Monday, June 10, 2013

நான் எழுத நினைத்த காதல் கடிதம்-(பரிசுப்போட்டிக்கான பதிவு)


எழுத மறந்த இல்லை எழுதமுடியாமல் போன காதல் கடிதம் என்ற தலைப்பில் பதிவர் சீனு அவர்கள் ஒரு போட்டி ஒன்றை அறிவித்து இருக்கின்றார்.அட நல்லா இருக்கே நானும் கலந்துகொள்வோம் என்று நினைத்தால் 24 வயசாகிடுச்சி இதுவரை எவளுக்கும் காதல் கடிதம் எழுதிய அனுபவம் இல்லை.சோ எப்படி ஆரம்பிப்பது எப்படி எழுதுவது என்று புரியல ஆனாலும் சரி போட்டிதானே ஒரு காதல் கடிதத்தை எழுதிப்பார்ப்போம் என்று நினைத்தேன்


போட்டிக்கு எழுதும் கடிதத்தை பதிவராக இருந்தால் அவர்கள் தளத்தில் வெளியிடலாம் என்று போட்டி விதிமுறை இருப்பதால் எனது நண்பர்கள் தளத்தில் இதோ நான் ஒரு காதல் கடிதம் எழுதலாம் என்று இருக்கேன் ஆத்தி என்னான்னு எழுதப்போறேனோ தெரியல 

முன்ன பின்ன செத்தாத்தான் சுடுகாடு தெரியும்பாங்க

என் வாழ்நாளில் நான் எழுதும் முதல் காதல் கடிதம் இதுதான் ஸ்டாட் மியூசிக்*********************************************************************************
ஹாய்
பிரியா நல்லா இருக்கீங்களா?அன்புள்ள என்று குறிப்பிடமுடியாமைக்கு மன்னிக்கவும் உங்களை அப்படி அழைப்பதற்குறிய தகுதி உடையவனாக மாற ஆசையிலே இந்தக்கடிதம்.

உங்களிடம் நிறைய பேசவேண்டும் என்று நினைப்பேன் ஆனால் உங்களை பார்த்தால் பேச்சுவராது உடல் படபடக்கும்,குளிரிலும் வியர்க்கும் சப்தநாடிகளும் ஒடுங்கிப்போய்விடும் அதனால் என் அன்பை எல்லாம் எழுத்தில் சொல்கின்றேன். என் எழுத்திற்கு உயிர் இல்லை எனவே மனசை அதனால் பிரதிபலிக்கமுடியுமா என்று எனக்கு தெரியவில்லை.ஆனால் அதில் உங்களை பற்றி எழுதுவதால் அவை உயிர்பெற்றாலும் ஆச்சரியம் இல்லை.

2001 ம் ஆண்டுதான் தேவதைகளும் மண்ணில் வாழ்கின்றார்கள் என்று எனக்கு தெரிந்தவந்த காலம்.அதுவரையில் கதைகளில் மட்டுமே தேவதைகள் பற்றி படித்திருக்கின்றேன்.ஆனால் உங்களை பார்த்த அந்த நொடியில் உணர்ந்துகொண்டேன் தேவதைகளும் மண்ணில் வசிப்பது கற்பனைகள் இல்லை நிஜம் என்று

எனக்கு உங்கள் வீட்டு கண்ணாடி மேல் பொறாமை பிறகு வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத ஒரு பேரழகியை அது தினமும் தரிசிக்கின்றதே பொறாமை வராதா அதன் மேல்.கவனம் பிரியா உயிர் அற்ற அந்தக்கண்ணாடிக்கு உயிர்வந்துவிடப்போகின்றது அப்பறம் உங்களை அதுவும் நேசிக்கதொடங்கிவிடும்.எனக்கு  ஒரு போட்டியாளன் உருவாகிவிடப்போகின்றான்.

வெள்ளை நிற உடையில் நீங்கள் பள்ளிக்கு வரும் அழகை எப்படி சொல்வது.பொதுவாக பெண்கள் நேர்உச்சி பிரித்துத்தான் தலை சீவுவார்கள்,ஆனால் நீங்கள் சைட் உச்சி பிரித்து தலைசீவிவருவீர்கள்,பொட்டுவைக்காத உங்கள் நெற்றி,காதோரத்தில் விழும் முடி என உங்கள் ஒவ்வொறு அசைவையும் ரசிப்பதால் நானும் ரசனையாளன் ஆனேன்.

உங்கள் அழகை வர்ணித்து நிறைய எழுதனும் என்று ஆசை ஆனால் நீங்கள் வர்ணனைக்குள் உள்ளடக்கமுடியாத பேரழகி என்பதால் உங்களை வர்ணிக்கும் திறன் என்னிடம் இல்லை.

உங்கள் ஒரு பார்வைக்காக எப்போதும் ஏங்கும் மனசு. நீங்கள் ஒரு பார்வை பார்த்ததும் அதன் சக்தியை தாங்க முடியாமல் இதயம் கூட துடிப்பதை ஒரு கணம் நிறுத்தியதை போல உணருவேன் மறுபடியும் இவள் பார்க்ககூடாது அந்த பார்வையை தாங்கமுடியாது என்று நினைப்பேன். ஆனால் மறுநிமிடமே மீண்டும் உங்கள் பார்வைக்காக மனசு ஏங்கும்

எத்தனையோ முறை உங்களிடம் என் காதலை சொல்லிவிடவேண்டும் என்று நினைப்பேன் ஆனால் பார்வையாலே ஒரு மனிதனின் பேச்சுத்திறனை கட்டுப்படுத்தும் காந்த சக்தி படைத்த உங்கள் விழிகளின் பார்வையினால் என் மொழிகள் ஊமையாகிவிடும்.

காதல் என்பது சுகமான சுமை,இன்பமான துன்பம்,ரணமான சந்தோசம்,என்று உணரவைத்தது உங்களை பார்க்கின்ற பொழுதுகளில் தான்.

பிரியா என்ற ஒரு ஜந்து அடி ரோஜாப்பூ என் முன்னே நடமாடுக்கின்றது அந்த ரோஜாப்பூவின் கூந்தலில் ஒரு சின்ன ரோஜாப்பூ உயிரியலின் விந்தையா இது இல்லை இல்லை எல்லாம் காதல் செய்யும் விந்தை.

உங்கள் கூந்தலில் உள்ள ரோஜாவுக்கு கூட உங்களில் காதல். அதனால் தான் ஒரு நாள் ஆயுளாக இருந்தாலும் அந்த பூக்கள் மறுபடியும் மறுபடியும் பூத்துகுலுங்கி தினம் தினம் உங்கள் கூந்தலில் வசிக்கவே ரோஜாக்கள்  மலர்கின்றன.

ஒரு நாள் ஆயுள் உள்ள பூவிற்கே உங்களில் அவ்வளவு காதல் எனில் சராசரி ஆறுபது ஆண்டுகள் வாழும் மனிதபிறவி எனக்கு எவ்வளவு காதல் இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.ஆனால் உங்கள் அன்பு கிடைக்கும் எனில் அறுபது ஆண்டுகள் எதற்கு அறுபது நொடி உங்களுடன் வாழ்ந்தால் கூட என் வாழ்வு அர்தமாகிவிடும்.உங்கள் அன்பு கிடைக்காவிட்டால் உதிர்ந்து மீண்டும் மலரும் ரோஜாப்பூ போல நானும் மீண்டும் மீண்டும் மலர்வேன்.

என் மொழிகள்,என் விழிகள்,என் இதயம்,மூளை,நாடி,நரம்பு,என அத்தனையும் மொத்தமாக உங்களிடன் சரணடைந்துவிட்டது

ஒவ்வொறு நாள் காலையிலும் பாடசாலைக்கு நான் சோர்ந்து போய்வருகின்றேன் காரணம் ஒவ்வொறு நொடியும் உங்கள் விம்பம் கண்முன்னே வந்து போவதால் இரவுகளில் என் தூக்கம் தொலைந்து போகின்றது.என் தூக்கத்தை தொலைக்க ஒவ்வொறு நொடியும் நீங்கள் என் முன்னே தோன்றுவதால் நீங்களும் தூங்குவது இல்லை போல.ஏன் இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் நீங்களும் தூங்காமல் என்னையும் தூங்கவிடாமல்.
கனவுகளில் இந்த காதல் கபடி ஏன் பிரியா?

என்னடா லூசுமாதிரி ஏதோதோ எழுதுகின்றான் என்று நினைக்கிறீங்களா உங்களை பார்த அந்த நிமிடம் என் மூளை அதன் செயல்பாடுகளை குறைத்துக்கொண்டு உங்கள் உருவத்தை மட்டும் தன்னுள் பதித்துவைத்துக்கொண்டது,இதயம் பிரியா பிரியா என்றே சொல்லிக்கொண்டு இருக்கின்றது.இப்ப சொல்லுங்கள் நான் லூசுமாதிரி உளராமல் பிறகு எப்படி உளருவது.

என் உணர்வுகளை பறித்து கொண்டவளே,ஏதோ ஏதோ சொல்ல நினைக்கின்றது உன்னிடம் எனது நெஞ்சம் ஆனால் சொல்லமுடிவதோ மிகவும் கொஞ்சம்,நீ இல்லாத பொழுதுகளை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை உன் கண்களில் தொலைந்து போன என்னை மீண்டும் தந்துவிடு,இல்லையே என்னை ஒரேயடியாக கொன்றுவிடு என்னால் தாங்கமுடியவில்லை இந்த நரகவேதனையை.

இப்படி ஒராயிரம் வார்த்தைகள் மனசில் கொட்டிக்கிடக்கின்றது உன்னிடம் பேசவேண்டும் என்று ஆனால் நேரில் I Love you என்று அந்த வார்த்தையை மட்டும் என்னால் சொல்லமுடியவில்லை அதனால் இந்தக்கடிதம் இதில் கூட நான் அதிகமாக உளரிக் கொட்டியுள்ளேன் என் காதல் பற்றி உருப்படியாக ஏதும் சொல்லவில்லை.ஆனால் காதல் என்றாலே உளரல் தானே.அதனால் என் காதல் மனசும் உளரியது அதன் காதலை இந்தக்கடிதம் மூலம்.

உன் நல்ல பதிலை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கும்
உன்.................(புள்ளிக்கோட்டில் என்ன என்று போடுவது என்று தெரியவில்லை என் இதயத்தை காதலால் நிரப்பியது போல அதையும் நீயே நிரப்பிவிடு)

அன்புடன்
ராஜ்
3-12-2004

************************************************************************
(கடிதத்தில் வரும் பெயர் உட்பட இந்தக்கடிதம் முழுவதும் கற்பனையே)


இந்த கடிதத்துக்கு போட்டியில் பரிசு கிடைக்குதோ எனக்கு தெரியாது ஆனால்  என்னையும் ஒரு காதல் கடிதம் எழுதவைத்த பதிவர் சீனுவுக்கு நன்றி

இந்தபோட்டி பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள நண்பர் சீனுவின் பதிவை படிக்க இங்கே க்ளிக்-திடம் கொண்டு போராடு-காதல் கடிதம் பரிசுப்போட்டி
Post Comment

61 comments:

ராஜி said...

ஐயோ! என்ன ராஜ் கடிதம் எழுதி இப்படி ரசிக்குற மாதிரி எழுதி இருக்கியே! எனக்கு மைல்டா டவுட் வர ஆர்ம்பிச்சிட்டுது. நான் பரிசை வெல்வேனான்னு?

Anonymous said...

முதல் லெட்டரா?இது நம்ப முடியலயே பழுத்த அனுபவசாலி போலயெல்லோ இருக்கு

K.s.s.Rajh said...

@ராஜி

ஹி.ஹி.ஹி.ஹி.........நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@டினேஷ் சுந்தர்

உண்மையாவே என் வாழ்நாளில் நான் எழுதிய முதல் காதல் கடிதம் இதுதான் அதுவும் இந்த போட்டிக்காகத்தான் நண்பா

நன்றி

ஸ்கூல் பையன் said...

வணக்கம் ராஜ்.... அருமையான காதல் கடிதம்... நிறைகள் நிறையவே இருக்கின்றன.... குறையென்று பார்த்தால் கடிதத்தின் முதல் பாதியில் பிரியாவை வாங்க போங்க என்கிறீஇர்கள். இரண்டாம் பாதியில் ஒருமையில் அழைக்கிறீர்கள்..... கொஞ்ச எழுத்துப்பிழைகள் (அதற்கு மதிப்பெண் குறைப்பதில்லை என்றாலும்) அருமை.. நான் பின்வாங்கிக்கொள்ளலாமா என்று தோன்றுகிறது..... வாழ்த்துக்கள்....

K.s.s.Rajh said...

@ஸ்கூல் பையன்

காதல் கடிதம் என்றால் படபடப்பு இருக்கும் தானே
அதனால் ஆரம்பத்தில் கொஞ்சம் படபடப்புடன் எழுத ஆரம்பித்தால் வாங்க என்றும் எழுதிக்கொண்டு போகும் போது கொஞ்சம் காதல் பீலிங்ஸ் அதிகமாகியதான் ஒருமையிலும் எழுதினால் நன்றாக இருக்கும் என்று அப்படி ஒரு ஆங்கில்ல நினைச்சு எழுதினேன்

நன்றி நண்பரே
அட சும்மா எழுதிப்பாருங்க சிறப்பாக வரும்

T.N.MURALIDHARAN said...

முதல் போட்டியாளராக களத்தில் குதித்திருக்கிறீர்கள். அசத்தல் காதல் கடிதம்தான்
வாழ்த்துக்கள் ராஜ்.

மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ said...

24 வயசாகிடுச்சி இதுவரை எவளுக்கும் காதல் கடிதம் எழுதிய அனுபவம் இல்லை. ///

இதனை நான் பயங்கரமாக நம்பிவிட்டேன் :)

K.s.s.Rajh said...

@T.N.MURALIDHARAN

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ

அட உண்மைதான் மச்சான் சார்
இதுல என்ன இருக்கு உண்மை என்றால் ஒத்துக்கொள்ள

ஹாரி R. said...

முதல் பாலே பவுண்டரி அடிச்சிட்டிங்க.. வாழ்த்துக்கள்.. நல்லாருக்கு..


தனிமரம் said...

முதலில் போட்டியில் பரிசுகிடைக்க வாழ்த்துக்கள் கடிதம் சுவையாக இருக்கின்றது பிரியாவுக்கு எழுதியதால் போலும்:))) எனக்கே பயம் வருகின்ற்து நானும் எப்படி கடிதம் எழுதுவது என்று )))

திண்டுக்கல் தனபாலன் said...

தாதா off side-ல் அடிக்கும் அடியைப் போல அட்டகாசம்...

போட்டி பலமாத்தான் இருக்கும் போல...!

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

சக்கர கட்டி said...

நமக்கும் இந்த மாதிரி கடிதம் எழுதுன அனுபவம்லாம் இல்லை அதான் இந்த போட்டில கலந்து என்னத்த எழுதுறதுன்னு தோணவே இல்ல

உங்க கடிதம் சூப்பர் ப்ரியாக்கு அப்பா அனுபல ஆனா இப்ப உங்க சரண்யாக்கு அனுபலாம்ல

K.s.s.Rajh said...

@ஹாரி R.

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@தனிமரம்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@சக்கர கட்டி

அட எனக்கும் இதுதான் முதல் கடிதம் பாஸ் சும்மா ஒரு குத்துமதிப்பா ஆரம்பியுங்க கலக்குங்க வாழ்த்துக்கள்

Subramaniam Yogarasa said...

வணக்கம்,ராஜ்!///நல்லாயிருக்கு.தேர்ந்த ஒரு காதலன் எழுதியது போலவே!வாழ்த்துக்கள்,பரிசு பெற!!!

Subramaniam Yogarasa said...


சக்கர கட்டி said...உங்க கடிதம் சூப்பர் ப்ரியா அப்பாக்கு அனுபல ///ப்ரியா அப்பாக்கு அனுப்புறதா?ஹையோ!!,ஹையோ!!!!

K.s.s.Rajh said...

@Subramaniam Yogarasa

நன்றி ஜயா

ரூபக் ராம் said...

போட்டிக்கு உங்கள் கடிதம் அருமையான தொடக்கம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Sasi Kala said...

வர்ணணையில் அசத்திட்டிங்க. போட்டியில வெற்ற பெற வாழ்த்துக்கள்.

K.s.s.Rajh said...

@ரூபக் ராம்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@Sasi Kala

நன்றி அக்கா

Prem s said...

2004 என்று போட்டு இருக்கிறதாலே உண்மையான கடிதம் என நினைக்கிறேன்

வாங்க போங்க கொஞ்சம் இடிக்கிறது ..

athira said...

Raj மின்னி முழக்கிட்டீங்க.. பரிசு உங்களுக்கே..

athira said...

(கடிதத்தில் வரும் பெயர் உட்பட, இக்கடிதம் முழுவதும் கற்பனையே..

/////

////
அன்புடன்
ராஜ்
3-12-2004///


எங்கயோ இடிக்குதே:)))

அப்பாதுரை said...

களத்தில் குதித்த முதல் காதலர் = துணிச்சலைப் பாராட்டுகிறேன்.
இனிமையான கடிதம். 
வாங்க  போங்கவை மாத்திடுங்களேன்.. அல்லது உங்களை இனி ஒருமையில் அழைக்க துடிக்குது மனம்னு நைசா ஒரு வரி சேர்த்துடலாம்.. :)
வாழ்த்துக்கள். 

Tamilraja k said...

அருமை நண்பரே அது என்ன கீழே ஒரு தேதி இருக்கிறது...?

r.v.saravanan said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

தொழிற்களம் குழு said...

//புள்ளியிட்ட இடத்தை நீயே நிரப்பிக்கொள்///

ரசிக்கும்படியான காதல் வார்த்தைகள்...

வாழ்த்துகள்!!
தொழிற்களம் வாசியுங்கள்

சீனு said...

காதல் என்பதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் மிக அருமை.. வார்த்தைகள் கவர்கின்றன.. அப்பாதுரை சார் சொன்ன கருத்துக்கள் மிகப் பொருத்தம்...

போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்

இரவின் புன்னகை said...

முதல் கடிதம் என்பதை நம்பவே இயலவில்லை... அழகாக எழுதியுள்ளீர்கள்... பரிசு பெற வாழ்த்துகள்...

ஹிஷாலீ said...

தெரியாது தெரியாது என்று இவ்வளவு அழகாக எழுதியுள்ளீர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Tamizhmuhil Prakasam said...

காதலைப் பற்றிய வருணனையும்,காதலியைப் பற்றிய வருணனையும் அருமை.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் !!!

K.s.s.Rajh said...

@Prem s

2004 இல் எழுத நினைத்த கடிதம் என்பதால் அந்த திகதி ஒருவேளை எழுதியிருந்தால் இப்படி எழுதியிருப்பேனோ என்னவோ

K.s.s.Rajh said...

@athira

ஹி.ஹி.ஹி.ஹி.........நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@அப்பாதுரை

இல்லை பாஸ் பதட்டமாக இருக்கும் போது வாங்க போங்க என்று அழைப்பதாகவும் கொஞ்சம் வரிகள் எழுதியதும் ஒரு உரிமையில் அப்படி ஒருமையில் அழைப்பதாகவே நான் அப்படி குறிப்பிட்டேன் நன்றி நண்பா

K.s.s.Rajh said...

@Tamilraja k

சும்மா ஒரு கற்பனை திகதிதான் நன்றி நண்பா

K.s.s.Rajh said...

@r.v.saravanan

நன்றி நண்பா

K.s.s.Rajh said...

@தொழிற்களம் குழு

நன்றி

K.s.s.Rajh said...

@சீனு

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@இரவின் புன்னகை

நன்றி சகோ

K.s.s.Rajh said...

@ஹிஷாலீ

நன்றி சகோ

K.s.s.Rajh said...

@Tamizhmuhil Prakasam

நன்றி சகோ

K.s.s.Rajh said...

ஆரம்பத்தில் வாங்க போங்க என்று கடிதம் ஆரம்பித்து முடிவில் ஒருமையில் அழைபதாக் இருப்பது கடிதத்தில் ஒரு குறை என நண்பர்கள் சுட்டிக்காடியிருந்தீர்கள்.நான் நினைத்து எழுதியது என்ன என்றால் காதல் கடிதம் எழுதத்தொடங்கும் போது பதட்டமாக இருக்கும் போது வாங்க போங்க என்று அழைப்பதாகவும் கொஞ்சம் வரிகள் எழுதியதும் பதட்டம் சற்று போய் ஒரு உரிமையில் அப்படி ஒருமையில் அழைப்பதாகவே நான் அப்படி குறிப்பிட்டேன்.

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

Manimaran said...


அழகான எழுத்து நடையில உணர்ச்சிகளை உள்வாங்கி எழுதியிருக்கீங்க பாஸ்... நானும் ஒரு சக போட்டியாளன் என்பதால் உங்கள் மீது பொறாமை வந்து விட்டது.நான் என்னத்த எழுதப் போறேனோ... ;-)

ஸ்ரீராம். said...

முதல் காதலின் பதட்டத்தை வெளிப்படுத்துகிறது கவிதை. உயரமான ஒரு பள்ளி மாணவி ஒற்றை ரோஜா சூடிய தலையுடன் என் கண்ணெதிரே....! வாழ்த்துகள் K.S.S ராஜ்!

கிரேஸ் said...

நல்ல கடிதம்..அசத்திட்டீங்க ..வாங்க போங்க எனக்கும் சரியாகவே படுகிறது..ஒருமையில் அழைக்கலாமா என்ற தயக்கத்தைக் காட்டுகிறது..சில உளறல்களும் சரியாய் அமைந்துவிட்டது..உண்மையான காதல் கடிதம் தானோ :) ..வெற்றிபெற வாழ்த்துகள்!
எனக்கு இப்பொழுது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது..பார்ப்போம் :)

கோவை ஆவி said...

ராஜ், கற்பனை கடிதம் மாதிரி தெரியலே.. அவ்வளவு உணர்வுப்பூர்வமா இருந்தது.. வெற்றி பெற வாழ்த்துகள்..

K.s.s.Rajh said...

@Manimaran

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ஸ்ரீராம்.

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@கிரேஸ்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@கோவை ஆவி

நன்றி பாஸ்

பால கணேஷ் said...

ம்ம்ம்... காதல் உளறல்கள்! கவிதைத்தனமாகவே வெளிப்பட்டிருக்கு ராஜ்!

ஜீவன்சுப்பு said...

தெரியல தெரியலன்னு சொல்லியே இவ்வளவு தெளிவா உளரிகொட்டீருக்கிங்களே ...! சூப்பரு ...!

Ranjani Narayanan said...

உங்கள் உளறலிலும் ஒரு சுவை இருக்கிறது. அது உங்கள் காதலிக்குப் புரிந்தால் காதல் வெற்றி தான்!

காதல் கடிதம் எழுதும் பதட்டத்தில் ஐந்து அடி ரோஜா என்பது ஜந்து அடியாக மாறிவிட்டது, பாருங்கள்!

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

பாலன் said...

சூப்பர் நண்பா

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம்... வாழ்த்துக்கள்...

Visit : http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_6.html

cheena (சீனா) said...

அன்பின் ராஜ் - வலைச்சரம் மூலமாக வந்தேன் - நல்லதொரு காதல் கடிதம் - வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails