Sunday, August 24, 2014

பரந்தாமனின் (சு)வாசம்-ஒரு ராதையின் தேடல்- இறுதிப்பகுதி

ரெஸ்ரொரண்டுக்குள் போய் அமந்துகொண்டோம்.ஏதே தோ உணவுகள் எல்லாம் வாங்கி வந்தார் வைஸ்னவி அக்கா ஆனால் எதையும் என்னால் சாப்பிடமுடியவில்லை மனம் முழுவதும் ஏதோ இனம்புரியாத வலி.என்ன ராம் சோகமாக இருக்கீங்க ஒன்றும் பேசமாட்டேன் என்கிறீங்க நான் போறன் என்று கவலையா என்று கேட்டார்?

சட்டென அவர் அப்படி கேட்டதும் ஒரு கணம் சுதாகரித்துக்கொண்டு இல்லை என்றேன்


ஆனால் உண்மையில் அவர் போகின்றார் என்றுதான் மனசில் ஒரு இனம் புரியாத வலி.இந்த தொடரில் அவருக்காக நான் கிருபாவை தேடியதையும் எங்கள் ப்ரண்ஷிப் பற்றியும் மாத்திரமே குறிப்பிட்டுள்ளேன் ஆனால் நான் முன்பு சொல்லியிருந்தேன் அல்லவா வர்ஷி என்று ஒரு பெண் மேல காதல் இருந்தது என்று...அதில் நான் வலிகளை மட்டுமே சந்தித்து மனதளவில் நொந்துபோயிருந்தபோது.எனக்கு ஆறுதலாகவும் என் வலிகளை தாங்குபவராகவும்.என் சோகங்களின் போது நான் சோர்ந்துபோய்விடாமல் என்னை தாங்கிபிடித்தவர் வைஸ்னவி அக்காதான் .24 வயதுவரையும் நான் அனுபவிக்காத அன்பை எனக்கு அவர் காட்டியதாலோ என்னவோ நான் முழுமையாக அவரின் அன்பினால் கட்டுண்டுபோனேன்.

சில நேரங்களில் என் மனம் சுயநலமாக சிந்தித்ததும் உண்டு.. ஒரு ஜந்து ஆறுவருடங்களுக்கு முன் நான் இவரை சந்தித்து இருந்தால் எப்படி இருந்திருக்கும்.. என் வாழ்கைப்பயணத்தில் என் கூடவே இவர் பயணித்து இருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கும் அல்லவா? அப்படி ஏதும் நடந்திருந்தால் அவரின் அன்பு காலம் எல்லாம் எனக்கு மட்டுமே கிடைத்திருக்க்கும் அல்லவா? எனக்கு தோன்றிய இந்த எண்ணம் ஒரு வகையில் தவறுதான் ஒரு தோழியை அப்படி நினைத்திருக்ககூடாது...ஆனால் இதில் தவறான நோக்கம் ஏதும் இல்லை.அவரது அன்பின் ஆழத்தினால் கவறப்பட்ட நான் அது என் ஆயுளுக்கும் எனக்கு மட்டுமே கிடைக்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப்பார்தேன்.அன்பினால் மட்டுமே உருவான எண்ணம் அது.ஆனால் விதியின் விளையாட்டுகளில் இருந்து சாமானியர்கள் நாம் என்ன செய்யமுடியும்? ஒரு ஜந்துவருடங்களுக்கு முன் எனக்கும் அவருக்குமான அறிமுகத்தை செய்யாமல் இருந்த விதியை நொந்துகொள்வதைத்தவிற வேறு என்ன செய்யமுடியும்.

என்ன ராம் பலமான யோசனை ஒன்றுக்கும் யோசிக்காதீங்க எதுனாலும் போன் பண்ணுங்க.அதுதான் இப்ப உலகம் எவ்வளவோ சுருங்கிவிட்டதே போன் பேஸ்புக்,ஸ்கைப் என்று பிறகு ஏன் யோசிக்கிறீங்க நான் இருக்கேன் உங்களுக்கு.யோசிக்காதீங்க 

அப்படி இல்லை என்று என் உதடுக்கள் தான் சொன்னதே தவிற மனசு அழுதுகொண்டு தான் இருந்தது............அவருக்கும் அதே போல கவலையாக இருந்ததா இல்லையா என்று எல்லாம் எனக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அவருக்கும் கவலையாக இருந்திருக்கும்.ஆனால் பெண்கள் எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்கள் அதற்கு வைஸ்னவி அக்காவும் விதிவிலக்கு இல்லை....பஸ்டாண்டில் இருக்கும் போது வைஸ்னவி அக்கா கேட்டார் தம்பி இதுல நிற்கட்டும்.வாங்க நாங்கள் படித்த கல்லூரிக்கு போயிட்டு வருவோம் என்று இப்ப கல்லூரி பூட்டி(மூடி)யிருப்பாங்க என்று சொல்லிவிட்டேன் சிலவேளை தனியாக என்னிடம் ஏதும் பேசுவதற்கு அப்படி கேட்டாரோ தெரியவில்லை.....பிறகு நான் வீட்டிற்கு வந்தும் தான் யோசித்துப்பார்தேன் தனியாக ஏதும் பேசுவதற்குத்தான் அழைத்தாரோ என்று..........வைஸ்னவி அக்கா ஒரு வசனம் சொன்னார் அழகாபுரியில் ஆரம்பித்தது அழகாபுரியிலே முடிந்துவிட்டது.என்ன வாழ்கை பாஸ் பிரிவுகள் கொடுமையானது அல்லவா.

அவர் சொன்னது  உண்மைதான் பிரிவுகள் கொடுமையானவை பிறக்கும் போது தாயின் கருப்பையில் ஆரம்பிக்கும் பிரிவு உடலைவிட்டு உயிர்பிரியும் வரை தொடர்ந்துகொண்டேயிருக்கும் பிரிவையும் மனிதவாழ்கையையும் பிரிக்கமுடியாது

சரி ராம் போகலாம் நேரம் போய்விட்டது இனி நாங்கள் எங்கள் ஊருக்கு போகனும்.ராம் வரும் 25ம் திகதி வெளிநாடு போய்விடுவேன் போயிட்டுவாரன் கையைத் தாங்க என்று என் கையை இறுகப்பற்றிக்கொண்டார்.என்னால் அவரது கையை இறுக்கமாக பிடிக்கமுடியவில்லை......சற்று நடுக்கத்துடன் கையை கொடுத்தேன்.என்ன பாஸ் ஏன்? ஒன்றும் யோசிக்காதீங்க.........நான் இருக்கிறேன் ஒன்றுக்கும் யோசிக்காதீங்க. 

சரி அக்கா சந்தோசமாக போயிட்டு வாங்க.மறந்திடாதீங்க.....இதுதான் நமது கடைசி சந்திப்பாக கூட இருக்கலாம் இனி வாழ்நாளில் நாம் சந்திக்காமல் கூட போகலாம்.

அப்படி எல்லாம் சொல்லாதீங்க ராம் ஒன்றுக்கும் யோசிக்காமல் போயிட்டு வாங்க 

அவரிடம் இருந்து விடைபெற்று எங்கள் ஊருக்கான பஸ்சில் ஏறிக்கொண்டேன் ஒருமணித்தியாள பயணம் நரகமாக இருந்தது........... 

நேற்றெல்லாம் நிஜமானது
காற்றெல்லாம் சுகமானது
கண்ணெல்லாம் கனமாகிறது
சிலநாட்கள் தான் அழகானது
காலங்கள் இதமானது
எல்லாமே க..ன..வா..கிறது

(முற்றும்)

குறிப்பு- சில வாசகர்கள் கேட்டு இருந்தார்கள் வைஸ்னவி ககாபாத்திரத்தை ஏன் அக்கா என்று குறிப்பிட்டீர்கள் அது உயிரோட்டமாக இல்லை என்று.....
இது உண்மைக்கதையின் அடிப்படையில் எழுதப்பட்ட தொடர்..... எனக்கும் அவருக்கும் ஒரே வயது என்றாலும் எங்களுடன் படித்த பலர் அக்கா என்று அவரை அழைத்தால் நானும் அப்படி அழைக்கத்தொடங்கினேன்........ஒரு முறை அவரே கேட்டார் ராம் எனக்கும் உங்களுக்கும் ஒரே வயதுதான்..... ஏன் அக்கா என்று அழைக்கிறீங்க என்று.பிறகு எப்படி வைஸ்னவி என்று அழைக்கவா? என்று கேட்டேன் அதுக்கு இதுவே பரவாயில்லை அதைவிட அக்கா என்பது நான் உங்களுக்கு தந்து இருக்கும் சேஃப்டி அதாவது என்னையும் உங்களையும் தவறாக கதைக்கும் நம் உறவை கொச்சப்படுத்தும் வர்ஷியிடம் இருந்து உங்களுக்கான சேஃப்டி என்றார்........... அதுவும் சரிதான் வர்ஷியின் பார்வையில் எங்கள் நட்பு தவறானது.அது அவளின் எண்ணம்... தொடரை முதலில் இருந்து வாசிக்காதவர்கள் வர்ஷி யார் என்று கேட்கிறீங்களா? தொடரை முதலில் இருந்து படிங்க.

இந்த தொடரின் முன்னய பகுதிகளை படிக்க -
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
பகுதி-4
பகுதி-5
பகுதி-6
பகுதி-7

Post Comment

4 comments:

Yoga.S. said...

வாழ்த்துக்கள்.கலக்கிட்டீங்க,பாஸ்!//சரி...........வர்ஷி?????????????????????????

K.s.s.Rajh said...

@Yoga.S.

நன்றிங்க.வர்ஷி பற்றி ராமிடம் தான் கேட்கனும் அதைவிடுங்க என்ன நஸ்ரியாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சாம்

K.s.s.Rajh said...

யோகா ஜயா நீங்கள் பேஸ்புக்கைவிட்டு போனதில் இருந்துஉங்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை.இந்த தொடர் பற்றிய உங்கள் பார்வையை சின்னதாக எழுதித்தரமுடியுமா? மின்நூலில் இனைப்பதற்கு மின்னஞ்சல் முகவரி kss.rajh@gmail.com

தனிமரம் said...

கதை ஓட்டம் பற்றி விரிவாக விபரமாக விரைந்து பேசுவேன் தனிமரம் வலையில்!! தனிமரம் இன்னும் நாட்டாமை தான்! ஹீ தொடரில்! வாழ்த்துக்கள் ராஜ் கற்பனை ஊடே ஒரு தேடல் ராதை!ம்ம்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails