உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டங்கள் முடிவடையும் தருவாயில் உள்ளது,
இனி காலிறுதி ஆட்டங்கள்,ஆரம் பித்ததும் எப்படி விளையாடளாம் என்று நம்ம
கிறிக்கெட் அணி கேப்டன்கள் ரூம் போட்டு ஜோசித்தாள் எப்படி இருக்கும்,
இதோ.(கந்துக்குட்டி அணிகள் இம்முறை உலகக்கோப்பையில் பலபோட்டிகளில்
சிறப்பாக ஆடினாலும் காலிறுதி அறைஇறுதி,இறுதி என்று வருவது நம்ம பெரிய அண்ணாத்தைகளின் அணிகள் தானே எனவே பெரிய அண்ணாத்தைகள் தான் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்)
சிமித் |
சிமித்(தென்னாபிரிக்காகேப்டன்)-ஏம்பா எல்லா வந்தாச்சா ஆரம்பிப்பமா?
பொண்டிங் |
பொண்டிங்(அவுஸ்ரேலிய கேப்டன்)-பொறப்பா சிமித் உனக்கு எப்பையும் அவசரம் தான் முதலில் இந்த கூட்டத்திற்கு ஒரு கேப்டனை நியமிப்பம் அப்பரம்
பேசுவம்,
சிமித்-நீ சொன்னா சரிதான் ஆரை இந்த கூட்டத்திற்கு கேப்டன் ஆக்களாம்?
ஸ்ரோரஸ் |
அன்ரு ஸ்ரோரஸ்(இங்கிலாந்து கேப்டன்)-ஏம்பா பாகிஸ்தான் கேப்டன்
அப்ரடியை நியமிப்பமா?
டோணி |
டோணி(இந்திய கேப்டன்)-இங்க பாருங்க ஸ்ரோரஸ் அண்ணே அப்ரடியை நியமிச்சா நான் இந்த கூட்டத்திற்கு வரல.
அப்ரடி |
அப்ரடி-ஏம்பா டோணி ஏன் என்னை வேணாங்கிற?
டோணி-அது இல்லப்பா?இந்த கூட்டத்திற்கு உன்னை தலைவராக்கினா,
நம்ம பயலுக என்னை நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்த ஏன் நீ தலைவரா இருக்கலைனு கொடும்பாவி எரிச்சு வீட்டுக்கு கல் எறிவானுங்க நீயே சொல்லு அப்ரடி இது எனக்கு தேவையா?
அப்ரடி-அது சரி ஏக்கனவே நம்மாளு சொயிப்மாலிக் உங்க ஊரு சானியாவை தள்ளிட்டு போனதுல உங்காளுகள் கடுப்பாத்தான் இருக்காங்க,
பொண்டிங் அண்ணே பேசாம டோணியையே இந்த கூட்டத்திற்கு கேப்டன் ஆக்குங்க.
பொண்டிங்-அப்ரடி சொல்லுரது சரிதான் சிமித் டோணியையே நியமி.
சிமித்-இல்லை பொண்டிங் டோணியை நியமிச்சா போட்டிகளில் ஆலோசனைக்கு சச்சின்,ராவிட் போன்றோரை கூப்புடுவது மாதிரி
இங்கையும் கூப்பிட்டுட்டாருனா?
டோணி&சச்சின் |
பொண்டிங்-கூப்பிடட்டுமே அதனால என்ன?
டரன் சமி |
டரன் சமி(மேற்கிந்திய கேப்டன்)-என்னா பொண்டிங் அண்ணே லூசுத்தனமா கேக்கிற?
நீ ,நான்,சிமித் அண்ணே,டோணி,அப்ரடி,விக்டோரி அண்ணன்,
ஸ்ரோரஸ் அண்ணன்,சங்ககாரா,எல்லோரையும் சேத்து எட்டுப்பேருக்கும் எட்டு வடையும் எட்டு டீயும் தானே தந்திருக்காங்க,
டோணி சச்சின் அண்ணாத்தையையும்,ராவிட் அண்ணாத்தை எல்லாரையும் கூட்டிட்டு வந்தா வடை போயிரும்ல.
சங்கா(சங்ககார) |
சங்கா(இலங்கை கேப்டன்)-ஆகா ஆகா சமி பிடிசான் பாரு பாயிண்ட.
பொண்டிங்-ஆமால்ல வடை போயிருமே,
விக்டோரி |
விக்டோரி(நியூஸ்லாந்து கேப்டன்)-ஏம்பா வடைக்கதையை விட்டிட்டு,
வேகமா கூட்டத்தை ஆரம்பிங்கப்பா.
பொண்டிங்-விக்டோரி கொஞ்சம் பொறப்பா.
டோணி-இங்க பாருங்க என்னை இந்த கூட்டத்திற்கு தலைவர் ஆக்கிறீங்கலா இல்லையா?
சங்கா-பங்காளி டோணி கொஞ்சம் பொறுங்க அதான் பொண்டிங் பேசிக்கிட்டு இருக்காங்கல்ல.
டோணி-சும்மா இருங்க பங்காளி என்னால பொறுக்க முடியாது,நான் இந்த கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்யுரன்.
ஏ எல்லாம் பாரு பாரு நான் வெளிநடப்பு செய்யுரன்.
(ஏ நான் ஜெயிலுக்கு போரன் ஜெயிலுக்கு போரன் நானும் ரவுடிதான் வடிவேலு ஸ்டைலில் டோணி வெளியேருகிறார்)
சிமித்-ஏம்பா டோணிக்கு ஆனாலும் இவ்வளவு லொள்ளு கூடாது.
அப்ரடி-ஆமா சிமித் கூட்டத்தை விடுங்க ,முதல்ல டோணி&கோ வை கப் அடிக்க விடக்கூடாது நம்மல்ல யார் பைனலுக்கு வந்தாலும் எதிர் அணியா டோணி&கோ வந்தால் அவங்களை எப்படியாவது தோக்கடிக்கனும் அதுக்கு எல்லாரும் சேர்ந்து ஒரு ஜடியா சொல்லுங்கப்பா.
விக்டோரி-அப்ரடி சொல்லுரது சரிதான் டோணி&கோ பைனலுக்கு வந்தாள் அவங்களை வெல்ல ஜடியா யோசிப்பம்.
சமி-நான் சொல்லுரன் முதல்லேயே சச்சினையும்,சேவாக்கையும் அவுட்டாக்கிட்டா எப்புடி.
பொண்டிங்-ஏன் சமி நீ புதுக் கேப்டன்னு நிருபிக்கிரியே,சச்சினையும் சேவாக்கையும் அவுட்டாக்கினா,அங்கால யுவராஜ்,கம்பீர்,யூசுப்பதான்,விராத்கோலினு பெரிய பேட்டிங் டீமே டோணி வச்சிருக்கான்.இந்த ஜடியா சரிப்படாது வேர யோசிங்க
,
ஸ்ரோரஸ்-பொண்டிங் சொல்லுரது சரி,வேர ஜடியா ஒன்னு நான் சொல்லுரன்
டோணி&கோ பந்து வீச்சு பலவீன மா இருக்கிறதால டொஸ் வென்று முதலில்
பேட் செய்தாள் நாம் வெல்லலாம்.
சிமித்-பங்காளி ஸ்ரோஸ் இப்ப தெரியுது நீங்க லீக் போட்டியில அயர்லாந்திட்டயும்,பங்களாதேஸ்கிட்டையும் வேண்டிக்கட்டினது ஏன்னு,
வேர ஜடியா சொல்லுங்கப்பா.
எல்லோரும் இந்தியா பைனலுக்கு வந்தால் எப்படி வெல்லுரதுனு ஜடியா தெரியாமல் விழிபிதுங்க நிக்கின்றனர்
,
அப்போது டீ கொண்டு வருகிறான் வருகின்றான் ஒர்கிறிக்கெட் ரசிகன்
கிறிக்கெட் ரசிகன் -என்னா அண்ணாத்தைகளா கடுமையா யோசிக்கிறீங்க?
பொண்டிங்-ஒன்னுமில்ல தம்மி ,உலகக்கோப்பை பைனலுக்கு இந்தியாவந்தால் எப்படி அவர்களை வெல்லுரதுனு யோசிக்கிறம்.
கிறிக்கெட் ரசிகன் -அண்ணே இதல்லாம் ஒரு மேட்டரா இதுக்கு ஏன் யேசிக்கிரீங்க சின்ன விசயம் நா சொலுரதைக்கேளுங்க இந்தியாவை சிம்பிலா வெல்லலாம்.
அப்ரடி-என்னா தம்பி நீ எங்களாலேயே ஜடியாவை கண்டுபிடிக்க முடியல
நீ என்னத்த சொல்லப்போர போப்பா.
கிறிக்கெட் ரசிகன் -அண்ணே நாங்கள் ரசிகர்கள் தான் எல்லாப்போட்டிகளையும்
உன்னிப்பா கவனிக்கிரம்,எங்களை கேளுங்க.
சங்கா-சரி சொல்லு தம்பி.
கிறிக்கெட் ரசிகன் -சிம்பில் அண்ணே சச்சினை சதமடிக்க விட்டிடுங்க,நீங்க வெல்லலாம்,சச்சின் சதமடிததால் இந்தியா தோப்பது வழமைதானே அண்ணே இதுக்கு போய் இப்பிடி யோசிக்கிறீங்க,
சொல்லிவிட்டு கிறிக்கெட்ரசிகன் வெளியேறுகிறான்.
சிமித்-ஆமால்ல அன்னைக்கு கூட சச்சின்48 சதம் அடிச்ச அந்த போட்டியில கூட நாங்கதானே ஜெயிச்சம்.
(சச்சினினுக்கு சர்வதேச போட்டிகளில்99 வது சதம் இது,ஒருநாள் 48+டெஸ்ட் 51=99)
சச்சின் 48 வது ஒரு நாள் சதம்(உலகக்கோப்பையில் 6வது சதம்) |
பொண்டிங்-ஆமப்பா எனக்கும் இப்பத்தான் ஞாபகம் வருது சச்சின் ஒருக்கா 175 ரன் எடுத்த ஒரு போட்டியில கூட நாங்க ஜெயிச்சிருக்கம்.
விக்டோரி-சரி வேற என்ன ஜடியா கிடைச்சிருச்சிதானே இத்தோடு கிளப்புவம்.
எல்லோரும் கிளப்பிப் போகின்றனர்.
|
5 comments:
அருமை,நல்ல பதிவு நண்பரே இருந்தாலும் தான் சதம் அடிக்கும் போட்டிகளில் இந்தியா தோற்பதற்கு சச்சின் என்ன செய்வார்.
சச்சின் சதமடித்த பல முக்கியமான போட்டிகளில் இந்தியா தோற்றுள்ளது இதனால் தான்,
சச்சின் சதமடித்தாள் இந்தியா தோற்கும் என்று ஒரு கருத்து கூறப்படுகின்றது,
சூப்பர் பதிவு அதிலும்,வடை ஜோக் சூப்பர்.
சச்சின் சதமடிதாலும் இந்தியா தோற்பதற்கு சச்சின் என்ன செய்வார் அணியின் வெற்றி என்பது அவரில் மட்டும் தங்கியிருக்க வில்லை.
ஆனாலும் சச்சின் சதமடித்த பல முக்கியமான போட்டிகளில் இந்தியா தோற்றுள்ளது.
சச்சினின் பல சதங்கள் வெற்றியில்தான் முடிந்துள்ளன. எனினும் மிக சில போட்டிகளில்தான் இந்தியா தோற்றூள்ளது. அந்த போட்டிகளில் இந்தியாவின் தோல்விக்கு அதன் பலவீனமான பந்துவீச்சுதான் காரணம்
உண்மைதான் சச்சின் சதமடித்த பல போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது.ஆனாலும் சச்சின் சதமடித்தாள் இந்தியா தோற்கும் என்ற கருத்து நிலவக்காரணம்.அணிதோல்வி அடைந்த போட்டிகளில் சதம் பெற்ற வீரர்களில் சச்சின் முதல் இடத்தில் உள்ளார் இது ஒரு சாதனையாக உள்ளது.அதனால் தான் இப்படி ஒரு கருத்து நிலவுவதாக நான் நினைக்கின்றேன்.
Post a Comment