Monday, March 12, 2012

ராவிட் போல யாரு மச்சான்?சுவர் இல்லாத சித்திரமாக இந்திய அணி

சில விடயங்கள் என்றோ ஒரு நாள் நிச்சயம் நடக்கும் என்று தெரிந்தும் அதை மனம் ஏற்றுக்கொள்வது இல்லை.அப்படித்தான் ராவிட்டின் ஓய்வையும் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.கிரிக்கெட்டை ஆழமாக ரசிக்கும், நேசிக்கும் ஓவ்வொறுவரின் மனதிலும் ராகுல் ராவிட் என்ற வீரர் மீதான அபிமானம் என்றும் குறையாது.மேலோட்டமாக கிரிக்கெட்டை நோக்குபவர்களுக்கு ராவிட்டை சில வேளைகளில் பிடிக்காமல் போகலாம்.ஆனால் கிரிக்கெடை ஆழமான நோக்கும் ரசிகர்களுக்கு ராவிட்டின் அருமை எத்தகையது என்று இலகுவில் புரிந்துவிடும்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

இத்திய அணியை 16 ஆண்டுகள் தன் தோள்களில் தாங்கியவர் தன் சுமையை இளைஞர்களுக்கு கொடுத்துவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார்.ஆனால் இந்திய அணியில் ராவிட்டின் இடத்தை நிரப்பக்கூடிய ஒரு வீரர் தற்போது நிச்சயம் இல்லை இனி எப்போது உருவாகுவார் என்பது சந்தேகமே.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)

கிரிக்கெட்டையும் தாண்டி ராவிட் எல்லோறாலும் மதிக்கப்படுவதுக்கு காரணம் ராவிட்டின் சுபாவம் அமைதியான சுபாவம் கொண்டவர் கிரிக்கெட்டை மதித்து சர்சைகளில் சிக்காமல் ஆடிய சில வீரர்களில் ராவிட்டும் ஒருவர்
.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
2004ம் ஆண்டும் பாகிஸ்தான் சென்ற இந்திய அணியில் கேப்டன் கங்குலி ஒரு டெஸ்டில் ஆடமுடியவில்லை எனவே துணைக் கேப்டனாக இருந்த ராவிட் அணியை வழிநடத்தினார் அந்தப்போட்டியில் சச்சின் 194* ஓட்டங்களை பெற்று இருந்த போது ராவிட் டிக்ளேயர் செய்தார்.இதனால் சச்சின் இரட்டை சதம் பெற முடியாமல் போனது.இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.ஆனால் கங்குலி சொல்லித்தான் ராவிட் டிக்ளேயர் செய்ததாகவும் அப்போது செய்திகள் வந்தன.ராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய சர்ச்சை இதுதான் என்று நினைக்கின்றேன்.


ராவிட் இந்திய அணியில் நுழைந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு சர்ச்சைகளில் இந்திய அணி சிக்கிய நேரம் அது.அதற்கு சில ஆண்டுகளின் பின் முற்று முழுதாக இளம் வீரர்களுடன் கங்குலி தலைமையில் ஒரு அணி கட்டி எழுப்பப்பட்ட போது அந்த அணியின் தூணாக இருந்தவர் ராவிட்.

விக்கெட் கீப்பராக ராவிட்
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இல்லையா கூப்பிடு ராவிட்டை,விக்கெட் கீப்பர் இல்லையா கூப்பிடு ராவிட்டை இப்படி அணியில் எந்த வேலையையும் கேப்டனின் கூற்றுக்கு இணங்க செய்தவர் ராவிட்.விக்கெட் கீப்பர் ஒருவரை தேடுவதைவிட்டு விட்டு ராவிட்டையே விக்கெட் கீப்பராக்கி அதற்கு பதிலாக மேலதிகமாக ஒரு துடுப்பாட்ட வீரரை அணியில் சேர்த்து அதில் வெற்றியும் கண்டார் கங்குலி.இந்திய அணியை சிறந்த அணியாக கங்குலி கட்டி எழுப்பும் போது அதன் தூணாக இருந்து பல சுமைகளை தாங்கியவர் ராவிட் என்றால் மிகையாகாது,அப்போது துணைக்கேப்டன் பணியையும் சிறப்பாக செய்தவர்.


ராவிட் டெஸ்ட் போட்டிகளுக்குத்தான் சரி ஒரு நாள் போட்டிகளுக்கு சரிப்பட்டு வர மாட்டார். என்று பலர் கூறிய காலத்தின் தன் துடுப்பினால் பதிலடி கொடுத்தவர் ராவிட்,1999 ல் உலகக்கிண்ணப்போட்டிகளில் ராகுல் ராவிட் சூராவளியாய் சுழன்றார்...அந்த தொடரில்421 ஒட்ங்களைக்குவித்து அந்த உலகக்கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்தவீரர் ராவிட்தான்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)


இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவரும் கங்குலியும் இணைந்து எடுத்த 318 ஓட்டங்கள் இன்றுவரை ஒரு நாள் போட்டியில் ஒரு ஜோடி இணையாக எடுத்த“இரண்டாவது” இணைப்பட்ட சாதனையாகும்...முதலாவது இணைப்பட்ட சாதனையும் ராகுல் ராவிட் வசம்தான் ஆமாம்..அதேவருடம்.நியூஸ்லாந்து அணிக்கு எதிராக அவரும் சச்சினும் இணைந்து  இணையாக 331 ஓட்டங்கள் எடுத்தார்கள்.. இதில் ராகுல்ராவிட் 153 ஒட்டங்களை விளாசினார் இதான் ஒரு நாள் போட்டிகளில் இவரது அதிக பட்ச ஓட்டம் ஆகும்..மேலும் இந்த இணைப்பாட்ட சாதனை..இன்றுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை..ஒரு நாள் போட்டிகளில் லாயக்கு இல்லை என்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவர்...ஒருநாள் போட்டிகளில் முதல் இரண்டு அதிகபட்ச இணைப்பாட்ட சாதனைக்கும் சொந்தக்காரர்..



அதைவிட ஒரு நாள் போட்டிகளில் பத்தாயிரம் ஒட்டங்களைக்கடந்த வீரர்களில் ராகுல் ராவிட்டும் ஒருவர்...இந்திய வீரர்களில் பத்தாயிரம் ஒட்டங்களைக்கடந்த மூன்றாவதுவீரர்..சச்சின்,கங்குலி..ஆகியோர் பத்தாயிரம் ஓட்டங்களைக்கடந்துள்ளனர்..என்பது குறிப்பிடத்தக்கது..
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
அந்த கொல்கத்தா டெஸ்ட் போட்டியை மறக்க முடியுமா?2001ம் ஆண்டும் அவுஸ்ரேலிய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளிவைத்த கங்குலி தலைமையிலான இந்திய அணியின் வெற்றிக்கு காரணம். பாலோ ஒன் ஆகியும் மனம் சோர்ந்து போகாமல் கங்குலியின் அதிரடி வழிகாட்டலில் ராவிட்,லக்ஸ்மன் ஆடிய ஆட்டம் கிரிக்கெட் வரலாற்றில் என்றும் மறக்கப் படமுடியாதது.இந்தியா பெற்ற டெஸ்ட் வெற்றிகளில் மிகச்சிறந்த வெற்றிகளில் அதுவும் ஒன்றாக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்பது ஜயமில்லை.

இந்திய அணியின் மும்மூர்த்திகளில் இருவர் ஓய்வு பெற்றுவிட்டனர் எஞ்சியுள்ள சச்சின் எப்போது?
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து நாடுகளுக்கு(10 நாடுகள்)எதிராகவும் சதம் அடித்த முதல் வீரர் அதுவும் அந்த நாடுகளுக்கு எதிராக அந்த நாடுகளில் வைத்தே சதம் பெற்றுள்ள ஒரே வீரர் ராவிட்தான்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
இந்திய அணியின் கேப்டனாக கங்குலி இருந்த போது துணைக் கேப்டனாக இருந்தவர் ராவிட் 2003ம் ஆண்டும் உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு இந்திய அணிவந்த போது துணைக்கேப்டனாக இருந்தார்.கங்குலி விளையாடாத போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக ராவிட் செயல் படுவார்.அதன் பின் கங்குலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு இந்திய அணியின் கேப்டனாக ராவிட் நியமிக்கப் பட்டார். கேப்டனாக மிகச்சிறப்பாக செயல் பட்டார் என்று கூறமுடியாவிட்டாலும் ராவிட் ஒரு சிறந்த கேப்டன் தான்.தோனியை கூல் கேப்டன் என்று தற்போது கூறுகின்றார்கள். ஆனால் உண்மையில் கூல் கேப்டன் என்ற பெயர் ராவிட்டுக்கும் மிக பொருந்தும்


அதற்கு மிகச் சிறந்த உதாரணம் ராவிட் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடிய போது ஒரு போட்டியில் சொயிப் மாலிக் பிட்ச்சுக்குள் இருந்த பந்தை காலால் எத்தினார்.
அப்போது இந்திய வீரர்கள் பலர் கோபமடைந்தாலும் மிக கூலாக ராவிட் அந்த சம்பவத்தை எதிர் கொண்டார் நடுவரிடம் கூட முறையிடவில்லை.அப்போது பலர் ராவிட்டை விமர்சித்தார்கள். கங்குலி போல ஆக்ரோசமான கேப்டனாக இருந்திருந்தால் சொயிப் மாலிக்கு தக்க பதிலடி கொடுத்து இருப்பார் ஆனால் ராவிட் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று. ஆனால் பிரச்சனையை வளர்க்க விரும்பாமல் ராவிட் அதை சாதாரனமாக எடுத்துக்கொண்டது உண்மையில் ராவிட் ஜெண்டில்மேன் கிரிக்கெட் வீரர் தான் என்பதை உணர்த்தியது.


2007ம் ஆண்டு உலக்கோப்பை போட்டியில் இந்திய அணி படு தோல்வி அடைந்ததை தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து ராவிட் விலகினார்.எப்போதும் ராவிட் இந்திய தேர்வாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க விரும்புவது இல்லை அவராக ஒதுங்கிவிடுவார். கேப்டன் பதவியில் இருந்து விலகும் போது சரி தற்போதும் சரி அதைத்தான் செய்துள்ளார்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
ராவிட்டின் ஓய்வு சச்சினுகு கொடுக்கப்பட்டுள்ள அலாரம் தற்போது மோசமாக ஆடிவரும் சச்சின் சீக்கிரம் ஒரு தீர்கமான முடிவை எடுக்கவேண்டும் சச்சினை இந்திய அணியில் இருந்து எப்படி நீக்குவது என்று இந்திய தேர்வாளர்களுக்கு தர்மசங்கடம். இல்லை என்றால் ஒருவருடங்களாக ஒரு சதம் பெறமுடியாமல் திணரும் சச்சினை ஏன் இன்னும் அணியில் வைத்திருக்கின்றார்கள்? அவுஸ்ரேலிய அணியில் சச்சின் விளையாடியிருந்தால் இன்நேரம் சச்சின் வீட்டிற்கு போயிருப்பார்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
பழய சாதனைகள் எதையும் பார்த்து அணியில் வீரர்களை அவுஸ்ரேலியா தேர்வு செய்வதில்லை அது யாராக இருந்தாலும் அவர் சிறப்பாக விளையாடினால் தான் அணியில் இடம். இது அவர்களின் பார்முலா இதுதான் அவுஸ்ரேலிய அணி கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த பிரதான காரணங்களில் ஒன்று.அண்மையில் நடந்து முடிந்த முக்கோணத்தொடரில் கூட அவுஸ்ரேலிய அணிக்கு இரண்டு உலகக்கோப்பையை பெற்றுக்கொடுத்த கேப்டனும் அவுஸ்ரேலிய அணியை உலக கிரிக்கெட் அரங்கில் அசைக்க முடியாத அணியாக வைத்திருந்த சிறந்த கேப்டனும் மிகச்சிறந்த வீரருமான ரிக்கி பொண்டிங் சில போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதால் அடுத்த போட்டியில் அணியில் இருந்து நீக்கிவிட்டார்கள் இதனால் அதிருப்தி அடைந்த பொண்டிங் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஆனால் அவுஸ்ரேலிய தேர்வாளர்களுக்கு இருக்கும் துணிச்சல் இந்திய அணி உட்பட பல அணிகளின் தேர்வாளர்களுக்கு இல்லை என்பதே நிதர்சனம்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
எனவே மிகச்சிறந்த வீரரான சச்சின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கெளரவமாக ஓய்வு பெறவேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பாகும். ராவிட்டின் ஓய்வு சச்சினுக்கு ஒரு அலாரம் எனவே சச்சினும் ஒரு தீர்கமான முடிவை எடுக்கவேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.பொறுத்திருந்து பார்போம்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
ராவிட் சில குறிப்புக்கள்
164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 31,258 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். டெஸ்ட் போட்டியில் இதுவும் ஒருசாதனைதான். ஏனெனில் வேறு எந்த வீரரும் டெஸ்ட் போட்டியில் ஒட்டுமொத்தமாக 29 ஆயிரம் பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டது இல்லை.
டெஸ்ட்போட்டிகளில் 13,288 ரன்கள் எடுத்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். சச்சின் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)


டெஸ்ட்,ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் பத்தாயிரம் ஓட்டங்களுக்கு மேல் குவித்த சில வீரர்களில் ராவிட்டும் ஒருவர்
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருதுகளுடன் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விஸ்டன் விருது, ஐ.சி.சி. அணியின் கேப்டன், ஐ.சி.சி.யின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது ஆகிய கெளரவத்தையும் பெற்றுள்ளார்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
இந்திய அணி 25 டெஸ்ட் போட்டிகளில் திராவிட் தலைமையில் விளையாடியுள்ளது. இதில் வெற்றி 8, தோல்வி 6, டிரா 11.


79 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ள ராவிட் அதில் 42 போட்டிகளில் வெற்றி பெற்றுக்கொடுத்துள்ளார் 33 போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது 4 போட்டிகளில் முடிவுகாணப் படவில்லை.

உள்நாட்டில் 70 டெஸ்ட் போட்டிகளிலும், வெளிநாடுகளில் 94 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். உள்நாட்டு போட்டிகளில் 5,598 ரன்களும் (சராசரி 51.35), வெளிநாடுகளில் 7,690 ரன்களும் (சராசரி 53.03) எடுத்துள்ளார்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
டெஸ்ட் போட்டியில் இருமுறை இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்துள்ளார். காவஸ்கர், ரிக்கி பொண்டிங் ஆகியோர் 3 முறை இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்துள்ளனர்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com) 

விக்கெட் கீப்பராக அல்லாமல், டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 210 கேட்ச்களை பிடித்த ஒரே வீரர்.
Batting and fielding averages

MatInnsNORunsHSAveBFSR100504s6sCtSt
Tests164286321328827052.313125842.5136631654212100
ODIs344318401088915339.161528471.2412839504219614
T20Is110313131.0021147.61000300
First-class298497672379427055.33681173531
List A449416551527115342.302111223317
Twenty2069626160575*28.661369117.230717825140
Bowling averages
MatInnsBallsRunsWktsBBIBBMAveEconSR4w5w10
Tests16451203911/181/1839.001.95120.0000
ODIs344818617042/432/4342.505.4846.5000
T20Is1------------
First-class29861727352/1654.602.65123.400
List A44947742142/432/43105.255.29119.2000
Twenty2069------------
(புள்ளி விபரம் espncricinfo தளத்தில் இருந்து பெறப் பட்டது)

இப்படி ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர் இவர் விளையாடிய காலத்தில் கிரிக்கெட் ரசிகர்களாக இருந்தமை எமக்கு எல்லாம் பெருமைதான்.

என் வயது இளைஞர்களின் சிறுவயது கிரிக்கெட் ஹீரோக்கள் ராவிட்,கங்குலி,சச்சின்,சனத்ஜெயசூர்ய,பொண்டிங்,ஸ்ரிபன் பிளமிங்,முரளிதரன்,ஷேன்வோன்,பொலக்,கலீஸ்,கிப்ஸ்,கில்கிறிஸ்ட்,டேமியன் மார்ட்டின்,பிரைன் லாரா,இம்சமாம் உல் ஹக்,மைக்கல் வோகன்,முகமட் யூசுப்,போன்ற சமகாலத்தில் உச்சத்தில் பல வீரர்கள் தான். இவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையின் உச்ச கட்டத்தில் இவர்களை ரசிக்கும் வாய்ப்பு எமக்கு கிடைத்ததே பெரும் பாக்கியம்தான். இவர்கள் ஓவ்வொறுவராக ஓய்வு பெற்ற போதும் ஓய்வு பெறுகின்ற போதும் மனம் வலித்தது வலிக்கின்றது வலிக்கும்.

சச்சின்,ராவிட் என்ற இரண்டு ஜாம்பவான்களின் இணைப்பாட்டம் இனி இப்படி ஒரு சந்தர்ப்பத்தை எப்போதும் பார்க்க முடியாதே என்று மனம் வலிக்கின்றது.  
கடந்த ஆண்டு இறுதியில் ஒரு நாள் போட்டிகள்,20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ராவிட் அறிவித்தார்.அப்போது பெரிதாக தோணவில்லை காரணம் ஒரு நாள் போட்டிகளில் அவர் அப்போது விளையாடுவது குறைவு ஆனால் தற்போது முழுமையாக சர்வதேச போட்டிகளில் இருந்து ராவிட் முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டார் என்பதை மனம் நம்ம மறுக்கின்றது.இனி அவரது ஆட்டத்தை காணமுடியாதே என்று மனம் வலிக்கின்றது.நெருங்கியவர்களின் மரணம் தரும் வலியை ராவிட்டின் ஓய்வு தருகின்றது. எனக்கு மட்டும் இல்லை கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் இந்த வலி நிச்சயம் இருக்கும்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
ராவிட் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போது நான் எழுதிய பதிவை படிக்க இங்கே கிளிக்-ஒரு ரசிகனின் மனதில் ராகுல் ராவிட்



Post Comment

17 comments:

KANA VARO said...

கிரிக்கட் பற்றி எழுதும் ஒரு சிலரும் எழுதாம விடுறாங்க. நல்ல அலசல்.

எனக்கும் ட்ராவிட்டை ஆரம்பத்தில் பிடித்திருந்தது. பின்னாளில் கேப்டனாக வந்த பிறகு கங்குலி வழியிலேயே இவரும் பில்ட்-அப் வீரராகிவிட்டார். 2007ஆம் ஆண்டு பங்களாதேஷிடம் உலகக் கிண்ணத்தில் வாங்கிய அடியின் போது ட்ராவிடின் முகத்தைப் பார்க்க வேண்டுமே!

ராஜி said...

நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை. எப்பாவவது பார்க்கும்போது என்னை கவர்ந்தவகளில் டிராவிட்டும் ஒருவர். அவரை பற்றி அரிய தவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி தம்பி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அற்புதமான பேட்ஸ்மேன், கிரிக்கெட்டர், மனிதர்...!

Yoga.S. said...

PRESENT!!!

சென்னை பித்தன் said...

ஜெண்டில்மேன் கிரிக்கெட் ஆட்டக்காரர் பற்றிய நல்ல பகிர்வு.

K.s.s.Rajh said...

@KANA VARO
வருகைக்கு நன்றி அண்ணே

K.s.s.Rajh said...

@ராஜி கூறியது...
நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை. எப்பாவவது பார்க்கும்போது என்னை கவர்ந்தவகளில் டிராவிட்டும் ஒருவர். அவரை பற்றி அரிய தவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி தம்பி
////

நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
அற்புதமான பேட்ஸ்மேன், கிரிக்கெட்டர், மனிதர்...!
////
வாங்க தலைவா நன்றி தலைவா

K.s.s.Rajh said...

@Yoga.S.FR கூறியது...
PRESENT!!!
////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@சென்னை பித்தன் கூறியது...
ஜெண்டில்மேன் கிரிக்கெட் ஆட்டக்காரர் பற்றிய நல்ல பகிர்வு.////

நன்றி பாஸ்

தமிழ்வாசி பிரகாஷ் said...

எனக்கு பிடித்த வீரர், இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம் இந்திய அணியில்..

எனினும் அவர் முடிவு சிலசமயம் சரியானதாகவே தெரிகிறது.

பாலா said...

1996 ஏப்ரலில் இந்திய அணியில் டிராவிட் என்று ஒரு வீரர் சேர்க்கபடுகிறார் என்று செய்தி வந்த நாளில் இருந்து அவரது ஆட்டங்களை கவனித்து வருபவன் என்ற வகையில் இவரது பிரிவு மிகுந்த மன பாரத்தை ஏற்படுத்துகிறது. இடைப்பட்ட காலத்தில் கங்குலி அணியில் இருந்து தூக்கி எறியப்பட்ட போது அவர்மீது கொஞ்சம் கோபம் வந்தாலும், ஒரு கிரிக்கெட் வீரராக என்னை மிகவும் கவர்ந்தவர்.

கேரளாக்காரன் said...

Right decision at the right time... Indiavula innum 1008 dravid irukkanga

திண்டுக்கல் தனபாலன் said...

சிறந்த வீரரைப் பற்றி சிறப்பான பதிவு ! நன்றி !

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

Unknown said...

கிரிக்கெட் பற்றி அதிகம் தெரியாது!

புலவர் சா இராமாநுசம்

”தளிர் சுரேஷ்” said...

உண்மையிலேயே டிராவிட்டை போல ஒரு சிறந்த வீரரை நான் கண்டதில்லை! அணியின் தூண் விடைபெற்றுவிட்டது! புதிய தூணாக யார் வருவார்கள்? பார்ப்போம்!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails