Thursday, December 09, 2010

உலகக்கிண்ணகிறிக்கெற் 2011 வெல்லப்போவது யார்,ஒரு பார்வை(Kss.Rajh)





2011 உலகக்கிண்ண கிறிக்கெட் போட்டிகள் இம்முறை இந்தியதுணைக்கண்டத்தில் நடைபெற உள்ளது,1975 ம் ஆண்டுமுதல் உலகக்கிண்ணகிறிக்கட்போட்டிகள் நடைபெற்றுவருகின்றது,இது வரை நடை பெற்ற 9 உலகக்கிண்ண போட்டிகளில்.- 1975,1979,முதல் இரு கிண்ணங்களை  மேற்குஇந்திய அணியும், 1983ல் இந்தியாவும்,1987ல் அவுஸ்ரேலியாவும்,1992ல் 
பாகிஸ்தாணும்,1996ல்,இலங்கையும்,1999,2003,2007ம் ஆண்டுகளில் அவுஸ்ரேலியாவும்,கைப்பற்றி உள்ளன.

இதில் இம்முறை உலகக்கிண்ண போட்டி பல சிறப்புக்களை பெற்றுள்ளது,குறிப்பாக அவுஸ்ரேலியா அணித்தலைவர் ரிக்கிபொண்டிங்க்கு பல சிறப்பு சாதனைகள் வரும் அதாவது பொண்டிங் 4 முறை இறுப்போட்டியில் விளையாடியுள்ளார்(1996,1999,2003,2007),இதில் 1996ம் ஆண்டு  தவிர 1999,2003,2007,ஆகிய ஆண்டுகளில் அவுஸ்ரேலியா உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது,2003,2007ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய அவுஸ்ரேலிய அணிக்கு பொன்டிங்தான் கேப்டன்,எனவே இம்முறை அவுஸ்ரேலியா இறுதிபோட்டிக்கு தகுதிபெற்று உலகக்கிண்ணத்தைவெல்லும் பட்சத்தில் 4முறை உலகக்கிண்ணத்தை வென்ற அணியில் விளையாடிய வீரராகவும்,3முறை கோப்பையை வென்ற அணித்தலைவராகவும்,சாதனை படைக்க பொண்டிங்க்கு வாய்ப்புள்ளது,ஒரு வேளை இறுதியாட்டத்தில் அவுஸ்ரேலியா தோற்றாலும்,5 உலகக்கிண்ண இறுதிபோட்டிகளில் விளையாடிய வீரராகவும் பொண்டிங் சாதனை படைப்பார்.
மாஸ்டர் பேட்ஸ்மேன் ,சச்சினுக்கு இது 6-வது உலகக் கோப்பை போட்டியாகும். பாகிஸ்தான் வீரர் ஜாவித் மியான்தத் மட்டுமே இதுவரை 6 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி உள்ளார்.
"உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது என்பதே அலாதியானது. அதிலும், இப்போது இந்தியாவில் இப்போட்டி நடக்க உள்ளதை மிகவும் விசேஷமாகக் கருதுகிறேன். சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக உள்ளோம்' என்றார் சச்சின்.
சச்சின் டெண்டுல்கர் இம் முறை இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க கடுமையாக போராடுவார்,37 வயதாகும் சச்சினுக்கு இது இறுதி உலகக்கோப்பை தொடராக அமையலாம்,சச்சின் விளையாடிய உலகக்கோப்பை தொடர்களில் 2003 ம் ஆண்டு மாத்திரமே சவ்ரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு வந்தது,அந்தப்போட்டியை கிரிக்கட் ரசிகர்கள்,எவருமே மறக்கமுடியாது,அவுஸ்ரேலிய கேப்டன் ரிக்கி பொண்டிங்கும்,டேமியன் மார்ட்டின்னும் ஆடிய அந்த அதிரடி ஆட்ட்த்தினால் இந்திய வெற்றியை பறித்து கொண்டனர்,2007  ல் முதல் சுற்றுடன் வெளியேரியது,ஆனால் இம்முறை இந்திய துணைக்கண்டத்தில்,போட்டிகள் நடப்பதால்,இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது,சச்சினின் அணுபவம்,சேவாக்கின் அதிரடி,இந்திய அணியின் இளம் வீரர்களும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்தியா கோப்பையை வெல்லலாம்.



நிறை வேறுமா?

திரும்பவும் உலகக் கிண்ணத்தை வெல்வார்களா?/wait and see/
இலங்கை அணியைப்பொருத்தவரை 1996ல் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது,2007 ல் இறுதிப்போட்டிக்கு வந்தது ஆனால் மழையும், அவுஸ்ரேலிய அதிரடி ஆரம்பவீரர் கில்கிறிஸ் டும் இலங்கையின் வெற்றியை அவுஸ்ரேலியாவின் பக்கம் திருப்பிவிட்டனர்,இம்முறை டில்சான்,மகேல ஜெயவர்த்தன,கேப்டன் சங்ககார,மத்தியூஸ்,அஜந்த மென்டிஸ்,சாதனை பந்து வீச்சாளர் சுழல் ஜாம்பவான் முரளிதரன்,இவர்கள் அசத்தும் பட்சத்தில் இலங்கை அணிக்கு கிண்ணத்தை வெல்ல வாய்ப்பு உள்ளது.


அதிரடி ஒய்ந்து போகவில்லை இன்னும் இருக்கிறது நம்புங்கள்

பாகிஸ்தான் அணியைப்பொருத்தவரை 1992 ம் ஆண்டு இம்ரான்கான் தலைமை யிலான அணி கிண்ணத்தை வென்றது,1999ல் இறுதிப்போட்டி வரை வந்தது.இம்முறை கேப்டன் அப்ரடி,ரசாக்,யுனிஸ்கான்,அக்தர்,போன்ற சீனியர் வீரர்களும் இளம் வீரர்களும் இணைந்து அசத்தும் பட்சத்தில்,பாகிஸ்தான் அணி கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது.


உலகக்கிண்ணம் கிடைக்குமா?

பங்களாதேஷ் அணியை பொறுத்த மட்டில் அண்மைக்காலமாக மிகச்சிறப்பாக செயல் படுகின்றது,
சில வேளைகளில் இந்த உலகக்கிண்ணத்தை  பங்களாதேஷ் அணி வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


முயர்சி செய்துபார்ப்போம்.
ஸிம்பாவே அணியும் சிறப்பாக செயல் படுகின்றது.
ஆனாலும் ஏனைய அணிகளுடன் ஒப்பிடும் போது கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு குறைவே


 

இன்னுமா நம்மல நம்பிகிட்டு இருக்காங்க?

  
நியூஸ்லாந்து 
அணியை பொறுத்தவரை பங்களாதேஷ் அணியிடம்,4-0 என ஒரு நாள் தொடரை இழந்து,இந்தியாவந்து இந்தியாவுடனும் டெஸ்ட்,ஒரு நாள் தொடர்களை இழந்து பெரும் பின்னடைவைச்சந்திந்துள்ளது,உலகக்கிண்ணதொடர்களிலும் பெரிய அளவு சாதித்தது இல்லை,எனவே இம்முறை கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு குறைவு,கேப்டன் டானியல் விட்டோரி,பிரண்டன் மக்கலம்,குப்டில்,ஸ்டைரிஸ்,பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடினால்,சில வேளை உலகக்கிண்ணத்தில் சாதிக்களாம்.

இந்தமுறையாவது உலகக்கிண்ணம் கிடைக்குமா?...

இங்கிலாந்து அணி அண்மைக்காலமாக மிகச்சிறப்பாக செயற்படுகின்றது,குறிபாக T20,உலகக்கிண்ணத்தை வென்றமை,மற்றும், ஆஷஸ் தொடரில் மிகச்சிறப்பாக செயற்படுகின்றது,கேப்டன் ஸ்ரோரஸ்,கோலிங்வுட்,பீட்டர்சன்,இவர்களின் துடுப்பாட்டம்,ஸ்வானின் அசத்தல் பந்து வீச்சு உலகக்கிண்ணதொடரில் சிறப்பாக அமையும் பட்சத்தில் இங்கிலாந்து அணிகிண்ணத்தை வெல்லும் வாய்ப்புக்கள் அதிகம்,உலகக்கிண்ணதொடரில் இறுதிப்போட்டிவரை வந்து இதுவரை  கிண்ணத்தை கைப்பற்றாத அணி இங்கிலாந்துதான், இதுவரை 1979,1987,1992,ஆண்டுகளில் மூன்று முறை உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு வந்த இங்கிலாந்து அணி,1979ல் மேற்குஇந்தியதீவுகளிடமும்,1987ல் அவுஸ்ரேலியாவிடமும்,1992ல் பாகிஸ்தானிடமும்,கிண்ணத்தை பறிகொடுத்துள்ளது,
எனவே இம்முறை கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புக்கள் இங்கிலாந்துஅணிக்கு அதிகம் உள்ளது.


இம்முறை அதிஸ்டம் கைகொடுக்குமா?

தென்னாபிரிக்க அணியைப் பொருத்த மட்டில் உலகக்கிண்ண தொடரில் அதிஸ்டம் இல்லாதா அணி எனலாம்,இறுதிப்போட்டிக்கு கூட தகுதி பெற்றதில்லை சந்தர்ப்பம் இருந்தும் நூலிழையில் இறுதிப்போட்டி வாய்ப்பை தவர விட்டுள்ளது.ஆனால் இம்முறை தென்னாபிரிக்காவிற்கு கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புக்கள் அதிகம்,துடுப்பாட்டம் பந்து வீச்சில் பலமாகவே உள்ளது ,குறிப்பாக அம்லா,ஏபிடி.வில்லியர்ஸ்,இருவரின் அண்மைக்கால அதிரடிதுடுப்பாட்டத்தை பார்க்கும் போது தென்னாபிரிக்காவிற்கு கோப்பயை வென்று கொடுத்தாலும் ஆச்சரியமில்லை,அதைவிட கேப்டன் கிரேம் சிமித்,சகலதுறை வீரர் ஜக் கலிஸ்,உடன் ஸ்டேயினும் பந்து வீச்சில் அசத்தி இளம் வீரர்களும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில்,இம்முறை தென்னாபிக்கா நிச்சயம் உலகக்கிண்ணத்தை வெல்லலாம்,

அது ஒருகாலம்,மீண்டும் வருமா?

மேற்கு இந்திய தீவுகள்,அணியை என்ன வென்று சொல்வது,முதல் இரண்டு கிண்ணங்களையும்,கைப்பற்றியது ஆனால் அதற்குபின் உலகக்கிண்ணத்தொடரில் சொல்லும் படியாக அதன் பெருபேறுகள் இல்லை,
துடுப்பாட்ட ஜாம்பவான் பிரைன் லாராவுக்கும் தான் விளையாடியகாலத்தில் கோப்பையை வெல்லும் கனவு நிறைபெறவில்லை.
இதே போலத்தான் இந்திய ஜாம்பவான் சச்சினுக்கும் ஆனால் அவர் ஒர் இறுதிப்போட்டியில் விளையாடினார்,இம்முறை விளையாடுவதால் இந்தியா கிண்ணத்தை வென்றால் சச்சினின் கனவு நிறைவேற சந்தர்ப்பம் உள்ளது.

மேற்குஇந்தியதீவுகள் அணி இம்முறை உலகக்கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புக்கள்  குறைவே,புதிய கேப்டன் சமி யின் தலைமையில்,இலங்கைக்கு எதிரான டெஸ்தொடரில்,சிறப்பாக செயற்பட்டது,இம்முறை உலகக்கிண்ண தொடரில்  அதிரடி ஆரம்பதுப்பாட்ட வீரர் கேயில்,அனுபவவீரர்கள்ளான சர்வான் சந்திரபோல்,பிராவோ,போன்றவர்கள்  எதாவது அதிசயம் நிகழ்த்தினால்  கிண்ணத்தைவெல்ல சந்தர்ப்பம் உள்ளது.
.
இந்தமுறையும் உலகக்கிண்ணத்தை கைகளில் ஏந்துவேனா/

கில்லியை(கில்கிறிஸ்ட்)யும்,மெக்ராத்தையும்,திரும்பவும், கூப்பிடுவமா
4முறை உலகக்கிண்ணத்தை வென்ற அவுஸ்ரேலிய அணியின் அண்மைக்கால பெறுபேருகள் சிறப்பானதாக இல்லை,இந்தியாவிடம் டெஸ்தொடர் தோல்வி,ஆஷஸ் தொடரில் இங்கிலாந்திடம்,தடுமாறுகின்றது,குறிப்பாக இரண்டாவது டெஸ்போட்டியில் இனிங்ஸ் தோல்வி, இதனால் வெற்றிக் கேப்டன் பொண்டிங்கின் தலைமைப்பதவி கேள்விக்குறியாகி,உள்ளது,ஆனால் அவுஸ்ரேலிய அணியைப் பொறுத்த மட்டில் உலகக்கிண்ணம் போன்ற தொடர்களில் சிறப்பாக ஆடுவது அந்த அணியின் வழமை,அதை விட நடப்புச்சாம்பியனாக இருப்பதால் அவுஸ்ரேலியாவிற்கு இன்னும் நெருக்கடி,எனவே பொண்டிங் குழுவினர் தமது  திறனை உலகக்கிண்ணத்தில் நிறுபிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.எனவே இம்முறை கிண்ணத்தை வெல்ல அவுஸ்ரேலிய அணி  போராட வேண்டும்,இம்முறையும் கிண்ணத்தை வென்று தொடர்ச்சியாக மூன்று உலகக்கிண்ணத்தை வென்ற அணித்தலைவராக பொண்டிங் சாதனை படைப்பாரா பொறுத்து இருந்து பார்ப்போம்.

உலகக்கிண்ணபோட்டிகளை பொருத்தமட்டில்,இதுவரை நடைபெற்ற 9தொடர்களில்,1983,1992,1996,1999,2003,2007,ஆகிய 6தொடர்களில் ஆசிய அணி ஒன்ரு  இறுதிப்போட்டிக்குள் வந்துள்ளதை கானலாம் அதிலும் 1992 ல் இருந்து தொடர்ச்சியாக ஆசிய அணி ஒன்று இறுதிப்போட்டிக்குள் வருவதை அவதானிக்கமுடிகின்றது,(அட்டவனையைப் பார்க்க)

ஆண்டு
இறுதிப்போட்டிக்கு வந்த அணிகள்
உலகக்கிண்ணத்தை வென்ற அணி
உலகக்கிண்ணத்தை வென்ற அணியின் தலைவர்
போட்டி நடைபெற்ற மைதானம்

1975
மேற்கு இந்திய தீவுகள்  VS அவுஸ்ரேலியா
மேற்கு இந்திய தீவுகள்
Clive Lloyd
Lorad’s,London
(England)

1979
மேற்கு இந்திய தீவுகள் VS இங்கிலாந்து

மேற்கு இந்திய தீவுகள்
Clive Lloyd
Lorad’s,London
(England)

1983
இந்தியா VS மேற்கு இந்திய தீவுகள்
இந்தியா
கபில்தேவ்
Lorad’s,London
(England)

1987
அவுஸ்ரேலியா VS இங்கிலாந்து

அவுஸ்ரேலியா
அலன்போடர்
Eden Gardens,Kolkata
(India)

1992
பாகிஸ்தான் VS இங்கிலாந்து
பாகிஸ்தான்
இம்ரான்கான்
MCG,Melbourne,
(Australia)
1996
இலங்கை VS  அவுஸ்ரேலியா
இலங்கை
அர்ஜுன ரணதுங்க
Gaddafi Stadium,Lahore,
(Pakistan)
1999
அவுஸ்ரேலியா VS பாகிஸ்தான்
அவுஸ்ரேலியா
ஸ்ரிவோக்
Lorad’s,London,
(England)
2003
அவுஸ்ரேலியா VS இந்தியா
அவுஸ்ரேலியா
ரிக்கி பொண்டிங்
Wanderers,
Johannesburg,
(South Africa)

2007
அவுஸ்ரேலியா VS இலங்கை 
அவுஸ்ரேலியா
ரிக்கி பொண்டிங்
Kensington Oval,
Bridgetown,
(Westindies)



 எனவே நான் நினைக்கிறேன் இம்முறையும் ஆசிய அணி ஒன்று இறுதிப்போட்டிக்கு வரும், 2011 உலகக்கிண்ணத்தை ஆசிய அணி ஒன்று வெல்லலாம்,
ஆனால் அவுஸ்ரேலியா,தென்னாபிரிக்கா,இங்கிலாந்து அணிகளுக்கும்,இம்முறை கிண்ணத்தை வெல்லும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது,கிறிக்கெற்டை பொருத்த மட்டில் கடைசிப்பந்து வரை முடிவுகள் மாறலாம், பொறுத்து இருந்துபார்ப்போம்,இம்முறை யார் கிண்ணத்தை வெல்கின்றார்கள் என்று.
இலங்கை அணிகிண்ணத்தை வெல்லவேண்டும் என்பது எனது விருப்பம்,சாதிப்பார்களா,சங்கா குழுவினர்,பொருத்து இருந்து பார்ப்போம்.

Post Comment

0 comments:

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails