பில்லா-2 தல அஜித்தின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கொஞ்சம் லேட்டாக படம் பார்க்க முடிந்ததால் என் விமர்சனம் லேட்டாக வருகின்றது பொதுவாக எல்லாப் படங்களுக்கும் நான் விமர்சனம் எழுதுவது இல்லை குறிப்பிட்ட சில படங்களுக்கு மாத்திரம்தான் எழுதுவது என் வழமை அந்தவகையில் பில்லா-2
கதை-ஏற்கனவே வெளிவந்த பில்லா படத்தில் சர்வதேச டான் பில்லா எப்படி படிப்படியாக சர்வதேச டான் ஆனார் என்பதே பில்லா 2 இன் கதை.
படம் அவ்வளவு மோசம் இல்லை ஒரு டான் கதைக்குறிய படம் இப்படித்தான் இருக்கும்.ஆனால் அதிகளவு எதிர்பார்புடன் படம் பார்க்க சென்றால் நிச்சயம் எமக்கு ஏமாற்றம்தான்.காரணம் ஒரு டான் கதையில் நகைச்சுவை காட்சிகளையோ காதல் காட்சிகளையோ அதிகளவில் எதிர்பார்க்க முடியாது.
ஒருவேளை மங்காத்தா என்ற கமர்சியல் ஹிட்டுக்கு பிறகு அஜித் இந்தப் படத்தில் நடித்தால் இப்படி ஒரு எதிர்பார்பு ரசிகர்களுக்கு ஏற்படுகின்றதோ என்னவோ.
அதைவிட இந்தப் படம் குடும்பத்துடன் பார்க்கமுடியாது ஒரே வன்முறை என்றும் சொல்ல முடியாது.எல்லாம் படங்களும் குடும்பத்துடன் பார்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது அல்லவா?
படத்தில் கதாநாயகி என்று ஒருவர் இருக்கிறார் யாருப்பா அது? பார்வதி ஓமனக்குட்டனா?மிஸ் இந்தியாவாமே?நாங்கெல்லாம் அழகி என்றால் ஜவர்யாராய் ரேஞ்சுக்கு எதிர்பார்கிறவங்க.அட்லீஸ் அழகுதான் அவங்க அளவுக்கு இல்லாட்டியும் கொஞ்சம் நடிக்கவாவது அந்தப் பொண்ணுக்கு சந்தர்ப்பம் கொடுத்து இருக்கலாம்.தமிழில் முதல் படமே பெரிய அளவு பார்வதி ஓமணக் குட்டனுக்கு நடிக்க சந்தர்ப்பம் அமையவில்லை.
![]() |
பார்வதி ஓமணக்குட்டன் |
அதைவிட இவங்களை ரசிக்கவும் முடியவில்லை எனவே தமிழ் சினிமாவின் கனவுக்கு கன்னி என்ற அளவுக்கு எல்லாம் இவர் சரிப்பட்டு வரமாட்டார்.
பாடல்களில் மதுரப் பொண்ணு பாடல் ரசிக்க முடிகின்றது.
தல தன் பங்கை சிறப்பாக செய்திருப்பது போல இயக்குனரும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக மாறியிருக்கும் ஜஸ்ட் மிஸ் ஆனாலும் டான் படங்களை ரசிப்பவர்களுக்கு படம் கண்டிப்பாக பிடிக்கும்.
பில்லா-2முழுவதும் மோசம் இல்லை
*********************************************************************************
நேற்றய தினம் வெளியான தாதா பற்றிய தொடரின் பகுதி-2 ஜ படிக்க இங்கே கிளிக்-வரலாற்றை மாற்றிய தாதா-2
*********************************************************************************
நேற்றய தினம் வெளியான தாதா பற்றிய தொடரின் பகுதி-2 ஜ படிக்க இங்கே கிளிக்-வரலாற்றை மாற்றிய தாதா-2
|
15 comments:
எனக்கு படம் பிடிச்சிருந்தது...அவ்ளோதான் என்னோட பார்வையில்!...உங்க பங்கு நச்!
அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள். ஆனால் இங்கே நடப்பதே வேறு. இதற்கென்று ஒரு பதிவு எழுதி கொண்டிருக்கிறேன். விரைவில் வெளியிடுகிறேன். நன்றி
நல்ல அலசல்... இப்போது படத்தின் ரிசல்ட் நன்றாக உள்ளது என்று வருகிறது...
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (த.ம. 2)
அழகான அஜித் படத்தை பகிர்ந்தமைக்கு நன்றி. அஜித் படத்தை நான் சுட்டுட்டேன் தம்பி
@விக்கியுலகம்
நன்றி பாஸ்
@பாலா
நன்றி பாஸ்
@ராஜி
நன்றி அக்கா
Sariyana pathivu...nama valanumna yaravena yethana pera vena kollalam..intha vasanathathan padama eduthurukanka..apuram padamellam kolaya irukuna epdi..athunalathan A certificate koduthurukankale..
a decent comment vaazhtukkal..
@david raja
நன்றி பாஸ்
@ARASU
நன்றி பாஸ்
இன்னும் பார்க்கவில்லை விரைவில் பார்போம்!ம்ம்
@தனிமரம்
பாருங்க நன்றி பாஸ்
இத படம் சம்பந்தமா நான் எழுதியதும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான்... படம் மோசம்னு சொல்ல முடியாது, ஆனா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்துருக்கலாம்ன்னு கமல் மாதிரி வேணும்னா சொல்லலாம்...
@மொக்கராசு மாமா
வாங்க நீண்டநாளைக்கு அப்பறம்
ரொம்ப நன்றி பாஸ்
Post a Comment