Friday, October 28, 2011

காதல் வந்தால் நண்பர்களுக்கு இம்சை உண்டா?

காதல் என்பது என்ன?அது ஓரு அற்புதமான உணர்வு..ஓரு தடைவைதான் காதல் வரும்..என்பது எல்லாம் காதலர்கள்..சொல்லும் .சுத்தப்பொய்...




என் நண்பர்களில் சிலர் காதலித்துக்கொண்டு இருக்கின்றார்கள்..பலர் தற்போது காதல் வலையில் சிக்காமல் இருக்கின்றோம்(நான் உட்பட)

.நண்பர்களில் ஓருவன்....எங்கள் வகுப்பில் காதல் மன்னன்..நாங்கள் படிக்கும் காலத்தில் இருந்தே பல பொண்ணுங்களை காதலித்துள்ளான்......இவனை பற்றி எங்கள் பசங்களுக்கு எல்லாம் தெரியும்..ஆனால் இவன் காதலிக்கும் பொண்ணுங்கள் கொடுக்கும் பில்டப்புக்கள் தாங்க முடியாது...இவன் பாடசாலையில் படிக்கும் போது ஓரு பொண்ணை காதலித்தான்...அவளும் இவனை உருகி உருகி காதலித்தாள்...இவள் இவனுக்கு அறிமுகமானதே சுவாரஸ்யம் தான்.ஆம் இவன் ஓரு பெண்னை ஒரு தலையாக காதலித்த போது இவர்களுக்கிடையில் தூது போனவள் ..பிறகு இவனை காதலிக்க தொடங்க...இவனும் அவளின் காதல் வலையில் விழுந்து விட்டான்....

பிறகு அந்த பொண்ணு வகுப்பில் பண்ணும் அட்டகாசம் தாங்க முடியாது....இவன் குடித்த ஜஸ் சொக்கை பறித்து அவள் குடிப்பதும்..இவன் சாப்பிட்ட கெண்டோஸ்(கண்டோஸ்)அவள் பறித்து சாப்பிடுவதும்....நான் ஓரு முறை அந்தப்பெண்ணிடம் சொன்னேன்...நீங்க..காதலர்களாக இருக்கலாம் ஆனால் இது பள்ளிக்கூடம் இங்க...வகுப்பில் பலபேர் இருக்கின்றார்கள்...நீங்கள் நடந்து கொள்ளும் முறை அநாகரிகமானது...அவள் நீ உன் வேலையைப்பாரு என்று என்னை திட்டி விட்டாள்

அவள் அவனை தீவிரமாக காதலித்து வந்தாள்..அப்பறம் நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகளால் இருவரும் பிரிந்து விட்டார்கள்.பிறகு மீண்டும் இருவரும் சந்தித்த போது...அவள்..முழுவதும் மாறியிருந்தாள்..முன்பு போல அவனிடம்..அவ்வளவு கதைப்பது இல்லை..பிறகு வேறு ஓரு வரை திருமணம் செய்து விட்டாள்....சில வருடங்கள் பார்க்காமல் இருந்தால் காதல் முற்றாக இல்லாமல் போய்விடுமா?....இவர்கள் காதல் அடிப்படையில் உறுதியாக இல்லை சரியான புரிந்துணர்வு இல்லை...வெளியில் நாங்கள் காதலர்கள் என்ற வெட்டி பந்தா காட்டுவதில் என்ன பிரயோசனம்.

இதில் உள்ள இன்னும் ஓரு மேட்டர் என்ன வென்றால்..அவனை இப்ப இன்னும் ஓரு பெண்காதலிக்கின்றாள்..அவளுக்கு அவனின் முன்னய காதல் கதைகள் எல்லாம் தெரியும்....அவள் சொல்கின்றாள் நான் அவள் மாதிரி விட்டுட்டு போகமாட்டேன் அவனைத்தான் திருமணம் செய்வேன் என்று பாரட்டதக்கவிடயம் என்றாலும்....இவளும் முன்னைய பெண்ணைப்போல அவள் இவனைகாதலிக்கும் போது நண்பர்களிடம் என்ன என்ன வசனம் பேசி தங்கள் காதல் காவியக்காதல் என்று பில்டப்கொடுத்தார்களோ அதே போலதான் இப்ப காதலிக்கும் பெண்ணும் பில்டப் கொடுக்கின்றாள் ஏதோ உலகத்தில் இவர்கள் மட்டும்தான் காதலர்கள் என்ற நினைப்பில்....

இன்னும் ஓரு நண்பன் இருக்கின்றான் அவனும் பலரைக்காதலித்து...தற்போது ஓரு பெண்ணைக்காதலிக்கின்றான்...அவனின் பழய காதல் கதைகள் எல்லாம் எல்லா நண்பர்களுக்கும் தெரியும்..ஆனால் அவன் பண்ணும் இம்சைக்கு அளவேயில்லை...எங்களிடமே சொல்வான் நான் யாரையும் காதலிக்கவில்லை இவளைத்தான் முதலில் காதலிக்கின்றேன்..இதான் உண்மையான காதல் என்று...இதற்கு என்ன சொல்வது....இப்படி ஓரு பில்டப் கொடுப்பதால் என்ன பிரயோசனம்..

இந்த இரண்டாவது நண்பன் இருக்கானே அவன்
நாங்கள் நண்பர்கள் ஓரு இடத்ததுக்கு பார்க்கோ பீச்சுக்கோ,கிரிக்கெட் போட்டியை பார்கவோ போவம் என்று பிளான் பண்ணி போனால்..உடனே அவனின் காதலிக்கு போன் பண்ணி கேட்பான்..நான் ப்ரண்ஸ் கூட போறன் போகட்டுமா என்று..அந்தம்மா அங்க இருந்து போங்க... என்று சம்மதம் சொன்னால் மட்டும் தான் வருவானாம்.ஆனால் அவள் வேணாம் என்று சொன்னாலும்.எப்படியும் அவன் வருவான் ஆனால்..அதற்கு முன் ஏன் இந்த பில்டப்..எங்களுடன் வந்த பிறகும் போன் பண்ணி கதைச்சு கொண்டே இருப்பான்.இதற்கு வராமலே இருந்திருக்கலாம் தானே...

இதில் இவனுங்க நாங்கள் காதலிக்காமல் இருக்கும் நண்பர்களைப்பார்த்து கதைபாங்க(பேசுவாங்க)பாருங்க....காதலிப்பது எதோ..உலக மகா சாதனை மாதிரி காதலி இருந்தால் நண்பர்கள் மத்தியில் ஓரு கெளரவமாம்..என்று எங்களை கலாய்ப்பாங்க.என்னமோ ஓரு பெண்ணை காதலிப்பது பெரிய விடயம் மாதிரி.கெளரவத்துக்கு எல்லாம் காதலிக்க முடியுமா ஓரு பெண்ணின் மேல காதல் வந்தால் தானே காதலிக்க முடியும்...

இதை சொன்னால் சொல்றாங்க நான் காதல் தோல்வியில் தான் இப்படி காதலை சாடுகின்றேன் என்று.......என்ன கொடுமை..பால் பாண்டி(நன்றி ஜடியாமணி)..இதை எங்க போய் சொல்ல...

நண்பர்களே காதல் மிகவும் அழகான உணர்வு...எல்லோறும் இந்த உலகில் எதோ ஓரு சந்தர்ப்பத்தில் காதல் வயப்பட்டுதான் இருப்போம்..ஓரு முறைதான்.காதல் வரும் என்பது எல்லாம்..பொய்..உங்கள் காதலர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக..நண்பர்களிடம் சும்மா எல்லாம்..பில்டப் கொடுக்காதீர்கள்..காதலுக்கு விளம்பரம் தேவையில்லை அடிப்படையில் நல்ல புரிந்துணர்வு இருந்தால் காதல் என்றைக்கும் வாழும்.


பிந்திய குறிப்பு-நான் காதல் வலையில் சிக்கவில்லை என்று சொல்லியுள்ளதாக..பல நண்பர்கள் கேட்கின்றார்கள்?அப்ப பிரியா...என்று ஓரு கதை சொன்ன அது என்ன என்று பல நண்பர்கள் கேட்டுக் இருந்தார்கள் வடிவாகப்பாருங்கள் நான் தற்போது காதல் வலையில் சிக்காமல் இருக்கின்றோம்(நான் உட்பட)என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்.மற்றும் படி நான் காதல் வயப்படவில்லை என்று குறிப்பிட வில்லை.உங்கள் குழப்பத்தை தவிர்க்க நான் தற்போது என்பதை சிவப்பு கலரில் இப்ப குறிப்பிட்டுள்ளேன் இப்ப சரிதானே.


படங்கள்-கூகுள்


இவங்க மேல மட்டும் தான் எனக்கு காதல் வருது..ஹி.ஹி.ஹி.ஹி
நீண்ட நாட்களுக்கு பிறகு நான் வந்திருக்கேன்..நீங்கள் உங்கள் வேலையை மறக்காமல் செய்திட்டு போங்க அதான் ஓட்டு,கருத்துரை


Post Comment

67 comments:

காந்தி பனங்கூர் said...

// எங்களில் பலர் காதலித்துக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் காதல் வலையில் சிக்காமல் இருக்கிறோம் நான் உள்பட//

நம்பிட்டோம் பாஸ்.

Unknown said...

கிஸ் ராஜாவுக்கே காதல் தோல்வியா?

தனிமரம் said...

தனிமரம் இனி யாரிடமும் பால்கோப்பி கேட்டக மாட்டு நண்பர் ராச் காய்ச்சல் என்பதால் அடுப்படிப் பக்கம் போக முடியாதே????

தனிமரம் said...

அளவுக்கதிகமாக சில படங்கள் பார்த்தால் இந்த வயதில் இந்தமாதிரிப் பதிவு போடனும் என்று எண்ணம் வரும் சிலரைக் கடுப்பேத்தனுமே !அவ்வ்

தனிமரம் said...

உங்களை நம்புகின்றேன் நல்ல சின்னப்பையன் என்று ஒன்றும் தெரியாத ராச்சை கழட்டிவிடு சரன்யாமோகன் தங்கையே!!!

தனிமரம் said...

காதல் பற்றிய இன்றைய போக்கினை ஒரு விழிப்புணர்வுப் பதிவாக தந்து இருக்கும் சகோவுக்கு வாழ்த்துக்கள்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எல்லோர்க்குள்ளும் ஒரு வேதனையான காதல் ஒளிந்துக் கொண்டிருக்கிறது....


இதெல்லாம் காதல்ல சகஜமாகிவிட்டது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தலைப்பு செம டச்...

K.s.s.Rajh said...

@காந்தி பனங்கூர்
////// எங்களில் பலர் காதலித்துக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் காதல் வலையில் சிக்காமல் இருக்கிறோம் நான் உள்பட//

நம்பிட்டோம் பாஸ்/////

அட நம்புங்க பாஸ்

K.s.s.Rajh said...

@
M.Shanmugan கூறியது...
கிஸ் ராஜாவுக்கே காதல் தோல்வியா////

யோவ் பாஸ் ஏன்யா இப்படி கெளப்பிவிடுறீங்க..........ஹி.ஹி.ஹி.ஹி..........

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
தனிமரம் இனி யாரிடமும் பால்கோப்பி கேட்டக மாட்டு நண்பர் ராச் காய்ச்சல் என்பதால் அடுப்படிப் பக்கம் போக முடியாதே???/////

அட என் பதிவில் நீங்க என்ன வேண்டும் என்றாலும் கேளுங்க பாஸ்...அண்ணனுக்கு ஓரு பால் கோப்பி...............

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
அளவுக்கதிகமாக சில படங்கள் பார்த்தால் இந்த வயதில் இந்தமாதிரிப் பதிவு போடனும் என்று எண்ணம் வரும் சிலரைக் கடுப்பேத்தனுமே !அவ்அவ்////

ஏன்ணே...ஏன்?

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
உங்களை நம்புகின்றேன் நல்ல சின்னப்பையன் என்று ஒன்றும் தெரியாத ராச்சை கழட்டிவிடு சரன்யாமோகன் தங்கையே!!/////

அவ்.....

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
காதல் பற்றிய இன்றைய போக்கினை ஒரு விழிப்புணர்வுப் பதிவாக தந்து இருக்கும் சகோவுக்கு வாழ்த்துக்கள்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
எல்லோர்க்குள்ளும் ஒரு வேதனையான காதல் ஒளிந்துக் கொண்டிருக்கிறது....


இதெல்லாம் காதல்ல சகஜமாகிவிட்டது.////

ஆமா பாஸ் நீங்கள் சொல்வதும் சரிதான்

K.s.s.Rajh said...

@
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
தலைப்பு செம டச்////

நன்றி பாஸ்

சென்னை பித்தன் said...

நாம் காதலிக்கிறோம் என்பது நண்பர்களுக்கெல்லாம் தெரிய வேண்டும் என பல காதலர்கள் அலட்ட ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் காதல் பற்றி நாம் கேட்காமலே நம்மிடம் விவரமாகச் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.அந்த மன நிலையில் இதெல்லாம் சகஜம்!

பால கணேஷ் said...

-காதலுக்குக் கண்ணில்லைம்பாங்க. எத்தனை காதல் வந்தாலும் அது தெய்வீகக் காதலாத்தான் தெரியும். காதல் போயின் இன்னொரு காதல்ங்கறது புதுமொழியாச்சே... நல்ல புரிந்துணர்வுடன் கல்யாணத்தில் முடியும் காதல்கள் சொற்பமே. நல்ல பகிர்வு ராஜா!

MANO நாஞ்சில் மனோ said...

தலைப்பே கிர்ர்ர்ர்ர்'ங்குதே அவ்வ்வ்வ்வ்வ்....காதலர் சங்கங்கள் சண்டைக்கு வந்துறப்போராயிங்க ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் காதலிக்க ஆள் கிடைக்கலைங்குற கடுப்பா ஹி ஹி...

Yaathoramani.blogspot.com said...

பதிவின் முடிவு ரொம்ப பிடித்திருந்தது
த.ம 6

சக்தி கல்வி மையம் said...

மாப்ள தலைப்பு அசத்தல்.,

பாலா said...

நண்பா அருமையா சொன்னீங்க. ஒரு முறைதான் காதல் வரும் என்று சொல்வது சுத்த பொய். மனிதனின் ஒவ்வொரு வயதிலும் அவன் மன நிலைக்கேற்ப காதல் வரும்.

K.s.s.Rajh said...

@சென்னை பித்தன்
////நாம் காதலிக்கிறோம் என்பது நண்பர்களுக்கெல்லாம் தெரிய வேண்டும் என பல காதலர்கள் அலட்ட ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் காதல் பற்றி நாம் கேட்காமலே நம்மிடம் விவரமாகச் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.அந்த மன நிலையில் இதெல்லாம் சகஜம்!/////

சரியாகச்சொன்னீங்க ஜயா......

K.s.s.Rajh said...

/////
கணேஷ் கூறியது...
-காதலுக்குக் கண்ணில்லைம்பாங்க. எத்தனை காதல் வந்தாலும் அது தெய்வீகக் காதலாத்தான் தெரியும். காதல் போயின் இன்னொரு காதல்ங்கறது புதுமொழியாச்சே... நல்ல புரிந்துணர்வுடன் கல்யாணத்தில் முடியும் காதல்கள் சொற்பமே. நல்ல பகிர்வு ராஜா/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
தலைப்பே கிர்ர்ர்ர்ர்'ங்குதே அவ்வ்வ்வ்வ்வ்....காதலர் சங்கங்கள் சண்டைக்கு வந்துறப்போராயிங்க ஹி ஹி./////

ஹா.ஹா.ஹா.ஹா.....ஆமா பாஸ் எனக்கு செம்பு நெளியுதோ என்னமோ

K.s.s.Rajh said...

@
MANO நாஞ்சில் மனோ கூறியது...
யோவ் காதலிக்க ஆள் கிடைக்கலைங்குற கடுப்பா ஹி ஹி../////

ஹி.ஹி.ஹி.ஹி..................அவ்

K.s.s.Rajh said...

@
Ramani கூறியது...
பதிவின் முடிவு ரொம்ப பிடித்திருந்தது
த.ம 6////

நன்றி சார்

K.s.s.Rajh said...

@
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
மாப்ள தலைப்பு அசத்தல்./////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
பாலா கூறியது...
நண்பா அருமையா சொன்னீங்க. ஒரு முறைதான் காதல் வரும் என்று சொல்வது சுத்த பொய். மனிதனின் ஒவ்வொரு வயதிலும் அவன் மன நிலைக்கேற்ப காதல் வரும்//////

இதான் பாஸ் யதார்த்தம் பலர் இதை புரிந்து கொள்வதில்லை

KANA VARO said...

புதுசா வந்திக்கிற OK OK ட்ரைலர் பாருங்க. உங்க பதிவுக்கு விடை

Mohamed Faaique said...

இந்தப் பதிவு முழுக்க முழுக்க உண்மை... உண்மையைத் தவிர வேறு ஒன்றூமில்லை..

எல்லா இடத்துலயும் பசங்க இப்படித்தான் இருக்காங்க போல...

ஏகப்பட்ட ஆளுங்கல காதலிச்சுட்டு, தற்போதைய காதல் மட்டும்தான் சீரியஸ், முதல் காதல்’னு சொல்லும் போது வரும் ஒரு கோவம்.....ஷப்பா....

Anonymous said...

காதலித்தவர்களுக்கு தானே காதலை பற்றி விரிவாய் ,முழுமையாய் தெரியும் ............நாங்க எல்லாம் சின்ன புள்ளைகள் அவ்வ்வ்))

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

கதவ வந்தால் நண்பர்களுக்கு இம்சை உண்டு (அது உங்க பதிவுல தெரியுது) நண்பர்களாலும் இம்சை உண்டு (இப்புடி போட்டு குடுத்திட்டீங்களே?)

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

தலைவர் டீசெர் பாத்தீங்களா? நம்மெல்லாம் குப்பதொட்டிலதான்...

K.s.s.Rajh said...

@KANA VARO

////புதுசா வந்திக்கிற OK OK ட்ரைலர் பாருங்க. உங்க பதிவுக்கு விடை////

படமா பாஸ் பார்த்திட்டா போச்சு......

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
இந்தப் பதிவு முழுக்க முழுக்க உண்மை... உண்மையைத் தவிர வேறு ஒன்றூமில்லை..

எல்லா இடத்துலயும் பசங்க இப்படித்தான் இருக்காங்க போல...

ஏகப்பட்ட ஆளுங்கல காதலிச்சுட்டு, தற்போதைய காதல் மட்டும்தான் சீரியஸ், முதல் காதல்’னு சொல்லும் போது வரும் ஒரு கோவம்.....ஷப்பா./////

அட உங்களுக்கும் இந்த அனுபவம் உண்டா?......ஹி.ஹி.ஹி.ஹி......

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
காதலித்தவர்களுக்கு தானே காதலை பற்றி விரிவாய் ,முழுமையாய் தெரியும் ............நாங்க எல்லாம் சின்ன புள்ளைகள் அவ்வ்வ்)/////

கந்து ஏன்யா ஏன் இந்த உள்குத்து....ஹி.ஹி.ஹி.ஹி.........

அம்பலத்தார் said...

காதல் வந்தால் நண்பர்களுக்கு இம்சையோ இல்லையோ தெரியவில்லை.
ஆனால் எனக்கு காதல் வந்ததில் இருந்து என்ரை பெண்டாட்டிக்கு இம்சைதான். 25 வருடமாக தீர்ந்தபாடில்லை

சும்மா சொல்லப்படாது அசத்தலான பதிவுதான் போட்டிருக்கிறியள்.

Unknown said...

நீங்க காதளிக்கலைனா நாங்க நம்பனும் ?ரைட்டு

Unknown said...

அப்பாடி....பதிவில நம்மள பத்தி ஒண்ணுமே போடல...ஹிஹி அது தானே அண்ணன் எம்புட்டு சொக்க தங்கம்!!அண்ணன்'னு என்ன சொன்னேன்!

K.s.s.Rajh said...

@Dr. Butti Paul
////கதவ வந்தால் நண்பர்களுக்கு இம்சை உண்டு (அது உங்க பதிவுல தெரியுது) நண்பர்களாலும் இம்சை உண்டு (இப்புடி போட்டு குடுத்திட்டீங்களே?////

ஹி.ஹி.ஹி.ஹி.................

K.s.s.Rajh said...

@
Dr. Butti Paul கூறியது...
தலைவர் டீசெர் பாத்தீங்களா? நம்மெல்லாம் குப்பதொட்டிலதான்..////

ஆமா டாக்டரே தலைவர் பல படங்களில் இதை சொல்லியிருக்கார்

K.s.s.Rajh said...

@
அம்பலத்தார் கூறியது...
காதல் வந்தால் நண்பர்களுக்கு இம்சையோ இல்லையோ தெரியவில்லை.
ஆனால் எனக்கு காதல் வந்ததில் இருந்து என்ரை பெண்டாட்டிக்கு இம்சைதான். 25 வருடமாக தீர்ந்தபாடில்லை

சும்மா சொல்லப்படாது அசத்தலான பதிவுதான் போட்டிருக்கிறியள்/////

ஹா.ஹா.ஹா.ஹா....நன்றி சார்...

K.s.s.Rajh said...

@மைந்தன் சிவா
////நீங்க காதளிக்கலைனா நாங்க நம்பனும் ?ரைட்////

யோய் மைந்து நான் இப்ப காதலிக்கவில்லை என்றுதான் சொல்லியிருக்கேன்.....ஹி.ஹி.ஹி.ஹி.....

K.s.s.Rajh said...

@
மைந்தன் சிவா கூறியது...
அப்பாடி....பதிவில நம்மள பத்தி ஒண்ணுமே போடல...ஹிஹி அது தானே அண்ணன் எம்புட்டு சொக்க தங்கம்!!அண்ணன்'னு என்ன சொன்னேன்////

ஹா.ஹா.ஹா.ஹா.ஏன் மாப்ள எடுத்துக்கொடுக்குறீங்க....பின்னாடி வாரவங்க கும்ம போறாங்க...ஹி.ஹி.ஹி.ஹி........

M.R said...

காதல் வலையில் சிக்க வில்லை என்று சொல்றீங்க ,பிரியாவை காதலிச்சேன்னு

சொல்றீங்க ,சரி நண்பா ஹி ஹி

K.s.s.Rajh said...

@M.R
ஹா.ஹா.ஹா.ஹா.பாஸ் நான் தற்போது என்று குறிப்பிட்டுள்ளேன் பாருங்க

தமிழ்வாசி பிரகாஷ் said...

பாஸ், உங்க காதல் கதை எப்போ வரும்?

K.s.s.Rajh said...

@தமிழ்வாசி - Prakash

ஹா.ஹா.ஹா.ஹா....எனக்கு பாடசாலை நாட்களில் வந்த காதலை பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன்...சைட் பாரில் லேபில்களில் பாருங்க பாடசலை நாட்கள் என்று ஓரு லேபில் இருக்கு அதில் 8 பகுதிகள் இருக்கு படிச்சு பருங்க.....ஹி.ஹி.ஹி.ஹி.........

Mathuran said...

யோவ் நீங்க காதலிக்கல்ல எண்டத நாங்க நம்பனுமாக்கும்....

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி.. 
என்னையா கந்தசாமிக்கு ரெண்டு புள்ளைக்கன்னாங்க இஞ்ச அவர்  தான் சின்னப்புள்ளன்னுறாரே..!!!))

அம்பாளடியாள் said...

எங்கயோ இடிக்குது சரி விடுங்க. விசயம் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது .
இதற்கான ஓட்டெல்லாம் போட்டாச்சு சார் .மிக்க நன்றி பகிர்வுக்கு .....

Unknown said...

ஹிஹி!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இப்பொழுது தான் முதன் முறையாக உங்கள் பதிவுகள் பக்கம் வருகின்றேன் It is realy interesting.
காதல் தன்னை சுமந்து செல்பவர்களை அப்படித்தான் மயில் நடை நடக்க வைக்கும்

அப்பாவி தமிழன் said...

வணக்கம் பாசு நல்ல இருக்கியளா ???? என்னமோ தெரியல உங்க வேலாயுதம் விமர்சனம் ( அந்த காமெடி மேட்டர் நினைவு இருக்கு தானே )பாத்தப்புறம் டெய்லி வரேன் இங்க

முற்றும் அறிந்த அதிரா said...

சரி சரி... 2வது பந்தியில சிகப்பு எழுத்தோட சொன்னதை நான் நம்புறேன்...:).

அதுசரி நண்பர்களின் காதல் பற்றிச் சொல்லும்போது.. அங்காங்கு புகைப்போவது தெரியுது அவ்வ்வ்வ்வ்:)))..

இல்ல இல்ல நான் ஒண்ணுமே சொல்லல்லே:))).

K.s.s.Rajh said...

@மதுரன்
////யோவ் நீங்க காதலிக்கல்ல எண்டத நாங்க நம்பனுமாக்கும்.////

ஏன்யா கொந்தளிக்குறீங்க தற்போது என்ற சொல்லை கவனிங்க ஹி.ஹி.ஹி.ஹி....

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
வணக்கம் ராசுக்குட்டி..
என்னையா கந்தசாமிக்கு ரெண்டு புள்ளைக்கன்னாங்க இஞ்ச அவர் தான் சின்னப்புள்ளன்னுறாரே..!!!)/////

எல்லாம் ஓரு இதுதான் மாம்ஸ்.....

K.s.s.Rajh said...

@
அம்பாளடியாள் கூறியது...
எங்கயோ இடிக்குது சரி விடுங்க. விசயம் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது .
இதற்கான ஓட்டெல்லாம் போட்டாச்சு சார் .மிக்க நன்றி பகிர்வுக்கு .../////

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@
விக்கியுலகம் கூறியது...
ஹிஹி/////

ஹி.ஹி.ஹி.ஹி.......

K.s.s.Rajh said...

@
rufina rajkumar கூறியது...
இப்பொழுது தான் முதன் முறையாக உங்கள் பதிவுகள் பக்கம் வருகின்றேன் It is realy interesting.
காதல் தன்னை சுமந்து செல்பவர்களை அப்படித்தான் மயில் நடை நடக்க வைக்கும்/////

நன்றி மேடம் தொடர்ந்து வாருங்கள்

K.s.s.Rajh said...

@
அப்பாவி தமிழன் கூறியது...
வணக்கம் பாசு நல்ல இருக்கியளா ???? என்னமோ தெரியல உங்க வேலாயுதம் விமர்சனம் ( அந்த காமெடி மேட்டர் நினைவு இருக்கு தானே )பாத்தப்புறம் டெய்லி வரேன் இங்க/////

ஹா.ஹா.ஹா.ஹா...அட போங்க பாஸ் நீங்க ஓன்னு அதை போட்ட பிறகும் டாகுதர் ரசிகர்களுடன் பெரும் பஞ்சாயத்துதான்...........

நீங்க தொடர்ந்து வாங்க........நான் டாகுதர் ரசிகன் இல்லை

K.s.s.Rajh said...

@
athira கூறியது...
சரி சரி... 2வது பந்தியில சிகப்பு எழுத்தோட சொன்னதை நான் நம்புறேன்...:).

அதுசரி நண்பர்களின் காதல் பற்றிச் சொல்லும்போது.. அங்காங்கு புகைப்போவது தெரியுது அவ்வ்வ்வ்வ்:)))..

இல்ல இல்ல நான் ஒண்ணுமே சொல்லல்லே:))/////

ஹி.ஹி.ஹி.ஹி...............

rajamelaiyur said...

//
என் நண்பர்களில் சிலர் காதலித்துக்கொண்டு இருக்கின்றார்கள்..பலர் தற்போது காதல் வலையில் சிக்காமல் இருக்கின்றோம்(நான் உட்பட)//

நம்பிடேன்

K.s.s.Rajh said...

@ "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
//
என் நண்பர்களில் சிலர் காதலித்துக்கொண்டு இருக்கின்றார்கள்..பலர் தற்போது காதல் வலையில் சிக்காமல் இருக்கின்றோம்(நான் உட்பட)//

நம்பிடேன்//////

அட நம்புங்கப்பா

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
நலமா?
சுவாரசியம் கலந்து நண்பர்களின் அனுபவங்களையும் தொகுத்து காதல் பற்றிய பதிவினைத் தந்திருக்கிறீங்க.


என்னமோ...உங்களுக்கு இப்பவும் காதலி இருப்பதாக கதை பரவுதே...
ஹி...ஹி..
மெய்யாலுமே...

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails