நான் ஈ படம் நேற்றுத்தான் பார்க்க கிடைத்தது,மிக மிக அருமையான ஒரு திரைப்படம்
கதை-வில்லனுக்கு ஹீரோயின் மேல ஒரு கண் இதுக்கு இடஞ்சலாக இருக்கும் ஹீரோவை போட்டுத்தள்ளிவிடுகின்றார். ஹீரோ மறுஜென்மத்தில் ஈயாக பிறந்து வருகின்றார்.பிறகு என்ன நடக்கின்றது என்பது மிக மிக சுவாரஸ்யமாக இயக்குனர் சொல்லியிருக்கின்றார்.
நடிகர்கள்
இதில் ஹீரோவின் நிஜப் பெயர் நானி தான் இவர் இதற்கு முன் தமிழில் வெப்பம் என்ற படத்தில் நடித்திருக்கின்றார். இதற்காக சிறந்த அறிமுக நடிகர் என்ற விஜய் டீ.வியின் விருதை அண்மையில் 6வது விஜய் அவாட்ஸ் நிகழ்ச்சியில் இவருக்கு வழங்கப் பட்டது குறிபிடத்தக்கது.
ஹீரோயின் சமந்தா ஏற்கனவே பாணாகாத்தாடி படத்தில் இவரை ஜொள்ளிய ரசிகர்கள் ஏராளம்.இப்ப நான் ஈ யில் இன்னும் அழகாக இருக்கின்றார்
வில்லனாக கன்னட நடிகர் சுதீப். வில்லன் என்பதைவிட இந்தப் படத்தின் ஹீரோ இவர் என்றால் அது மிகையாகாது. அற்புதமான நடிப்பு படம் முடிந்ததும் மனதில் நிற்பவர்கள் அந்த ஈயும் சுதீப்பும் தான்.
![]() |
சுதீப் |
சுதீப்பை எனக்கு ஒரு கிரிக்கெட்டராகதான் முதலில் தெரியும். என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா செலிபிரட்டி கிரிக்கெட் லீக்(CCL)என்று நடிகர்களுக்கு இடையில் ஒரு நட்சத்திர கிரிக்கெட் தொடர் நடைபெறுவது அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதில் இரண்டு சீசனிலும் கர்னாடகா புல்டோசர் அணியின் கேப்டனாக இருப்பவர் சுதீப் தான்.அப்போதுதான் எனக்கு சுதீப் என்ற பெயர் அறிமுகம். நான் பார்த்த இவரது முதல் படம் நான் ஈ தான் அதுக்கு பிறகு இவரது படங்களை பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.
ஒரு சில காட்சிகளில் வந்தாலும் சந்தாணத்தின் பாத்திர படைப்பு சிறப்பாக இருக்கு இது பற்றி படத்தில் பாருங்கள் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.
லாஜிக் மிஸ்டேக் என்று பார்த்தல் சில இருக்கு ஆனால் அதை எல்லாம் தூக்கி சாப்பிடுகின்றது படத்தின் கதை.மிக சிறந்த ஒரு படம்.
நான் இதுவரை பார்த்த சினிமாப்படங்களை(எல்லா மொழிப்படங்களும் அடங்கும்)வரிசைப்படுத்தினால் அதில் டாப்-10க்குள் நிச்சயம் நான் ஈ படம் இருக்கும்.
நான் ஈ படம் பார்த்தால் படம் முடிய நீங்களும் அந்த ஈக்கும் சுதீப்புக்கு ரசிகர்களாக மாறிவிடுவீர்கள்
நான் ஈ-அனைத்து தரப்பினரையும் கவரும் ஒரு சிறந்த படம்
|
10 comments:
உண்மைதான் நண்பரே. சுதீப் கன்னட உலகில் ஒரு சூப்பர் ஸ்டார். இந்த படத்தில் அவர் வில்லன் ரோல் ஏற்றது ஏன் என்று நினைத்தேன். படத்தை பார்த்தபின் அது நீங்கியது.
நம்ம தலைவர் ரஜினியே பாராட்டிய வில்லன்...
பகிர்வுக்கு நன்றி...வாழ்த்துக்கள் !
(த.ம. 2)
பொதுவாக படத்தை பற்றி நல்ல அபிப்ராயம் காணப்படுகிறது.விமர்சனம் நன்று. நேரம் இருப்பின்
http://tnmurali.blogspot.com/2012/07/Kapildev-Amnesty.html
வருகை தரவும்
த.ம.3
சமீபத்தில் அனைத்துத் தரப்பினரையும்
கவர்ந்த படம் என்றால் நான்-ஈ தான் போலும்
அருமையான விமர்சனப் பதிவு
வாழ்த்துக்கள்
tha.ma 5
@பாலா
நன்றி பாஸ்
@திண்டுக்கல் தனபாலன்
நன்றி பாஸ்
@T.N.MURALIDHARAN
கண்டிப்பாக வருகின்றேன் நன்றி பாஸ்
பில்லாவையும் தாண்டி கல்லா கட்டிக்கொண்டிருக்கிறது
@கோகுல்
அப்படியா?
நன்றி பாஸ்
Post a Comment