Sunday, November 14, 2010

சிறுகதை-விதியின் ரேகை,

இந்த சிறுகதை நான் எழுதி முதன் முதலாக பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை,22/8/2010/ அன்று மித்திரன் வாரமலரில் வெளியாகியது,எனது முதல் படைப்பை வெளியிட்ட மித்திரன் வாரமலருக்கு என் அன்புகலந்த நன்றிகள்.(by-Kss.Rajh).


கல்கத்தா(கொல்கத்தா) இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று.தினம்,தினம் வேலை தேடி பலர் அலைமோதும் நகரம்.பல மொழி பேசும் மனிதர்கள்.பக்கத்து வீட்டில் யார் வசிக்கின்றார்கள் என்று தெரியாத நகர வாழ்க்கை.இயந்திர மயமான உலகத்தில் இயந்திர வாழ்க்கைக்கு பழகிவிட்ட மனிதர்கள்.அருண் இருபத்தியாறு வயது இளைஞன்.சொப்ட்வெயார் இன்ஜினியர்.கைநிறைய காசு.சந்தோசமான வாழ்க்கை.சாதிக்கவேண்டும் என்ற ஆசை,விடாமுயற்சி,தன்னம்பிக்கை இவைதான் அவனை பல வெற்றிக்கனிகளை சுவைத்து வாழ்க்கையின் உயரத்திற்கு கொண்டு சென்றவை.இருந்தும் அவனுள் இனம் புரியாத் ஒருசோகம் அவனை தினம்,தினம் வதைத்துக்கொண்டிருந்தது.இன்று இருக்கும் அருண் வேறு. 10வருடங்களுக்கு முன் இருந்த அருண் வேறு.
ஆசியாவின் அழகிய குழந்தையும் எழில் மிகுந்த குழந்தையுமான இலங்கைதான் அருணின் தாய்நாடு.சிறுவயதில் தாய்,தந்தையை இழந்துவிட்ட அவனுக்கு அன்புகாட்ட யாரும் இல்லை.அநாதையாக அவன் ஊரில் வாழ்ந்து வந்தான்.மெல்லிய உருவம்,சீவப்படாத தலைக்கேசம்,இதுதான் அவன் உருவம்.நிறைய படிக்கவேண்டும்,வாழ்க்கையில் சாதிக்க வேண்டும்.என்ற ஆவல்.ஆனால் அதற்குவசதி இல்லை என்றபடியால் தனது ஆசைகளை கனவு உலகில் மாத்திரம் கண்டு களித்துக்கொண்டிருந்தான்.அப்பாவியான அருணின் செயற்பாடுகளை பலர் வெறுத்த போதும்,அவனுக்கு ஆதரவாக ஒர் உள்ளம் அந்த ஊரில் இருந்தது.மைதிலி,பொறுப்பில்லாத அப்பா,பிள்ளைகளை நன்றாக வளர்க்கவேண்டும் என சதா பிள்ளைகளைப் பற்றியே சிந்திக்கும் அம்மா,விளையாட்டுத்தனமான தங்கை,ஆசைக்கு ஒர் தம்பி,வெளிநாட்டில் தொழில்புரியும் அண்ணன்.இதுதான் அவளது குடும்பம்.அருணை அவளுக்கு மிகவும் பிடிக்கும்.அன்புக்காக ஏங்கிய அருணின் உள்ளத்தில் மைதிலியுடனான நட்பு ஒர் வடிகாலய் அமைந்தது.என்னதான் ஏழையாக,அநாதையாக,இருந்தாலும் அவனும் ஒர் இளைஞன் தானே.அவளது அன்பினால் கட்டுண்டு,அவளை காதலிக்கத்துவங்கினான்.ஆனால் அவனது ஏழ்மை காதலை அவளிடம் கூறத்தடையாக இருந்தது.மறைத்து வைக்கமுடியாத் ஒர் நோய் காதல்.அவனுக்கும் அவளிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை.ஒர் நாள் அவளிடம் தனது காதலை கூறிவிட்டான்.அதற்கு அவள் இங்கபாருங்க அருண் உங்கள் மேல எனக்கு நல்ல மரியாதை இருக்கு.உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.அதற்காக உங்களை காதலிக்கிறதா,என்னால் நினைச்சுப் பார்க்கமுடியவில்லை,எப்படி அருண் ,அம்மா,அப்பா இல்லாத அநாதை நீங்கள்,அதைவிட வேலை ஏதும் இல்லாது ஊரை வெட்டியாக சுற்றித்திரியும் ஒருவனை எப்படி அருண் நான்காதலிப்பது?எனது எதிர்காலம் என்னவாகும்.சிந்தித்து பாருங்க.இன்டைக்கும் சரி,எப்பவும்சரி நீங்கள் எனக்கு பிரண்ட் தான் அருண்.தப்பா ஏதும் சொல்லி இருந்தால்,மன்னிச்சுக்கொள்ளுங்க"என்றாள்.இல்லை மைதிலி தப்பு என்னோடதுதான்.நீங்கள் தான் என்னை மன்னிக்கவேணும்.அந்தச்சம்பவத்துக்கு அப்புறம் இரண்டு நாட்களாக மைதிலி அவனிடம் பேசவில்லை.அதற்கு பிறகு அவனைப் பார்த்தாள்.சகஜமாக கதைப்பாள்.முன்பு போல பழகினாள்.ஆனால் அருணால் அப்படி இருக்கமுடியவில்லை.காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.ஒர் நாள் மைதிலியின் பெயருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது.
அன்புள்ள மைதிலிக்கு:
தூக்கம் இல்லாத என் இரவுகளுக்கு சொந்தக்காரி,தூங்காத என் விழிகளின் தூக்கத்தை கொள்ளை அடித்தவளே! நான் போகின்றேன்.இந்த ஊரை விட்டே போகின்றேன்.தினம்,தினம் உன்னைப் பார்துக்கொண்டு நடை பிணமாக என்னால் வாழ முடியவில்லை.அதனால் இந்த ஊரை விட்டே போகின்றேன். "ஒருவனுக்கு ஒரே ஒரு அம்மாதான்.அதேபோல் ஒரே ஒரு காதலிதான்". எனக்கு அது என்றைக்கும் நீதான் மைதிலி.
பிரியமுடன்,
அருண்......
கடிதத்தைவாசித்ததும் மைதிலியின் கண்கள் அவளை அறியாமலே கண்ணீர் சிந்தின."மன்னித்துவிடு அருண்.நானும் உன்னை காதலிக்கின்றேன்.ஆனால் உன்னை திருமணம் செய்துகொண்டு வாழும் ஏழ்மையான வாழ்க்கையை நினைக்கத்தான் எனக்கு கஷ்டமாக இருந்தது.அதுதான் எனது காதலை உன்னிடம் கூற முடியவில்லை.மன்னித்துக்கொள்." மனதுக்குள் அவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டாள்.அதன் பிறகு அருணை அந்த ஊரில் காணவில்லை.
அருண் அந்த ஊரை விட்டு மட்டும் அல்ல,நண்பர் ஒருவரின் உதவியுடன் தனது தாய்த்திருநாடான இலங்கையை விட்டே சென்று விட்டான்.
அதற்கு பிறகு அவன் தனது நாட்டிற்கு திரும்பிச் செல்லவேயில்லை.கஷ்டப்பட்டு உழைத்தான்.தனது விடாமுயற்சியால் நிறைய படித்தான்.இன்று கல்கத்தாவின் மிகப் பெரிய சொப்ட்வெயார் கம்பனி ஒன்றின் சொந்தக்காரன்.ஆனால் அவனது மைதிலி இன்று இந்தியாவில் தான் இருக்கிறாள்.அருணைப்பார்ப்பாள்,கதைப்பாள்,அவளில் எந்த மாற்றமும் இல்லை.ஒர் நாள் அருண் அவளிடம் கேட்டான்."ஏன் மைதிலி அன்று நான் ஏழை. அதனால் நீ எனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.இன்று அப்படி இல்லை.என்னிடம் நிறைய பணம் இருக்கு.படிப்பு இருக்கு.நீ கேட்ட வசதியான வாழ்க்கை இருக்கு.இப்பவும் நீ என்னை ஏற்றுக்கொள்ள மாட்டாயா?.அருண் அவளது வார்த்தைகள் தடுமாறின.நான் படிக்கிறதுக்குத்தான் இந்தியாவுக்குவந்தேன்
"அருண்" உங்களை இங்கே சந்திப்பேன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை.எனது மனம் உங்களை இப்பவும் நேசிக்கின்றது அருண் அனால் நாம் சேரமுடியாது அருண்"."அதான் ஏன் மைதிலி?.சொல்லுறன் அருண் அன்று,உங்களை நான் நிராகரித்ததுக்கு உங்கள் ஏழ்மை காரணமாக இருந்தது.இன்று உங்கள் வசதி தடையாக இருக்கிறது.நான் உங்களை திருமணம் செய்தால் அன்று நீங்கள் ஏழையாக இருந்த போது வெறுத்தது,உங்களுடன் வாழும் ஒவ்வொருநிமிடமும் என்னை நிம்மதியாக இருக்க விடாது அருண்.அந்தவலி வலித்துக் கொண்டே இருக்கும்.நீங்கள் இல்லாத வலியை விட இது சிறியது தான்.என்றாலும் இது எனக்கு நானே கொடுக்கும் தண்டனை.உங்களது காதல் புனிதமானது அருண். அதை கொச்சப்படுத்த நான் விரும்பவில்லை.என்றைக்கும் நீங்கள் எனக்கு நல்ல நண்பன் தான் அருண்.கண்ணீருடன் கூறிவிட்டு போய்விட்டாள்".

"தொலை தூரம் சென்று மறையும் உன் உருவம்.
தொடர்ந்து வந்தகண்கள் காணாமல் கரையும்.

நீ போகும் பாதை நெஞ்சுக்குள் தெரியும்.அனாலும்
அன்பே உன்கூட வரவா முடியும்?.

.அன்பு நினைத்த மாதிரி எல்லோருக்கும் இலகுவாக கிடைப்பதில்லை.ஏழ்மையிலும் அதிகமாக கிடைக்கும் செல்வம் அன்பு.
பணம் கொடுத்தும் வாங்க முடியாதது அன்பு.
இருந்த போதிலும் இது ஏழ்மையைக் கண்டும்,
பணத்தைக் கண்டும்,சில நேரங்களில் பயப்படுவது உண்டு.
அப்போது காதல் என்கின்ற இதன் குழந்தை மரணித்து விடுகின்றது.

Post Comment

3 comments:

S.Kalai said...

very nice story rajh.

K.s.s.Rajh said...

@சாகம்பரி

அட நன்றி மேடம் கண்டிப்பாக வருகின்றேன்.

Unknown said...

ஆஹா! அற்புதமான சிந்தனை... காதல் என்னும் உணர்ச்சிப் பெருகினாலும் உலகியல் சார்ந்த விஷயம் ஆணை போட்டாலும் உளவியல் அல்லவா அதை வடித்துக் காண்பிக்கிறது....
எத்தனிக் குழந்தைகள் பெற்றாலும் ஒரு பெண்ணை தாயாக்கிய அந்த முதல் குழந்தை தான் அவளின் அதீத அன்பை அவளறியாம பெரும்... அப்படி உங்களின் முதல் ஆக்கம். உண்மையில் நன்று..
வாழ்த்துக்கள்.
சகோதிரி சாகம்பரி ஆற்றுபடுத்தியதால் இவ்விடம் வந்தேன்... நன்றி!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails