Friday, May 31, 2013

சுவடுகள் தேடிய பயணம்

எட்டு மணியாகிடுச்சி சே எப்பவும் லேட்டாத்தான் எழும்புறது ஒரு நாளைக்காவது நேரத்துக்கு எழும்பமுடியுதா என்று தன்னைத்தானே நொந்துகொண்டு வேகமாக கிணற்றில் ஜந்து வாளி தண்ணீரை அள்ளி குளிர்த்துவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு பாடசாலைக்கு புறப்பட்டான் விஷ்வா

பாடசாலைக்கு அருகில் இருந்த ஹோட்டலில் சாமியண்ண எட்டு இடியப்பம் ஒரு வடை என்று சொல்லிவிட்டு காத்திருந்தான்

என்ன தம்பி வழக்கம் போல லேட்டா என்று உரிமையுடன் விசாரித்துவிட்டு இடியப்பத்தை வைத்துவிட்டு போனார் சாமியண்ண

சாமியண்ண பற்றி சொல்லனும் அன்பான மனிதர் இந்த ஹோட்டலுக்கு அதிகம் பேர் வரக்காரணம் சாமிஅண்ணன் தான் அவரது அன்பான உபசரிப்பு அப்படி இருக்கும் வயிறார சாப்பாடு போடும் நபர்.

என்ன தம்பி யோசனை இன்னும் ஒரு வடை வைக்கட்டா என்று சாமியண்ண கேட்கவும் இல்லை அண்ண போதும் என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு பாடசாலை நோக்கி போனான்

உயர்தர வகுப்பில் படித்துக்கொண்டு இருக்கும் விஷ்வா படிப்பில் கெட்டிக்காரன் என்று சொல்லமுடியாது சராசரி மாணவன் தான்

அந்த வயதில் இயல்பாக வரும் ஒரு எதிர்பாலின கவர்ச்சி விஷ்வா வையும் விட்டு வைக்கவில்லை.வாழ்கை பற்றி சரியாக அறியாத வயதில் வரும் அந்த கவர்ச்சி காதல் என்ற வகைக்கு வராவிட்டாலும் நம்மாளுகள் அதுக்கு சூட்டும் பெயர் காதல் தான்.

கூட படிக்கும் லக்சி மேல் விஷ்வாவுக்கு காதல்.லக்சி ஒன்றும் பார்த்தவுடன் கொள்ளை கொள்ளும் பேரழகி இல்லை.


அதுக்காக அழகு இல்லை என்று சொல்லமுடியாது பார்த்தவுடன் பளிச் என்று இருக்கும் பெண்களைவிட சற்று கலர் குறைவாக இருக்கும் சில பெண்களும்  அழகாகத் தெரிவார்கள் அப்படி ஒரு அழகி லக்சி.

ஆறு மாதத்துக்கு முதல் ஒரு நாள் விஷ்வா லக்சியிடம் காதலை சொன்னபோது

அவ்வளவுதன் லக்சி கோபத்தில் துள்ளிக்குதித்தால் வாய்க்கு வந்தபடி கண்டபாட்டுக்கு விஷ்வாவை திட்டி தீர்த்தாள்.


விஷ்வா எதுவும் பேசாமல் தலையை குனிந்துகொண்டு சென்றுவிட்டான்.
அவன் மனம் எங்கும் ரணம்.லவ்வ சொன்னால் ஒன்று ஆமானு சொல்லனும் இல்லை இல்லனு சொல்லனும் அதைவிட்டுட்டு காட்டுத்தனமாக திட்டினால் என்ன அர்த்தம் என்று லக்சி மேல கோபம் கோபமாக வந்தது ஆனால் அவள் மேல் இருந்த காதல் கோபத்தை கொஞ்சம் குறைத்தது

அன்றில் இருந்து அவனால் சரியாக சாப்பிடமுடியவில்லை தூங்கமுடியவில்லை வகுப்பில் எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்திவிட்டாள் என்ற எண்ணம் மேலோங்கி அவன் தூக்கத்தை கெடுத்தது.

அதன் பின் அவன் அமைதியாகிவிட்டான் யாருடனும் அதிகம் கதைப்பதில்லை.ஆனால் லக்சியோ அவனைக்கண்டால் சுறா படம் பார்த்த ரசிகர்கள் போல கடுப்பாகிக்கொண்டேயிருந்தால்.

இப்படியாக ஆறுமாதம் ஒடிவிட்டது.ஒவ்வொறு நாளும் அவளை பார்த்துக்கொண்டே இருப்பது விஷ்வாவுக்கு இன்பமாகவும் அதே நேரம் துன்பமாகவும் இருந்தது.


அந்த இன்பம் துன்பமடி அந்த துன்பம் இன்பமடி உயிர் தேடும் உந்தன் மடி என்று லக்சியை மறக்கமுடியாமல் அவன் மனம் துடித்துக்கொண்டு இருந்தது.

லக்சி நான் என்ன தப்பு செய்தன் உங்களை எனக்கு பிடிச்சிருக்கு லவ் பண்ணுறன் என்றுதானே சொன்னன் அது ஒரு தப்பா ஏன் என்னை ஒரு குற்றவாளியை போல பார்க்குறீங்க மனசு ரொம்ப கஸ்டமா இருக்கு ப்ளீஸ் லக்சி என் கூட கதைங்க

உங்கள் கூட கதைக்க எனக்கு விருப்பம் இல்லை விஷ்வா எனக்கு உங்களை பிடிக்கலை இனி என்னை டிஸ்டப் பண்ணாதீங்க ஓக்கே.

ஓக்கே லக்சி நான் உங்களை எப்பவும் டிஸ்டப் பண்ண மாட்டேன் இனி உங்கள் முன்னால் கூட நான் வரமாட்டேன் என்று  சொல்லிவிட்டு போனவன் தான் அதன் பிறகு அவன் பாடசாலைக்கு வரவேயில்லை.

லக்சி மனசில் ஒரு குற்ற உணர்வு தன்னால் தான் அவன் எங்கோ போய்விட்டான்.அவனை அவமானப்படுத்திவிட்டோமோ என்று அவள் மனதுக்குள் போராட்டம்.

மீண்டும் அவனை பார்க்கவேண்டும் என்று அவள் மனம் துடித்தது

ஒரு கிழமை கழித்து விஷ்வா திரும்பி வந்தான்.எங்க போனாய் என்று நண்பர்கள் விசாரிப்புகள் அவன் ஏதும் சொல்லவில்லை.மதிய இடைவேளை நேரம் விளையாட்டு மைதானத்தில் ஒரு மரத்தடியில் அமைதியாக அமர்ந்திருந்தான் விஷ்வா.

அங்கு வந்த லக்சி விஷ்வா என்றாள்

என்ன என்பது போல பார்வையை அவள் பக்கம் திருப்பினான்

ஏன்டா என்னை இப்படி டிஸ்டப் பண்ணுற இந்த ஒரு கிழமை நான் எவ்வளவு பயந்து போனேன் தெரியுமா? எங்க போனியோ என்று

நான் எங்க போனா உங்களுக்கு என்ன லக்சி நீங்க ஏன் கவலைபடுறீங்க

கதைக்காத இந்த ஒரு கிழமையில் எனக்கு புரிந்தது நீ என்னையும் அறியாமல் என்னுள் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறாய் என்று எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு விஷ்வா என்று அவள் சொல்லவும்

இல்லை என்னால் முடியாது உன்னை கஸ்டப்படுத்த முடியாது லக்சி

என்ன சொல்லுற விஷ்வா?

என்னால் உன்னை ஏற்றுக்கொள்ளமுடியாது

ஏண்டா நீதானே என்னை முதலில் லவ் பண்ணுவதாக சொன்ன உன் காதல் அவ்வளவுதானே?

இல்லை லக்சி என் காதல் உண்மை ஆனால் இப்ப என்னால் உன்னை ஏற்றுக்கொள்ளமுடியாது ஆறு மாதம் உனக்காக காத்திருந்தேன் நீ என்னை அவமானப்படுத்தி கொண்டேயிருந்தாய் ஆனால் இப்ப ஒரு கிழமை நான் இல்லை என்றது என் மேல காதல் வந்துச்சா? இதை நான் நம்பனுமா?

ஜயோ ஏண்டா இப்படி எல்லாம் பேசுற இந்த ஒரு கிழமைதாண்டா என்னையே எனக்கு புரிய வைத்தது ப்ளீஸ் விஷ்வா நான் உன்னை அவமானப்படுத்தினதுக்கு பழிவாங்குறியா?

இல்லை லக்சி பழிவாங்கவில்லை அப்படி எந்த எண்ணமும் எனக்கு இல்லை அதுவும் உன்னை நான் பழிவாங்வேனா நீ என்........................

சொல்லு நான் உன்

இல்லை லக்சி புரிஞ்சுக்கோ இந்த ஒரு கிழமை நான் எங்க போயிருந்தன் தெரியுமா?

சொன்னாத்தானே தெரியும்

இல்லை லக்சி அதை எப்படி சொல்லுறது

பரவாயில்லை சொல்லு விஷ்வா

இல்லை நான் வந்து
(தொடரும்)

படம்-நடிகை தன்ஷிகா
கூகுள் தேடலில் பெறப்பட்டது படத்துக்கும் பதிவுக்கும் சம்மந்தம் இல்லை அழகுக்காக சேர்க்கப்பட்டது


Post Comment

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சஸ்பென்ஸ்... அறிய ஆவல்... தொடர்கிறேன்...

ராஜி said...

பெரிய எழுத்தாளர்களின் எழுத்து நடை தங்களுக்கு அனாவசியமாக வருகிறது. பத்திரிகைக்களுக்கு எழுத முயற்சிக்கலாமே சகோ!

Unknown said...

வணக்கம்,ராஜ்!///ஆரம்பமே அருமை.அருமையான கற்பனை?!வளம் உங்களுக்கு!

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ராஜி

ஏன் அக்கா நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு ஹா.ஹா.ஹா.ஹா.......
நன்றி

K.s.s.Rajh said...

@Subramaniam Yogarasa

நன்றி ஜயா

Unknown said...

நலமா தம்பீ! கதை துவக்கமே அருமை!தொடரத் தொடர்வேன்!

தனிமரம் said...

ஆஹா காதலா!!!!!,,??? ம்ம் தொடரட்டும் காதல்ப்பயணம்!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails