Thursday, March 10, 2011

என்னவளே அடி என்னவளே(Kss.Rajh)

ஒரு கவிதை எழுதலாம் என்று யோசனை தோன்றியது பாடசாலைக்காலங்களில் கவிதை எழுதியதாக ஞாபகம்,நீண்ட நாட்களுக்கு பிறகு ஒர் கவிதை



என்னை சிறைப்படுத்திய கண்கள்

வாழ்க்கையை வாசிக்க தொடங்கிய போது
 எனது புத்தகங்களாக நீ இருந்தாய்
அதனால் உன்னை யாசிக்க தொடங்கினேன்
யாசிப்பதும் நேசிப்பதும் எனது உரிமை
அதற்கு உன் அனுமதி தேவையில்லை.

இந்த வாழ்க்கை வாழ்கின்ற காலத்தில்
காதல்
,நட்பு,உறவு,சோகம்,பிரிவு,மகிழ்ச்சி,இவை கடந்து போகும்.கனவில் உன்னோடு வாழ்ந்த நாட்களில்
இவைகளின் மொத்த உருவமாய் நீ இருந்தாய்

 உன்னை பார்த்து 4 வருடங்கள் ஆகிவிட்டது

இப்போது என் மனதில் துளியும் காதல் இல்லை.ஆனாலும் எனக்கு கஸ்டம் வரும் போதெல்லாம்,உன் புகைப்படத்தை பார்த்தால் கஸ்டம் கரைந்தோடுகின்றது

உனக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த நமது மெளன யுத்தத்தில்,தோற்றுப்போனது நான் மட்டுமல்ல நீயும் தான்
இதை நீயும் நானும் மட்டுமே அறிவோம்

இந்த உலகத்தில் வாழ்கின்ற எல்லோருக்கும்
அவர்களின் முதல்காதலை மறக்கமுடியாது
வாழ்கின்ற வரை அந்த நினைவுகளும் வாழும்

எனக்கும் அப்படியே என்னுள் எங்கேயோ ஒர் இடத்தில்
உன் விம்பம் நான் வாழ்கின்றவரை என்னுடன் இருக்கும்.
,
,

Post Comment

4 comments:

sumitha said...

அழகான கவிதை, முதல் காதலை வாழுகின்றவரை மறக்க முடியாது இது மறுக்க முடியாத உண்மை.
நீங்கள் தொடர்ந்து கவிதை எழுதலாமே.

Kss.Rajh said...

நன்றி சகோதரி நான் தொடர்ந்து கவிதை எழுத முயற்சிக்கிறேன்.

Unknown said...

mm.....கண்கள் உண்மையான கண்களாகவே தோன்றுகிறது!சொந்த கதையோ?>

K.s.s.Rajh said...

@மைந்தன் சிவா சொன்னது…
mm.....கண்கள் உண்மையான கண்களாகவே தோன்றுகிறது!சொந்த கதையோ?

எப்பிடித்தான் கண்டு பிடிக்கிறாங்களோ.................

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails