Saturday, October 26, 2013

இரும்பு மனிதனுக்குள்ளும் ஒரு இதயம்-அடோல்ப் ஹிட்லர்-1

உலகவரலாற்றில் கறைபடிந்த வரலாற்றின் நாயகன் இலட்சக்கணக்கான உயிர்களை காவுவாங்கிய காலன்.கொடுற கொலைகாரன் ஜேர்மனின் முன்னால் சர்வாதிகாரி ஹிட்லர்.இவரது செயல்கள் வரலாற்றில் என்றுமே மன்னிக்கபடமுடியாதவை.ஆனால் ஹிட்டல் ஒரு அசாதாரன திறமைசாலி
அவர் தொட்டது எல்லாம் துலங்கியது அவரது திறமையினாலே மாத்திரமே 



ஹிட்லர் பற்றி இந்த தொடரில் புதுசா நான் ஒன்னும் எழுதப்போவது இல்லை ஏற்கனவே பலர் எழுதிய அவரின் வரலாற்றைத்தான் தொகுத்து என் ஸ்டைலில் எழுதப்போகிறேன் ஆனால் எத்தனை பேர் எழுதினாலும் ஹிட்லர் வரலாற்றின் ஒர் ஆச்சரியகுறி வாருங்கள் அந்த ஆச்சரியகுறி பற்றிய தொடரில் பயணிப்போம்

வெள்ளைத்துணியில் உள்ள கறுப்புக் கரைகளே நம் கண்களை ஈர்க்கும். அதே போன்று, ஹிட்லரின் தவறுகளால், அவரை பற்றிய நினைவுகள் உலக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட போது, அவரின் சாதனைகளும் கூடவே மறக்கப்பட்டுவிட்டன.

1035 பக்கங்கள் கொண்ட ‘அடால்ப் ஹிட்லர்’ என்ற புத்தகத்தை எழுதிய பேராசிரியர் ஜான் டோலேன்ட், “ஹிட்லர் ஆட்சிக்கு வந்த நாலாவது ஆண்டில் எதாவது காரணத்தால் இறந்திருந்தால், உலகமே ஹிட்லரை “ஜெர்மனியின் சரித்தரத்தில் தோன்றிய மிகச் சிறந்த மாமனிதன் என்று பாராட்டியிருக்கும்!” என்று கூறுகிறார்.




சர்வதிகாரிகளின் ஆட்சிக் காலத்தில் ஆபாச அத்துமீறல்கள் அதிகமாகவே இருக்கும்.  ஆனால் ஹிட்லர் அத்தகைய ஆபாசங்களை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.  ஒரு விபசார விடுதி கூட அவரின் ஆட்சிக்காலத்தில் இல்லையாம்


“விபச்சாரம் பிளேக் நோய் போன்றது. சிறிதும் தயவு காட்டாமல் அது அழிக்கப்பட வேண்டும். சமுதாயத்தின் அழுகிப் போன பகுதிகளை நாம் சுத்தப்படுத்த வேண்டும். இலக்கியம், சினிமா, கலை, பத்திரிக்கைகள், சுவரொட்டிகள், கடைகளின் ‘ஷோகேஸ்’கள் அதிலும் ஆபாசம் இருக்க, நான் அனுமதிக்க மாட்டேன்!” என்று எச்சரித்தார் ஹிட்லர்

ஹிட்லர் பதவியேற்ற 1933ல் ஜெர்மனியில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 60 லட்சம். ஆனால் 1936 ல், அதாவது 3 ஆண்டுகளில், ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர் கூட இல்லை என்ற நிலை உருவானது. இந்த சாதனைக்கு காரணம், ஹிட்லரால் தேடிக் கண்டுப்பிடிக்கப்பட்ட ஜால்மர் ஷ்ஹாக்ட் என்ற பொருளாதார ஜீனியஸ் 
ஜால்மர் ஷ்ஹாக்ட் ஒன்றும் பிரபலமான தலைவரில்லை.  ஆயினும் அவரது திறமையை உணர்ந்திருந்த ஹிட்லர் அவரை பொருளாதார அமைச்சராக நியமித்து இத்தகைய சாதனையை புரிந்தார். திறமைக்கு மரியாதை கொடுத்து பதவியை கொடுத்தால் எல்லாம் சாத்தியமாகும் என்பதை ஹிட்லர் நிரூபித்துக்காட்டினார்
முதியவர்களுக்கு பென்ஷன் மற்றும் இலவச வைத்தியம், எல்லோருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்கள் எல்லாம் படுவேகமாக நடைமுறைக்கு வந்தன.
சாமான்யர்களும் காரில் பயணிக்க வேண்டும். அவர்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு கார்கள் தயாரிக்கப்பட வேண்டும். ஒரு காலன் பெட்ரோலுக்கு அது நாற்பது மைல் போக வேண்டும்” என்று Porsche கார் நிறுவனத்தின் அதிபர் ‘பெர்டினான்ட் பொர்ஷ்’-ஐ கூப்பிட்டு சொன்னார் ஹிட்லர். பின் பகுதியில் இஞ்சின் அமைப்புடன் தயாரிக்கப்பட்ட அந்த மினி கார்களுக்கு ‘வோக்ஸ்வேகன்’ என்று பெயரிடப்பட்டது. பிற்காலத்தில் அந்தக் கார்கள் உலகப் புகழ் பெற்றது.
தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு அடையக் கூடாது அன்று ஹிட்லர் சட்டம் கொண்டுவர, அதனால் ஜெர்மனியில் ஓடிய நதிகள் அத்தனையும் படு சுத்தமாக இருந்தது.
பல வலி நிவாரணிகளும், போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து வெளிவர  உதவும் மருந்துகளும், ஹிட்லர்-இன் கடும் முயற்சியால் கண்டுப் பிடிக்கப்பட்டன. ஹைபோதேர்மியா என்னும் உடல் வெப்பத்தை குறைத்திடும் ஒரு நோயிற்கு தீர்வைக் கண்டது ஹிட்லர்-இன் ஜெர்மனிய மருத்துவர்கள் தான். இவ்வாறு மருத்துவத்துறையில் வியத்தகு முன்னேற்றம் அடைந்தது ஜெர்மனி.
ஹிட்லர்-இன் காலத்தில் அவரின் பெரும் முயற்சியால் ஜெர்மனி ராணுவத் தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்திருந்தது. போரில் ஜெர்மனி தோல்வியடைந்த பின் ஜெர்மனியின் ராணுவத்தொழில்நுட்ப வல்லுனர்களையும், விஞ்ஞானிகளையும், அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் பங்குப் போட்டு பிரித்துக் கொண்டனர். என்றும் கூறப்படுக்கின்றது

ஹிட்லர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றப் போது, ஜெர்மனியின் ராணுவ வீரர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் தான். அப்போது, உருப்படியான, நவீனரகத் துப்பாகிகள் கூட ராணுவத்தில் கிடையாது. ஆனால் ஹிட்லர் ஆட்சியேற்ற நான்கே ஆண்டுகளில் ஐரோப்பாவின் மிகப் பிரம்மண்டாமான ‘ஆர்மி’யாக அது மாறியது. ‘நவீன போர் விமானங்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள், டாங்கிகள் கொண்ட அசுர சக்தியாக ஜெர்மனியின் ராணுவம் மாறிய வேகம், உலக வரலாற்றிலேயே அதுவரை நிகழ்ந்திடாத பெரிய ஆச்சரியம்’ என்று உலகப் பெரும் ராணுவ ஆராய்ச்சியாளர்கள் இன்னும் வியந்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஹிட்லரின் மொத்த பன்னிரண்டு கால ஆட்சிக் காலத்தை பார்த்தால் அவரின் தவறுகளே நம் கண் முன்னே விரிந்திருக்கும். ஆனால் அவரின் முதல் ஐந்தாண்டு கால சாதனைகள் மகத்தானவை.ஒருவேளை ஹிட்லர் சர்வாதிகாரப்போக்கில் இருந்து விலகியிருந்தால் அவரது திறமைகளை நல்லவழியில் பயன்படுத்தியிருந்தால் ஜேர்மன் இன்றும் கூட அழிக்கப்படமுடியாத சாம்ராஜியமாக மாறியிருக்கலாம் 
ஒரு திறைமைசாலியின் திறமை சர்வாதிகாரப்போக்கில் பயணித்தது துரதிஸ்டமே 

யூதர்கள் மனிதர்கள் அல்ல.  அழிக்கப் படவேண்டிய விலங்கினங்கள்!’ என்று ஹிட்லரின் அதிகாரிகள் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தனர். 
யூதர்களை அழித்தொழிக்கும் இலாகாவிற்கு தலைவராக பணியாற்றிய ‘ஐக்மன்’ பின்னாளில் கைது செய்யப்பட்டபோது நிருபர்களிடம் கூறியது என்ன தெரியுமா.  ‘ஐம்பது லட்சம் யூதர்களை நாங்கள் கொலை செய்தபோது, இனம்புரியாத ஆழ்ந்த திருப்தி ஏற்பட்டது. மரணதண்டனை கொடுத்தாலும் விஷப் பூச்சிகளை ஒலித்துக் கட்டிய திருப்தியோடு செத்துப் போவேன்’ என்றானாம்.
ஆனால் கொடுற கொலைகாரனாக இருந்தும் கூட  ஹிட்லர் ஏதோ ஒருவகையில் பலரை கவர்ந்திருக்கின்றார் என்றால் அது மிகையாகாது.
இந்த தொடரின் தலைப்பில் பலருக்கு முரண்பாடு இருக்கலாம் ஆனால் என்தான் சர்வாதிகாரியாக இருந்தபோதும் அந்த இரும்பு மனிதனுக்குள்ளும் ஒரு இதயம் இருந்தது அந்த இதயத்தில் இரக்கம் குறைவாக இருந்திருக்கலாம் ஆனால் ஹிட்டருக்கும் ஒரு மனசு இருந்தது அந்த மனசுக்குள்ளும் குடும்ப பாசம்,தாய் மீது அன்பு,சராசரி மனிதனுக்கு வருக்கின்ற காதல் என்று அவரும் ஒரு சராசரி மனிதனாகவே இந்த உலகில் வந்து பிறந்தார்.
அவரை கொடிய சர்வாதிகாரியாக மாற்றியது காரணி எது என்று சரியாக சொல்லமுடியாது ஆனால் சின்னவயதில் அவர் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம்.இந்த இரும்பு மனிதனின் மனம் விரும்பிய காதல் ஒருவேளை வெற்றியடைந்திருந்தால் அவர் சிலவேளை ராணுவத்தில் சேராமல் விட்டு இருக்கலாம்.ஒரு புகழ்பெற்ற ஒவியராக மாறியிருகலாம்.ஆனால் விதி யாரைவிட்டது விதி தன் விளையாட்டில் ஹிட்டலரை ஆட்கொண்டது ஆனால் பின்பு அதே விதியையே ஆட்டுவித்தவர் ஹிட்லர்.
வட ஆஸ்திரியாவில் உள்ள பிரானவ் என்ற ஊரில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் 20-அன்று  உலகவரலாற்றை மாற்றி எழுதிய ஒரு குழந்தை பிறந்தது.......................
(தொடரும்)
தகவல்கள் பல்வேறு இனையதளங்களில் இருந்து பெறப்பட்டன அனைத்து தளங்களுக்கும் நன்றிகள்.


Post Comment

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு ஆரம்பம்... நல்லவைகளை சொல்லி உள்ளீர்கள்... அதை மட்டும் கருத்தில் கொள்வதும் நல்லது... தொடருங்கள்...

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

ஹிடல்ர் வரலாறு கறைபடிந்தது இருந்தலும் அவரில் நல்ல பக்கங்களை முதலில் சொல்லி பிறகு அவர் வரலாற்றை பதிவோம் என்றுதான் நன்றி பாஸ்

செங்கோவி said...

ரைட்டு..ஹிட்லரை முன்னாதரணமாக உங்க தொடர் ஆக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

Massy spl France. said...

கடும் கண்டனத்திற்கு உறிய பதிவு.
தன ஆரியன் இனம் மட்டுமே இம்மண்ணில் உயர்ந்த உன்னத இனம் மற்ற அனைத்தும் கீழ் தர வாழ தகுதி அற்ற அடிமை இனம் என்ற வெறி பிடித்த பைத்தியக்காரன் மன நோயாளி இட்லர் கடைசியில் கோழைத்தனமாக தான் இருந்த இடம்கூட தெரியாமல் தற்கொலை செய்து மாண்டான். சிறு வயதிலிருந்தே இவன் ஒரு மன நோயாளி. இவனின் பைத்தியக்கார செயல்களால் எண்ணற்ற அந்நிய அப்பாவிகள் அழிந்தது மட்டுமல்லாமல் தான் சார்ந்த சொந்த இன ஜெர்மானியர்களும் பரிதாபமாக இறந்து அழிந்தனர். இவனின் முட்டாள்தனம் ஒரு உலகப்போரை உருவாக்கி பல அப்பாவிகளின் உயிர்களை குடித்தது.
இட்லர், ஸ்டாலின், முஸ்ஸோலினி, மாஓ போன்ற சர்வாதிகாரர்களுக்கு தூபம் போடும் கட்டுரைகளை படிக்கும் இளைஞர்களை முட்டாள்கள் ஆக்கும் முயற்சிகள் கடும் கண்டனத்திற்கு உறியது.

மீண்டும் வருவேன்.

K.s.s.Rajh said...

@செங்கோவி

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@மாசிலா

வருகைக்கு நன்றி நண்பரே ஹிட்லரை ஒரு ஹீரோவாக சித்தரிப்பது இந்த தொடரின் நோக்கம் இல்லை அப்படி சித்தரிக்கவும் முடியாது தொடர்ந்து படியுங்கள் புரியும்

Unknown said...

ஆரம்பமே................பெரியவர்கள் ஆலோசனைப்படி அவதானமாக கொண்டு செல்லுங்கள்,வாழ்த்துக்கள்!தொடர்வேன்/வோம்!!!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails