Thursday, March 28, 2013

இதயம் பேசுக்கின்றது-6

வாழ்க்கையின் ஒவ்வொறு நொடிகளும் வலிகளைத்தாங்குவது என்பது கொடுமை.இந்த நிலையில் வாழ்க்கை மீதான நம்பிக்கை குறைந்து போய்விடும் அப்படி நமக்கு நம்பிக்கை குறையும் பொழுதுகளில் எல்லாம் நமக்கு வாழ்வின் மீது நம்பிக்கை வர தொடர்ந்தும் வலிகளுடன் போராட ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் விடயம் தேவை

சிலர் கடவுளை வழிபடுவார்கள்,சிலர் தியானத்தில் ஈடுபடுவார்கள் சிலர் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வார்கள் இதனால் அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும் மனம் புத்துணர்ச்சி கிடைக்கும்.


நான் சோர்ந்து போகின்ற பொழுதுகளில் எல்லாம் இப்படி எதையும் செய்வதில்லை.ஒருவருடைய போட்டோவை பார்த்தால் என்னையறியாமல் எனக்கு ஒரு தன்னம்பிக்கை பிறக்கும்.பிரச்சனைகளை எதிர்கொள்ள தைரியம் கிடைக்கும்.அவர் யார் என்றால் எனக்கு தன்னம்பிக்கையை ஊட்டிய மனிதன் என் மானசீக குரு

ஆனால் வாழ்கையில் ஒரு முறைகூட நேரில் இவரை பார்த்தது இல்லை.அப்படி ஒருவர் இருக்கின்றார்.என்ன ஆச்சரியமாக இருக்கா ஆம் அவர் வேறு யாரும் இல்லை கங்குலி.வெரும் கிரிக்கெட் வீரர் என்பதற்காக மட்டும் எனக்கு இவரை பிடிப்பது இல்லை.தன்னம்பிக்கைக்கு சிறந்த உதாரணம் அவர்.

ஒரு மனிதன் தன் இலட்சியத்தில் வெற்றியடைய எப்படி இருக்கவேண்டும் எப்படி இருக்க கூடாது என்பதற்கு நான் பார்த்தமட்டில் கங்குலி சிறந்த உதாரணம்.


தன்னம்பிக்கை மிகுந்த மனிதனால் எதையும் எதிர்கொள்ளமுடியும் சாதிக்க முடியும் ஆனால் அதே சமயம் அந்த தன்னம்பிக்கை அளவுக்கு அதிகமாக மாறும் போது பிறரை மதிக்காத அகங்கார குணமும் கூடவே ஒட்டிக்கொள்ளும் இதை எல்லாம் நான் கற்றுக்கொண்டது கங்குலியிடம் தான் இப்ப சொல்லுங்கள் நான் என் மானசீக குரு என்று சொன்னது சரிதானே

எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கை குறையும் பொழுதுகளில் இவரது போட்டோவை பார்த்தால். ஒரு நம்பிக்கை மனதில் தானாக பிறக்கும்.என் ரோல் மாடல் மானசீக குரு தாதாதான்.

நண்பர்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் அதனால் தான் என் தளத்திற்கு கூட நண்பர்கள் என்று பெயர் வைத்துள்ளேன்.

நண்பி ஒருவர் கேட்டார் ராஜ் உனக்கு பெஸ்ட் ப்ரண்ட் யார்?

நான் சொன்னேன் நிறைய நண்பர்கள் இருக்கிறாங்க குறிப்பிட்டு யாரையும் சொல்லமுடியாது என்று.

அதற்கு அவங்க இல்லை ராஜ் எம் கவலைகளை,சோகங்களை வலிகளை,சந்தோசங்களை பகிர்ந்துகொள்ள கட்டாயம் பெஸ்ட் ப்ரண்ட் என்று ஒருவர் இருக்கனும் என்று.

நானும் யோசித்து பார்த்தேன் என் நட்பு வட்டத்தில் பெஸ்ட் ப்ரண்ட் என்று எனக்கு அப்படியாரும் இல்லை.

ஆனால் நண்பி சொன்னது சரிதானே யாராவது ஒருவர் பெஸ்ட் ப்ரண்டாக இருக்கனும் அல்லவா?

நட்பு என்பது எதையும் எதிர்பார்காமல் சுயநலம் இல்லாமல் உண்மையாக இருக்கனும்.

ஆனால் நான் சந்தித்த பல நண்பர்கள் சுயநலம் மிக்கவர்களாகவும் எப்படா இவனை கவுக்கலாம் என்று சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு இருப்பவர்களாகவுமே இருந்திருக்கின்றார்கள்.

அதுதான் எனக்கு பெஸ்ட் ப்ரண்ட் என்று யாரும் இதுவரை இல்லை என்று நினைக்கின்றேன்.

கர்ணனை போல ஒரு நண்பனை/நண்பியை தேடிக்கொண்டு இருக்கின்றேன்


போட்டி பொறாமை நிறைந்த உலகில் ஜெயிப்பது என்பது இலகுவான காரியம் இல்லை அதுவும் நண்பர்களே நமக்கு குறுக்கே நிற்கும் போது.வாழ்க்கையுடன் கேம் ஆடுவது இலகுவானது இல்லை.

நண்பர் விக்கி உலகம் விக்கி அவர்கள் ஒரு ஸ்டேட்டஸ் பேஸ்புக்கில் பகிர்ந்து இருந்தார்.”நம்மளை நல்லா தெரிந்த நம் பலம் பலவீனம் அறிந்த நண்பர்கள் கூட கேம் ஆடுறது எவ்வவு கஸ்டம் என்று”உண்மைதான் தோள் கொடுப்பான் தோழன் என்பார்கள் தோள் கொடுத்த தோழர்களே காலைவாரினால் என்ன செய்வது?

என் வாழ்க்கையில் நண்பர்களை போல முதுகில் குத்தியவர்கள் யாரும் இல்லை தைரியம் இருந்தால் நெஞ்சில் குத்துங்கள் சந்தோசமாக ஏற்றுக்கொள்கின்றேன் ஏன் என்றால் குத்துவது என் நண்பர்கள் என்று ஆனால் கோழைகள் போல முதுகில் குத்தாதீர்கள் நண்பர்களே.

குழந்தை பிள்ளையாகவே இருந்துவிட தோனுக்கின்றது மனசு.வளர வளர எத்தனை பிரச்சனைகள் வலிகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கின்றது

எல்லோர் மனங்களிலும் காயங்கள் இருக்கு சிலர் அதை அழுகையாக வெளிப்படுத்துக்கின்றனர் சிலர் புன்னகையாக என்று எங்கோ படித்த ஞாபகம் எவ்வளவு உண்மை இது.பலர் வெளியே சிரித்து உள்ளே அழுதுகொண்டு இருக்கின்றோம்.

(இன்னும் பேசும் இதயம்)

இந்த தொடரின் முன்னய பகுதிகளை படிக்க இங்கே கிளிக்-




Post Comment

5 comments:

Yoga.S. said...

ஹூம்!!!!!!!!!!!!

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைக்கு நண்பர்கள் கிடைப்பது அரிதாகி விட்டது - உண்மையான நண்பர்கள்...

தனிமரம் said...

நல்ல நட்புக்கள் இப்போது சுருங்கிவிட்டது நவீன பொருளாதார முன்னேற்றத்தில் .

jgmlanka said...

///எல்லோர் மனங்களிலும் காயங்கள் இருக்கு. சிலர் அதை அழுகையாக வெளிப்படுத்துகின்றனர் சிலர் புன்னகையாக என்று எங்கோ படித்த ஞாபகம் எவ்வளவு உண்மை இது//// உண்மையிலும் உண்மை தம்பி... வாழ்க்கையில் எதிர் நோக்கும் வலிகளை விட, நண்பர்கள் கொடுக்கும் வலி தான் மிகப்பெரிய வலி... புரிகிறது.. தொடர்ந்தும் உங்கள் இதயம் பேசட்டும்...

K.s.s.Rajh said...

@பூங்கோதை செல்வன்

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails