Monday, April 07, 2014

ஆட்டோகிராப்(அலையாய் நெஞ்சில் மோதும் நினைவுகள்)-2

என் பல பதிவுகளிலும் பேஸ்புக்கிலும் மற்றும் பல இடங்களிலும் நான் சொல்லிவரும் விடயம் நண்பர்கள் உலகம் எனக்கு மிகவும் பிடிக்கும்.என் நட்பு வட்டாரத்தில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.ஆனால் என்னை பற்றிய தனிப்பட்ட ரீதியில் அறிந்தவர்கள் அதாவது நான் என் கஸ்டங்களை சந்தோசங்களை பெரும்பாலும் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளவிரும்புவது இல்லை ஆனால் ஒரு சிலரிடம் என்னையறியாமல் பகிர்ந்துகொள்வேன் அப்படி நான் என்னைப்பற்றி தனிப்பட்ட விடயங்களை பகிர்ந்துகொள்பவர்கள் என் நட்பு வட்டத்தில் சிலரே இருந்திருக்கின்றார்கள் இருக்கிறார்கள்.
அப்படி ஒருவன் தான் முரளி இவன் பற்றி நான் இதுவரை எங்கையும் சொல்லியது இல்லை பத்தாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு அறிமுகமான நண்பன்.என்னையும் இவனையும் நட்புவட்டாரத்தில் இணைத்தது கங்குலி என்ற பெயர்.ஆமாம் என்னைப்போலவே இவனும் கங்குலியின் மிகத்தீவிரமான ரசிகன்.டீயூசன் கிளாஸ்ற்கு கட் அடித்துவிட்டு.பல மையில் தூரம் கிளிநொச்சி வீதிகளில் சைக்கிளில் சுற்றுவோம் .

அவனுக்கு ஒரு பெண்ணின் மேல் காதல் வந்தது ஒருதலைக்காதல் தான் படிக்கிற காலத்துல ஒரு தலையாய்தானே காதல் பிறக்கும் பலருக்கு.
அவன் ஆளை பாக்கிறதுக்கான பல மையில் தூரம் சைக்கிளில் சென்று அவள் டீயூசன் விட்டு வரும் வரை காத்திருந்து பார்த்துவிட்டு. வருவோம் கதைப்பது கூட இல்லை இவ்வளவு ஏன் இவனை யார் என்றே அந்தப்பொண்ணுக்கு தெரியாது ஆனாலும் காவியக்காதல் ரேஞ்சிக்கு பில்டப் கொடுப்போம்.


அவன் ஆளுக்கு டீயூசன் முடிந்ததும் என் ஆளுக்கு டீயூசன் முடிந்துவிடும் என்பதால் உடனடியாக மீண்டும் சைக்கிளில் பல மையில் தூரம் பயணித்து இங்க வருவோம் அவளை பார்க்க.வெயிட் வெயிட் நீங்க கொந்தளிப்பது புரியுது என் ஆள் என்று விட்டு அதைபற்றி சொல்லாமல் போறானே என்று ஹி.ஹி.ஹி.ஹி..........முரளிக்கு சொன்ன அதே பல்லவிதான் எனக்கும் வன்சைட்டு லவ்வுதான் ஹி.ஹி.ஹி.ஹி..........காசா பணமா நாம யாரையும் லவ் பண்ணலாம் பட் அவங்க நம்மளை லவ் பண்ணனும் என்று அவசியம் இருக்கா என்ன .நாங்க ஜஸ்வர்யா ராயையும் லவ் பண்ணுவோம் அவங்க எங்களை லவ் பண்ணனும் என்று எல்லாம் எதிர்ப்பார்பது இல்லை சின்ன வயதுகளில்.இப்ப மட்டும் என்ன வாழுதாக்கும் என்று நீங்கள் கொந்தளிப்பது புரியுது ரைட்டு விடுங்க 

எதிர்காலம் பற்றி கவலையில்லாமல் ஜாலியாக பொழுதை கழித்த பாடசாலை நாட்கள் மிகவும் அழகானது பள்ளிப்பருவ காதல் மட்டும் இல்லை பள்ளிப்பருவ நட்பும் இடையில் பிரிந்துவிடுவதுண்டு.பத்தாம் வகுப்பில் இருந்து A/L வரை படித்தான் முரளி.பாடசாலை காலத்தின் பிறகு அவனது தொடர்புகள் ஏதும் இல்லாமல் போய்விட்டது எங்க இருக்கிறான் என்று அறிந்தது இல்லை.மறக்கமுடியாத ஒரு நண்பன்.என் கஸ்டங்களை சோகங்களை பகிர்ந்துகொண்ட ஒரு தோழன் அவன் இப்போது கொழும்பில் இருப்பதாக கேள்வி சரியாத தெரியவில்லை.

இப்போதும் கிளிநொச்சி வீதிகளில் பயணிக்கும் போது சின்னவயசில் டீயூசனுக்கு கட் அடித்துவிட்டு அவன் ஆளைப்பார்க்க பல மையில் தூரம் சைக்கிளில் சென்றதும் என் ஆளைப்பார்க மீண்டும் திரும்பி பலமையில் தூரம் வந்த பசுமையான நினைவுகள் மனசில் வந்து போவதுண்டு.எத்தனையோ மாற்றங்கள் எங்கள் ஊர்களில் ஆனால் சின்னவயசு ஞாபகங்கள் மட்டும் மாறாமல் பசுமையாக மனசில்.அது ஒரு அழகிய கனாக்காலம் 

(நினைவுகள் தொடரும்)



Post Comment

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நினைவுகள்... சுருக்கமாக முடித்து விட்டீர்களே நண்பா...

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி பாஸ் அடுத்த பகுதிகளை அதிகமாக எழுதுகின்றேன் பாஸ்

Unknown said...

தம்பி...................நல்லா இருக்கிறீங்களா?///இளமை நினைவுகள் அபாரம்.///வன்/ஒன் சைட் லவ்........என்னமோ போடா மாதவா,ஹ!ஹ!!ஹா!!!

பால கணேஷ் said...

எதிர்காலத்தைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் சந்தோஷமாய் துள்ளித் திரிந்த பள்ளிப் பருவம்... அப்போது பழகிய நண்பனை பின்னாளில் தொடர்பில் வைக்காமல் இழந்து வருந்திக் கொண்டிருக்கிற அனுபவம் என்னிடமும் உண்டு என்பதால் உங்கள் உணர்வுகளை என்னால் பூரணமாக உணர முடிகிறது. (ஹும்.. இந்த செல்போன் அப்பவே இருந்திருந்தா நண்பன் டச்ல இல்லாம போயிருக் மாட்டான்)

K.s.s.Rajh said...

@Subramaniam Yogarasa

நல்லயிருக்கிறேன் ஜயா நீங்கள் எப்படி இருக்குறீங்க

ஆமா வன்ன ஒன்னா ஏதோ ஒன்னு ஆக மொத்தம் உருப்படாத லவ்வுதேன் ஆங்

K.s.s.Rajh said...

@பால கணேஷ்

உண்மைதான் பாஸ் ஆனால் எங்கள் காலத்தில் செல்போன் வந்துவிட்டது ஆனால் எங்கள் ஊரில் அப்போது செல்போன் பாவிக்க தடை

”தளிர் சுரேஷ்” said...

இள வயது நினைவுகள் என்றாலே இனிமைதான்! உங்களின் நண்பனை விரைவில் கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்!

K.s.s.Rajh said...

@‘தளிர்’ சுரேஷ்

வாங்க பாஸ் நீண்டநாட்களுக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி எப்படி இருக்கிறீங்க

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails