் அசராது அவர் ஆடியதுக்கு காரணம் கிரிக்கெட் மீது அவருக்கு இருந்த தீராத காதல் தான்.
இந்த தொடரை தொடர்ந்து படிங்க பாஸ் இதில் பல விடயங்களை தெளிவு படுத்துகின்றேன்.
நன்றி பாஸ்
கங்குலிக்காகவே கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியவர்கள் பலர். அவர் ஓய்வு பெற்றதும் கிரிக்கெட்டை பார்க்காமல் நிறுத்தியவர்கள் பலர்.
நானும் இதை தான் செய்தேன் ..
But Sourav's Mother said in an interview :
அவரை team இலிருந்து நீக்கிய காலத்தில் கூட TV முன் chair ஐ போட்டு cricket பார்ப்பாராம். Sourav fans நாங்களே cricket ஐ வெறுத்தோம் But Sourav அப்படி செய்யவில்லை. Because he loves cricket.. அவர் மிக மிக நேசித்தது.. நேசிப்பது CRICKET.. அதனால் தான் இத்தனை அவமானங்கள்.. போராட்டங்கள்... இருந்தும் விடாமுயற்சி செய்து இன்றும் விளையாடுகிறார் ..
@dhanu
////
கங்குலிக்காகவே கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியவர்கள் பலர். அவர் ஓய்வு பெற்றதும் கிரிக்கெட்டை பார்க்காமல் நிறுத்தியவர்கள் பலர்.
நானும் இதை தான் செய்தேன் ..
But Sourav's Mother said in an interview :
அவரை team இலிருந்து நீக்கிய காலத்தில் கூட TV முன் chair ஐ போட்டு cricket பார்ப்பாராம். Sourav fans நாங்களே cricket ஐ வெறுத்தோம் But Sourav அப்படி செய்யவில்லை. Because he loves cricket.. அவர் மிக மிக நேசித்தது.. நேசிப்பது CRICKET.. அதனால் தான் இத்தனை அவமானங்கள்.. போராட்டங்கள்... இருந்தும் விடாமுயற்சி செய்து இன்றும் விளையாடுகிறார் .////
தல என்றுமே மாஸ் தான் சகோ
@dhanu
neengal solvathupola dada vin thodar nichaiyam vetri perum........... all the best.....
Post a Comment