Saturday, June 01, 2013

சுவடுகள் தேடிய பயணம்-2

என்ன வந்து வந்துனு மழுப்புகின்றாய் சொல்லு விஷ்வா எங்க போயிருந்த ஒரு கிழமையா

அதை சொல்லமுடியாது லக்சி ஆனால் அதுக்கு நீதான் காரணம்.நீ என்னை காதலிக்காட்டியும் பரவாயில்லை அவமானப் படுத்தாமல் விட்டு இருக்கலாம் என் கூட பேசவே மாட்டன் என்றியே மனம் வெறுத்துப்போய்த்தான் நான் போனேன் இனிமேல் உன் முகத்தை கூட பார்க்ககூடாதுனு ஆனால் அங்க போய் பார்த்த பிறகுதான் எல்லாம் எனக்கு புரிந்தது.எவ்வளவு சுயநலவாதிகளாக நாம் வாழ்கின்றோம் என்று.
என்னில் இருந்த சுயநலத்தை புரியவைத்து அதை என்னிடம் இல்லாமல் செய்ததற்கு தெரிந்தோ தெரியாமலோ நீ காரணம் ஆகிவிட்டாய் நன்றி லக்சி.


இனிமேல் யாரையும் காயப்படுத்தாதே.நாம் அன்பு வைக்கும் நபர்களே நம்மை காயப்படுத்தும் போது அந்த வலி மிகவும் கொடியது.

அப்ப ஏண்டா திரும்பி வந்த?.எங்க போனாய் என்றும் சொல்ல மாட்டன் என்கிற என்னை ஏன் இப்படி இம்சிக்கிற என்று சற்று கோபத்துடன் கேட்டாள் லக்சி

இல்லை லக்சி யாரிடமும் சொல்லாமல் போய்விட்டேன்.நீ என்னை நிராகரித்தனால் நான் போய்விட்டேன் என்று யாரும் உன் மீது பழிசொல்லக்கூடாது. உண்மை அதுவென்றாலும் நான் நேசித்தவள் நீ.உன் மீது யாரும் குற்றம் சொல்லக்கூடாது.அதான் பாடசாலையில் இருந்து விலகுவதாக அதிபரிடம் கடிதம்(டிசி) வாங்கிக்கொண்டு போவம் என்றுதிரும்பி வந்தேன்.எல்லோறும் இவன் வேறு பாடசாலைக்கு போகப்போகின்றான் என்று நினைப்பார்கள் அல்லவா


ஏண்டா மறுபடியும் மறுபடியும் என்னை சித்திரவதை செய்கிறாய் ப்ளீஸ் விஷ்வா நீ எங்கயும் போகவேணாம்.இங்கே இரு உனக்காக நான் இருக்கேன் எனக்காக நீ இரு இருவரும் படிப்பில் கவனம் செலுத்துவோம் அப்பறம் மேற்படிப்பு அப்பறம் நல்ல வேலை பிறகு திருமணம் செய்துகொள்வோம்.வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்

ஒரு கிழமைக்கு முன் நானும் இப்படி யோசித்துக்கொண்டு இருந்தேன் ஆனால் இந்த ஒரு கிழமை என்னையே எனக்கு புரியவைத்தது.என்னால் இப்ப அப்படி இருக்கமுடியாது அதுக்காக உன்னை மாறச்சொல்லி நான் கேட்கப்போவது இல்லை. நீ நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும்.

என்ன விஷ்வா நான் பேசாமல் நான் உண்டு என் படிப்பு உண்டு என்றுதானே இருந்தேன் நீதனே என் மனசில் காதலை விதைத்தாய் இப்ப நீயே அதை வேண்டாம் என்கிறாயே 

இல்லை லக்சி புரிந்துகொள் ப்ளீஸ் என் காதல் என்றைக்கும் மாறாது ஆனால் இப்ப என்னால் உன்னை ஏற்றுக்கொள்ளமுடியாது அவ்வளவுதான்

போடா நீயும் உன்னுடைய காதலும் நீங்க லவ் பண்ணுறதா சொன்னா உடனே நாங்களும் ஒக்கே சொல்லனும் கொஞ்ச நாள் கழித்து சொன்னா நீங்க ஏற்றுக்கொள்ளமாட்டீங்க உங்களுக்கு எல்லாம் அவசரம்.

உன் காதலும் வேணாம் ஒன்னும் வேணாம் நீ எங்கபோய் தொலைஞ்சால் எனக்கு என்ன? எக்கேடும் கெட்டுப்போ ஆனால் இனிமேல் என் வாழ்நாளில் என் முன்னால் வராத.என்று சற்று உரக்க சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள் லக்சி.

அதுக்கு பிறகு விஷ்வா பாடசாலைக்கு வரவில்லை.காலம் ஒடியது லக்சியின் ஞாபகத்தில் இருந்து அவன் மறைந்து போனான்.நாட்டில் யுத்தம் உக்கிரமடைந்தபடியால் வெளிநாட்டில் இருந்த லக்சியின் அப்பா அவர்களை தன்னுடன் அழைத்துக்கொண்டார்.காலம் யாருக்காகவும் காத்திருக்காமல் ஒடியது
*********************************************************************************
புலம்பேர் தேசம் ஒன்றில் காலை பதினொரு மணி
அந்த திருமண மண்டபம் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது.ஒரே ஒரு தங்கையின் திருமணம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று லக்சியின் அண்ணா மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்து இருந்தார்.

லக்சியின் வருங்கால கணவன் ராம் கம்பியூட்டர் இஞ்சினியராக இருக்கின்றாராம் சின்ன வயதில் இங்கே குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார்கள் நல்ல பையன்,நம்ம லக்சிக்கு பொருத்தமான மாப்பிளை என்று லக்சியின் அப்பா சொந்தக்காரங்களிடம் சொல்லிக்கொண்டு இருந்தார்.

சொந்தங்களின் வாழ்த்து மழையில் ராம்,லக்சி கழுத்தில் தாலி கட்டினார்.ஒரு தேவதையின் திருமணம் 11.30 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.

ஈழத்தில் யுத்தம் நடைபெற்று கொண்டிருந்த ஒரு யுத்தகளத்தில்.அதே நாள்   அதே நேரம் காலை 11.30 
எங்கிருந்தோ வந்த ஒரு துப்பாக்கி சன்னம் விஷ்வாவின் நெஞ்சை துளைத்துக்கொண்டு சென்றது.அந்த நொடி அவன் நினைவுகளில் தாய்,தந்தை உடன் பிறப்புக்கள் வந்துபோனார்கள்,கூடவே லக்சியும் அவள் மேலான காதலும்

வாழ்க்கையில் கடந்து வந்த சுவடுகளை ஒரு நொடியில் மீண்டும் தேடிய அந்த உயிரின் பயணம் அடுத்த நொடி முடிவுற்றது.
(முற்றும்)

படம்-நடிகை தன்ஷிகா,படத்துக்கும் பதிவுக்கும் சம்மந்தம் இல்லை அழகிற்காக சேர்க்கப்பட்டது

முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக்-சுவடுகள் தேடிய பயணம்



Post Comment

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நாம் அன்பு வைப்பவர்களே நம்மை காயப்படுத்தும் போது அந்த வலி மிகவும் கொடியது தான்...

முடிவில் விஷ்வா...!

கதையாகவே இருக்கட்டும்...

Mahesh said...

எதிர்பார்த்தபோது கிடைக்காத அண்பு, பிண்பு எத்தனை முரை க்இடைத்தாலும் அதில் எதிர்பார்த்த சந்தோசம் இருக்காது..

நல்ல கதை அண்ணா...
தொடருங்கள்

தனிமரம் said...

ம்ம்ம் அந்த போன இடம் விஷ்வா இன்னும் மறக்க வில்லைப் போலும் க்தையில்!ம்ம் கதை முடிந்துவிட்டது!சுபம் சுபம் வாலிபக்காதல் தானே!

இளமதி said...

வணக்கம் சகோதரரே! உங்கள் பக்கம் வந்திருக்கின்றேன். கருத்துப்பகிர்வு செய்வது இதுவே முதன்முறை.

நல்ல கதை.2 பகுதியையும் இணைத்தே வாசித்தேன். கதையை நகர்த்தியவிதம் ரசிக்கவைத்தது.
முடிவு மனதில் வலிதான் ஆயினும் அருமை.
வாழ்த்துக்கள்!

சகோ! வலைச்சரத்தில் நீங்கள் கூறிய விடயமொன்றை என் வலைப்பூவில் ilayanila16.blogspot.de/ நான் நடைமுறைப்படுத்தி வருகிறேன்.
முடிந்தால் வந்து பாருங்கள். மகிழ்வுறுவேன். மிக்க நன்றி சகோ!.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails