Friday, November 29, 2013

பந்தை சுழற்றினார் பல சாதனை கிடைத்தது நாக்கை சுழற்றுகிறார் நாறிப்போகிறார்-முரளி

வணக்கம் நண்பர்களே எப்படி சுகம்? மீண்டும் ஒரு பதிவின் ஊடாக நண்பர்கள் தளத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி ஏற்கனவே ஆரம்பித்த ஹிடலர் பற்றிய தொடர் பாதியில் நிற்கிறது முடிந்தளவு விரைவாக அதை முழுவதுமாக எழுதுக்கிறேன்.முரளி பற்றிய இந்தப்பதிவை சில நாட்களுக்கு முன்பே எழுத நினைத்தேன் ஆனால் நேரப்பிரச்சனையால் எழுதமுடியவில்லை.முத்தையா முரளிதரன் இந்த பெயர் ஒரு சாதாரன மனிதனுடைய பெயர் இல்லை ஒரு சாதனை நாயகனுடைய பெயர்.ஒவ்வொறு முறையும் முரளி பந்தை சுழற்றும் போதெல்லாம் எங்களின் மனங்களும் அவருடன் சேர்ந்து சுழலும் ஏதாவது ஒரு சாதனை நிகழ்ந்துவிடாதா என்று.



இன்று பல கோடிபேரின் இதயங்களை ஆட்கொண்டு இருக்கும் ஆங்கிலேயர் கண்டு பிடித்த கிரிக்கெட்டில் ஒரு தமிழன் எவரும் இலகுவில் நெருங்கிவரமுடியாத சாதனைகளை படைத்திருக்கிறார் என்றால் அது மிகவும் பெருமை.

ஆனால் முரளியின் அண்மைக்கால பேச்சுக்கள் கருத்துக்களில் தமிழர் மீதான அவரது உள் மனதின் வெளிப்பாடுகள் தெளிவாக வெளிவருக்கின்றது.முரளியின் கிரிக்கெட் வாழ்கையில் ஒவ்வொறு சோதனை படிகளிலும் அவருக்கு கைகொடுத்தது ஆதரவாக இருந்தவர்கள் இலங்கை கிரிக்கெட் அணியினர்.அதுக்காக அவர் தனது விசுவாசத்தை தமிழர்களின் மனங்கள் புண்படும் படி இப்படித்தான் காட்டனும் என்று இல்லை.


விளையாட்டையும் அரசியலையும் எப்போதும் சேர்த்து பார்பது அழகல்ல.ஆனால் முரளியால் இரண்டுமே இப்போது ஒரே தட்டில் வைக்கப்பட்டதை போலவே தோன்றுகின்றது.

இத்தனைக்கும் சங்கக்காரவோ.மகேலவோ இன்னும் பல பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தமிழர் அரசியல் ரீதியிலான எந்த ஒரு கருத்துக்களையும் தமிழ் மக்களின் மனம் புண்படும் படியான கருத்துக்களையும் கூறியது இல்லை.ஆனால் ஒரு தமிழனாக இருந்து கொண்டு முரளியின் கருத்துக்கள் ஏற்புடையது இல்லை.


முரளி பெயரில் நடக்கும் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடருக்காக பல பிரபல கிரிக்கெட் வீரர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள் அந்தவகையில் இந்த ஆண்டுக்கான முரளி கிண்ண போட்டிகளில் நான் நேர பார்த்த ஒருவிடயம்.மகேல,சங்கா போன்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் வந்திருந்தார்கள்.எந்தவிதமான பந்தா ஏதும் இன்று ஒரு சாதாரன மனிதனைப்போல எல்லோறிடமும் சகஜமாக கதைத்து.கேட்கும் எல்லோறிடமும் போட்டோவுக்கு போஸ் குடுத்தார்கள்.நான் நினைக்கிறேன் மகேல அன்று போட்டோவுக்கு போஸ் குடுத்தே களைத்திருப்பார்.சங்காவும் அப்படியே


ஆனால் முரளி கடைசிநாள் நிகழ்வுக்குத்தான் வந்தார்.சிறப்பு விருந்தினர் பகுதியிலே இருந்தார்.நான் அவதானித்த மட்டில் விழாவில் தவிற பெரிதாக வேறு யாரும் போட்டோ எடுப்பதற்கு அவர் சந்தர்ப்பத்தை வழங்கவில்லை.

விழாவின் நீண்ட நேரம் நின்று கொண்டு இருந்தவர்.விழாமுடிந்ததும்.டாய்லெட் பக்கம் போயிட்டு வந்தார் அந்த சில நிமிட இடைவெளியில் ஒருவர் இருவர் போட்டோ எடுத்துக்கொண்டனர்.நானும் ஒரு பாதிரியாரும் ஒரு போட்டோ எடுக்கலாமா என்று கேடதுக்கு ஆம் எடுக்கலாம் என்று போஸ்குடுதார் ஆனால் அவர் சொன்ன பதில் வேகமாக எடுங்க நான் கொழும்புக்கு போகனும் என்று.இரண்டு மூன்று போட்டோ முரளியுடன் எடுத்துக்கொண்டேன்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட பகுதியில் அதுவும் கிளிநொச்சியில் காலையில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனதை மகிழ்ச்சி படுத்த சிரமம் பாராது போட்டோவுக்கு போஸ்குடுத்த மகேல எங்கே? பெரும்பாலும் ரசிகர்களுடன் போட்டோ எடுக்கும் சந்தர்பத்தை வழங்காத முரளி எங்கே?இது ஒரு சின்ன விடயம் தான் ஆனால் உற்றுநோக்கினால் இதில் முரளியின் மனநிலை தெளிவாக புரியும்.

உலகம் கொண்டாடிய ஒரு சாதனை நாயகன் நீங்கள் இனிமேல் நீங்கள் புகழ் அடையனும் என்று இல்லை விசுவாதத்தை எங்களை விமர்சித்துதான் காட்டனும் என்று இல்லை.எங்களுக்கு ஆதரவாக எந்த ஒரு கருத்துக்களையும் கூறவேண்டாம்.ஆனால் கருத்துக்கூறுகின்றேன் என்று எங்கள் மனங்களை புண்படுத்தவேண்டாம்.


நான் ஒரு முரளியின் தீவிரமான ரசிகன் முரளி பற்றி ஒரு தொடரே இதே நண்பர்கள் தளத்தில் எழுதியிருக்கிறேன்.2004ம் ஆண்டு முரளி கிளிநொச்சிக்கு வந்திருந்த போது அவரை முதன் முதலாக நேரில் பார்து பேசினேன்.அப்போது எடுத்துக்கொண்ட போட்டோ என் கைகளுக்கு கிடைக்கவில்லை.அது என் மனசில் பெரிய கவலையாக இருந்தது.

அதன் பிறகு கிட்ட தட்ட 10 வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு  மேலே சொல்லியிருக்கிறேன் அல்லவா.முரளி கிண்ண இறுதிப்போட்டி நிகழ்வுக்கு வந்திருந்த போது சிலருக்குத்தான் அவருடன் போட்டோ எடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது என்று.நானும் எடுத்துக்கொண்டேன் என்று.அந்த போட்டோவும் இன்னும் என் கையிற்கு வந்து சேரவில்லை ஒரு மீடியா நண்பர் தான் எடுத்தார்.கொஞ்சம் அவர் பிசி என்பதால் இன்னும் போட்டோவை எனக்கு அனுப்பிவைக்கவில்லை.ஆனால் எனக்கு இம்முறை வருத்தம் இல்லை.அந்த போட்டோ கிடைக்காமலே விட்டாலும் பரவாயில்லை என்றே இப்போது தோன்றுகின்றது

உங்கள் கருத்துக்களால் என்னைப்போல தீவிரமான உங்கள் ரசிகர்கள் மனதில் இருந்தே மெல்ல மெல்ல நீங்கள் விலகிப்போகின்றீர்கள்.வரலாற்றில் சாதனை நாயகனாக பதிவாகிய நீங்கள் அதே வரலாற்றில் பலரின் வெறுப்பை சம்பாதித்த அவப்பெயரையும் பதிவு செய்துகொள்வீர்கள்.

அன்று கையை சுழற்றிய போது போல்டாகியது எதிரணி துடுப்பாட்டவீரர்கள் இன்று நாக்கை சுழற்றும் போது போல்டாகுவது நீங்களே





Post Comment

12 comments:

rajamelaiyur said...

தவளையும் தன் வாயால் கெடும். . .இது முரளிக்கு பொறுந்தும் போல. . .

Unknown said...

விடுங்க,இதெல்லாம் ஒரு பொருட்டா?என்னவோ,தம்பிக்கு ஒரு மீள முடியாத இக்கட்டு!அவ்வளவு தான்,அதிலும் இவர் சொல்லி..................ஹி!ஹி!!ஹீ!!!!

திண்டுக்கல் தனபாலன் said...

ம்... பலரும் கெட்டுப் போவது இதனால் தான்...!

Athisaya said...

வணக்கம் சொந்தமே!!இவனுங்கள எல்லாம் ............!சே...!என்ன ஆளுடா சாமி.

தனிமரம் said...

விளையாட்டில் இருந்து அரசியல் விளையாட்டுக்கு அடித்தாடுகின்றார் போல!ம்ம் என்னத்தைச் சொல்ல முரளி பற்றி...!விடுங்க ஓட்டில் தெரியும் எதிர்காலம்.

mathuran said...

இவர் லக்ஸ்மன் கதிர்காமர் மாதிரி தமிழ்ப் பெயருடைய சிங்களவர்.

K.s.s.Rajh said...

@RAJATRICKS - RAJA

உண்மைதான் பாஸ்

K.s.s.Rajh said...

@Subramaniam Yogarasa

அப்படியும் இருக்கலாம் ஜயா

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

என்னத்தை சொல்வது பாஸ்

K.s.s.Rajh said...

@Athisaya

வணக்கம் சொந்தமே

K.s.s.Rajh said...

@தனிமரம்

இருக்கலாம் இருக்கலாம்

K.s.s.Rajh said...

@mathuran

உண்மைதான்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails