Wednesday, January 09, 2013

சச்சின் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?

தலைப்புக்கு விளக்கம் பதிவின் இறுதியில் சொல்கின்றேன்.கடந்த ஆண்டில் பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் கிரிக்கெட் உலகில் இருந்து விடைபெற்று இருந்தார்கள்.அதில் ஒரு நாள் போட்டிகளில் இருந்து மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் ஒய்வு பல சச்சின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் இது எதிர்பார்க்க பட்ட ஒன்றுதான் அண்மைக்காலமாக சச்சின் துடுப்பாட்டத்தில் தடுமாறிவருகின்றார் இந்த நிலையில் சச்சின் ஒய்வு பெறவேண்டும் என்ற கோரிக்கை முன்னால் வீரர்கள் உட்பட பலரின் கருத்தாக இருந்தது.

இந்த நிலையில் சச்சின் ஒரு முடிவை எடுக்கவேண்டிய நெருக்கடி.ஆனால் தற்போது 194 டெஸ் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் முழுவதுமாக கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லிவிட்டால் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற அறிய சாதனை அவருக்கு கிடைக்காமல் போய்விடும் அதுக்காக சச்சின் சாதனைக்காக விளையாடுகின்றார் என்று சொல்ல வரவில்லை.இனி வரும் காலத்தில் ஒரு வீரர 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது இலகுவானது இல்லை இருபது ஒவர் போட்டிகளின் வளர்ச்சியினால் டெஸ்ட் போட்டி சுவாரஸ்யம் குறைந்து வரும் காலம் இது.எனவே இப்படியான அரியசாதனைகள் நிச்சயம் படைக்கப்பட வேண்டும் என்பதுவே சச்சின் ரசிகர் அல்லாதவர்களினதும் எதிர்ப்பார்ப்பாக இருக்கும்.

ஒரு நாள் போட்டிகளில் அன்மைக்காலமாக சச்சின் பெரியளவு கலந்துகொள்வது இல்லை.சச்சினாக விரும்பி ஒய்வு கேட்பார் இல்லை தேர்வாளர்களே அவருக்கு சில போட்டித்தொடர்களில் ஒய்வை வழங்குவாகள் இப்படித்தான் இருந்தது சச்சினின் அண்மைக்கால ஒரு நாள் போட்டிகள்.


இதனால் ஒரு நாள் போட்டிகளில் இருந்து விலகுவது அவருக்கு பெரிய விடயமாக இருந்திருக்காது. எனவே அதில் இருந்து ஒய்வை அறிவித்ததன் மூலம் சச்சின் ஒய்வு பெறவேண்டும் என்று சொன்னவர்களின் வாய்களை தற்காலிகமாக சச்சின் மூடியுள்ளார்.

ஆனால் கிரிகெட்டில் பல சாதனைகளை படைத்தவரை இறுதிப்போட்டியில் களத்தில் இருந்து பிரியாவிடை கொடுக்கமுடியாத மன வருத்தம் அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் இருந்திருக்கும் சச்சினுக்கு இருந்திருக்கும்.கடந்த உலகக்கிண்ணத்தை இந்திய அணி வென்ற போதே சச்சின் இந்த முடிவை அறிவித்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.ஆனால் அவர் அதை செய்யவில்லை விளைவு வீட்டில் இருந்து ஒய்வை அறிவிக்கவேண்டிய நிலை.

அடுத்த வரும் ஆஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சச்சின் என்ன செய்யப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பு எல்லோறிடமும் இருக்கு பொறுத்திருந்து பார்ப்போம் சச்சின் என்ன செய்யப்போகின்றார் என்று.


எந்த ஒரு விடயத்துக்கும் ஒரு முடிவு இருக்கின்றது அது நடந்தே தீரும் கிரிக்கெட் என்றால் பல ஜாம்பவான்கள் தோன்றுவது ஒய்வு பெருவதும் சகஜமான ஒன்றே.பல ஜாம்பவான்கள் தங்கள் கடைசி கால கிரிக்கெட் வாழ்கையில்  அணியில் இருந்து நீக்கப்பட்டு ஓய்வு அறிவித்த சந்தர்பங்கள் நிறையவே உண்டு.அப்படி ஒரு நிலை சச்சினுக்கு வரக்கூடாது.அது அவரது புகழை அவரே காலிபண்ணியதாக மாறிவிடும்.பார்போம் அடுத்த அடுத்த தொடர்களில் சச்சின் என்ன செய்யப்போகின்றார் என்று.

எது எப்படியே ஒரு கிரிக்கெட் ரசிகனாக அவர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரராக சாதனை படைக்கவேண்டும் எனப்தே என் விருப்பம் பல ரசிகர்களின் விருப்பமும் இதுவாகத்தான் இருக்கும்.


பல கிரிக்கெட் ரசிகர்களின் அபிமான நாயகன் கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சினின் சாதனைகளை இனி ஒருவர் நெருங்குவது இலகுவானது இல்லை சச்சினை போலவே 16 வயதில் அறிமுகமாகி பல ஆண்டுகள் சிறப்பாக விளையாடினால் தான் இன்னும் ஒருவர் நெருங்கி வரலாம் ஆனால் அப்படி எல்லோறாலும் சாதனை படைத்துவிட முடியாது.

பாகிஸ்தானின் அப்ரிடி கூட 16 வயதுதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர்தான் அவரும் பல சாதனைகளை படைத்துள்ளார்தான் ஆனால் சச்சின் அளவுக்கு அவர் சாதனைகள் படைக்கவில்லை எனவே சின்ன வயதில் அறிமுகம் ஆகி அதிக ஆண்டுகள் விளையாடினாலும் சச்சினின் சாதனைகளை நெருங்குவது அவ்வளவு இலகுவானது இல்லை சச்சின் கிரிக்கெட்டுக்காகவே பிறந்தவர்.


நான் சச்சினின் ரசிகன் கிடையாது.ஆனால் ஒரு கிரிக்கெட் ரசிகனாக அவர் 190 ரன்னில்இருக்கும் போது 200 அடிக்கவேண்டும் என மனம் நினைக்கும்,சச்சினுக்காக இந்திய அணி உலகப்கோப்பையை வெல்லவேண்டும் என்று நினைத்த ரசிகர்களில் நானும் ஒருவன்.

1990க்கு முதல் அறிமுகமான வீரர்களில் இன்னும் விளையாடிக்கொண்டு இருப்பவர் சச்சின் மாத்திரமே அவருடன் அறிமுகமாகிய ஏன் அவருக்கு பின் பல ஆண்டுகள் கழித்து அறிமுகம் ஆகியவர்கள் கூட ஒய்வு பெற்றுவிட்டனர் ஆனால் சச்சின் இன்னும் விளையாடிக்கொண்டு இருக்கின்றார் என்றால் அதுதான் அவர் கிரிக்கெட் மீது வைத்திருக்கும் காதல் அந்த தீராத கிரிக்கெட் காதல்தான் அவரை இன்னும் உந்தவேகத்துடன் விளையாட வைக்கின்றது.

ஆனால் அவர் சிறப்பான பார்மில் இருக்கும் போதே கெளரவமாக விலகி இளையவர்களுக்கு வழிவிடவேண்டும்.ஒரு நாள் போட்டிகளை போல அவரது ஒய்வு வீட்டில் இருந்து அறிவிக்காமல்.அவரது கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியை களத்தில் காணவேண்டும் என்பதே ஒவ்வொறு கிரிக்கெட் ரசிகனினது எதிர்பார்பாகும்.பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குது என்று.

சச்சின் காலத்தில் நாம் எல்லாம் கிரிக்கெட் ரசிகர்களாக இருப்பதே நமக்கு பெருமைதான்.

தலைப்பு சச்சின் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? ஆம் கிரிக்கெட்டை பொருத்தவரை நிச்சயம் சச்சின் பெரிய அப்பாடக்கர்தான்.



Post Comment

1 comments:

”தளிர் சுரேஷ்” said...

நல்ல அலசல்! எல்லாவற்றிர்கும் ஒரு முடிவு உண்டு! சச்சினுக்கும் அது உண்டு!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails