கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன அதில் பல சாதனைகள் பல ஆண்டுகள் முறியடிக்கபடாமல் இருக்கின்றன.சில சாதனைகள் அரியசாதனைகளாக இருக்கும் தற்போது வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒரு அரியசாதனையை படைக்கிறார் தென்னாபிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித்
அது என்ன என்றால் நூறு டெஸ்ட் ஆட்டங்களில் கேப்டன் பதவியை வகித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற உள்ளார் கிரேம் ஸ்மித்.
இது நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு-www.nanparkal.com
2002ம் ஆண்டு சரவதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகிய ஸ்மித் குறுகிய காலத்திலே அதாவது 2003ம் ஆண்டு உலகக்கிண்ணத்தின் பிறகு ஷேன் பொலக் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் தென்னாபிரிக்க அணியின் கேப்டனாக நியமிக்க பட்டார். அப்போது அவருக்கு வயது 22 தான். அதுவரை 8 டெஸ்ட் போட்டிகளிலும் 22 ஒருநாள் போட்டிகளிலும் மாத்திரமே விளையாடியிருந்தார்.
இது நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு-www.nanparkal.com
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் அசைக்கமுடியாத தலைவராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ஸ்மித் சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாபிரிக்க அணியை தன் அற்புதமான தலைமைத்துவத்தால் தலைநிமிர வைத்துக்கொண்டு இருக்கின்றார்.இவரது தலைமையில் தென்ன்னாபிரிக்க அணி குவித்த வெற்றிகள் ஏராளம்
இருபது ஒவர் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் விலகிய ஸ்மித் கடந்த உலகக்கிண்ண போட்டிகளின் பின் ஒரு நாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார் ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் ஸ்மித்தே கேப்டனாக இருக்கின்றார்.
இது நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு-www.nanparkal.com
இதுவரை தென்னாபிரிக்க அணிசார்பாக 106 டெஸ்ட் போட்டிகளிலும் உலகலெவன் அணிசார்பாக ஒரு டெஸ்ட் போட்டியிலும் மொத்தமாக 107 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.இதில் தென்னாபிரிக்க சார்பாக விளையாடிய 106 போட்டிகளில் 98 போட்டிகளுக்கு தென்னாபிரிக்க அணிக்கு தலைமைதாங்கியுள்ளார்.
இது நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு-www.nanparkal.com
ஆஸ்ரேலிய அணிக்கு எதிராக உலக அணிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் அடங்கிய உலகலெவன் அணி மோதிய போட்டியில் உலகலெவன் அணிக்கு கேப்டனாக செயல் பட்டவர் ஸ்மித் எனவே தென்னாபிரிக்க அணிக்கு 98 போட்டிகளிலும் உலக லெவன் அணிக்கு ஒரு போட்டியிலும் ஸ்மித் கேப்டனாக செயல் பட்டுள்ளார் எல்லாம் சேர்த்து இதுவரை 99டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆரம்பம் ஆக இருக்கும் முதல் டெஸ்ட் அவர் கேப்டனாக களம் இறங்கும் 100வது டெஸ்ட் போட்டியாகும் இப்படி ஒரு அரியசாதனையை படைக்கும் முதல் வீரர் ஸ்மித்.
இது நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு-www.nanparkal.com
கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகும் எல்லா வீரர்களுக்கும் 100 டெஸ்ட்போட்டிகளில் விளையாடும் வாய்பு கிடைப்பது இல்லை பல பிரபல வீரரகள் கூட 100டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இல்லை.குறிப்பிட்ட அளவான வீரரகள் மாத்திரமே 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர்.இப்படி இருக்கும் போது 100 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படுவது என்பது ஒரு அரிய சாதனைதானே.ஸ்மித்தின் இந்த சாதனை எதிர்காலத்தில் ஒரு கேப்டனால முறியடிக்க படும் என்பது எந்தளவு சாத்தியமாகும் என்று தெரியவில்லை ஆனால் மிக நீண்டகாலத்துக்கு இவரது இந்த சாதனை கிரிக்கெட் உலகில் நிலைத்து நிற்கும்.
தனது 100வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ள ஸ்மித் கேப்டனாக களம் இறங்கும் 100வது டெஸ்ட்டிலும் சதம் அடிக்கும் பட்சத்தில் மேலும் ஒரு பெருமை அவருக்கு கிடைக்கும் பொறுத்திருந்து பார்போம் என்ன நடக்குது என்று இதில் இன்னும் ஒரு சிறப்பு அம்சம் போட்டி ஆரம்பம் ஆகும் அன்று ஸ்மித்தின் 32வது பிறந்த நாளும் ஆகும்.
இது நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு-www.nanparkal.com
இதையொட்டி, இந்த ஆட்டத்தின்போது ஸ்மித்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளதாம்
பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்த இந்த போட்டியை ரசிக்க ஒரு ஸ்மித் ரசிகனாக காத்திருக்கின்றேன் வாழ்த்துக்கள் ஸ்மித்.
|
2 comments:
சிமித் தை கப்டன் ஆக்கிய போது யார்டா இவன் என அதிசயித்தேன் அதன் பின்னர்தன் அவரின் விஸ்வரூபம் தெரிந்தது.. எனக்கு பிடித்த வீரர்களில் சிமித் எபோதும் இருப்பவர்.
@சாய் பிரசாத்
நன்றி நண்பரே
Post a Comment