Monday, February 14, 2011

காதலர் தின சிறப்பு நேர்காணல்.

அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்துக்கள்


 பிரபல்யங்களை மட்டுந்தான் பேட்டி காண வேண்டுமா?சாதாரணமான வர்களையும் பேட்டி காணலாமே. இந்த காதலர் தினத்தில் எமது நண்பர்கள் வலைப்பதிவுக்காக எமது நண்பர் லோகநாதன் சுஜிதன் வழங்கிய நேர்காணல்.



லோகநாதன் சுஜிதன்


கேள்வி:-வணக்கம் சுஜிதன் உங்களை முதலில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்?


சுஜிதன்:- வணக்கம் என்னுடைய பெயர் லோகநாதன் சுஜிதன்,நான் சொப்ட்வெயார் இஞ்சினியரிங் படித்துக் கொண்டிருக்கின்றேன்.


கேள்வி:-பெப்ரவரி14 காதலர் தினம்,இந்த தினம் அவசியமானது என நினைக்கின்றீர்களா?

 சுஜிதன்:-ஆம் கண்டிப்பாக 
அன்னைக்கு அன்னையர்தினம்,மாணவர்களுக்கு மாணவர்தினம், எல்லாம் எல்லாம் இருக்கும் போது,காதலர்கள் காதலர் தினம் ஏன் கொண்டாடக் கூடாது 
கண்டிப்பாக கொண்டாட வேண்டும்
.
கேள்வி:-சரி காதலர் தினம் கொண்டாட்டங்கள் கொண்டாடும் போது பெற்றோர்கள் மத்தியில் பொதுவாக என்ன கண்னோட்டம் நிலவுகின்றது?



சுஜிதன்:-இது ஒர் உருப்படாத வேலை,இதெல்லாம் தேவைதானா என்ற ஒர் கருத்து சிலரிடயே இருக்களாம்,இந்த நிலை மாறவேண்டும் காதலிப்பது ஒன்றும் தப்பில்லையே(உண்மைக் காதல்)


கேள்வி:- படிக்கின்ற வயதில் ஏற்படும் காதல்,வாழ்க்கையில் ஒர் நிலைக்கு வந்தபின் ஏற்படும் காதல். எது சரியானது என நினைக்கின்றீர்கள்?



சுஜிதன்:-வாழ்க்கையில் ஒர் நிலைக்கு வந்தபின் ஏற்படும் காதலே சரியனது ,
படிக்கிறவயதில் வரும் காதல் அதாவது சிறுவயதில் வரும் காதல் ஒர் பருவ ஈர்ப்பு மட்டுமே,படித்து வாழ்க்கையில் செட்டில் ஆகியபின் அதாவது 24,25 வயதில் வரும் காதல் அனுபவக்காதல்.எல்லாம் பட்டு அறிந்து வரும் காதல் இதுவே கடைசியில் ஜெயிக்கும்.


கேள்வி:-காதலிக்கு கவிதை எழுதிய அனுபவம் உண்டா? ஒர் கவிதை சொல்ல முடியுமா?



சுஜிதன்:-ஆம் உண்டு,


 என்ன ஒர் முரண்பாடு உன் புன்னகையில்,
உன் புன்னகையைப் பார்க்கும் போது 
உனக்காக வாழலாம் என்றும் தோனுகின்றது,
உனக்காக சாகலாம் என்றும் தோனுகின்றது.


கேள்வி:-சுப்பர் கவிதை சுஜிதன்.காதலர் தினத்தில் காதலிக்கு என்ன பரிசு கொடுக்களாம் தங்கள் பார்வையில்?


சுஜிதன்:-ஏதாவது மனதில் மறக்க முடியாத பரிசாக இருக்கவேண்டும்,தினமும் பாவிக்க கூடிய பொருளாக இருந்தால் நன்று.


கேள்வி:-ஒருவர் தனது காதலை தான் காதலிப்பவரிடம் வெளிப்படுத்த சிறந்து கடிதம்,Phone call,sms,E-mail,அல்லது நேரடியாக சொல்வது எது சிறந்தது தங்கள் பார்வையில்?
சுஜிதன்:-நேரடியாக சொல்வது


கேள்வி:-ஒரு காதல் தோல்வி அடைகின்ற போது அந்த நினவுகளை அழித்துவிட்டு இன்னொரு காதலை தேடுவது சரியா தவரா?


சுஜிதன்:-சரி But ஒருவரை காதலித்துக் கொண்டே வேரு காதலை தேடுவது மிக தவறு


கேள்வி:-சுஜிதன் இந்த காதலர் தினத்தில் எமது வலைத்தளத்திற்கு பேட்டி தந்ததற்கு நன்றி இந்தகாதலர் தினத்தில் காதலர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்க்ள்?


சுஜிதன்:-காதலன் காதலியையும்,காதலி காதலனையும்,ஏமாற்றாமல்.
காதலில் ஜெயித்து திருமண பந்தத்தில் இணைய வேண்டும்
அனைவருக்கும் Happy valentine's day wishes and good luck.


மிகவும் நன்றி சுஜிதன் தங்களுக்கு எமது வலைப்பதிவு சார்பாக இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

Post Comment

2 comments:

kathir.haran said...

super nanpa unkal valarchkku valththukkal

அம்பாளடியாள் said...

அருமையாத்தான் பதிலும் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோ ...

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails