Friday, March 08, 2013

இதயம் பேசுகின்றது-பகுதி-3

வெறித்தனமாக அழைந்து திரிந்து பசி தூக்கம் மறந்து அழைந்து திரிந்தால் தான் வெற்றி சாத்தியமாகும் அது இலகுவாக எல்லோறுக்கும் கிடைத்துவிடுவதில்லை.

நம் சமூக அமைப்பில் பெரும்பாலும் பெற்றோர்கள் தமது குழந்தைகளை நீ டாக்டராக வர வேண்டும்,இஞ்சினியராக வரவேண்டும்,அப்படி வரவேண்டும் இப்படி வரவேண்டும் என்று தமது விருப்பங்களுக்கு தான் பிள்ளைகளை வளர்க்கின்றார்கள் பிள்ளைகளிடம் உனக்கு விருப்பமான துறை எது எதில் உனக்கு ஆர்வம் என்று கேட்டு அவர்களை அந்த துறையில் ஊக்கப்படுத்தும் பெற்றோர்கள் மிக மிக குறைவே.


நானும் அப்படி ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்தவன் யாரும் என்னிடம் கேட்கவில்லை உனக்கு என்ன படிக்கபிடிக்கும் ஏது பிடிக்கும் என்று.நானும் பாடசாலைக் கல்வியை தொடர்ந்தேன்.ஆனால் எனக்கு இருந்த ஆசை மீடியாதுறையில் வரவேண்டும் என்பதுதான் அதுவும் குறிப்பாக அறிவிப்பாளர்        
ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் ஏதும் அப்போது அமைந்தது இல்லை அதுவும் யுத்தம் நிலவிய ஒரு பூமியில் பள்ளிக்கு சென்று படிப்பதே பெரியவிடயம் இதுல எங்க எமக்கு விருப்பமான துறையை தேர்வு செய்வது.

உயர்தரத்துடன் கல்வியை யுத்தம் முழுமையாக என்னிடம் இருந்து பறித்துக்கொண்டது.இதனால் அடுத்த கட்ட படிப்பை பற்றி சிந்திக்கமுடியவில்லை அதன் பின் மாறிய வாழ்க்கைப்பயணம் எங்கோ சென்று எப்படியோ போய் எப்படியோ மாறியது.

ஆனால் எனக்குள் இருந்த அந்த மீடியாக்குள் வரவேண்டும் என்ற கனவு மட்டும் அப்படியே இருந்தது அதற்கான சந்தர்ப்பம் ஒன்று அமைந்தது ஆனால் அதில் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்புக்கள் இல்லை ஆனாலும் கிடைக்கும் வாய்ப்புக்களை நான் சரியாக பயன்படுத்திக்கொண்டேன்.இதனால் ஒரளவு என் கனவு நிறைவேறியதில் சின்ன சந்தோசம் 

30 வருடங்களுக்கு மேல் எங்கள் மண்ணில் நிலவிய யுத்தம் முடிவுக்கு வந்து எங்கள் மண்ணின் அமைதி திரும்பிய பிறகு இழப்பதற்கு எதுவுமேயில்லை நம்பிக்கையை தவிற என்ற நிலையில்.அடுத்து என்ன செய்யலாம் என்ற நிலையில் மேலதிகமாக ஏதும் படிக்கலாமா இல்லை வேலை செய்யலாமா என்று சிந்தித்த போது. 

ஒரு மீடியா நிறுவணத்தில் அதாவது ஒரு வானொலியில் வேலைவாய்ப்புக்கான அறிவித்தலை பார்த்தேன்.ஆனால் அவர்கள் கேட்ட தகுதிகள் ஏதும் என்னிடம் இல்லை காரணம் மீடியாவுக்குள் வரவேண்டும் என்ற ஆசை,ஆர்வம் மட்டும் இருந்ததே தவிற அது சம்மந்தமான அனுபவங்களோ இல்லை ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் விண்ணப்பித்தேன்.

அப்போது பில்டிங் டிசைனிங் சம்மந்தமான ஒரு கோர்ஸ் படிக்கும் படி அண்ணா வலியுருத்தினார்.என்னிடம் கேட்கவில்லை உனக்கு இது படிக்கபிடிக்குமா உனக்கு இதில் ஆர்வம் உண்டா என்று.சரி படிப்போம் உதவும் தானே என்று நானும் படிக்க தயார் ஆன போது.நான் விண்ணபித்த வானொலியில் இருந்து நேர்முக தேர்வுக்கு அழைப்பு வந்தது.

நானும் போனேன் ஆச்சரியம் தரும் விதமான நான் முதல் கட்ட தேர்வில் தெரிவு செய்யப்பட்டேன்.அடுத்த கட்டம் 1 மாதகால பயிற்சி அதில் சிறப்பாக செயல் பட்டால் அவர்கள் மீடியாவில் வானொலி,தொலைக்காட்சி அறிவிப்பாளர்.ஆனால் வீட்டில் சொல்லவில்லை சொன்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று எனக்கு தெரியும்.சரி சொல்லாமல் விட்டு என்ன செய்வது சொல்லிப்பார்போம் என்று அண்ணாவிடம் சொன்னேன்

ஆனால் அவர் இது எல்லாம் நிரந்தரம் இல்லை நிரந்தரமாக ஒரு தொழிலை பெறவேண்டும் நீ முதலில் இந்த பில்டிங் டிசைனிங் கோர்சை படி அப்பறம் பார்கலாம் என்று சொல்லிவிட்டார்.நானும் என் கனவை தூக்கி எறிந்துவிட்டு படிக்கபோனேன்.

ஒரு வேளை நான் போயிருந்தால் பயிற்சிக்காலத்தில் சிறப்பாக செயல்பட்டு இன்று பிரபலமான அறிவிப்பளராக மாறியிருக்க கூட சந்தர்ப்பம் இருக்கு.முயற்சி செய்யாமல் தோற்பதைவிட முயற்சி செய்து தோற்பது எவ்வளவோ மேல். என்று நினைப்பவன் நான் ஆனால் சந்தர்ப்பம் அமைந்தும் என் கனவை முயற்சி செய்யாமலே தூக்கி எறிந்துவிட்டேன்.இன்று வரை எனக்கு அந்த கவலை இருக்கு போயிருந்தால் ஒரு வேளை சாதிச்சிருக்கலாமோ என்று.

அந்த பில்டிங் டிசைனிங் கோர்ஸ் படிக்க கண்டிக்கு போனேன் இலங்கையின் எழில்கொஞ்சும் அழகிய மலையகம்.சில காலம் அங்கே கல்வியை தொடர்ந்தேன் ஆனால் பல பிரச்சனைகள் காரணமான என்னால் கல்வியை தொடரமுடியவில்லை இடைநடுவில் கைவிட்டுவிட்டேன்.

மீண்டும் என்ன செய்வது என்ற நிலையில் நம்ம நண்பன் ஒருவன் அவன் வேலை செய்யும் ஒரு கம்பனியில் விற்பனை பிரதிநிதி வேலை காலியாக இருக்கு முயற்சி செய்து பார் என்று என்னை அங்கே அறிமுகம் செய்துவிட்டான்.

எனக்கு ஒரு பதட்டம் காரணம் நேர்முக தேர்வு கொழும்பில் எனக்கு சிங்கள மொழி அவ்வளவாக பேச வராது.நேர்முக தேர்வு சிங்கள மொழியில் தான் இருக்கும்.சரி பார்போம் என்று நேர்முக தேர்வுக்கு போனேன்.

ஆனால் நான் பயந்தமாதிரி ஏதும் நடக்கவில்லை.காரணம் கைகொடுத்தது இண்டர்நேசினல் லாங்விச் இங்கிலிஸ்.ஆனாலும் சிங்களம் தெரியுமா? என்று கேட்டார். நான் ஒரளவு விளங்கிக்கொள்வேன் ஆனால் முழுமையாக பேசமாட்டேன் என்றேன்.சிங்களம் அவசியம் தேவை பெருற்கள் விற்பனை செய்யும் எல்லா கடைக்காரர்களுக்கும் ஆங்கிலம் தெரியாது  எனவே சிங்கள மொழி அறிவு இந்த வேலைக்கு வேணும் என்றார்.அப்பறம் என்ன அந்த வேலை ஊத்திக்கிச்சு.

ஆனால் ஒவ்வொறு அனுபவங்களிலும் ஒவ்வொறு பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டும் அந்த நேர்முக தேர்வில் நான் தோல்வியடைந்து இருந்தாலும் எனக்கு மொழி தெரியாத ஒரு இடத்தில் சூழலை எப்படி எதிர்கொள்வது,என்று கற்றுக்கொண்டேன்.இப்ப சைனீஸ்,மொழியில் நேர்முக தேர்வு என்றால் கூட நான் எதிர்கொள்ள தயார் இந்த தைரியத்தை கற்றுத்தந்தது அன்று தோல்வியடைந்த அந்த நேர்முகதேர்வுதான்.

சில காலத்தின் பின் அதே கம்பனியில் இருந்து என்னை மீண்டும் வேலைக்கு அழைத்தார்கள் நான் முன்பு தெரிவு செய்யப்படாத அதே வேலைக்கு ஆனால் என்னால் அப்போது அதை ஏற்பமுடியாத சூழல்

(இன்னும் பேசும் இதயம்)


இந்த தொடரின் முன்னய பகுதிகளை படிக்க இங்கே கிளிக்-
பகுதி-1
பகுதி-2

அனைத்து சகோதரிகளுக்கும் மகளீர் தின நல்வாழ்த்துக்கள்


Post Comment

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சூழலை விரைவில் அறிய ஆவல்...

இன்று மட்டுமல்ல... என்றும்....

வாழ்த்துக்கள்...

jgmlanka said...

அருமையான கருத்துக்களை அழகாக சொல்லியிருக்கிறீங்க தம்பி. பாராட்டுக்கள்.
பிள்ளைகளின் நாட்டத்தை, ஆர்வத்தைப் பெரும்பான்மையான பெற்றோர் புரிந்துகொள்ளத் தவறி விடுகிறார்கள் இனி வரும் சந்ததிகளுக்காவது அதை நாம் செயற்படுத்துவோம்.

மீடியா கனவு... என்னுடையதும் தான்... இனிமேல் அதெல்லாம் எங்கே நடக்கப் போகிறது.. காலம் கடந்துவிட்டது. எங்கள் பிள்ளைகளாவது அவர்களுக்கு விருப்பமான துறையில் வளர வழியமைப்போம்.. அருமையான பகிர்வுக்கு என் நன்றிகள்

Yoga.S. said...

பகல் வணக்கம்,ராஜ்!//ஆரம்பமே அமர்க்களம்.எங்கள் பெற்றோர் கிணற்றுத் தவளைகளாகவே வாழ்ந்து பழக்கப்பட்டுப் போனவர்கள்.இப்போது அப்படியல்ல,உரிமைப் போர் எல்லாவற்றையும் நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது!

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@பூங்கோதை செல்வன்

நன்றி அக்கா

சென்னை பித்தன் said...

இப்படித்தான் பலருக்குக் கனவுகள் பொய்யாய்ப் போகின்றன.எதிர்நீச்சல் போட்டுத்தான் முன்னேறியிருக்கிறீர்கள்.வாழ்த்துகள் ராஜ்

K.s.s.Rajh said...

@சென்னை பித்தன்

நன்றி ஜயா

தனிமரம் said...

மீண்டும் என் 20 காலங்களுக்கு அழைத்துச்செல்லுகின்றது இந்தப்பகுதி இரு துறையிலும் இருந்தேன் என்ற சந்தோஸம் ஒரு துறையான விற்பனைப்பிரதிநிதி என்னை சாதனையாளன் என்கின்றது இன்று வரை ஒரு பல்தேசியக் கம்பனியில்! இன்னொரு துறை ஊடகம் உனக்கு அரசியல் தெரியாது என்கின்றது!ம்ம் ஆனாலும் ஆந்த ஊடக ஆசையில் இன்றும் சுதந்திரமாக பயனிக்கின்றது தனிமரம்!நன்றி மீண்டும் கடந்து வந்தவையை மீட்டிப்பார்க்கும் பதிவாக என் சார்பில் பதிவாக்கிய உன் எண்ணத்துக்கு!ம்ம்

தனிமரம் said...

இன்னொன்று இந்த டாக்குத்தர் /இன்ஜினியர் தான் மாப்பிள்ளையாகணும் த்ம் பெண்பிள்ளைக்ளுக்கு என்று இன்னும் உருகும் சில நம்மவர்கள் புலம்பெய்ர் ம்ண்ணில் கானலைத்தேடும் மான்கள் ஆக இருப்பதும் கடந்த காலங்களில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கடந்து வந்தேன் வழிப்பயணங்களில்!ம்ம்ம் சாதிக்க தைரியம் போதும் படிப்பு அல்ல ஆனாலும் சகோதரமொழி சிங்களம் எனக்கு உதவியது மறக்க முடியாது விற்பனைப்பிரதிநிதி வேலையில்!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails