Saturday, June 30, 2012

சகுனி அவ்வளவு சப்பை படமா?

கடந்த சில நாடகளாக சகுனி படம் பற்றி பலர் பலவிதமாக கருத்துக்களை சொல்லி வருகின்றனர்.பலரது விமர்சனங்களில் சகுனி அவ்வளவு நல்ல பெயரை பெறவில்லை.ஆனாலும் அது அவ்வளவு சப்பை படமா? 
எவ்வளவோ மொக்கை படம் எல்லாம் பார்த்திட்டம் இதை பார்க மாட்டமா?சரி பார்ப்போம் என படம் பார்த்தேன்..

Post Comment

Thursday, June 28, 2012

பிரபல உள்குத்து பதிவர்களும் உள்குத்து பதிவுகளும்-பதிவுலக அரசியல்-2


நான் பதிவுலகில் சந்தித்த பல விடயங்களை பதிவுலக அரசியல் என்னும் இந்த தொடரில் எழுதி வருகின்றேன்.இந்த தொடர் யாருக்கும் உள்குத்து கிடையாது.இதுவரை நான் யாருக்கும் உள்குத்து பதிவுகள் போட்டது கிடையாது. எனவே இந்த தொடரில் யாரையும் குறிப்பிட்டு சொல்லப் படமாட்டாது பொதுவாக பதிவுலக அரசியல் பற்றி இந்த தொடர் இருக்கும்யார் மனதையும் புண்படுத்துவது இந்த தொடரின் நோக்கம் இல்லை அப்படி யார் மனமும் புண்படுமாயின் அவர்களிடம் மன்னிக்கவேண்டுகின்றேன்.

ஓவ்வொறு புதன் கிழமைகளிலும் இந்த தொடர் வெளிவரும் கடந்த வாரம் வெளியான பகுதியை படிக்க இங்கே கிளிக்-பிரபல பதிவர்கள் இலக்கிய பதிவு எழுதவேண்டும்-பதிவுலக அரசியல்

இந்த வாரம்-பிரபல உள்குத்து பதிவர்களும் உள்குத்து பதிவுகளும்

Post Comment

Saturday, June 23, 2012

தேவதையின்(தேவயாணி) பிறந்தநாள்

இந்தப் பதிவு நேற்று வெளிவந்திருக்கவேண்டிய பதிவு ஆனால் என் இணைய இணைப்பு சதிசெய்ததால் வெளியிட முடியவில்லை இருக்கட்டும் ஒரு நாள் லேட்டா சொன்னால் என்ன?நேற்று(22-6-2012) தேவதை தேவயாணியின் பிறந்தநாள்


5 வயதில் இருந்து இன்றுவரை இவர் மேலானா ரசனை இன்னும் மாறவில்லை.நான் முதன் முதலாக இவரின் எந்தப் படம் பார்த்தேன் என்று ஞாபகம் இல்லை காரணம் முதல் படத்தில் பார்த்த அந்த நொடியில் என்னை மறந்துவிட்டேன்.

Post Comment

Thursday, June 21, 2012

அன்பே எங்கே......நீ- பகுதி-6(இறுதிப் பகுதி)


”எப்படி பக்தர் கூட்டத்துக்கு நடுவே வரிசையில் காத்திருந்து மெது மெதுவாக மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்கும் போது மனதில் ஒரு ஆத்ம திருப்தி வருமோ”அதே போல என் மீனாட்சி அம்மனை தரிசிக்க நான் அவள் தெருவில் தவம் கிடப்பேன் மெது மெதுவாக அவள் அலுவலகம் கிளம்பி வரும் போது அவள் திருமுகம் பார்த்தே என் பொழுதுகள் விடியும்.அலுவலகத்தில் நாள் பூராகவும் அவளை பார்த்துக்கொண்டு இருக்கப் போகின்றேன் என்றாலும் காலையில் தெருவில் காத்திருந்து அவளை பார்த்துவிட்டு வருவதில் ஒரு ஆத்ம திருப்த்தி எனக்கு.திரும்ப கிடைக்காது என்று தெரிந்தும் மீண்டும் வாழத்துடிக்கும் அழகான நாட்கள் அவை. 

இனி.........
பழய இடம் பழகிய ஊர் என்றாலும் என்றாலும் முற்றாக மாறியிருந்த என் ஊரில் முதல் நாள் வேலைக்கு சென்றேன் புதிய அலுவலகம் புதிய நண்பர்கள்
உருவானார்கள். இப்படித்தானே பத்து வருடங்களுக்கு முன் ஒர் நாள் புதிதாக வேலைக்கு சென்ற போது ராகவியை முதன் முதலில் சந்தித்தேன்.

Post Comment

Wednesday, June 20, 2012

பிரபல பதிவர்கள் எலக்கிய பதிவு எழுதவேண்டும்-பதிவுலக அரசியல்

பதிவுலக அரசியல் என்னும் இந்த தொடரை நான் முன்பே எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன் சில பல காரணங்களால் எழுதமுடியவில்லை பதிவுலகம் என்பது எம் எழுத்துக்களை பலரிடம் கொண்டு சேர்க்கும் எம் எழுத்துகளுக்கு உடனுக்கு உடன் விமர்சனங்களை பெற்றுக்கொண்டு எம் எழுத்துக்களை மேம்படுத்த எமக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.ஆனால் ஒரு புதியவர் பதுவுலகில் நுழையும் போது அவர் இலகுவாக பிரபலம் அடைவது கடினம் அதுக்கு பதிவுலம் பற்றிய பூரண தெளிவு இருக்கவேண்டும்.அப்போதுதான் பதிவுலகில் பிரகாசிக்கமுடியும்.உள்குத்து வெளிக்குத்து போன்ற பல மேட்டர்களை புதியபதிவர்கள் நிச்சயம் அறிந்து கொள்ளவேண்டும்.

Post Comment

Tuesday, June 19, 2012

கஜோல் அகர்வால் வெள்ளைத் தக்காளி ,பள பள பப்பாளி

வெள்ளைத்தக்காளி பள பள பப்பாளி வெண்ணைக் கட்டி கஜோல் அகர்வாலுக்கு இன்னைக்கு பொறந்தநாளு..ஹி.ஹி.ஹி.ஹி.....
1985 ஜுன் 19 ஒலக வரலாற்றில் கஜோல் ரசிகர்களுக்கு முக்கியமான நாள் அன்றுதான் எங்கள் தானைத் தலிவி தக்காளி(விக்கி மாம்ஸை சொல்லவில்லை)கஜோல் பூலோகத்தில் அவதரித்த பொன்நாள்.

Post Comment

Monday, June 18, 2012

அன்பே எங்கே நீ......பகுதி-5


ராகவி இப்போது எப்படி இருப்பாள் கல்யாணம் ஆகியிருக்குமா இல்லையா?
அவளை மீண்டும் பார்க்க வேண்டும் என்று என் மனம் தவித்தது.தீவிரமாக ராகவியை தேடத்தொடங்கினேன்.
இனி.......

கிளிநொச்சி யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 வீதியில் தெற்காக 68 கிலோமீட்டர் தூரத்திலும் வவுனியாவிலிருந்து வடக்காக 75 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. 

ஈழத்தில் முப்பது வருடங்களுக்கு மேலாக குருதி கறை படிந்த யுத்த பூமி.விடுதலைப் புலிகளின் நிர்வாக மையம்,வன்னியின் வளமான நகரம்,இப்படித்தான் கிளிநொச்சியை பலர் அறிந்திருப்பீர்கள்.ஆனால் கிளிநொச்சி மண்ணிற்கு இவைகளை தாண்டி அழகான பல முகங்கள் உண்டு.

Post Comment

Sunday, June 10, 2012

அன்பே எங்கே நீ.....பகுதி-4


ஏன் ராகவி உங்களுக்கு மேரேஜ் பண்ண விருப்பம் இல்லையா?இல்லை உங்கள் வீட்டில் பார்த்த மாப்பிளை பிடிக்கலையா?

மேரேஜ் விருப்பம் தான் ஆனால் எனக்கும் மனசு என்று ஒன்று இருக்குத்தானே அதில் என்ன விருப்பம் இருக்கு என்று வீட்டில் கேட்கவேயில்லை அதுதான் கவலையா இருக்கு

அப்ப நீங்க யாரையாவது லவ் பண்ணுறீங்களா ராகவி
இல்லை சரன்
இனி.......


நமக்கு வரப்போறவர் எப்படி இருக்கனும் என்று ஒரு எதிர்பார்பு இருக்கும் தானே அதைவிட ஒருவருடன் நன்றாக பழகி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பின் திருமணம் செய்தால் அது சிறப்பாக இருக்கும் அதற்கு சிறந்த வழி காதல் திருமணம் தான். நான் காதல் திருமணம் தான் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.

இந்த வார்தை என் தேவதையின் வாயில் இருந்து வந்தது எனக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது.

Post Comment

Thursday, June 07, 2012

அன்பே எங்கே நீ......பகுதி-3


சரி நீ படுத்துக்கொள் என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியால் வந்தேன். என் மனம் எங்கும் தொலைந்து போயிறுந்த ராகவி பற்றிய நினைவுகள். நான் இன்றுவரை தேடிக்கொண்டு இருக்கும் ராகவியை பற்றி என் மனைவியிடம் எதுவும் சொன்னதில்லை என் மகளுக்கு ராகவி என்று பெயரைதான் வைக்கவேண்டும் என்று அடம்பிடித்து வைத்தேன்.
ஆனால் மெல்ல மெல்ல ராகவியை நான் மறந்து போயிருந்தேன்.ஆனால் இப்போது கனவில் வந்து அவள் மீதான நினைப்பை மீள் ஞாபகம் செய்துவிட்டாள்.


இனி

இப்போது 2016 இல் இருக்கின்ற சரன் வேறு இன்றைக்கு பத்து வருடங்களுக்கு  முன் இருந்த சரன் வேறு 

அப்போது வாழ்க்கையில் சாதாரன நிலையில் இருக்கின்ற .நிறைய கனவுகளுடனும் நிறைய கற்பனைகளுடன் வாழுகின்ற சாமனிய இளைஞன்.
என் வாழ்க்கையில் தான் எத்தனை போராட்டங்கள், எத்தனை கஸ்டங்கள் ஆனாலும் நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றேன். கிடைப்பதை கொண்டு சந்தோசமாக வாழும் வாழ்க்கையின் ரகசியத்தை எனக்கு அருளியதற்காக மட்டுமே கல்லாய் இருக்கும் கடவுளை வணங்குவேன்.

நான் ஒன்றும் பெண்களால் ஆசீர்வதிக்கப் பட்டவன் இல்லை. பெண்களுக்கும் எனக்கும் வெகு தூரம் அதுவும் காதலுக்கும் எனக்கு மிக மிக தூரம்.என்னதான் நான் விலகி சென்றாலும் காதல் என்னை விட்டுவைக்கவில்லை.

Post Comment

Tuesday, June 05, 2012

அன்பே எங்கே நீ.......பகுதி-2


இரவில் தூக்கம் இழந்து தவிப்பதை போல கொடியது வேறு எதுவும் இல்லை
என் இரவுகளில் இப்போது எல்லாம் பயத்திலே நகர்கின்றன.அதற்கு காரணமான உருவத்தின் மர்மத்தை அறிய எனக்கு ஆவலாக இருக்கின்றது இன்றைய இரவு பயத்திலே சென்றுவிட்டது அதுவும் இன்று அந்த உருவத்தின் முகத்தை பார்த்துவிட்டேன்.நாளை வரட்டும் எப்படியாவது அதை பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்று எண்ணிக்கொண்டே தூங்கிப்போய்விட்டேன்....
இனி....

பயத்துடன் விடிந்தது காலை. நான் இந்தக் கிராமத்துக்கு வந்து சில வாரங்கள் தான் ஆகின்றன.இங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சந்தைப் படுத்தல் பிரிவில் வேலைசெய்கின்றேன். நிறுவனத்துக்கு அருகிலே ரூம் கிடைத்தால் வசதியாக போய்விட்டது.அதைவிட குறைந்த வாடகை என்ற படியால்தான். இரவில் என் ரூமில் மர்மமான உருவத்தின் நடமாட்டம்  அறிந்தும். ரூம் மாறவில்லை அதைவிட அது என் மனப்பிரமையாக இருக்குமோ என்றும் தோன்றியது.

இன்று இரவு எப்படியும் அதன் மர்மத்தை கண்டரியவேண்டும் என்று நினைத்துக்கொண்டு வேலைக்கு கிளம்பினேன்.

இயற்கை எழில் மிகுந்த கிராமம் அது பசுமையான வயல்வெளிகள் நிறைந்த விவசாய பூமி.கிராமத்தை அடுத்து அடந்த காடு.மாலைப்பொழுதுகளில் பறவைகளில் இனிய ஓசை,காட்டு மிருகங்களின் அலறல் என்று ஒரு புறம் அழகாகவும் மறுபுறம் திகிலாகவும் இருக்கும்.

Post Comment

Monday, June 04, 2012

அன்பே எங்கே நீ........பகுதி-1


காதல் சாதாரன சாமானியன் தொடக்கும் கடவுள் வரை யாரும் இதன் தீண்டலில் இருந்து தப்பியிருக்க முடியாது.எதோ ஒரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் எல்லோறும் இந்த மனித வாழ்க்கையில் காதலை சந்தித்து இருப்போம்.இல்லை கட்டாயம் எம் வாழ்க்கை முடியும் முன் சந்திப்போம்.

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails