Sunday, December 02, 2012

2012 வலிகள் நிறைந்த வருடம்

2012ம் ஆண்டு வாழ்க்கை பயணத்துக்கும் எனக்குமான போராட்டத்தில் என்னை மிகவும் துவண்டுவிடச்செய்த வருடம்.

ஆனால் நான் சோர்ந்து போகின்ற பொழுதுகளில் எங்கோ ஒர் மூலையில் இருக்கின்ற என் தன்னம்பிக்கை நான் இன்னும் இருக்கின்றேன் என்று எனக்கு நம்பிக்கை அளிக்கும்.

தோல்விகள் வலிகள்,வேதனைகள் என்னை வெல்லாம் ஆனால் என் தன்னம்பிக்கையை ஒரு போதும் வெல்லமுடியாது.

ஒவ்வொறு வருடம் முடியும் போதும் நினைப்பேன் அடுத்தவருடம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று. ஆனால் நிறைவேறியது இல்லை.அனால் ஏதோ ஒரு நம்பிக்கையில் மீண்டும்  இந்தவருடமும் நினைக்கின்றேன் அடுத்தவருடம் என் வாழ்க்கைப்பயணம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று.பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று.

இந்த வருடம் பல வேதனைகளைத்தந்து இருந்தாலும் என் நீண்டநாள் கனவு ஒன்று நிறைவேறியது அதாவது என் அப்பாவை அவர் பிறந்தமண்ணுக்கு (இந்தியா) அழைத்துச்செல்லவேண்டும் என்பது  என் நீண்டநாள் கனவாகும் கனவு என்பதைவிட இலட்சியம் என்றே சொல்லலாம்.இந்த வருடம் அது நிறைவேறியது.

வலைப்பதிவில் மாத்திரமே எழுதி வந்த என் எழுத்தின் மீது நம்பிக்கை வைத்து. இலங்கையில் இருந்து வெளிவரும் முழுநீள வர்ணச்சஞ்சிகையான கேடயம் மாத சச்சிகையில் அதுவும் முதலாவது பதிப்பிலே எனக்கு ஒரு ஆக்கம் எழுத சந்தர்ப்பம் வழங்கிய பதிவர் வரோ அண்ணா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் இந்த நேரத்தில் பதிவு செய்துகொள்கின்றேன்.

இன்னும் ஒருவருக்கும் நன்றி சொல்லவேண்டும் ஆனால் நன்றி என்று  வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது. உங்கள் அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.அவர் வேறுயாரும் இல்லை பதிவர் தனிமரம் நேசன்னாதான்.பதிவுலகம் எனக்கு தந்த ஒரு அண்ணன்.இத்தனைக்கும் அவர் முகம் பார்த்தது இல்லை, நேரில் சந்தித்தது இல்லை.ஆனால் உன்மையான அன்புக்கு இது எல்லாம் தேவையே இல்லை.என்பதற்கு நேசன் அண்ணா ஒரு சிறந்த உதாரணம்

என் கூடப்பிறந்த அண்ணா,சித்தப்பாக்களின் மகன்கள் என்று எனக்கு நிறைய அண்ணாக்கள் இருக்கின்றார்கள்,அவர்கள் எனக்கு எப்படியோ அதே போலத்தான் நேசன்னா நீங்களும்.உங்கள் முகம் பார்க்காவிட்டால் என்ன? நேரில் சந்திக்காவிட்டால் என்ன? என்றும் என் சகோதரர்கள் வரிசையில் நீங்கள் இருப்பீர்கள்.

நிறைய பேருக்கு நன்றி சொல்லவேண்டும் ஆனால் தனித்தனியாக நன்றி சொல்ல ஒரு பதிவு போதாது எனவே அனைவருக்கும் நன்றி நண்பர்களே.யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிக்கவேண்டுகின்றேன்.

பதிவுலகில் பெரிதாக இந்தவருடம் கவனம் செலுத்தமுடியவில்லை இந்தப்பதிவுடன் சேர்த்து 110 பதிவுகள் மட்டுமே எழுதியுள்ளேன்.அடுத்த வருடம் பார்போம்.


மீண்டும் அடுத்த வருட ஆரம்பத்தில் சந்திப்போம் நண்பர்களே.புதிய ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.

அன்புடன்
உங்கள்
நண்பன்
கே.எஸ்.எஸ்.ராஜ்

Post Comment

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அட... நானும் சிறிது ஓய்வு (?) எடுக்கப் போகிறேன்... அடுத்த வருடத்தில் சந்திக்கலாம்...

Yoga.S. said...

இரவு வணக்கம்,ராஜ்!என்னைய்யா லீவா?சார்(ஐயா)கிட்ட அப்ளிகேஷன் குடுக்கவே இல்லியே?இஷ்டத்துக்கு லீவுல போவீங்களோ?ஹி!ஹி!ஹீ!!!!

தனிமரம் said...

வலிகளும் வேதனைகளும் தான் வாழ்வின் வழிகாட்டி வாழனும் என்ற நம்பிக்கையை தருவதும் இவைதான் கடந்து வா காத்திரமான எதிர்காலம் அமையும் கவலைவேண்டாம்!

தனிமரம் said...

எப்போதும் ராச் எனக்கு தம்பிதான் சந்தோஸமான புதுவருடத்தில் மீண்டும் சந்திப்போம் சுபீட்சமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் முன்கூட்டியே!

செங்கோவி said...

வரும் புத்தாண்டு, அனைவருக்கும் இனிதாக அமையப் பிரார்த்திப்போம்.

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள்! வரும் ஆண்டில் கலக்குங்கள்!

Unknown said...

அனைவர்க்கும் சிறந்த ஆண்டாக அமைய வாழ்த்துகள்

Avargal Unmaigal said...


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails