Wednesday, October 19, 2011

(பகுதி-2)என் பார்வையில் சில திரைப்படங்கள்

ஹிந்தி சினிமாவில் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பார்கள் ஆனால் தமிழ் சினிமாவில் இது கொஞ்சம் அரிதானது..ஆனாலும் சிலர் இமேஜ் போன்றவற்றை கவனத்தில் எடுக்காமல் நடிப்பது உண்டு.
அப்படி தமிழ் சினிமாவில் பிரபல ஹிரோக்கள் இணைந்து நடித்த எனக்குப்பிடித்த சில படங்கள் பற்றிய பதிவு இது.



இதன் முதல் பகுதியை படிக்க இங்கே
என் பார்வையில் சில திரைப்படங்கள்(பகுதி-1)



16)நேருக்கு நேர்

விஜய் ஹீரோவாக நடித்த இந்தப்படத்தில் சூர்யா பிரதான பாத்திரத்தில் நடித்திருப்பார் இதான் சூர்யாவின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

17)ப்ரண்ஸ்
இதுவும் விஜய் ஹீரோவாக நடித்த படம் இதிலும் சூர்யா விஜயுடன் இணைந்து நடித்திருப்பார்..தமிழ் சினிமாவில் நகைச்சுவைப்படங்களில் இந்தப்படம் மறக்கமுடியாத இடத்தைப்பிடித்து முழுவதும் இது நகைச்சுவைப்படம் இல்லை பாதிக்குப்பின் சோகம் கலந்த படம் என்றாலும் வடிவேலு,ரமேஸ்கண்ணா,விஜய்.,சூர்யா,சார்லி,நகைச்சுவை கலாட்டாக்கள் என்றும் மறைக்கமுடியாது..அதிலும் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமான ல் தகா சைஆ ,ஆணியே புடுங்க வேணாம்,இது யாரு உங்க வைஃபா?போன்ற வசனங்கள் என்றும் நினைவில் நிற்கும்

18)ஓன்ஸ் மோர்
நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் விஜய் இணைந்து நடித்த படம்இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
19)நீ வருவாய் என
பார்த்தீபன் நடித்த படம் அஜித் இதில் பிரதான பாத்திரத்தில் நடித்திருப்பார்.நடிகை தேவயானியின் கணவரும் இயக்குனருமான ராஜகுமாரம் இயக்கிய படம்.
அருமையான பாடல்கள் நிறைந்த படம் இது

19)உன்னைக்கொடு என்னைத்தருவேன்
அஜித் சிம்ரன் நடித்த படம் இந்தப்படத்தில் அஜித்தின் தந்தையாக பார்த்தீபன் நடித்தார் என்ன நம்ம முடியவில்லையா..ஆம் ப்ளாஸ் பேக்கில் அஜித்தின் தந்தையாக நடித்திருப்பார்..ஆனால் அஜித்துக்கும் பார்த்தீபனுக்கும் நேரடிக்காட்சிகள் இல்லை.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
20)ஜேம்ஸ் பாண்டு
பிரபுதேவா,பார்த்தீபன் இணைந்து நடித்த படம்.இந்தப்படத்தில் சில பாடலுக்கு பிரபுதேவாவுக்கு இணையாக பார்த்தீபன் நடனம் ஆடியிருப்பார்இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
21)உள்ளம் கொள்ளைபோகுதே
பிரபுதேவா நடித்த படம் கார்த்திக் பிரதான பாத்திரத்தில் நடித்திருப்பார்.மனதை மயக்கும் பாடல்கள் நிறைந்த படம்

22)சார்லி சப்ளின்
பிரபு,பிரபுதேவா இணைந்து நடித்த படம்..நகைச்சுவை நிறைந்த படமும் கூட
அஞ்சு மணிக்கு சும்மாச்சும்மா அவளும் நானும் சும்மாச்சும்மா சும்மாச் சும்மா சும்மா..என்ற பிரபல்யமான பாடல் இடம் பெற்றது இந்தப்படத்தில் தான்

23)வானத்தைப்போல
விஜயகாந் இரட்டைவேடங்களில் நடித்த இந்தப்படத்தில் பிரபுதேவா,லிவிங்ஸ்டன் ஆகியோரும் நடித்திருப்பார்கள்..பல அழகான பாடல்கள் நிறைந்த ஒரு சிறந்த படம்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
24)எங்கள் அண்ணா
விஜயகாந் நடித்த இந்தப்படத்தில் பிரபுதேவாவும் பிரதான பாத்திரத்தில் நடித்திருப்பார்..இந்தப்படத்தில் விஜயகாந்துக்கு ஜோடி நம்ம மச்சான்ஸ் நமீ அதாங்க நமீதா அவங்க அறிமுகம் ஆன படம் இதுதான்


25)காதலுடன்
முரளியும் நடித்த படம் முரளி அப்பாஸ் பிரதான பாத்திரத்தில் நடித்திருபார்.

26)பூ விலங்கு
நடிகர் முரளியின் முதல் படம் இதில் வில்லனாக சத்தியராஜ் நடித்திருபார்

27)100 வது நாள்
விஜயகாந்,மோகன் இருவரும் நடித்த படம் இதில் சிறப்பு அம்சம் என்ன வென்றால் அந்தக்கால வெள்ளிவிழா நாயகன் மோகன் நெக்கட்டிவ் ரோலில் நடித்திருப்பார் ஆனாலும் இதில் விஜயகாந்,மோகன் நடிப்பைவிட மோகனின் அடியாளாக வரும் சத்யராஜின் நடிப்புதான் எல்லோறாலும் பேசப்பட்டது.மொட்டைதலையுடன் நளினியை கொல்ல துரத்திக்கொண்டு வரும் அந்த காட்சியில் அசத்தியிருபார் பார்ப்பவர்களுக்கே பயத்தை உண்டு பன்னும் அளவுக்கு சிறப்பான நடிப்பை சத்யராஜ் வெளிப்படுத்தியிருப்பார்..இந்தப்படத்தின் இயக்குனர் நம்ம நடிகரும் இயக்குனருமான மணிவண்ணன்.

28)மெளனராகம்
மோகன் நடித்த படம் இதில் கார்த்திக் பிரதான பாத்திரத்தில் நடித்திருப்பார்..இதில் மோகனின் நடிப்பை விட கார்திக்கின் பாத்திரம் தான் பெரிதும் பேசப்பட்டது..நிலாவே வா...போன்ற அற்புதமான பாடல்கள் இடம் பெற்ற படம்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
29)தேவன்
விஜயகாந்,கார்த்திக் நடித்த படம்,

30)அக்கினி நட்சத்திரம்
கார்த்திக்,பிரபு நடித்த படம் மிகப்பிரபல்யமான படம்

31)வெற்றிவிழா
கமல் நடித்த படம் பிரபுவும் இதில் நடித்திருப்பார்,
கமல் பிரபு இணைந்து வேறு படங்களும் நடித்துள்ளனர்

32)குரு சிஷ்யன்
நம்ம சூப்பர் ஸ்டார் நடித்த படம் பிரபுவும் இதில் நடித்திருப்பார்,அதைவிட பாண்டியனும் இவர்களுடன் இணைந்து நடித்திருப்பார்.ரஜனியும் பிரபுவும் மன்னன்,சந்திரமுகி போன்ற படங்களிலும் இணைந்து நடித்துள்ளனர்.

33)ஊர்க்காவலன்
சூப்பர் ஸ்டாரின் படம் தான் இதில் நடிகர் பாண்டியன் நடித்திருபார் யார் பாண்டியன் என்று ஞாபகம் வரவில்லையா.பாரதிராஜாவின் மண்வாசனை படத்தில்..ரேவதியுடன் அறிமுகமானாரே அவர்தான் பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் உட்பட பல பிரபல்யமான படங்களில் ஹீரோவாக நடித்தவர் பாண்டியன்இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
34)தவம்
அருண்விஜய்(அருண்குமார்)நடித்த இந்தப்படத்தில் கடைசி காட்சிகளில் அர்ஜூன் நடித்திருப்பார்.

35)பிதாமகன்
சியான் விக்ரம் நடித்த படம் இதில் சூர்யாவும் நடித்திருபார் சூர்யா லைலா நகைச்சுவை காட்சிகள் இன்றுவரை சிரிக்கவைக்கின்றவை
இதில் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்து.

36)குசேலன்
சூப்பர் ஸ்ராரின் படம் இதில் சூர்யா சின்ன காட்சியில் தோன்றியிருப்பார்

37)மன்மதன் அம்பு
கமலுடன் மாதவன் நடித்த படம் சூர்யாவும் இதில ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார்.

38)ஆய்த எழுத்து
சூர்யா நடித்த படம்,இவருடம் சித்தாத்தும் நடித்திருப்பார் இதில் நடிகர் மாதவன் நெக்கட்டிவ் ரோலில் கலக்கியிருபார்..சாக்லேட் பாய் இமேஜை உடைத்து அதுவும் சமகால ஹீரோ சூர்யா நடித்த படத்தில் நெக்கட்டிவ் ரோலில் நடித்த மாதவனின் தைரியம் பாராட்டுக்குறியது.இதில் இயக்குனர் பாரதிராஜாவும் நெக்கட்டிப் ரோலில் நடித்து இருப்பது சிறப்பம்சம்.

39)பெரியண்ணா
விஜயகாந் நடித்த படம் சூர்யா பிரதான பாத்திரத்தில் நடித்திருப்பார்.இந்தப்படத்தில் இடம் பெற்ற புகழ்பெற்றபாடலான இளையதளபதி விஜய் பாடிய நான் தம்மடிக்கிற ஸ்டைல பாத்து தனலெச்சுமி விரும்பிச்சி..பாடலுக்கு சூர்யா நடனம் ஆடியிருப்பார்.

40)காதலே நிம்மதி
முரளி,சூர்யா, இருவரும் நடித்த படம்

41)குருதிப்புணல்
கமலின் படம் அர்ஜூன் பிரதான பாத்திரத்தில் நடித்திருப்பார்

42)கூண்டுக்கிளி
எம்.ஜி.ஆர்.சிவாஜி இணைந்து நடித்த ஒரே ஒரு படம் படம் படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது

43)மின்னலே
மாதவன்,அப்பாஸ் நடித்த படம்..ரீமா சென்னின் அறிமுகப்படம் இந்தப்படத்தில் இடம் பெற்ற பாடலாசிரியர் தாமரை எழுதிய வசீகரா என் நெஞ்சினிலே..என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த பாடல்
மாதவனும் அப்பாஸும் குரு என் ஆளு என்ற படத்திலும் பின்பு இணைந்து நடித்திருந்தனர்.இதில் அப்பாஸ் நெக்கட்டிவ் ரோலில் நடித்திருப்பார்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
44)ஷாக்
பிரசாந் நடித்த படம் இதில் அப்பாஸ் வில்லனாக நடித்திருப்பார்

45)பட்டியல்
ஆர்யாவும்,பரத்தும் இணைந்து நடித்த படம்

46)இராவணன்
விக்ரமுடன்,பிரபு,பிருத்திவிராஜ்,கார்த்திக்,போன்றார் நடித்த படம்,இதில் ஜஸ்வர்யா ராஜ் பிருத்திவிராஜ்க்கு ஜோடியாக நடித்திருப்பார்

47)சுக்கிரன்
ரவிகிஸ்னா நடித்த படம் இளையதளபதி விஜய் பிரதான பாத்திரத்தில் நடித்திருப்பார்

48)பகவதி
இளையதளபதியின் முதல் அதிரடிப்படம் இந்தப்படத்தில் விஜயின் தம்பியாக நடித்தவர் தற்போது ஒரு சிறந்த ஹீரோவாக உள்ளார் யார் தெரியுமா?நம்ம ஜெய்.அதாங்க,சுப்ரமணியபுரம்,எங்கேயும் எப்போது,கோவா போன்ற படங்கள் நடித்துள்ளாரே அவர்தான்இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
49)சாம்ராட் அசோகா
ஹிந்திப்படம் தமிழில் வெளியிடப்பட்டது
ஷாருக்கான் நடித்த படம் இதில் அஜித் நடித்திருப்பார்.

50)ஆனந்தம்
மம்முட்டி,முரளி,அப்பாஸ்,போன்றோர் நடித்த படம் இந்தப்படம் இன்றளவு பேசப்படுவதற்கு காரணம் இதன் கதை அழகான ஒரு குடும்ப கதையை கொண்ட திரைப்படம்இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
51)சமுத்திரம்
சரத்குமார்,முரளி,மனோஜ்,நடித்த படம்
அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் அழகான படம்.

52)அன்பே சிவம்
கமலின் படம் மாதவனும் நடித்திருபார்.
மாதவன் நடித்த கமல்தயாரித்த நளதமயந்தியிலும் கமல் கடைசிகாட்சியில் நடித்திருப்பார்


53)அவன் இவன்
ஆர்யாவும்,விஷாலும் நடித்த படம் இந்தப்படத்தில் சூர்யா நடிகர் சூர்யாவாகவே ஒரு காட்சியில் நடித்திருப்பார்

இன்னும் நிறைய படங்கள் இருக்கு பட்டியல் நீண்டுவிட்டதால் இந்தத்தொடர் இத்துடன் நிறைவு பெருகின்றது.தமிழ் சினிமாவில் பல ஹீரோக்கள் இணைந்து நடிப்பது ஆரோக்கியமான விடயம் தங்கள் இமேஜை விட்டுவிட்டு சில ஹீரோக்கள் இணைந்து நடிக்கின்றார்கள்.மற்ற நடிகர்களும் அவ்வாறு இணைந்து நடித்தால் தமிழ் சினிமா.ரசிகர்கள் நல்ல தரமான படங்களை பார்க்ககூடிய வாய்ப்பு கிடைக்கும்
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
54)விண்ணுக்கும் மண்ணுக்கும்
சரத்குமார்,விக்ரம் நடித்த படம்.இந்தப்படம் பெரிதாக வெற்றியடையவில்லை
இந்தப்படத்தின் இயக்குனரும் தேவையானியின் கணவருமான
ராஜகுமாரன் சொன்னாராம் மூன்று கோடி செலவில் தான் தேவயாணிக்கு எழுதிய காதல் கடிதம் இது என்று..இதைவைத்து ஒரு காமடி சொல்லப்பட்டது ராஜகுமாரனுக்கு படத்தின் தயாரிப்பாளர் சொன்னாராம் அதை ஏண்டா என் காசில் எழுதின என்று
திருத்தம்-இந்த ஜோக் நீ வருவாய் என படத்திற்கு சொல்லப்பட்டது என்று முதலில் குறிப்பிட்டு இருந்தேன் ஆனால் தேவயானியின் தீவிர ரசிகரான நம்ம துஷி..சொன்னார் இது விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்திற்கு பிறகு ராஜகுமாரன் சொன்னது என்றும் அதற்குத்தான் இப்படி நகைச்சுவை சொல்லப்பட்டது என்று..

குறிப்புக்கள்

  • பதிவு நீளமாகியதால் படங்களை(போட்டோக்கள்)இணைக்கவில்லை
  • நடிகர் சத்யராஜ்,ரஜனி,கமல்,பிரபு,விஜயகாந்,கார்த்திக்,மோகன்,போன்ற பிரபலமான நடிகர் பலரின் படங்களில் வில்லனாக நடித்திருக்கின்றார் அந்தப்பட்டியல் நீளம் என்பதால் அதை இங்கே இணைக்கவில்லை சில படங்களை மாத்திரம் சொல்லியுள்ளேன்.சத்யராஜ் 75க்கு மேட்பட்ட படங்களில் வில்லனாக நடித்திருக்கின்றார்
  • பிரபு தற்போது விஜய்,அஜித்,ஜெயம்ரவி,விக்ரம்,போன்ற பல ஹீரோக்களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் இப்பவும் பல படங்கள் நடித்து வருகின்றார் எனவே அந்தப்பட்டியலை இதில் சேர்க்கவில்லை.
  • தற்போது உள்ள மாஸ் ஹீரோக்களில் சமகால போட்டியாளர்களுடன் அதிகமாக இணைந்து நடித்தவர் அஜித்தான் அவர்,பிரசாந்,விஜய்,அர்ஜூன்,பார்த்தீபன்,விக்ரம்,கார்த்திக்,சத்யராஜ்,போன்ற பலருடன் இணைந்து நடித்துள்ளார்
  • நடிகர் ஆர்யா.பல படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார் எனவே அதை இங்கே குறிப்பிடவில்லை.உதாரணம்.ஜீவாவின் படமன சிவாமனசுல சக்தி,அதே போல ஆர்யாவின் படமான போஸ் (எ)பாஸ்கரன் படத்தில் ஜீவா கடைசிகாட்சியில் நடித்திருப்பார்
  • ரஜனிகாந்துடன் சிவாஜி.படிக்காதவன்,சவால்,படையப்பா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்..படையப்பாதான் சிவாஜி நடித்த கடைசிப்படம் என்பது குறிப்பிடதக்கது.அதேபோல கமலுட்டனும் சிவாஜி.தேவர்மகன்,போன்ற படங்களில் நடித்துள்ளார்.
(முற்றும்)

நடிகைகளின் படம் மட்டும்தான் வைக்கனுமா என்ன
கண்ணா பதிவை படிச்சிட்டு ஓட்டு,கமண்ட் போடாமல் போகும் பதிவரும்
பதிவை படிக்காமல் டெம்ளேட் கமண்ட் போடுற பதிவரும் பிரபல பதிவரா ஆனதா சரித்திரமே இல்லை..ஹா.ஹா.ஹா.ஹா
நீங்க ஓங்க வேலையை மறக்காம செய்யுங்க சும்மா அதிருதில்ல






Post Comment

57 comments:

செங்கோவி said...

ஏன் இவர்கள் இணைந்து நடிக்க யோசிக்கிறார்கள் என்றும் ஒரு பதிவு போடுங்க கிஸ்ராஜா..

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

இன்னும் ஒரு குறை, இது குறையல்ல குற்றம், பாஸ் என்கிற பாஸ்கரன், தலைவர் சந்தானமும் ஆர்யாவும் இனைந்து நடித்தது, சிறுத்தை, கார்த்தியுடன் இனைந்து நடித்தது, கண்டேன் சாந்தனுவுடன், அரை எண் 305 இல் கடவுள் பிரகாஷ் ராஜ் மற்றும் கஞ்ச கருப்பு, இந்த படங்கள எல்லாம் நீங்க கண்டுக்கவே இல்லையே? ஏதும் காரணம் இருக்கா? விளக்கம் தேவை.

மாய உலகம் said...

சூப்பர் பாஸ்.... அருமையான நடிகர்கள் இணைந்து நடித்த படங்கள் பற்றிய பகிர்வு கலக்கலாக தொடுத்துள்ளீர்கள்.. நம்ம புட்டி பால் சொன்ன கருத்தும் ஏற்றுக்கொள்ள வேண்டியதே... வாழ்த்துக்கள் நண்பா

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

அண்ணே, இது மெகா மாஸ் ஹீரோக்கள் இனைந்து நடித்த பட லிஸ்டா? அப்பிடின்னா ஓகே. அப்புறம், நீங்க சொன்ன படங்கள்ல அதிகமானது கவுர வேடம் அல்லது சிறப்புத்தோற்றத்தில் நடித்தது. உதாரணம் குசேலன் (சூர்யா). ரத்த சரித்திரம், மவுனம் பேசியதே, காதலே நிம்மதி போன்ற படங்களை சூர்யா இனைந்து நடித்த படங்கள் லிஸ்டில் வைத்துக்கொள்ளலாம். குசேலன் பசுபதி படம், தலைவர் சேர்ந்து நடித்திருப்பார் அந்த வகையில் லிஸ்டில் ஓகே. உண்மையிலேயே கதாபாத்திரங்களை வைத்து எடுத்த படங்கள் லிஸ்டில் வரவில்லை என்பது ஒரு மனக்குறை, எங்கேயும் எப்போதும், சரோஜா, பைவ் ஸ்டார், அஞ்சாதே, இயற்கை, வெயில்.... அந்த லிஸ்டு கொஞ்சம் நீளம் பாஸ், மற்றும் படி பல அருமையான படங்களை தொகுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

பிராண்ட்ஸ் படத்த சொல்லிட்டு, காலத்தால் அழியாத "ஆணிய புடுங்க வேணா" வசனத்தை விட்டது மன்னிக்கமுடியாத குற்றம்.

சம்பத்குமார் said...

நல்ல படங்களை வரிசைப்படுத்தியுள்ளீர்கள் நண்பரே

எனக்கு பிடித்தவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்களேன்

1.அன்பேசிவம்

2.அபியும் நானும்

3.பயணம்

4.பசங்க

நன்றி நண்பரே

நட்புடன்
சம்பத்குமார்

K.s.s.Rajh said...

@
Dr. Butti Paul கூறியது...
இன்னும் ஒரு குறை, இது குறையல்ல குற்றம், பாஸ் என்கிற பாஸ்கரன், தலைவர் சந்தானமும் ஆர்யாவும் இனைந்து நடித்தது, சிறுத்தை, கார்த்தியுடன் இனைந்து நடித்தது, கண்டேன் சாந்தனுவுடன், அரை எண் 305 இல் கடவுள் பிரகாஷ் ராஜ் மற்றும் கஞ்ச கருப்பு, இந்த படங்கள எல்லாம் நீங்க கண்டுக்கவே இல்லையே? ஏதும் காரணம் இருக்கா? விளக்கம் தேவை/////
ஹா.ஹா.ஹா.ஹா..பாஸ் இப்படி வரிசைப்படுத்த வெளிக்கிட்டால் நான் ஒரு 50,60 வது பகுதியாவது எழுதனும்.....விளக்கம் ஓக்கேயா?ஏன்னு நான் சொல்லனுமா என்ன?சந்தானம் தானே இப்ப பல படங்களை தூக்கி நிறுத்துகின்றார்

K.s.s.Rajh said...

@
மாய உலகம் கூறியது...
சூப்பர் பாஸ்.... அருமையான நடிகர்கள் இணைந்து நடித்த படங்கள் பற்றிய பகிர்வு கலக்கலாக தொடுத்துள்ளீர்கள்.. நம்ம புட்டி பால் சொன்ன கருத்தும் ஏற்றுக்கொள்ள வேண்டியதே... வாழ்த்துக்கள் நண்பா/////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
Dr. Butti Paul கூறியது...
அண்ணே, இது மெகா மாஸ் ஹீரோக்கள் இனைந்து நடித்த பட லிஸ்டா? அப்பிடின்னா ஓகே. அப்புறம், நீங்க சொன்ன படங்கள்ல அதிகமானது கவுர வேடம் அல்லது சிறப்புத்தோற்றத்தில் நடித்தது. உதாரணம் குசேலன் (சூர்யா). ரத்த சரித்திரம், மவுனம் பேசியதே, காதலே நிம்மதி போன்ற படங்களை சூர்யா இனைந்து நடித்த படங்கள் லிஸ்டில் வைத்துக்கொள்ளலாம். குசேலன் பசுபதி படம், தலைவர் சேர்ந்து நடித்திருப்பார் அந்த வகையில் லிஸ்டில் ஓகே. உண்மையிலேயே கதாபாத்திரங்களை வைத்து எடுத்த படங்கள் லிஸ்டில் வரவில்லை என்பது ஒரு மனக்குறை, எங்கேயும் எப்போதும், சரோஜா, பைவ் ஸ்டார், அஞ்சாதே, இயற்கை, வெயில்.... அந்த லிஸ்டு கொஞ்சம் நீளம் பாஸ், மற்றும் படி பல அருமையான படங்களை தொகுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்/////

பாஸ் பிரபல ஹீரோக்கள் இணைந்து நடித்த லிஸ்ட்தான்..நீங்கள் சொல்வதில் இயற்கை அஞ்சாதே...ஓக்கே..எங்கேயும் எப்போதும்.சரோஜா..இப்படியான படங்களை வரிசைபடுத்த வெளிக்கிட்டால் பதிவு நிறைய பகுதிகளைக்கடந்துவிடும் அதனால் சுருக்கமாக வரிசைப்படுத்தியுள்ளேன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Dr. Butti Paul கூறியது...
பிராண்ட்ஸ் படத்த சொல்லிட்டு, காலத்தால் அழியாத "ஆணிய புடுங்க வேணா" வசனத்தை விட்டது மன்னிக்கமுடியாத குற்றம்/////

ஆமா பாஸ்..ஆணிய புடுங்க வேணாம்..இதுயாரு உங்க வைஃபா..போன்ற வசனங்களை விட்டு விட்டேன்...

K.s.s.Rajh said...

@
சம்பத்குமார் கூறியது...
நல்ல படங்களை வரிசைப்படுத்தியுள்ளீர்கள் நண்பரே

எனக்கு பிடித்தவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்களேன்

1.அன்பேசிவம்

2.அபியும் நானும்

3.பயணம்

4.பசங்க

நன்றி நண்பரே

நட்புடன்
சம்பத்குமாம்/////

நன்றி பாஸ்

Unknown said...

தமிழ் சினிமா என்பது கடல் மாதிரி அதில் உங்களுக்கு பிடித்த படங்கள் பட்டியல் இட்டு இருக்கிறீர்கள் நன்று

வாழ்த்துக்கள்

kaialavuman said...

நல்ல தொகுப்பு நண்பரே.

ஒரு சிறிய தகவல் பிழை. “24 மணிநேரம்” படத்தில் சத்ய்ராஜ், மொட்டைத் தலையும் இல்லை; அதில் “தகடு தகடு” வசனமும் இல்லை. அவர் மொட்டைத்தலையுடன் வந்து மோகன் கதாநாயகனாக (ஆனால் negative roll)வும் விஜய்காந்த் நளினியின் நண்பர்/relative ஆகவும் நடித்த படம் 100வது நாள். (மணிவண்ணன் இயக்கம்). இதில் சத்யராஜ் மொட்டைத் தலை அடியாளாக அசத்தியிருப்பார். இதே நேரத்தில் ”காக்கிச்சட்டை” படத்தில் “தகடு தகடு” வசனம் பேசி அசத்தினார். இது அதுவரை அடியாளாக (ஏணிப்படிகள், சட்டம் என் கையில் தொடர்ந்து..) இருந்த அவரை முக்கிய வில்லனாக ஆக்கியது. அதன் பிற்கு அவர் நடித்த “24 மணிநேரம்” பட்த்தில் வரும் “என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டீங்களே” வசனம் அவரை உச்சத்தில் கொண்டு சென்றது.

K.s.s.Rajh said...

@வேங்கட ஸ்ரீனிவாசன்

அட ஆமா பாஸ் மாறி குறிப்பிட்டுவிட்டேன் தகவலுக்கு நன்றி

K.s.s.Rajh said...

@ஜ.ரா.ரமேஷ் பாபு

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@Dr. Butti Paul
////பிராண்ட்ஸ் படத்த சொல்லிட்டு, காலத்தால் அழியாத "ஆணிய புடுங்க வேணா" வசனத்தை விட்டது மன்னிக்கமுடியாத குற்றம்./////

வசனத்தை இணைத்துவிட்டேன் டாக்டரே

Yoga.S. said...

வணக்கம்!இளம்பொடியளுக்கு உபயோகமான விசயங்களப் பதிஞ்சிருக்கி றியள்.இதோட முடிஞ்சுதோ?ஹி!ஹி!ஹி!

பிரணவன் said...

இரண்டு கதாநாயகர்கள் நடித்த திரைப்படங்களில், என் மனதை மிகவும் வருடிய படம் நீ வருவாய் என. . .மேலும் அன்பே சிவம், ஹேராம், ஆயுத எழுத்து,உன்னைப்போல் ஒருவன் போன்ற படங்கள் மக்களுக்கு நல்ல செய்திகளை சொல்லும் படங்களாகவும் அமைந்திருந்தன. . .

சென்னை பித்தன் said...

இத்தனை படமா?நல்ல லிஸ்ட்.

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நலமா?

சுவையான தொகுப்பு.

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
வணக்கம்!இளம்பொடியளுக்கு உபயோகமான விசயங்களப் பதிஞ்சிருக்கி றியள்.இதோட முடிஞ்சுதோ?ஹி!ஹி!ஹி/////

ஹா.ஹா.ஹா.ஹா..நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
பிரணவன் கூறியது...
இரண்டு கதாநாயகர்கள் நடித்த திரைப்படங்களில், என் மனதை மிகவும் வருடிய படம் நீ வருவாய் என. . .மேலும் அன்பே சிவம், ஹேராம், ஆயுத எழுத்து,உன்னைப்போல் ஒருவன் போன்ற படங்கள் மக்களுக்கு நல்ல செய்திகளை சொல்லும் படங்களாகவும் அமைந்திருந்தன. ./////

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா

K.s.s.Rajh said...

@
அருள் கூறியது...
தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html
/////

வணக்கம் நண்பரே என் பதிவு பற்றி எதாவது கருத்து கூறியிருக்கலாமே

K.s.s.Rajh said...

////சென்னை பித்தன் கூறியது...
இத்தனை படமா?நல்ல லிஸ்ட்/////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
வணக்கம் நண்பா,
நலமா?

சுவையான தொகுப்பு/////

வாங்க பாஸ் நன்றி பாஸ்

நிரூபன் said...

வித்தியாசமான தொகுப்பு, உண்மையிலே தமிழ் சினிமாவில் இரு நடிகர்கள் இணைந்து நடிக்கும் படங்களைப் பார்க்க கிடைப்பது அரிதிலும் அரிதே.

ஆனால் மாதவன் கமல் ஆகியோர் நடித்திருந்தார்கள். இரண்டு தடவை.

அது பற்றியும் சொல்லியிருக்கலாம்..

நிரூபன் said...

பரத் ஆர்யா,
ஷாம் ஆர்யா இருவரும் இணைந்தும் நடித்துள்ளார்கள்.

தனிமரம் said...

வணக்கம் சகோ !
உங்களின் பார்வையில் பிடித்த படங்கள் பார்வையில் நான் கருத்துச் சொல்ல மாட்டம் ஏன்னா சரியான கோபத்தில் இருக்கின்றன் சில படங்களில் இன்னும் சிலர் நடித்திருந்தார்கள் பிரபுதேவா வானத்தைப் போல தேவன் அருண்பாண்டியன் என பலரை தவற விட்டு விட்டீர்கள்!

தனிமரம் said...

தேவயானியின் கணவர் ராஜகுமாரன் 3படம் தான் இயக்கினார் நீ வருவாய் என வி.ம ,காதலுடன் அத்துடன் அவரும் வெளியேறிவிட்டார்!

தனிமரம் said...

சகோ பதிவு போடும் அவசரத்தில் சில வித்தியாசமாக ஏன் ஜோசிக்க வில்லை பதிவு நீளவது அலுப்புத்தருகின்றது என்று தெரியும் போது இன்னும் பிரித்துப் போட்டிருக்கலாம்!

தனிமரம் said...

சகோ நான் சரியான கோபத்தில் தான் பின்னூட்டம் போடுகின்றேன் நீங்கள் வெளியே போ என்று சொன்னாலும் பருவாயில்லை ஆனாலும் துசி சொல்வது போல் நண்பனாக சிலதைச் சொல்லிவிட்டுப்போறன்!

தனிமரம் said...

நீங்களும் விசில் அடித்தான் குஞ்சுகளாக மட்டுமா படம் பார்க்கின்றீர்கள் படத்தோடு மிகவும் தேவையான மற்றைய கலைஞர்கள் பற்றிய தகவல் கூட நீங்கள் ரசித்த /பிடித்த படத்தைப் பற்றி சொல்லியிருந்தாள் புதிய தகவல் பல பலருக்குச் சேருமே?
பெரியண்ணாவில் அறிமுகமான இசையமைப்பாளர் பரனி பற்றி விளக்கியிருக்கலாம் அதில் நடித்த விஜயகாந் பாத்திரம் ,

உன்னைக்கொடு என்னைத் தருவேனில் தல அறிமுகம் செய்த இயக்குனர் கவிகாளிதாஸ் பற்றி அவர் அப்படத்தின் பின் வேறுபடம் இயக்காதது பற்றி சொல்லியிருக்கலாம் அந்தப்படத்தில் அவர் பாவித்த தேசப்பற்றுக் கரு பின்னால் ஈழ்த்தில் எப்படி உள் வாங்கப்பட்டது என்று விரிவாக சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இன்னும் நீண்ட பின்னூட்டம் போட வேலை தடுக்கின்றது அதனால் போகின்றேன்.
இந்தக்கருத்துக்கள் உங்களைச் சீண்டும் என்றாள் கருத்துரைகள் நீக்கிவிடுங்கள் தனிமரம் இதற்காக கவலை கொள்ளாது!

குறையொன்றுமில்லை. said...

நல்ல ரசனை உங்களுக்கு. இதில் கொஞ்சம் படம் மட்டுமே பார்த்திருக்கேன்.

தனிமரம் said...

தனியான மெயில் போட்டேன் சற்று கவனிக்கவும் சகோ!

K.s.s.Rajh said...

@நிரூபன்

மாதவன்,கமல் இணைந்து நடித்த படங்கள் குறிப்பிட்டுள்ளேன் பாஸ்

K.s.s.Rajh said...

@
Lakshmi கூறியது...
நல்ல ரசனை உங்களுக்கு. இதில் கொஞ்சம் படம் மட்டுமே பார்த்திருக்கேன்/////

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
வணக்கம் சகோ !
உங்களின் பார்வையில் பிடித்த படங்கள் பார்வையில் நான் கருத்துச் சொல்ல மாட்டம் ஏன்னா சரியான கோபத்தில் இருக்கின்றன் சில படங்களில் இன்னும் சிலர் நடித்திருந்தார்கள் பிரபுதேவா வானத்தைப் போல தேவன் அருண்பாண்டியன் என பலரை தவற விட்டு விட்டீர்கள்////

பாஸ் விஜயகாந்தும்,பிரபுதேவாவும் சேர்ந்து நடித்தது என்றுதான் வானத்தை போல படத்தை குறிப்பிட்டுள்ளேன்

அத்துடன் பதிவுக்கு மேல கொடுக்கபட்ட விளக்கத்தை பாருங்கள் பாஸ் பிரபல ஹீரோக்கள் இணைந்து நடித்து பற்றிதான் என்று குறிப்பிட்டேன்

அருண்பாண்டியன் ஒரு குணச்சித்திர நடிகர் அவர்..நிறைய படங்களில் நிறைய பெயருடன் இணைந்து நடித்துள்ளார் எனவே. அவரைப்போன்ற நடிகர்களை குறிப்பிடவெளிக்கிட்டால் நிறைய பகுதிகள் வந்துவிடும்..ஆனாலும் தேவன் படத்தில் அவரை குறிப்பிட்டு இருக்கலாம்...சாரி பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
சகோ பதிவு போடும் அவசரத்தில் சில வித்தியாசமாக ஏன் ஜோசிக்க வில்லை பதிவு நீளவது அலுப்புத்தருகின்றது என்று தெரியும் போது இன்னும் பிரித்துப் போட்டிருக்கலாம்/////

இந்தத்தொடரை இந்த பகுதியுடன் முடிகக் நினைத்தால் கொஞ்சம் நீண்டு விட்டது பாஸ் மன்னித்து அருளுக

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
நீங்களும் விசில் அடித்தான் குஞ்சுகளாக மட்டுமா படம் பார்க்கின்றீர்கள் படத்தோடு மிகவும் தேவையான மற்றைய கலைஞர்கள் பற்றிய தகவல் கூட நீங்கள் ரசித்த /பிடித்த படத்தைப் பற்றி சொல்லியிருந்தாள் புதிய தகவல் பல பலருக்குச் சேருமே?
பெரியண்ணாவில் அறிமுகமான இசையமைப்பாளர் பரனி பற்றி விளக்கியிருக்கலாம் அதில் நடித்த விஜயகாந் பாத்திரம் ,

உன்னைக்கொடு என்னைத் தருவேனில் தல அறிமுகம் செய்த இயக்குனர் கவிகாளிதாஸ் பற்றி அவர் அப்படத்தின் பின் வேறுபடம் இயக்காதது பற்றி சொல்லியிருக்கலாம் அந்தப்படத்தில் அவர் பாவித்த தேசப்பற்றுக் கரு பின்னால் ஈழ்த்தில் எப்படி உள் வாங்கப்பட்டது என்று விரிவாக சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இன்னும் நீண்ட பின்னூட்டம் போட வேலை தடுக்கின்றது அதனால் போகின்றேன்.
இந்தக்கருத்துக்கள் உங்களைச் சீண்டும் என்றாள் கருத்துரைகள் நீக்கிவிடுங்கள் தனிமரம் இதற்காக கவலை கொள்ளாது/////

உண்மைதான் பாஸ் விரிவாகச்சொல்லியிருக்கலாம் ஆனால் இந்தத்தொடர் நீண்டு விடும் என்பதால் நான் விரிவாக அலசவில்லை.

அத்துடன் இந்தத்தொடரின் நோக்கம் பிரபல ஹீரோக்கள் இணைந்து நடித்த படங்களின் பெயர்களை பட்டியல் இடுவது மட்டுமே சுவாரஸ்யத்துக்காக சில தகவல்களை இணைத்தேன்..அத்துடன் தலைப்பை ஏன் பிரபல ஹீரோக்கள் இணைந்து நடித்த படங்கள் என்று போடாமல் என் பார்வையில் சில திரைப்படங்கள் என்று போட்டேன் என்றால்..சில இணையதளங்கள் இப்படி வித்தியாசமான தொகுப்புக்கள் என்றால் உடனே காப்பி அடித்து விடுவார்கள் அவர்களின் கவனத்தை திசை திருப்பத்தான் அப்படி தலைப்பை மாற்றி வைத்தேன்

ஓவ்வொறு படங்களைப்பற்றியும் விரிவாக சொன்னால் நிறைய பதிவுகள் வந்துவிடும் எனவே இந்தத்தொடரை இந்த பகுதியுடன் முடிக்கவிரும்பினேன்..
எனது ஏனைய இரண்டு தொடர்களும் முடியவிட்டு. வாரம் ஒரு படம் பற்றி விரிவாக அலசலாம் என்று இருக்கேன் அதில் நிச்சயமாக பல நல்ல படங்கள் பற்றி விரிவாக அலசுவோம்..நன்றி பாஸ்.

அத்துடன் கருத்துக்களை எப்போதும் நான் நீக்குவதில்லை..விமர்சணங்களை எப்போதும் நான் வரவேற்பவன்

அதிலும் உங்கள் கருத்துக்களை நீக்குவேனா....ஒரு தம்பியின் செயற்பாட்டை சுட்டிக்காட்ட அண்ணனுக்கு உரிமையில்லையா..உங்களை நான் எப்பவும் என் அண்ணன் ஸ்தானத்திலேயே வைத்திருக்கேன்

K.s.s.Rajh said...

@நிரூபன்

பரத்தும்,ஆர்யாவும் இணைந்து நடித்துள்ளதை குறிப்பிட்டுள்ளேன்..

ஆர்யா,ஷாம் நடித்த உள்ளம் கேட்குமே குறிப்பிடவில்லைதான்..பட்டியல் நீளம் என்பதால் பல படங்களைக்குறிப்பிடவில்லை பாஸ்

கோகுல் said...

பாஸ்,நம்ம நடிகர் திலகமும் புரட்சித்தளைவரும் இணைஞ்சு நடிச்ச கூண்டுக்கிளி படத்த மறந்துட்டிங்களா?
இல்ல கொஞ்சம் புது லிஸ்ட் மட்டுங்கறதுனால விட்டுடிங்களா?

ஆனால் நல்ல தொகுப்பு.!

Riyas said...

நிறைய தெரிவுகள்.. எல்லாம் ஓக்கே..

படங்களின் அளவை குறைத்து தகவல்களை கூட்டியிருக்கலாம்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

சூப்பர் பகிர்வு பாஸ்....


நட்புடன்,
http://tamilvaasi.blogspot.com/

K.s.s.Rajh said...

@கோகுல்
/////பாஸ்,நம்ம நடிகர் திலகமும் புரட்சித்தளைவரும் இணைஞ்சு நடிச்ச கூண்டுக்கிளி படத்த மறந்துட்டிங்களா?
இல்ல கொஞ்சம் புது லிஸ்ட் மட்டுங்கறதுனால விட்டுடிங்களா?

ஆனால் நல்ல தொகுப்பு.!//////

குறிப்பிட்டுள்ளேன் பாஸ் 42 வதாக குறிப்பிட்டுள்ளது பாருங்கள் லிஸ்ட் நீளமாக இருந்ததால் நீங்கள் கவனிக்கவில்லை போல

K.s.s.Rajh said...

@
Riyas கூறியது...
நிறைய தெரிவுகள்.. எல்லாம் ஓக்கே..

படங்களின் அளவை குறைத்து தகவல்களை கூட்டியிருக்கலாம்./////

அளவைக்குறைத்திருக்கலாம் பாஸ் ஆனால் இந்தப்பகுதியுடம் இந்தத்தொடரை முடிக்க நினைத்தால்..பட்டியல் நீண்டுவிட்டது..மன்னிக்கவேண்டும்

K.s.s.Rajh said...

@
தமிழ்வாசி - Prakash கூறியது...
சூப்பர் பகிர்வு பாஸ்....


நட்புடன்,
http://tamilvaasi.blogspot.com////

தேங்ஸ் பாஸ்

”தளிர் சுரேஷ்” said...

தமிழ் சினிமாக்களில் (கடலில்)சில முத்துக்களை பட்டியலிட்டு சிலவற்றை பார்க்க தூண்டியுள்ளீர்கள்! சில தகவல்கள் அற்புதம்!

Anonymous said...

நல்ல தொகுப்பு பாஸ் ...அன்பே சிவம் படத்தை தவற விடுவீர்களா என்று நினைத்துக்கொண்டே வாசித்துக்கொண்டு வந்தேன் ...அதையும் குறிப்புட்டுள்ளீர்கள் ...அருமை

K.s.s.Rajh said...

@thalir
நண்றி பாஸ்

K.s.s.Rajh said...

@கந்தசாமி. கூறியது...
நல்ல தொகுப்பு பாஸ் ...அன்பே சிவம் படத்தை தவற விடுவீர்களா என்று நினைத்துக்கொண்டே வாசித்துக்கொண்டு வந்தேன் ...அதையும் குறிப்புட்டுள்ளீர்கள் ...அருமை/////

நன்றி பாஸ் அன்பே சிவம் மறக்ககூடிய படமா.

Unknown said...

மாப்ள பகிர்ந்த விஷயங்களுக்கு நன்றி!

Yaathoramani.blogspot.com said...

அடேயப்ப ஃபில்ம் நியூஸ் ஆனந்தன் மாதிரி
விவரங்களை அடுக்கித் தள்ளுகிறீர்களே
அருமையான தகவல்களை அருமையான
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

@விக்கியுலகம்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ Ramani கூறியது...
அடேயப்ப ஃபில்ம் நியூஸ் ஆனந்தன் மாதிரி
விவரங்களை அடுக்கித் தள்ளுகிறீர்களே
அருமையான தகவல்களை அருமையான
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்/////

நன்றி சார்

M.R said...

நல்ல தொகுப்பு நண்பரே ,சுவாரஸ்யம்

K.s.s.Rajh said...

@M.R

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@செங்கோவி

கண்டிப்பாக போடுகின்றேன் பாஸ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails