Monday, April 09, 2012

பதிவுலகம் ஒரு பயங்கர உலகம்

அனைவருக்கும் வணக்கம் எப்படி நலம் நண்பர்களே?நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

சிலகாலம் பதிவுலகப் பக்கம் வரமுடியாததால் அன்பு அண்ணன் தனிமரம் அவர்கள் தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இடம் பிடித்த போது அவருடன் இணைந்து கொள்ளமுடியவில்லை என்று ஒரு வருத்தம்.அண்ணே பிந்திய வாழ்த்துக்கள்.
உங்கள் எழுத்துக்களுக்கு இன்னும் பல அங்கிகாரங்கள் கிடைக்கவேண்டும்.
வாழ்த்துக்கள் பாஸ்.

ஏக்கம்
முன்பெல்லாம் இரவு 1மணி என்றாலும் செங்கோவி அண்ணன் ப்ளாக்கில் கும்மி அடிப்போம்.ம்ம்ம்ம்.... அது ஒரு காலம் மீண்டும் கிடைக்குமா என்று மனம் ஏங்குகின்றது.எனக்கு தெரிய பதிவுலகில் செங்கோவி அண்ணன் எழுதிய ”மன்மத லீலைகள் ”போல அதிகளவு பகுதிகள் கொண்ட ஒரு வெற்றிகரமான தொடரை வேறு எந்த பதிவரும்எழுதியது இல்லை.அதைவிட ”நானா யோசிச்சேன்”என்று ஒரு மசாலா பதிவு எழுதுவார் பாருங்க அவருக்கு நிகர் அவர்தான்.மறுபடியும் செங்கோவி அண்ணன் பதிவுலகிற்கு திரும்பி வரும் வரை காத்திருப்போம்.அண்ணே சீக்கிரம் வாங்கண்ணே......

செங்கோவி அண்ணின் பதிவுகள் பற்றி பேசிட்டு ஹன்சிகா போட்டோ போடாட்டி எப்படி அதுதான் இந்த போட்டோ அவ்வ்வ்வ்வ்
செங்கோவி அண்ணன் போலத்தான் மைந்தன் சிவா மிகச்சிறந்த ஒரு பதிவர் அவர் பதிவுலகில், இருந்து ஒதுங்கியது மிகவும் வருத்தமாக இருந்தது.
என் பதிவுலக ஆரம்பகாலத்தில் என் பதிவுகளை ஊக்குவித்த நண்பன் மைந்தன் சிவா உங்கள் பதிவுகளை மீண்டும் படிக்க முடியுமா? 

அதேபோல அகாதுகா அப்பாடக்கர்ஸ்(சந்தானம் பேன்ஸ்) இவர்களின் பதிவுகளையும் அண்மைக்காலங்களாக படிக்கமுடியவில்லை அன்மையில் ஒரு சில பதிவுகள் எழுதினார்கள் போல நான் பதிவுலகைவிட்டு ஒதுங்கியிருந்தால் படிக்கமுடியவில்லை ஆனால் முன்பு போல தொடர்ந்து பதிவுகளை தரவேண்டும் காத்திருப்போம்.

அதேபோல இன்னும் ஒரு பதிவர் கந்தசாமி இவரும் மைந்துவை போலவே என் ஆரம்பகால பதிவுகளை ஊக்குவித்த நண்பன். முன்பெல்லாம் நிறைய எழுதுவார் இப்ப அதிகமாக எழுதுவது இல்லை இவரது பதிவுகளில் ஒரு அதிரடி இருக்கும்....மீண்டும் கந்து உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது உங்கள் ஸ்டைலில் பல பதிவுகள் போடுங்க.....

அதேபோல தம்பி ஆகுலன் ஒரு சில பதிவுகளோடு நிறுத்திவிட்டார் அவருடன் சமகாலத்தில் பதிவு எழுத ஆரம்பித்த நானும்,கோகுலும் ஒரளவு பதிவுலகில் அறியப்பட்ட பதிவராக மாறிவிட்டோம் ஆனால் ஆகுலன் ஒரு சில பதிவுகளோடு பதிவுலகை விட்டு ஒதுங்கிவிட்டார்.நேரம் கிடைக்கும் போது மீண்டும் வாங்க தம்பி ஆகுலன்.......

அதே போல நண்பன் துஷி மீண்டும் உங்கள் தளத்தில் அந்த பழய கும்மி அடிக்க முடியுமா? நீங்கள் பிசி என்று தெரியும் நேரம் கிடைக்கும் போது பதிவுகள் எழுதுங்கள்.

அளவில்லா மகிழ்ச்சி

எங்க தல தாதா கங்குலியின் அதிரடி தலைமைத்துவத்தை கிரிக்கெட்டில் மீண்டும் பார்பதற்கு இந்த ஜ.பி.எல்  சீசனின் மூலம் ஒரு வாய்ப்பு. புணேவாரியஸ் அணியின் கேப்டனாக உள்ள நம்ம தாதா முதல் இரண்டு போட்டிகளிலும் புணே வாரியஸ் அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச்சென்றுள்ளார்.ஜ.பி.எல் போட்டிகள் எனக்கு அவ்வளவு பிடிப்பது இல்லை.கங்குலி கொல்கத்தா அணியில் இருந்த போது அவருக்காக மட்டும் போட்டிகளை பார்பதுண்டு இதோ இப்போது எங்க தல புணேவாரியஸ் அணியின் கேப்டனாக இந்த சீசனில் களம் இறங்கியுள்ளார்.எனவே இம்முறை ஜ.பி.எல் போட்டிகளை தவராமல் பார்க்க போகின்றேன்..என்னை போல தாதா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

உங்கள் ஆலோசனை
என் தளத்துக்கு பதிவுலகில் ஒரு அங்கிராரத்தை பெற்றுத்தந்ததும்,பல நண்பர்களை எனக்கு தந்ததுமான ”மறக்கமுடியாத பாடசாலை நாட்கள்” என்ற தொடரை கொஞ்சம் மெருகேற்றி ஒரு குறும் நாவலாக வெளியிடலாம் என்ற ஒரு ஜடியா இருக்கின்றது இது பற்றி நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.அதைவிட தாதா கங்குலி பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்பது என் கனவாகும்.இதற்காக முதல் கட்டமாக தமிழில் வெளியிடுவதற்கான முயற்சிகளை ஆரம்பிக்கலாம் என்று இருக்கின்றேன் இது பற்றியும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றேன் நண்பர்களே.

அது எல்லாம் சரி அது என்ன தலைப்பு பதிவுலகம் பயங்கர உலகம் என்று பாக்குறீங்களா அது ச்ச்ச்சும்மா..............பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு போடுறன் அது ஹிட்டாக வேண்டாமா? அதுக்குதான் இந்த தலைப்பு ஹி.ஹி.ஹி.ஹி...........

எனக்கு நேரம் கிடைக்கும் போது மீண்டும் வழமை போல உங்கள் நண்பர்கள் தளத்தில் பல்சுவை பதிவுகள் வெளிவரும்.அதைவிட அனைத்து நண்பர்களின் தளங்களிற்கும் ,ஓட்டு கருத்துரை போடுவேன் என்பதனை அன்புடன் அறியத்தருகின்றேன் ஹி.ஹி.ஹி.ஹி..................

முஸ்கி-என் தளத்தில் பாலோவர் விட்ஜெட்டை காணவில்லை அதை மீண்டும் கொண்டு வரமுடியுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே

Post Comment

25 comments:

பால கணேஷ் said...

நீண்ட நாளுக்குப் பின் உங்களைப் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. புத்தகம் வெளியிடும் எண்ணத்தில் இருப்பது அதைவிட அதிக மகிழ்ச்சி. எழுதுங்கள். வெற்றிக் கொடி நாட்டுங்கள். நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

சொல்ல வந்த விஷயத்தை சுவைப்பட சொல்லுவதில் வல்லவர் செங்கோவி. அவர் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தனிமரம் said...

வணக்கம் பாஸ்!
நலமா?
முதலில் வாழ்த்துச் சொன்னதற்கு நன்றி.
நானும் ஏன் இவர்கள் காணாமல் போனார்கள் என்று ஏங்குகின்றேன்.
உங்கள் அழைப்பு அவர்களுக்கு கேட்குதா என்று பார்ப்போம்.தொடர்ந்து எழதுங்க சந்திப்போம்.

Yoga.S. said...

இரவு வணக்கம் ராஜ்!இடைவேளைக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி!மதுரை போய் வந்தபின் ஒரு பதிவு கிடைத்தது!பயணக்கட்டுரை போல் தருவேன் என்றீர்கள்.வருமா?அப்புறம் செங்கோவி விரைவில் வருவதாக சொல்லியிருக்கிறார்.கந்தசாமி ஐ.பி.எல் பற்றிய ஒரு அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன் கொடுத்தார்(பதிவிட்டார்).துஷி "மாட்டுப்பட்டுப்"போனார்!காட்டானும் என்னவாயிற்றோ தெரியவில்லை!மைந்தன் சிவா ஈழவயலில் ஒரு பதிவு(சாதியை ஒழிக்கப் போகிறாராம்)கொடுத்திருந்தார்!ம.தி.சுதா.வேலை அதிகம் என்று கடேசியாக ஒரு பதிவு "ஒரு குருதட்சனையும்,பதிவர்களின் குறும்படமும்".நிரூபன்,லீவு குறைவு.கிட்டும் நேரத்தில் மணிக்கொரு பதிவு.நேசன்,நட்சத்திரமாக ஜொலித்தார்!இப்போதும் ஒரு பதிவு இட்டிருக்கிறார்!கும்மி அவர் தளத்திலும்,அப்புறம் ஹேமா தளம்:"வானம் வெளித்த பின்னும்"&"உப்புமடச் சந்தி"யில் தான் தொடர்கிறது!

K.s.s.Rajh said...

@ கணேஷ் கூறியது...
நீண்ட நாளுக்குப் பின் உங்களைப் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. புத்தகம் வெளியிடும் எண்ணத்தில் இருப்பது அதைவிட அதிக மகிழ்ச்சி. எழுதுங்கள். வெற்றிக் கொடி நாட்டுங்கள். நல்வாழ்த்துக்கள்////

வணக்கம் பாஸ் மிக்க நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ பாரத்... பாரதி... கூறியது...
சொல்ல வந்த விஷயத்தை சுவைப்பட சொல்லுவதில் வல்லவர் செங்கோவி. அவர் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ தனிமரம் கூறியது...
வணக்கம் பாஸ்!
நலமா?
முதலில் வாழ்த்துச் சொன்னதற்கு நன்றி.
நானும் ஏன் இவர்கள் காணாமல் போனார்கள் என்று ஏங்குகின்றேன்.
உங்கள் அழைப்பு அவர்களுக்கு கேட்குதா என்று பார்ப்போம்.தொடர்ந்து எழதுங்க சந்திப்போம்.
////
வாங்க பாஸ் நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ Yoga.S.FR கூறியது...
இரவு வணக்கம் ராஜ்!இடைவேளைக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி!மதுரை போய் வந்தபின் ஒரு பதிவு கிடைத்தது!பயணக்கட்டுரை போல் தருவேன் என்றீர்கள்.வருமா?அப்புறம் செங்கோவி விரைவில் வருவதாக சொல்லியிருக்கிறார்.கந்தசாமி ஐ.பி.எல் பற்றிய ஒரு அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன் கொடுத்தார்(பதிவிட்டார்).துஷி "மாட்டுப்பட்டுப்"போனார்!காட்டானும் என்னவாயிற்றோ தெரியவில்லை!மைந்தன் சிவா ஈழவயலில் ஒரு பதிவு(சாதியை ஒழிக்கப் போகிறாராம்)கொடுத்திருந்தார்!ம.தி.சுதா.வேலை அதிகம் என்று கடேசியாக ஒரு பதிவு "ஒரு குருதட்சனையும்,பதிவர்களின் குறும்படமும்".நிரூபன்,லீவு குறைவு.கிட்டும் நேரத்தில் மணிக்கொரு பதிவு.நேசன்,நட்சத்திரமாக ஜொலித்தார்!இப்போதும் ஒரு பதிவு இட்டிருக்கிறார்!கும்மி அவர் தளத்திலும்,அப்புறம் ஹேமா தளம்:"வானம் வெளித்த பின்னும்"&"உப்புமடச் சந்தி"யில் தான் தொடர்கிறது!
////

நிச்சயமாக பயணக் கட்டுரைவரும் ஜயா....
நன்றி ஜயா

Prem S said...

ம்ம் ஆனா தலயோட பழைய பேட்டிங் இன்னும் வரலயே

Prem S said...

உங்கள் ப்ளாக்கின் மொழியை தமிழ் என்று வைத்தால் Followers Gadget தெரியாது. அதனை ஆங்கிலத்திற்கு மாற்றவும்.
ப்ளாக் மொழியை மாற்ற Blogger Dashboard => Settings => Language and Formatting பகுதிக்கு சென்று Language என்ற இடத்தில் English என்பதை தேர்வு செய்யுங்கள்.பின்பு add a gadget மூலம் Followers Gadget இணையுங்கள் அன்பரே

கூடல் பாலா said...

வெல்கம் பேக் !

K.s.s.Rajh said...

@ PREM.S said...
ம்ம் ஆனா தலயோட பழைய பேட்டிங் இன்னும் வரலயே
////
தலையை மீண்டும் போட்டிகளில் பார்பதே என்னைப்போன்ற ரசிகர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சிதான் பழய ஸ்டைலில் கலக்குவார் என்று எதிர்பார்ப்போம்

K.s.s.Rajh said...

@ PREM.S said...
உங்கள் ப்ளாக்கின் மொழியை தமிழ் என்று வைத்தால் Followers Gadget தெரியாது. அதனை ஆங்கிலத்திற்கு மாற்றவும்.
ப்ளாக் மொழியை மாற்ற Blogger Dashboard => Settings => Language and Formatting பகுதிக்கு சென்று Language என்ற இடத்தில் English என்பதை தேர்வு செய்யுங்கள்.பின்பு add a gadget மூலம் Followers Gadget இணையுங்கள் அன்பரே
///
மிக்க நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ koodal bala said...
வெல்கம் பேக் !
////

நன்றி பாஸ்

திண்டுக்கல் தனபாலன் said...

வாங்க நண்பரே வாங்க !

'பசி'பரமசிவம் said...

'ஹிட்’ ஆகணும்னு நீங்க போட்ட பதிவைப் படிச்சி நான் ரொம்ப ‘ஹீட்’ஆயிட்டேங்க!!
இருப்பினும்....
பதிவைப் படித்து ரசித்து மகிழ்ந்தேன்.
நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹாய் ராஜா,,,,,,

உங்கள் விருப்பம் விரைவில் நிறைவேறும் என நினைக்கிறேன்.

இரவில் கும்மி அடிக்கலாம்.

காந்திமதி said...

வருக, வருக. இனியாவது தொடர்ந்து எழுதுவீங்களா? இல்லை மறுபடியும் காணாம போய்டுவீங்களா?!

Anonymous said...

பாஸ், எங்களையும் ஞாபகம் வச்சு எழுதுனதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.. இல்ல பாஸ் முந்தி மாதிரி இல்ல, இப்பெல்லாம் வேலைய குடுத்து கூடவே டெட்லைனையும் குடுத்துபுடுறாங்கே, கெடைக்கிற நேரத்துல ஒன்னு ரெண்டு போடுறது.. உங்களுக்கும் அதே கதிதான்ன்னு தோணுது.. இப்பதான் இந்த மாசம் ஒரு ரெண்டு மூணு பதிவு போட்டோம்.. தொடர்வோம் நட்பை..

K.s.s.Rajh said...

@முனைவர் பரமசிவம் said...
'ஹிட்’ ஆகணும்னு நீங்க போட்ட பதிவைப் படிச்சி நான் ரொம்ப ‘ஹீட்’ஆயிட்டேங்க!!
இருப்பினும்....
பதிவைப் படித்து ரசித்து மகிழ்ந்தேன்.
நன்றி////
ஹா.ஹா.ஹா.ஹா..........நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ தமிழ்வாசி பிரகாஷ் said...
ஹாய் ராஜா,,,,,,

உங்கள் விருப்பம் விரைவில் நிறைவேறும் என நினைக்கிறேன்.

இரவில் கும்மி அடிக்கலாம்.
////

ஹாய் பாஸ் வாங்க பாஸ் ஆம் பாஸ் விரைவில் கும்மி அடிப்போம் என்று எதிர்பாக்கின்றேன்

K.s.s.Rajh said...

@ மொக்கராசு மாமா said...
பாஸ், எங்களையும் ஞாபகம் வச்சு எழுதுனதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.. இல்ல பாஸ் முந்தி மாதிரி இல்ல, இப்பெல்லாம் வேலைய குடுத்து கூடவே டெட்லைனையும் குடுத்துபுடுறாங்கே, கெடைக்கிற நேரத்துல ஒன்னு ரெண்டு போடுறது.. உங்களுக்கும் அதே கதிதான்ன்னு தோணுது.. இப்பதான் இந்த மாசம் ஒரு ரெண்டு மூணு பதிவு போட்டோம்.. தொடர்வோம் நட்பை..
////

ஆமா பாஸ் நமக்கும் அதே கெதிதான் நம் நட்பு என்று தொடரும்
கிடைக்கும் நேரங்களில் பதிவுகள் போடுங்கள் பாஸ்

K.s.s.Rajh said...

@ காந்திமதி said...
வருக, வருக. இனியாவது தொடர்ந்து எழுதுவீங்களா? இல்லை மறுபடியும் காணாம போய்டுவீங்களா?!
////

இனி இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு பதிவாவது போடுவேன் சகோ

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள் பாஸ்! நீங்களும் கொஞ்ச நாள் லீவா! என்ன ஆள காணோமேன்னு பார்த்தேன்! கலக்குங்க பதிவுலகில்!

Yoga.S. said...

காலை வணக்கம் ராஜ்!!இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்!!!!!!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails