Saturday, July 12, 2014

பரந்தாமனின் (சு)வாசம்-ஒரு ராதையின் தேடல்-பகுதி-2

வைஸ்னவி அக்கா தன் கதையை சொல்லத்தொடங்கினார்.அவர் முகம் பிரகாசமாகியது அவர் கண்கள் தன் சுயத்தை இழந்து ஒளி வீசின.ஒரு வித நாணம் கலந்த தொணியில் அவர் சொல்லத்தொடங்கினார்.பெண்களின் நாணம் அழகு அதுவும் அழகான பெண்களின் நாணம் அருகில் இருந்து பார்க்கும் நொடி மிகவும் அழகு,தன் மனம் கவர்ந்தவனை பார்க்கும் போது மட்டும் அல்ல அவனை பற்றி பேசும் போதும் பெண்களிடம் நாணம் வந்து ஒட்டிக்கொள்ளும் என்பதை வைஸ்னவி அக்காவின் முகம் உணர்த்திக்கொண்டு இருக்க அவரது உதடுகள் அந்தபெயரை உச்சரித்தது


அந்த பெயரை அவர் உதடுகள் உச்சரித்த தருனம் அவரை உற்றுநோக்கினேன்.சுவாசநாளங்களின் ஊடாக குருதிக்கலங்களை ஊடறுத்து உணர்வுகளை கொள்ளைகொண்டு உடலெங்கும் அந்த நாமத்தின் ஸ்பரிஸம் ஒன்றித்து இதயத்தின் ஊடாக பாய்ந்து உதடுகள் வழியே வந்து உதிர்த்தது வார்த்தைகள்.அவர் கண்களும் உதடுகளும் அந்த பெயருடன் ஒன்றிப்போய் ஒன்றாக உச்சரித்தன  கிருபா என்று.அந்த பெயரை அவர் உதடுகள் உச்சரித்த பின் சில நொடிகள் அவர் உதடுகள் மெளனம் சாதித்தன.


எனக்கு கிருபா என்ற அந்த மனிதன் பற்றி அறியும் ஆவல் ஒட்டிக்கொண்டது ஒரு அழகுதேவதையின் மனசை கொள்ளையடித்த அவன் யார்? அவன் எப்படியிருப்பான்? என்ன வேலை பார்க்கின்றான்? ஒரு பெண் அவன் பெயரை சொல்லும் போதே அவள் தன்நிலையில் மறந்து அவன் நினைவில் ஒன்றிப்போகின்றாள் என்றால் அவனிடம் இருக்கு காந்தசக்தி என்ன? என்று எல்லாம் என் மனதில் அந்தக்கணம் அந்தமனிதன் பற்றிய பிம்பம் பல தோன்றிமறைந்தது.

அவர் மெளனம் கலைந்து பேச்சுக்கொடுத்தேன் மேல சொல்லுங்க அக்கா யார் அவர் எங்க முதன் முதல் பார்த்திங்க.என்னை ஒரு முறை மேலும் கீழும் பார்த்துவிட்டு வைஸ்னவி அக்கா கேட்டார்.ராம் நான் யார் கிட்டையும் இதை பகிர்ந்துகொள்ளவிரும்பியது இல்லை ஆனால் உங்களை பார்க்கும் போது ஏதோ சொல்லனும் என்று தோன்றியது அதுதான் சொல்கின்றேன் என்னை தப்பானவளாக நினைக்க கூடாது 

ஜயோ இல்லை அக்கா இதுக்கு எல்லாம் யாரும் தப்பா நினைப்பாங்களா சொல்லுங்க

இல்லை ராம் என் உணர்வுகளை நன்றாக புரிந்துகொள்பவர்களிடம் மட்டும் தான் இதை சொல்லமுடியும்.நம் உணர்வுகளை புரியாதவர்களிடம் நம் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் போது அதை அவர்களால் புரிந்துகொள்ளமுடியாவிட்டாலும் பரவாயில்லை அதை கொச்சைபடுத்தக்கூடாது.அதனால் யாரிடமும் இதை பகிர்ந்துகொள்ள நான் விரும்பியது இல்லை உங்களிடம் ஏனோ பகிர்ந்துகொள்ளனும் போல இருக்கு என்றார்.எனக்கு அவர் அப்படி சொன்னது ஒரு தர்மசங்கடமாக போய்விட்டது


ஒரு பெண் தன் காதல் கதையை தன் மனம் கவர்ந்தவனை பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் போது அவர்கள் மனநிலை என்னவாக இருக்கும் அவளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் மனநிலைதான் நம் சமூகத்தின் மனநிலை.

ஒரு ஆண் பத்துப்பெண்களிடம் போனால் அவனை ஆம்புளை சிங்கம் என்று சொல்லும் இதே சமூகம் ஒரு பெண் அப்படி பத்துப்பேருடன் போனால் அவளை என்ன பெயர் சொல்லி அழைக்கும் வேசி என்றும்......தே........ள் என்று, அல்லவா அழைக்கும்.அவ்வளவு ஏன் நம் சமூகத்தில் ஒரு ஆண் தான் அந்தபெண்ணை பார்த்து அப்படி பீல் பண்ணினேன் அவளைக்காதலித்தேன் இவளைக்காதலித்தேன் என்று சொல்லமுடிகின்ற அதே நேரம் ஒரு பெண்ணால் சொல்லமுடிவதில்லை அப்படி சொன்னால் அவளை தவறானவளாக பார்கும் நிலை நம் சமூகத்தின் சாபக்கேடு.எத்தனை பாரதியார் வந்தாலும் பாரதிகண்ட புதுமைப் பெண்களை கூட சில விடயங்களில் அவர்களின் சுகந்திரத்தில் நம் சமூகத்தில் போர்தப்பட்ட பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்கனும் என்ற மாயத்திரையை விலக்கமுடியாது.இந்த எண்ணம் நம் சமுதாயத்தின் புற்றுநோய்.

ஆகவே வைஸ்னவி அக்கா தன் கதையை சொல்ல சற்று தயங்கியதை என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது ஆனால் என்னிடம் அவர் தன் கதையை என்னிடம் பகிர்ந்துகொள்ளாம் என்று தோன்றிய அளவுக்கு நான் அவர் நம்பிக்கைக்கு உரியவனாக பழகியிருக்கின்றேன் என்பதை நினைக்க சந்தோசமாக இருந்தது.நான் அவரிடம் சொன்னேன் அக்கா என்னால் உங்களை உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ளமுடியும் என்று நினைக்கின்றேன்.அப்படி புரிந்துகொள்ள்ளமுடியாவிட்டாலும் கூட நிச்சயம் உங்கள் உணர்வுகளை கொச்சைபடுத்த மாட்டேன் சொல்லுங்கள் என்றேன்

எனக்கு தெரியும் ராம் உங்களால் என் உணர்வுகளை புரிந்துகொள்ளமுடியும் என்று.என் மனசின் சுமையை இறக்கிவைக்க ஒரு நண்பனை தந்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லனும்.கடவுள் நேரடியாக நம்மிடையே வரமுடியாவிட்டால் நல்ல நண்பர்களை இல்லை  அன்பான மனிதர்களை  நம்குறைகளை கேட்பதற்கு அனுப்பிவைப்பார்.அப்படித்தான் உன்னை அனுப்பிவைத்திருக்கின்றார் என்றார்.

ஜயோ அக்கா என்ன பெரியவார்த்தை எல்லாம் சொல்லுறீங்க 

இல்லை ராம் இது நூறுவீதம் உண்மை உன் வாழ்கையிலும் யாராவது ஒருவரை கடவுள் இப்படி அனுப்பிவைத்திருப்பார் அவர்களை நீ அடையாளம் கண்டு கொண்டால் நம் கவலைகளை பகிர்ந்துகொள்ள நம் சுமைகளை இறக்கிவைத்து சற்று ஆறுதல் அடையலாம்.ஏன் அது நானாக கூட இருக்கலாம் என்றார்.

எனக்கு அவரது பேச்சு சிரிப்பை வரவழைத்துவிட்டது சிரித்துவிட்டேன் ஏன் சிரிக்கிறாய் என்றார்

இல்லை எனக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமாக இல்லை நான் அந்தாளை நம்புவதேயில்லை என்றேன்.

அவருக்கு அது ஆச்சரியத்தை அளித்திருக்கவேண்டும்.என்ன சொல்லுறீங்க ராம் உங்களுக்கு கடவுள் நம்பிக்கையில்லையா?

இல்லை அக்கா?

எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் ராம். அவரால் தான் இந்த உலகம் இயங்குகின்றது.அவர் ஒரு விந்தையான படைப்பாளி பாருங்கள் கடவுள் நம்பிக்கையே இல்லாத உங்களையும்.அவரையே நம்பும் என்னையும் நட்பு என்ற புள்ளியில் இணைத்திருக்கின்றார் பாருங்கள்.இந்த நட்பின் பயணம் சுவாரஸ்யமாக இருக்கும் ராம்.

அதை ஒத்துக்கொள்கின்றேன் நம் நட்பின் பயணம் சுவாரஸ்யமாக இருக்கும். நீங்கள் சொன்னீர்கள் அல்லவா நம் மனசுமைகளை இறக்கிவைக்க ஒருவரை அனுப்புவார் கடவுள் என்று அதை உண்மையாக இருக்கலாம் உங்களுக்கு என்னையும் எனக்கு உங்களையும் அனுப்பிவைத்திருக்கலாம் என்றேன்.

சரி அதையாவது நம்புறீங்களே ராம் அது போதும்

இல்லை கடவுள் இல்லை என்று நான் சொல்லவில்லை இருந்தால் நல்லாயிருக்கும் என்றுதான் சொல்கின்றேன் என்றேன்

சரி சரி அதைவிடுவோம்  நம் கதைக்கு வரும்வோம் பாஸ் என்றார்

சில நேரங்களை வைஸ்னவி அக்கா பாஸ் என்று என்னை அழைப்பார்.அது எனக்கு மிகவும் பிடிக்கும் பொதுவாக பெயர் சொல்லி அழைப்பதைவிட பாஸ் என்றோ ப்ரோ என்று அழைப்பதில் கொஞ்சம் நெருக்கத்தை அதிகமாக உணர்ந்துகொள்ளமுடியும்.

நான் கடவுள் இருக்கார் என்று சொல்லுபவர்களிடம் நிறைய விவாதிப்பேன்.ஆனால் வைஸ்னவி அக்காவிடம் விவாதிக்க மனசு வரவில்லை.அவர் கடவுளை நம்புகின்றார் நான் நம்பவில்லை இந்த நட்பில்  கடவுள் இங்கே முக்கியம் இல்லை அவரது மனச்சுமையை இறக்கிவைக்க என்னை அவரிடம் அவர் நம்பும் கடவுள் அனுப்பியதாக அவர் நம்புகின்றார்.அந்த நம்பிக்கையை கடவுள் இல்லை என்று வாதாடி சிதறடிக்க எனக்கு விருப்பம் இல்லை.

எனவே சரி நீங்கள்  சொல்லுங்கள் கிருபா பற்றி என்றேன்

அழகாபுரிக்கு நான் வருவது புதிதல்ல ராம் இதற்கு முன் பல தடவைகள் வந்திருக்கின்றேன் இங்கிருந்து கிட்டதட்ட 500 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் ஊரில் நான் பிறந்து வளர்ந்தாலும்.அழகாபுரிக்கு வருகின்ற போது என்னையறியாமல் ஒரு வித பற்று இங்கே வந்துவிடும்.எங்கள் உறவிணர்கள் வீடு இங்கே இருக்கின்றது எட்டு வருடங்களுக்கு முன் என் பதினெழாவது வயதில் இங்கே முதன் முதலில் இங்கே வந்திருந்தேன்.எங்கள் உறவினர் வீட்டிற்கு அருகே ஒரு கோவில் திருவிழா வெகுவிமர்சையாக நடக்கும் வருடம் வருடம் பத்துநாட்கள் நடைபெறும் திருவிழா அது. 

முதன் முறை அங்கே போனபோது நான் நினைத்தும் பார்கவில்லை வருடத்தில் இந்த பத்துநாட்களின் வரவிற்காக மிகுதி 355 நாட்களும் தவம் கிடக்கப்போகின்றேன் என்று.


ஆம் ராம் அங்கே தான் நான் தொலைந்து போனேன் அவரை முதன் முதலில் அந்த கோவில் திருவிழாவில் தான் பார்த்தேன் அவர் பெயர் தெரியாது ஊர் தெரியாது ஆனால் பார்த்த நொடியில் நான் தொலைந்துபோய்விட்டேன்.அவர் ஒரு ஜயர் ஆமாம் கோயில் திருவிழாவுக்கு பிரதான குருக்களுக்கு உதவியாக வந்திருந்த ஜயர் அவர்.அவருடன் வந்திருந்தவர்கள் அவர் பெயர் சொல்லி அழைக்கும் போதுதான் அவர் பெயர் கிருபா என்று தெரிந்துகொண்டேன்.

(தொடரும்)

இந்த தொடரின் முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக் - பரதாமனின் (சு)வாசம் பகுதி-1


Post Comment

6 comments:

தனிமரம் said...

ஆஹா கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் கதை சுவாரசியம் கொடுக்கின்றது தொடரட்டும் தொடர்!

Unknown said...

சூடு புடிக்குது,ஸ்டோரி!ஹ!ஹ!!ஹா!!!நன்றாக இருக்கிறது,தொடர்க,தொடர்வோம்!

Unknown said...

கடவுள் இருக்கின்றான்,அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?காற்றில் தவளுகிறார் அது உன் கண்ணுக்குத் தெரிகிறதா?///படவா பிச்சுப்புடுவேன்,பிச்சு!

K.s.s.Rajh said...

@தனிமரம்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@Subramaniam Yogarasa

நன்றி ஜயா
ஆனால் கடவுளை மாத்திரம் என்னால் நம்பமுடிவதில்லை என்ன பண்ண?

Unknown said...

K.s.s.Rajh said...
@Subramaniam Yogarasa

நன்றி ஜயா
ஆனால் கடவுளை மாத்திரம் என்னால் நம்பமுடிவதில்லை என்ன பண்ண?////எல்லாவற்றுக்கும் காரணம் மனசு தான்,தம்பி ராஜ்!மனமுண்டானால் இடமுண்டு என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.ஒன்றைப் பற்றும் போது,இன்னொன்றை மறக்கத் தோன்றுவதில்லையா?அது போல் தான் இதுவும்!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails