Saturday, April 20, 2013

நினைவுகளில் நீ(சிறுகதை)

தாஜ் மஹாலுக்கு போகவேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு.இதற்கு முன் பல முறை இந்தியா போயிருந்தாலும் ஒரு முறை கூட தாஜ் மஹாலை போய் பார்தது இல்லை.என் நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது இதோ 2023 ஆண்டில் ஜனவரி மாதத்தில் தாஜ்மஹால் முன் நிற்கின்றேன்.

என்ன ஒரு அழகிய கலைவடிவம்.ஷாஜகானின் 7 மனைவிகளில் 4வது மனைவிதான் மும்தாஜ்,மும்தாஜ் 14 ஆம் பிரசவத்தின் போதுதான் உயிர் இழந்தார் என்று எங்கோ படித்திருக்கின்றேன்


ஷாஜகானுக்கு மும்தாஜ் மேல் இருந்தது அளவற்ற காதலா இல்லை அடங்காத காமமா என்ற விவாதம் எல்லாம் இந்த அழகிய கலைப் படைப்பை பார்க்கும் போது பறந்தோடிவிடும் என்ன ஒரு அழகிய படைப்பு.

காமத்தையும் தாண்டி ஒரு ஆழமான காதல் மும்தாஜ் மேல் இருந்திருக்கின்றது என்பதற்கு தாஜ்மஹாலே சாட்சி.தாஜ் மஹால் பற்றிய சிந்தனையில் அதையே உற்றுப்பார்த்துக்கொண்டு இருந்த நான் சற்று சுதாகரித்துக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன்.

பல நாட்டில் இருந்தும் பல பேர் இந்த கலைவடிவத்தை சுற்றிப்பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.எல்லோறையும் பார்த்துக்கொண்டு இருக்கும் போது என் பார்வை ஒரு இடத்தில் நின்றது மீண்டும் மீண்டும் அவளையே பார்தது.

அவளா இது இல்லை அவளாக இருக்காது. இல்லை அவள் தான், சீ அவள் இல்லை. என்று என் மனமும்,கணகளும் தங்களுக்கிடையில் சண்டையிட்டுக்கொண்டன

ஆனால் இதயம் சொன்னது அவள் தான் என்று ஆம் அதுக்குத்தானே தெரியும் அவள் குடியிருந்த இடம் அல்லவா அது.

நான் மறந்தாலும் என் இதயம் மறக்குமா அவளை.மறக்க தெரியவில்லை எனது காதலை மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை. இது அவள் தான் என்று சொன்னது என் இதயம்.

சற்று குண்டாகிவிட்டாள்,நீண்ட அவளது கூந்தலைக் காணவில்லை கட் பண்ணி தோள் வரைமாத்திரமே இருந்தது அதுவும் கருநீல கலரை இழந்து ஒரு ப்ரவுன் கலர் சாயம் பூசப்பட்டு இருந்தது.சுடிதாருக்கு பதில் டீசர்ட்டும்,ஜுன்ஸும்,

அவளுடன் கைகோர்த்த படி ஒரு எட்டு ஒன்பது வயது மதிக்க தக்க பையனும்,முப்பத்தைந்து,முப்பத்து ஆறு வயது மதிக்க தக்க ஒருவரும் வந்துகொண்டு இருந்தார்கள்.அவள் பையனும்,கணவனும் போல ஆம் அவளுக்கு கல்யாணம் ஆகி பத்து வருடங்கள் இருக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்

அந்த மனிதரை பார்த்தேன் சற்று தொப்பை முன் வழுக்கை விழுந்த தலை,ஆனால் வெள்ளை வெளிர் என்று அரவிந்தசாமி கலரில் இருந்தார்.நீல நிற டெனிம் ஜீன்ஸும் வெள்ளை நிற டீ சர்ட்டும் அணிந்திருந்தார்

நான் என்னை ஒருதடவை அவருடன் ஒப்பிட்டு பார்த்தேன் முப்பத்து ஜந்து வயதாகியும் கொஞ்சம் கூட வழுக்கை விழுகாத என் தலையையும்,தொப்பை இல்லாத என் வயிற்றையும் தொட்டுப்பார்த்துக்கொண்டேன்.அவரைவிட நான் எந்தவிதத்திலும் குறைந்தவன் இல்லை என்று என் மனம் எனக்குள் சொல்லிக்கொண்டது.என்ன அவரிடம் இருக்கும் பணமும்,கலரும் என்னிடம் இல்லை அவ்வளவுதான்.

சற்றும் முற்றும் பார்த்த அவர் என்னிடம் வந்து சார் ஒரு போட்டோ எடுத்து தரமுடியுமா என்றார் ஆங்கிலத்தில்

ஒரு நிமிடம் திகைத்த நான் ஓக்கே  என்று அவரது மேமராவை வாங்கினேன்.அவளையும் அவள் பையனையும் தன்னுடன் அவர் அணைத்துக்கொண்டு போஸ்கொடுக்க கேமரா ஊடாக அதை பார்த்த என் கண்கள் என் மனதிலும் கேமராவிலும்.அந்தக்காட்சியை புகைப்படமாக்கியது.

அதன் பின் அவர் என்னிடம் உங்களை பார்க்க தமிழர் போல இருக்கு .நீங்க இந்தியாவா என்று கேட்டார்.பார்த்த உடன் தமிழன் என்று என் அடையாளம் தெரிவதை எண்ணி மனதுக்குள் ஒரு கர்வம் எனக்கு நான் தமிழன் என்று 

ஆம் தமிழ் தான் ஆனால் இந்தியா இல்லை நான் சிறீலங்கா என்றேன்

ஒ வெல் நாங்களும் சிறிலங்காதான் பட் இப்ப யூ.கேல செட்டில் ஆகிட்டம்.சிறிலங்கா நீங்க எவடம் என்று அடுத்த கேள்வியை என்னிடம் தொடுத்தார்.

கிளி...கிளிநொச்சி என்று நான் சொல்லவும் அவள் என்னை பார்த்தாள்.என்னை மறந்துவிட்டாளா இல்லை அவள் கணவனுடம் இருப்பதால் தெரியாதது போல இருக்கின்றாளே புரியாமல் தவித்தது என் மனம்.

அவர் ஒ என் மனைவியின் ஊரும் கிளிநொச்சி தான் நான் யாழ்ப்பாணம் சாரி அறிமுகம் செய்ய மறந்திட்டேன்.திஸ் இஸ் திவ்யா மை வைப்ஃ
அது என் மகன் என்றார்

அவளை ஒரு நிமிடம் உற்றுப்பார்த்தேன் என் பார்வையை எதிர்கொள்ளமுடியாமல் வேறு பக்கம் திரும்பின அவள் விழிகள்.

திவ்யா பத்து வருடங்களுக்கு முன் என்னை கொள்ளை கொண்ட தேவதை.என்னைவிட ஒரு இரண்டு மூன்று வயது குறைவாக இருக்கும்.எங்கள் ஊர்தான் ஆனால் பெரிதாக பார்தது இல்லை அவள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.ஆனால் ஒரு முறை பார்த்த பார்வையிலே என்னுள் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாள்

இன்னும் ஒரு முறை கண்ட போது அவள் பெயர் என்ன என்று கேட்ட போது வேறு பெயரை சொன்னாள். ஊரை கேட்ட போது வேறு ஊரை சொன்னாள்.இப்படியே என்னிடம் பொய்யாக கூறிக்கொண்டு வந்தாள்.


ஒரு நாள் அவளாக என்னிடம் வந்து உங்களிடம் பொய் சொல்லிவிட்டேன் என் பெயர் திவ்யா ஊர் கிளிநொச்சிதான் என்று சொல்லி சாரி கேட்டாள்.

அதன் பின் மெல்ல மெல்ல என்னை அறியாமல் நானும் அவளை
அறியாமல்அவளும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம்.ஆனால் அவளை பார்த்த அந்த நிமிடத்தில் இருந்து என் இதயம் இவள் தான் எனக்கானவள் என்று சொல்லிக்கொண்டேயிருந்தது.ஒர் நாள் அது அதன் காதலை அவளிடம் சொன்னபோது மறுத்துவிட்டாள்

உடனே எப்படி காதல் வரும் என்றாள்.விடை தெரியாத இந்த கேள்விக்கு விடைதேடுவதிலே என் காதல் மனம் தொலைந்து போனது.

காலம் ஓடியது ஒர் நாள் அவளுக்கு கல்யாணம் என்றாள் அன்று இரவு முழுவதும் என் தூக்கம் தொலைந்து போனது.இந்தியாவில் திருமணம் அதன் பின் சில மாதங்களில் வெளிநாடு போய்விடுவேன் என்றாள்.அதன் பிறகு அவள் தொடர்புகள் ஏதும் இல்லை

அதன் பிறகு இதோ இப்போதுதான் அவளை காண்கிறேன் அதுவும் காதல் சின்னம் தாஜ் மஹாலில்.

என்ன சார் யோசனை என்று அவள் கணவர் கேட்கவும் சுயநினைவுக்கு வந்தேன்.

ஒன்றும் இல்லை சார் தாஜ்மஹாலுக்கு வரவேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறியது மகிழ்ச்சி அதான் என்றேன்

முதல் தடவையாக இப்பதான் வந்தீங்களா என்றார்

ஆம் என்றேன்

நாங்கள் இரண்டு மூன்று தடவை வந்து இருக்கோம் கல்யாணம் ஆன புதுசில் ஒருக்கா அப்பறம் என் பையன் பிறந்த போது ஒரு தடவை வந்தோம் என்று நான் கேட்காமலே அவர் சொல்லிக்கொண்டு இருந்தார்.

ஒக்கே சார் நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு அவரிடம் விடை பெரும் போது அவளை பார்த்தேன் என் பார்வையை எதிர்கொள்ளமுடியாமல் வேறு பக்கம் திரும்பினாள்.

ஒரு பத்து அடி தூரம் நடந்திருப்பேன் ரகு ரகு என்று என் பெயரை சொல்லி யாரோ அழைத்தார்கள்.ஆம் அவளே தான் அது அவள் குரல் தான்.

இவ்வளவு நேரமும் அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்துவிட்டு இப்போது என்னை ஏன் அழைக்கிறாள்.என்ற யோசனையுடன் திரும்பினேன்

அவள் ரகு ரகு என்று அவள் பையனை அழைத்துக்கொண்டு இருந்தாள்.
(யாவும் கற்பனை)முஸ்கி-இந்த கதையின் நிகழ்காலம் பத்துவருடங்களுக்கு பிறகு அதாவது 2023ம் ஆண்டில் நடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.வித்தியாசமாக கதை இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் அப்படி குறிப்பிடப்பட்டுள்ளதுPost Comment

12 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
ஆண்கள் முழுவதையும் வெளிக்காட்டிக் கொள்வோம்
பெண்கள் வெளிக்காட்டிக் கொள்வதில்லை
புரிந்து கொள்ளட்டும் என விட்டுவிடுகிறார்கள்
பலருக்கு பல சமயம் இது புரிவதில்லை
மனம் கவர்ந்த கதை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

கார்த்திக் சரவணன் said...

அருமையான கதை... நிகழ்காலத்திலேயே நடப்பதாக இருந்திருக்கலாம்... நன்றி...

K.s.s.Rajh said...

@Ramani S

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ஸ்கூல் பையன்

நன்றி பாஸ்

Unknown said...

அரவிந்தசாமி கலர்,ஹி!ஹி!!ஹீ!!!

Unknown said...

என்ன இருந்தாலும்,என்ன இல்லாட்டாலும்,ஆம்பள ஆம்பள தான்,பொம்பள பொம்பள தான்!

K.s.s.Rajh said...

@Subramaniam Yogarasa

ஹி.ஹி.ஹி.ஹி........

தனிமரம் said...

கதையில் அதிகம் முன்னர் கேட்ட ஊர்ப் பெயர்கள் வந்து ஏதோ தொக்கி நிக்குது!தாஜ்மகால் முன்னே!ம்ம் எதிர்காலத்தில் இப்படியா!ம்ம்ம் கதை ரசித்தேன்.பாவம் சரண்யா மோகன்!

K.s.s.Rajh said...

@தனிமரம்

நன்றி பாஸ்

Mahesh said...

சிவகாசிக்காரன்: மறந்துவிட்டாள் என்னை..!!

http://www.sivakasikaran.com/2009/04/blog-post.html

Unknown said...

கோபாலகிருஷ்ணா சாரின் அறிமுகம் பார்த்து வந்தேன்.நல்ல கதை படிக்க கிடச்சிச்சி வாழ்த்துக்கள்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails