Wednesday, March 13, 2013

இதயம் பேசுகின்றது-4

கடந்த பகுதியில் என்னை நிராகரித்த அந்த கம்பணியில் மீண்டும் வேலைக்கு கேட்டார்கள் ஆனால் என்னால் ஏற்கமுடியாத சூழல் என்று சொன்னேன் அல்லவா.சின்னவயது என் கனவு,இலட்சியமா இல்லை வேலையா என்ற சூழல் ஏற்பட்டது ஆம் என் தந்தையை அவரது சொந்த மண்ணான இந்தியாவுக்கு அழைத்து செல்லவேண்டும் என்ற என் கனவு கைகூடிய காலம் அது 

எனவே வேலையா இல்லை தந்தையை இந்தியாவுக்கு கூட்டிச்செல்வதா என்ற சூழலில் நான் சற்றும் தயங்கவில்லை தந்தையை கூட்டி செல்வது என்றே முடிவு எடுத்தேன்.காரணம் கிட்ட தட்ட 50 வருடங்களுக்கு பிறகு என் தந்தை அவரது பிறந்த மண்ணில் காலடி வைக்க போகின்றார்.இதைவிட எனக்கு வேலை ஒன்னும் பெரிதாக தெரியவில்லை.50 வருடம் என்பது மனித வாழ்வில் எவ்வளவு பெரிய காலப்பகுதி.


என் தந்தை எங்களுக்காக எவ்வளவோ கஸ்டங்களை தாங்கியிருக்கின்றார் பார்த்து பார்த்து எங்களுக்கு எல்லாம் செய்திருக்கின்றார்.ஆனால் ஒரு மகனாக நான் அவருக்கு பெரிதாக சந்தோசங்களை கொடுத்தது இல்லை.
சற்றுகோப சுபாவம் கொண்டவர் எடுத்ததுக்கும் கோபப்படுவார்.அம்மாவிடம் கூட சண்டை போடுவார்.ஆனால் பிள்ளைகளில் தனது கோபத்தை அவர் காட்டியது இல்லை.எனக்கு 23 வயதாகிவிட்டது இன்றுவரை எனக்கு அவர் அடித்ததாகவோ இல்லை கோபமாக கண்டித்தாகவோ சரித்திரம் எதுவும் இல்லை.இன்று வரை எனக்கு இது புரியாதஆச்சரியம் இது.

நான் ஒரு மகனாக நிறைவேற்றிய கடமை 50 வருடங்களுக்கு பிறகு அப்பாவை அவரின் பிறந்த மண்ணிற்கு கூட்டிச்சென்றதுதான் அந்த வகையில் நான் போன ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செய்திருக்கின்றேன்.இந்த வாய்ப்பை வழங்கிய கடவுளுக்கு நன்றி.

இந்திய பயணத்தில் சில நினைவுகள்
மதுரையில் சித்தப்பா,அப்பா,நான்
சித்தப்பாவும் அப்பாவை போலவே 50 வருடங்களுக்கு பிறகு தனது பிறந்த மண்ணில் கால்பதித்தார்.50 வருடங்களுக்கு பிறகு தங்கள் உறவுகளை,பிறந்த மண்ணை பார்த்த இருவரின் உணர்வுகளையும் அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது

இந்தியாவில் அப்பாவும்,நானும்
அப்பறம் இந்திய பயணத்தில் நான் கண்டு வியந்த ஒரு விடயம் இந்திய மக்களின் உபசரிப்பு விருந்தோம்பல் பண்பு.மிகவும் சிறப்பானது.ஒருவரின் வீட்டுக்கு போனால் முதலில் சாப்பிடவைத்துவிட்டுதான் அப்பறம் பேசுகின்றார்கள்.

ஒரு ஹோட்டலில் சாப்பிட்டேன் அங்கே வீட்டில் விருந்துவைப்பது போல அது சாப்பிடுங்க சார் நல்லாயிருக்கும் இதை சாப்பிடுங்க சார் சூப்பரா இருக்கும் என்று சர்வர் உபசரித்தது ஆச்சரியமாக இருந்தது. அந்த விருந்தோம்பல் பண்பு பிரமாதம்.

எங்கள் ஊரில் எல்லால் ஆடர் கொடுத்தால் கொண்டுவந்து மேசையில் வைத்துவிட்டு போய்விடுவார்கள் நாங்கலாக கேட்டால் தான் இட்லிக்கு சட்னி தருவார்கள் சாம்பார் தருவார்கள்.

அப்பறம் பல பதிவர்களை சந்திக்கவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன் ஆனால் ஒருவரைத்தான் சந்திக்கமுடிந்தது சிலருடன் போனில் பேசினேன் பார்ப்போம் இன்னும் ஒரு முறை போனால் சந்திப்போம்.

சரி சந்தித்த அந்த பதிவர் யார் தெரியுமா? அருமை அண்ணன் பிரபல பதிவர் மதுரையின் மாபெரும் பதிவர் அண்ணன் தமிழ்வாசி அவர்கள் தான்.போனில் அண்ணே நான் நண்பர்கள் ராஜ் கதைக்கிறேன் மீட் பண்ணனும் என்று சொன்னதும். கண்டிப்பாக என்று அவரின் பிசியான டைமுக்கு மத்தியிலும் என்னை வந்து சந்தித்தார்.பதிவுலகம் கடந்து நிறையவிடயங்களை பேசினோம்.குறிப்பாக எங்கள் ஊர்கள் பற்றி கேட்டார்.அப்பறம் போட்டோ எடுத்தே தீரனும் என்று அடம் பிடித்து அண்ணன் என்னுடன் போட்டோ எடுத்துக்கொண்டார் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஒரு மாலை பொழுதில் நானும்,அருமை அண்ணன் பிரபல பதிவர் தமிழ்வாசி பிரகாஸ் அவர்களும் மதுரை ராஜாஜி பார்க்கில்

முன்ன பின்ன நான் அவரை பார்த்தது இல்லை பதிவுலகில் அறிமுகம் மட்டும் தான்.ஆனால் ஒரு சகோதரனை போல அன்பாக என்னிடம் பேசினார்.இப்படி அன்பான  நண்பர்களை தந்த பதிவுலகிற்கு நன்றி

இந்திய பயணம் பற்றி பயணக்கட்டுரையே பல பகுதிகள்   எழுதலாம் சந்தர்ப்பம் அமைந்தால் அதை ஒரு தொடராக எழுதுகின்றேன்.

(இன்னும் பேசும் இதயம்)

அடுத்த பகுதியில் நாளை சிறப்பு இதயம் பேசுக்கின்றது காத்திருங்கள்

இந்த தொடரின் முன்னய பகுதிகளை படிக்க இங்கே க்ளிக்-

Post Comment

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மதுரை வரை வந்து, எனது இனிய நண்பரை மட்டும் சந்தித்து விட்டு, எங்க ஊருக்கு வரவில்லை என்பதால் உங்களிடம் டூ...

வாழ்த்துக்கள் நண்பா...

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

ஹா.ஹா.ஹா.ஹா.........
இன்னும் ஒரு முறை சந்தர்ப்பம் அமைந்தால் பார்போம் பாஸ்

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்!நலமா?///மலரும் நினைவுகள்!!!ம்....ம்........!மகன் தந்தைக்கு ஆற்றும் ..................................

தனிமரம் said...

பிரகாஷ் அவர்களின் சந்திப்பை பதிவாக பகிர்ந்தால் இன்னும் சிறப்பாகும்!ம்ம் தொடரட்டும் இதயம்!!

தனிமரம் said...

நான் எல்லாம் அப்புறம் என்று தான் சொல்வேன் சென்னையில் அப்பறம் இல்லை ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ!ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails