நினைவுகள் பின் நோக்கிச்செல்கின்றன
என் நினைவுகளில் நீ எங்கையோ எஞ்சியிருப்பதால்
உன் பார்வைகளில் பாவி நான் சிறைப்பட்டு இருந்த போதுதான்
என் வாழ்க்கைச்சக்கரம் வசந்தமாக சுழன்றது
சக்கரத்துக்கு அச்சாணியாய் நீ இருந்தாய்.
பாடசாலைக்காலங்களில் எனக்கு ஏற்பட்ட முதல் காதலோடு கவிதை எழுத ஆரம்பித்தேன் ஆனால் எல்லாம் காதல் கவிதைகளே இதுவரை நான் காதல் தவிர்த்து வேறு எந்தக்கவிதைகளும் முழுமையாக எழுதியது கிடையாது.பாடசாலைக்காலத்திற்கு பிறகு கவிதையும் எழுதுவது இல்லை காதல் செய்வதும் இல்லை.