Wednesday, February 09, 2011

காதல்(சிறுகதை)/Kss.Rajh/

புத்தாண்டு ஆரம்பித்து 1மாதத்தின் பின்பு தான் இந்த வருடத்தின் முதல் பதிவை எழுதுகின்றேன்,மன்னித்து அருளுங்கள் எனது வாசகர்களே.


காதல்(சிறுகதை)


 


என் பெயர் ராம்குமார் கம்பனி ஒன்றில் சந்தை படுத்தல் முகாமையாளராக இருக்கின்றேன்,திருப்திகரமான சம்பளம்,அன்பான மனைவி ரம்யா,ஆத்மாத்தமான நண்பர்கள்,எனது வாழ்க்கை சந்தோசமாக இருக்கிறது இன்று,அனால் இந்தவாழ்க்கையை பெறத்தான் எத்தனை போராட்டங்கள்,எவ்வளவு வலிகள்.ரம்யா எனக்காக
வாழும் எந்தன் ஜீவன். நான் உயர்தரத்தில் கல்வி பயின்று கொண்டிருந்த காலமது.எப்படியாவது பல்கலைக்கழகம் சென்று விட வேண்டும் என்ற நோக்கத்தில்,தீவிரமக படித்துக்கொண்டிருந்தேன் அப்போது
பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும்.ஒருமுறை பார்த்தால் மறுமுறையும் பார்க்கத்தூண்டும் அழகு.
நான் அவளது வகுப்பறையால் போகும் போதெல்லாம் என்னையே பார்த்துக்கொண்டிருப்பாள்,நான் அதைபெரிதாக எடுத்துக்கொள்ளது இல்லை
என்கவனம் எல்லாம் படிப்பில் மாத்திரமே இருந்தது.அனால் அவள் விடுவதாக இல்லை தொடர்ச்சியாக அவள் பார்வையாள் என்னை சிறைபடுதிக்கொண்டே இருந்தாள்.ஒரு நாள் அவளது நண்பி ஒருத்தி என்னிடம் வந்து ,ரம்யா என்னை காதலிப்பதாகவும் எனது முடிவு என்ன என்று கேட்டாள்.நான் எதுவுமே கூறவில்லை பேசாமல் சென்றுவிட்டேன்.நாட்கள் நகர்ந்தது.
பரீட்சை எழுதியபின் நான் பாடசலைக்கு போகாதபடியால் பார்க்க முடியவில்லை,பரீட்சை பெறுபேறுகள் வந்தது எனக்கு பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு போதுமான புள்ளி கிடைக்காததனாள் என் பல்கலைக்கழக கனவு உடைந்து போனது,என் உலகம் இருண்டு போனது.எல்லோருடைய கேலிப்பேச்சுக்கள் என்னை வெகுவாக காயப்படுத்தியது.
அப்பொது எனக்காக வருந்தியது ஒர் ஜீவன்,ஆம் ரம்யா,எனக்கு அது புதிதாக தெரிந்தது எனக்காக ஒருத்திவருந்துவது.
அப்போதுதான் நான் என் ரம்யாவை புரிந்துகொண்டேன்.
எனதுகாதல் பிரிவுகளாளேயே
அஸ்திவாரம் இடப்பட்டு வலுப்பெற்றது,ஆம் நான் பிறகு ஊரில் இருக்க பிடிக்காதனால்,என்ன செய்யாலாம் என்று ஜோசித்துக் கொண்டிருக்கையில்,சந்தைப்படுத்தல் சம்மந்தமான கற்கை நெறி ஒன்றினைக் கற்பதற்கு ஒருசந்தர்ப்பம் கிடைத்தது,
என் ரம்யாவை பிரிந்து வெகு தூரம் சென்று விட்டேன்.
தனிமை என்னை வாட்டியது,
சில மாதங்கள் கடந்தது நான் எனது கல்வியில் கவனம் செலுத்தினேன்,எனது சிறுவயது நண்பர்கள் மூன்று பெயர் என்னுடன் தங்கியிருந்து படித்துக்கொண்டிருந்தனர்,சுஜி சொப்ட்வெயார் இஞ்சினியரிங் படித்துக்கொண்டு இருந்தான்,ராஜ், புவி,இருவரும் கட்டிட வடிவமைப்பு படித்துக்கொண்டிருந்தார்கள்.ராஜ்க்கும் புவிக்கும் காதல் என்றால் பிடிக்காது காதல் எல்லாம் பொய் வாழ்க்கையில் முதலில் செட்டில் ஆகின்ற வழியப்பார் மச்சான் என்று அடிக்கடி கூறுவார்கள்,சுஜி பரவாயிலை.நான் ரம்யாவை பார்ப்பதர்கு இடைக்கிடையே போய்வருவேன்.அப்பொதெல்லாம் திட்டுவானுகள்,
காலங்களும் உருண்டு ஒடியது,சுஜி சொப்ட்வேயார்கம்பனி ஒன்றை நிறுவி அதில் பிசியாகிவிட்டான்,ராஜ்சும் புவியும்,பில்டிங் டிசைனிங்கில்,கொடிகட்டிப் பறக்குரான்கள்,நான் எனது கற்கை நெறி முடிந்துவேலை கிடைக்கவில்லை சிறிது காலம்,சுஜியின் கம்பனியில் வேலை செய்தேன்,பிறகு வேரு ஒர்கம்பனியில் வேலை கிடைத்ததும்,அங்கு செல்லும் படி மூவரும் சொன்னான்கள்,இதற்கு இடையே ரம்யா வீட்டில் எங்கள் காதல் தெரியவந்தது அவளுக்கு வேரு இடத்தில் வரன் பார்க்க தொடங்கினர்,
இதை எனது நண்பர்களிடம் தயங்கித்தயங்கியே சொன்னேன் அதற்கு அவன்கள் ஏன் மச்சான் படிக்கிர போதுதான் காதல் தப்புன்னு சொன்னோம்,இப்ப நீ வாழ்க்கையில் செட்டில் ஆகிட்ட இப்ப நீ அவளை கல்யாணம் பன்னிக்க நாங்கள் உனக்கு இருக்கம்.அதன் பிறகு நண்பர்களில் துணையுடன் என் ரம்யாவை கரம் பிடித்தேன்.
 
அனால் இன்று ராஜ்யும் புவியும் நிறைய சம்பாதிக்கிறான்கள் இப்பவும் காதல் என்றால் அவன்கள் அதே மனநிலையில் தான் இருக்கிறான்கள்
என்ன சார் கடும் சிந்தனை
? என் மனைவியின் குரல் கேட்டு சிந்தனையில் இருந்து விடுபட்டேன்.காதல் எல்லாம் பொய் முதலில் வாழ்க்கையில் செட்டில் ஆகுற வழியைப்பார் அப்புறம் காதலிமச்சான்-Kss.Rajh
 

Post Comment

0 comments:

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails