Wednesday, June 04, 2014

சக்கரவர்த்தியின் கோட்டைக்கு சிற்றரசன் ஹாசிம் ஆம்லா

தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டனாக ஆம்லா நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியை ஆண்ட க்றேம் ஸ்மித் என்ற சர்கரவர்த்தியின் கோட்டைக்கு அவரது ஒய்வுக்கு பிறகு அந்த இடத்திற்கு அம்லா நியமனம் எவ்வளவு சரியானது என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.என்னைகேட்டால் ஆம்லாவைவிட ஒரு நாள் போட்டிக்கான அணியின் கேப்டன் ஏ.பி.டி வில்லியர்சையே டெஸ்ட் போட்டிக்கும் கேப்டனாக நியமித்து இருக்கலாம் இல்லை வெரும் 8 டெஸ்ட்போட்டிகளில் மாத்திரமே விளையாடி இருந்த 22 வயதான கிறேம் ஸ்மித்தை நியமித்தது போல புதிய ஒருவரை நியமித்து இருக்கலாம்.

ஹாசிம் ஆம்லா
அதைவிட மூன்று வகைப்போட்டிகளுக்கும்(டெஸ்ட்,ஒருநாள்,20 ஒவர்) தனித்தனி கேப்டன்கள் என்பது பொருத்தமற்றது எல்லாவகைப்போட்டிகளுக்கும் ஒரு கேப்டன் என்பதுதான் அணியை ஒருகுடையின் கீழ் சிறப்பாக கட்டி எழுப்ப பெரிதும் உதவும் தற்போது 31 வயதாகும் ஹாசிம் ஆம்லா நீண்டகாலத்துக்கு தென்னாபிரிக்க அணியில் விளையாடமுடியாது எனவே ஆம்லாவுக்கு அடுத்தாக ஒரு கேப்டனை இப்போது இருந்தே உருவாக்கவேண்டும் தற்போது தென்னாபிரிக்க 20 ஒவர் போட்டிகளுக்கு கேப்டனாக இருக்கின்ற டூ ப்ளஸ்சியையோ இல்லை வேறு ஒருவரையோ எதிர்க்கால கேப்டனாக உருவாக்க இப்போதே முயற்சிகள் செய்யவேண்டும் அப்போதுதான் தென்னாபிரிக்க அணியின் எதிர்காலம் பலமாகும்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியை ஆண்ட சக்கரவர்த்தி ஸ்றேம் ஸ்மித்
கடந்த 10 வருடங்களாக ஒரு நாள்,டெஸ்ட் 20 ஒவர் என அணைத்து வகைப்போட்டிகளிலும் ஸ்மித் என்ற ஜாம்பவானின் தலைமையில் தென்னாபிரிக்க அணி சிறந்த பல பெருபேருகளை வெளிப்படுத்தியிருந்தது முதலில் 20 ஒவர் போட்டிகளில் கேப்டன் பதவில் இருந்து விலகிய ஸ்மித் பிறகு கடந்த ஆண்டு ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலகியிருந்தார்.ஆனால் டெஸ்ட்போட்டிகளில் தொடர்ந்தும் ஒய்வு பெறும் வரை கேப்டனாகவே இருந்தார்.32 வயதுதான் ஸ்மித்துக்கு இன்னும் சிலகாலம் அவர் விளையாடியிருக்கலாம் காரணம் தென்னாபிரிக்க டெஸ்ட் அணியை ஒரு பலமான அணியாக கட்டி எழுப்பிய பெருமை ஸ்மித்தையே சாரும்.

ஸ்மித்துடன் ஆம்லா
2004 ம் ஆண்டு டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆகிய ஹாசிம் ஆம்லாஆரம்பத்தில்பெரிதாக சாதித்தது இல்லை 2008ம் ஆண்டு தான் ஒரு நாள் போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தது ஆனால் கடந்த சில வருடங்களில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியில் தவிர்க்கமுடியாத வீரராக அவரது வளர்ச்சி பாராட்டத்தக்கது. கேப்டனாகவும் சாதிப்பார் என்று நினைக்கின்றேன்.

தென்னாபிரிக்க அணியின் புதிய டெஸ்ட் கேப்டனான ஆம்லா முன் மிகப்பெரிய சாவால் இருக்கின்றது காரணம் டெஸ்ட் தரவரிசையில் தென்னாபிரிக்க அணியை முதலிடத்துக்கு கொண்டு வந்தமை,ஒரு அணிக்கு 100 டெஸ்ட் போட்டிகளுக்குமேல் தலைமைதாங்கிய உலகின் முதல் மற்றும் ஒரே ஒரு கிரிக்கெட் கேப்டன் என்ற பல பெருமைகளை தன்னகத்தே கொண்டு ஒரு சக்கரவர்த்தியாக ஸ்மித் வலம் வந்த பதவி என்பது சாதரானமானது அல்ல ஆம்லாவின் தலையில் மிகப்பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது அதை அவர் சிறப்பாக செய்யவேண்டிய கட்டாயம் இருக்கு சிறப்பாக செய்வார் என்று எதிர்பார்ப்போம்

முஸ்கி-100 போட்டிகளுக்கு தலைமைதாங்கிய உலகின் முதல் மற்றும் ஒரே ஒரு கிரிக்கெட் கேப்டன் ஸ்மித் அந்த சாதனையை படைக்கமுன் நான் எழுதிய பதிவில் விரிவாக அது பற்றி குறிப்பிட்டுள்ளேன் அதை படிக்க இங்கே கிளிக்-ஸ்மித்தின் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன் என்ற சாதனை இனி முறியடிக்கப்படுமா?

Post Comment

8 comments:

Mahesh said...

நீண்டநாட்களுக்கு பிறகு கிரிக்கெட் பதிவு ஒன்றின் மூலம் என் வலைப்பதிவை மீண்டும் தூசி தட்டியுள்ளேன் பழய டச் இருக்குமா என்று தெரியவில்லை வந்து படித்துப்பாருங்கள்///

mm vanthu padichachu anna.
nalla tan ningal eppavum ezuthuringa.
ini avvappothu palaya raj pola kalakka vazthukkal.

திண்டுக்கல் தனபாலன் said...

தென்னாபிரிக்க அணி பொருத்தவரை அதிர்ஷ்டம் என்பது பல முக்கியமான போட்டிகளில் அவர்களுக்கு இல்லை என்றே தோன்றும்...

Unknown said...

வணக்கம்ராஜ்!நலமா?///தூசி தட்டியதும் பளீரென்று இருக்கிறது உங்கள் தளம்.வாழ்க!

K.s.s.Rajh said...

@mahesh

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

உண்மைதான் பாஸ்

K.s.s.Rajh said...

@Subramaniam Yogarasa

நலம் ஜயா நீங்கள் எப்படி சுகம்?

Perfect SEO by Sharif said...

123

Perfect SEO by Sharif said...

100% Natural Shilajit is a raw substance rarely found in the High Altitude Mountain Ranges of The Himalayas,It is said to be combination of at least 85 minerals and vitamins in ionic form.These vitamins include Fulvic Acid,Humic Acid and many more.Royal edition shilaji

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails