பதிவுலகில் நாற்றுக்குழுமம் என்ற ஒன்று இயங்கிவருவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதில் இருந்து தற்போது ஒரு புதிய முயற்சியாக புரட்சி எப் எம் என்ற ஒரு இனைய வானொலியை ஆரம்பித்திருக்கின்றார்கள்.இதை நாற்று குழுமம் ஆரம்பித்து இருக்கின்றது என்று நாற்றின் நிறுவனர் திரு நிரூபன் அவர்கள் அறிவித்தாலும். இந்த இணையவானொலியின் ஆரம்பத்தில் திரு நிரூபன் அவர்களது பங்கு அளப் பெரியது.
முதலில் நாற்று வலைப்பதிவில் அவரது பதிவுகளை ஆடியோ வடிவில் உருவாக்கி முதன் முதலில் வானொலி ஆரம்பத்துக்கு ஒரு பரிசோதனை முயற்சியாக மேற்கொண்டார். அதன் பின் வானொலி மீதான அவரது தீராத காதலின் விளைவே இந்த புரட்சி எப் எம் என்று எனக்கு தோணுகின்றது.
வலையுலகில் நாற்று குழுமம் சக பதிவர்களை ஊக்குவித்து அவர்களை பதிவுலகில் வளர்த்துவிடுவதில் பெரும் பங்காற்றியது.திரு நிரூபன் அவர்களின் ஆலோசணையில் பதிவுலகில் வளர்ந்த பதிவர்கள் ஏராளம்.தற்போது அடுத்த கட்டத்தை நோக்கிய வளர்ச்சிப்பாதையில் நாற்று குழுமம் காலடி எடுத்துவைத்திருக்கின்றது எனவே பதிவர்களாகிய நாம் இதற்கான எமது வாழ்த்தினையும் ஆதரவினையும் வழங்குவோமாக.
புரட்சி எப் எம் தொடர்ந்து தரமான நிழக்ச்சிகளை வழங்கி இனையவானொலிகள் வரிசையில் ஒரு சிறந்த இனையவானொலியா புகழ் பெறவேண்டும் என்று நண்பர்கள் தளம் அதன் வாசகர்கள் சார்பில் வாழ்த்தி நிற்கின்றது.
புரட்சி வானொலி குழுமத்தினருக்கு நண்பர்கள் தளம் சார்பாக இனிய வாழ்த்துக்கள்
புரட்சி வானொலியை கேட்கவும் அவர்களது இணையதளத்துக்கு செல்லவும் இங்கே கிளிக்-புரட்சி எப் எம்
|
0 comments:
Post a Comment