Friday, May 24, 2013

என்ன பண்ணினான் என் கட்சிக்காரன்?

ஓடினேன் ஒடினேன் 
பவுண்ட்ரி லைன் வரை ஒடினேன் 
அவ்வளவு லாங்கா இருந்து ஒடிவந்து 
பந்தை போட்டாலும் 
அசால்ட்டா அடிச்சி புடுறானுங்க.

எப்புடி போட்டாலும் அடிக்கிறாங்க 
சரி பந்து போட்டாத்தான் 
அடிக்கிறாய்ங்கனு பார்த்தால் 
வாயைக்குடுத்தாலும்
கன்னத்தில் அடிக்கிறாய்ங்க 


ஸ்மித் கூட சண்டை போட்டேன்
பொண்டிங் கூட சண்டை போட்டேன்
ஆனா அவங்க டீசன்ட் தெரிஞ்சவங்க
வெள்ளாக்காரங்க ஆச்சே


ஆனால் இந்த ஹர்பஜன்
வுட்டான் பாருங்க கன்னத்துல 
அடியா அது இடி என்னா அடி
முடியல அழுதுட்டேனே


சரி கன்னத்தில்தான் அடி
விழுது என்றால் நான் போட்ட
பந்தையும் பறந்து பறந்து அடிக்கிறாய்ங்க

வேணாம்டா இந்த பொழப்பு
ஊருபக்கம் போயி வேற பொழப்ப பார்போம்னா
பந்தா பண்ணியே திரிஞ்சாச்சா
அதுனால என்ன பண்ணலாம்னு யோசிச்சபோ


புக்கியோ பக்கியோனு  பயலுக வந்தாய்ங்க
தம்பி ஒவருக்கு பதினாலு ரண் குடுக்கனும்
என்னா சொல்லுற காசுதர்ரோம்னாய்ங்க


சரி நம்ம சும்மா போட்டாலே 
இருபது இருபத்துஜஞ்சினு அடிக்கிறாய்ங்க
பெருசா நாம ஒன்னும் செய்ய போறது இல்லை
வழமையா பந்த போடுவோம்
கைமேல காசுனு நினைச்சா
இப்ப கம்பி எண்ண வச்சிட்டாய்ங்க

என்ன பண்ணினான் என் கட்சிக்காரன் 
ஏதோ ஒரு சிக்னல கொடுத்திருக்கான்
ஒரு சிக்குனலுக்கு சிறையா?



சரி ஜாமீன் வாங்கலாம்னா
வஞ்சிற மீன் இருக்கின்றான்
வாளை மீனு இருக்கின்றான்


ஆனால் இந்த ஜாமீன் மட்டும் எங்கும் இல்லையாம்
கடல்லே இல்லையாம்


பதிவு நகைச்சுவைக்காக மட்டுமே
படங்கள்-கூகுள்

Post Comment

9 comments:

தனிமரம் said...

:)))

K.s.s.Rajh said...

@தனிமரம்
:)))

Unknown said...

வணக்கம்,ராஜ்!நலமா?///உண்மைய புது,புட்டு(சாப்புடுற புட்டு,இல்லேய்யா!)வைச்சிருக்கிறீங்க!மாட்டிக்கிட்டு ...........................பாவம்,எத்தன வசவு,திட்டு ன்னு வாங்க வேண்டி இருக்குது?ஹி!ஹி!!ஹீ!!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

ச்சே..ச்சே.... ஊழல்...
ஜெயில்ல கூழ் குடிக்க வச்சுட்டானுங்களே இந்த பக்கிக.. (புக்கிக)

திண்டுக்கல் தனபாலன் said...

தேவையா இந்த பொழப்பு...?

கோகுல் said...

உன் குத்தமா?என் குத்தமா? யார நானும் குத்தம் சொல்ல?

Unknown said...

பொழைக்க தெரிஞ்சவன் ஆனா தப்ப சரியாய் பண்ண தெரியலையே இந்த பக்கிக்கு

Unknown said...

இன்று எனது தளத்தில்

http://chakkarakatti.blogspot.in/2013/05/blog-post_25.html

சீனு said...

ha ha ha sema :-)

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails