Friday, August 01, 2014

பரந்தாமனின் (சு)வாசம்-ஒரு ராதையின் தேடல்-பகுதி-5

தேடல்கள் எப்போதும் சுகமானவை அதே நேரம் தேடப்படும் காரணங்களை பொருத்து அது ரணமானதாகவும் அமைந்துவிடும்.அதுவும் நமக்காக இல்லாமல் மற்றவர்களுக்காக தேடுவதில் கொஞ்சம் மனம் தளர்ந்தாலும் சலிப்புத்தன்மை வந்துவிடும்.வைஸ்னவி அக்காவுக்கான இந்த தேடலில் என்ன நடந்தாலும் சரி.சலிப்படையக்கூடாது.யாருமே என்னிடம் காட்டாத அன்பையும் பாசத்தையும் காட்டுகின்றார்.எனவே அந்த அன்பும்,பாசமும் எனக்கு வேண்டும்.எனவே அந்த அன்புக்காகவாவது கிருபாவை தேடிக்கண்டு பிடிக்கவேண்டும் என்ற வைராக்கியம் என் மனசில்.


இந்த தேடலில் வைஸ்னவி அக்காவுக்காக நான் தேடினேன்.எனக்காக சில நண்பர்கள் சேர்ந்து தேடினார்கள்.ஆக மொத்தம் இது நட்புக்கும் மனசுக்கும் இடையிலான தேடலாக மாறிப்போய்விட்டது

இந்த மனித வாழ்கை விசித்திரமானது விந்தைகள் நிறைந்தது.பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறந்துவிடப்போகின்ற இந்த குறுக்கிய கால வாழ்கையில் ஏன் இத்தனை சோதனைகள்.நமக்கு பிடிதவர்களுடன் வாழும் வாழ்கை எல்லோறுக்கும் கிடைப்பதில்லை அப்படி கிடைப்பவர்கள் பாக்கியசாலிகள் ஆனால் இந்த உலகில் பிறந்த எல்லா மனிதர்களின் மனங்களிலும் ஒரு நிறைவேறாத காதல் ஆசை நிச்சயம் இருக்கும்.அப்படி ஒரு நிராசையாக வைஸ்னவி அக்காவின் காதலும் போய்விடக்கூடாது கிருபாவுடன் அவர் வாழமுடியாவிட்டாலும்.அவரிடம் தான் ஆன்மாவை தொலைத்துவிட்டு அலைவதை சொல்லவேண்டும் அது போதும் என்கிறார்.ஒரு தோழிக்காக இதைக்கூட செய்யவில்லை என்றால் எப்படி? நிச்சயம் கிருபாவை கண்டுபிடித்தே தீரவேண்டும் என்ற எண்ணம் என்னுள் உறுதியா இருந்தது.

எனக்கு வைஸ்னவி அக்காவுக்கும் அடிப்படையில் ஏதுவுமே ஒத்துப்போகாது.கடவுள் நம்பிக்கை அதிகம் அவாவுக்கு. எனக்கு சுத்தமாக இல்லை.இசையை ரசிக்கும் உள்ளம் அருடையது.நமக்கு இசை என்றாலே அலர்ஜிக் இப்படி அடிப்படையான ரசனைகள் கூட எமக்குள் ஒரே மாதிரியாக இல்லை.ஆனாலும் எப்படி எனக்கு அவாவுக்கும் நட்பு உருவானது என்று அடிக்கடி கேட்டுக்கொள்வேன்.


இதற்கு அவரின் பதில்.ராம் ஒவ்வாத முனைகள் தான் ஒன்றை ஒன்று கவரும் இது விஞ்ஞானம் என்பார்.உண்மைதான் காந்தத்தில் ஒவ்வாத முனைகள் தான் ஒன்றை ஒன்று கவரும்.ஒரு வேளை அப்படித்தானோ. எது எப்படியோ என் பயணத்தில் ஒரு அன்பான தோழியை தந்த விதிக்கு நன்றி என்ன ஒரு ஜந்து ஆறு வருடங்களுக்கு முன்பு எனக்கு அவரை அடையாளம் காட்டியிருந்தால் எப்படி இருந்திருக்கும். என்று அடிக்கடி யோசித்துப்பார்ப்பேன்.எதை பற்றியும் சிந்திக்காமல் வாழ்கையில் காட்டுத்தனமாக அலைந்துகொண்டு இருந்த என் பயணம் அன்பான தேவதையினால் ஆசீர்வதிக்கப்பட்டதாக மாறியிருக்கும்.ஆனால் விதியின் விளையாட்டுக்களில் இருந்து சாமானிய மனிதர்கள் நாம் என்ன செய்யமுடியும்.அவரின் அன்பில் கவரப்பட்ட நான் சில நேரங்களில் இப்படி சுயநலமாக சிந்தித்தது உண்டு.அன்புக்காக ஏங்கும் மனசு சில வேளைகளில் சொல்பேச்சு கேட்பது இல்லை.ஆனால் அது தவறு என்று மூளை அறியும்.

மனம் ஒரு குரங்குதானே எனவே நான் அதன் பேச்சை நான் கேட்பது இல்லை என் மூளை சொல்லுவதைத்தான் கேட்பது வழமை.மூளை வைஸ்னவி அக்காவிடம் எதிர்பார்தது எதிர்ப்பார்பது எல்லாம் அவரது அன்பை மட்டுதான் அவர் அதை அவர் ஒரு நல்ல நண்பியாக தந்தால் சரி. அந்த பரிசுத்தமான அன்புக்காகவாவது கிருபாவை எப்படியாவது கண்டு பிடித்து கொடு என்று மூளை எனக்கு கட்டளையிட்டு இருந்தது.


நண்பன் வரச்சொல்லியிருந்தான் அல்லவா ஏதோ ஒரு கோயிலில் கிருபா என்று ஒருவர் பூசை செய்வதாக அந்தக்கோயிலுக்கு நானும் அவனும் போனோம் அங்கே  ஏமாற்றம் தான் மிஞ்சியது.அது ஒரு ஜம்பது வயது மதிக்க தக்க ஒரு ஜயர்தான் இருந்தார்.அவரிடம் விசாரித்தோம் இப்படி கிருபா என்று ஒரு ஜயர் பையனைத்தெரியுமா? உட்சவங்கள்,கும்பாபிசேகங்கள் எல்லாம் செய்பவர்.அழகா புரியில் பெரும்பாலும் எல்லாம் விசேச உட்சவங்களுக்கும் போவார் என்று விசாரித்தோம்.அவர் தனக்கு அப்படி யாரையும் தெரியாது என்று சொன்னார்.மீண்டும் மீண்டும் ஏமாற்றங்கள்.மனசு துவண்டு போயிருந்தது.ஆனாலும் ஒரு நம்பிக்கை எப்படியும் கண்டு பிடித்துவிடலாம் என்று.

இதற்கிடையில் வைஸ்னவி அக்கா வேறு எங்களுக்கு முதல்லே பரீட்சையை எழுதிவிட்டு அவரின் ஊருக்கு போகப்போகின்றார்.காரணம் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை விரைவாக செய்யவேண்டும் என்பதால்.இருப்பதோ ஒரு இரு மாதங்கள் அதற்குள் கண்டு பிடிக்கவேண்டும்.வைஸ்னவி அக்கா முகத்தை பார்கவே பாவமாக இருந்தது அழகாபுரியை விட்டு அவர் தனது ஊருக்கும் போகும் நாள் நெருங்க நெருங்க அவர் மனசு தத்தளித்துக்கொண்டு இருந்தது.

அதே நேரம் வைஸ்னவி அக்காவும் ஒரு புறம் தேடிக்கொண்டுதான் இருந்திருக்கின்றார்.அவரும் சில தகவல்களை சொல்லுவார்.ஆனால் அப்படி ஒரு நபரே இல்லை என்று தான் தேடும் இடம் எல்லாம் எனக்கு தகவல் வந்தது.இதற்கிடையில் வைஸ்னவி அக்காவுக்கு பரீட்சை எழுதுவதற்கான திகதி நெருங்கிவிட்டது அடுத்த 25ம் திகதி பரீட்சை எழுதவேண்டும் என்பதால் ரெயிஸ்டர் செய்வதற்காக அவரின் ஊருக்கு மனம் கணக்கும் நினைவுகளுடன்.எமது கல்லூரியைவிட்டு விடைபெற்றார்.அடுத்தடுத்த மாதங்களில் ஒவ்வொறுவராக கல்லூரியைவிட்டு விடைபெற இருப்பதால் ஒரு பிரியாவிடை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.நான் வைஸ்னவி அக்காவிடம் கூறினேன் எதைப்பற்றியும் யோசிக்காமல் போய் பரீட்சை எழுதுங்கள்.பிரியாவிடை நிகழ்விற்கு வரும் போது.கண்டிப்பாக கிருப்பா பற்றி கண்டு பிடித்து வைக்கின்றேன் என்று.

சரி என்று வைஸ்னவி அக்காவும் எமது கல்லூரியை விட்டு விடைபெற்றார் இனி க்ளாஸ்க்கு வரமாட்டார் என்றதும் ஏதோ ஒரு இனம் புரியாத வலி மனசில் அப்பவே தொற்றிக்கொண்டது ஆனால் நான் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை திரும்பி வருவார் என்பதால்.

சில நாட்கள் கழித்து வைஸ்னவி அக்கா திரும்பி வந்தார்.நல்லபடியாக பரீட்சை எழுதிவிட்டதாகவும் சில நாட்கள் அழகாபுரியில் இருக்கப்போவதாகவும் சொன்னார்.எனக்கு மட்டும் தான் தெரியும் பரீட்சை எழுதிய பின்னரும் ஏன் அவர் அழகாபுரியில் சில நாட்கள் இருக்கப்போகின்றார் என்று.அந்த சில நாட்களுக்குள் எப்படியும் கிருபாவை கண்டு பிடித்துவிடவேண்டும் என்ற நினைத்துக்கொண்டேன்.வரும் போது ஒரு டீசேர்ட்  வாங்கிக்கொண்டு வந்து தந்தார்.

நான் நிறைய பேருக்கு நான் கிஃட் கொடுத்திருக்கேன் எனக்கு யாரும் கிஃப்ட் தந்தது இல்லை முதன் முறையாக வைஸ்னவி அக்கா தந்ததும் எனக்கு சந்தோசத்தில் அழுகையே வந்துவிட்டது.அதுவும் நேரடியாக அந்த டீசேர்ட்டை அவர் தரவில்லை காரணம் வர்ஷி அருகில்  இருந்தபடியால் இன்னும் ஒரு நண்பனிடம் கொடுத்திருக்கின்றார் இதை ராமிடம் கொடுத்துவிடுங்கள் என்று ஆனால் அவன் அதை வர்ஷியிடம் சொல்லிவிட்டான்.இப்படி வைஸ்னவி அக்கா ராமிற்கு டீசேர்ட் ஒன்று வேண்டித்தந்து இருக்கா என்று.அவ்வளவுதான் கேட்கவா வேணும் பிறகு.

வர்ஷி கேட்டாள்  பிறகு என்ன? ராம் இந்தளவுக்கு வந்திடுச்சா என்று

என்ன லூசு மாதிரி கதைக்கிறீங்க வர்ஷி கிஃப்ட் கொடுக்கிறது ஒரு மேட்டரா.ஏன் நான் உங்களுக்கு கிஃப்ட் தந்தது இல்லையா?

நீங்க எனக்கு தருவதும் அவா உங்களுக்கு தந்ததும் ஒன்றா? அப்படினா சரி?

ஜயோ வர்ஷி ஏன் இப்படி?

சும்மா நடிகாதீங்க ராம்? ஒத்துக்கொள்ளுங்கள்

என்னத்தை?

உங்களுக்கும் அவாவுக்கும் இடையில் என்ன இருக்கு?

சும்மா லூசு மாதிரி கதைக்காதீங்க வர்ஷி?

நான் அப்படித்தான் கதைப்பேன் என்ன செய்வீங்க?

அன்பா தரும் போது வேண்டாமல் இருக்க முடியாது வர்ஷி?

ஒ சரி சரி வேண்டுங்கப்பா எனக்கு என்ன?

என்ன அப்பாவா ஒ நல்லது ஒன்ஸ்மோர் ப்ளீஸ்

கதையை மாத்தாதீங்க ராம் அந்த டீசேர்ட்டை வேண்டுங்க பட் நீங்க போடக்கூடாது

அப்பாடா இவளை சமாளிக்க வேறு வழி இல்லை சரி வர்ஷி நான் அதை போடமாட்டேன் ஒக்கேயா

ஒக்கே ஒக்கே 

இந்த பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியாது வர்ஷியும் நானும் இந்த ஜென்மத்தில் சேரவே முடியாது என்ற நிலை.விதி எழுதிய கதை அது.அதை பற்றி இங்கே பேசப்போவது இல்லை.ஆனால் அப்படி இருந்தும் கூட என்னுடன் இன்னும்  ஒரு பெண் நெருங்கி பழகுவது அவளுக்கு பிடிக்கவில்லை.அப்படி என்றால்  என்னை அவளுக்கு மிகவும் பிடித்திருக்கு என்றுதானே அர்த்தம் ஆனால் அதை நினைத்து சந்தோசப்படவும் முடியாது.வைஸ்னவி அக்காவின் அன்பை அல்லவா தவறாக பாக்கின்றாள்.

இரண்டு பொண்டாட்டி கட்டுனவன் கூட சந்தோசமாக இருப்பான் போல ஆனால் நான் காதலிக்கும் நண்பிக்கும் இடையில் இந்த இரண்டு அன்பு போராட்டத்துக்குள் சிக்கி நான் பட்ட பாடு இருக்கே ஜயோயையைய்யோ.................

இப்படி இருக்கும் அடுத்தவருடம் தான் கோயில் திருவிழா வரும் கிருபாவை பார்கமுடியும் ஆனால் அதற்குள் தான் வெளிநாடு போய்விட்டால் என்ன செய்வது என்ற வைஸ்னவி அக்காவின் ஏக்கத்தை அவர் கும்பிடும் கடவுள்புரிந்துகொண்டாரோ என்னவோ இடையில் ஒரு விழா ஒன்று அந்தக்கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அதற்கு கிருபா நிச்சயம் வருவார் ராம் நான் போய்பார்க்கின்றேன் என்று அவர் நம்பிக்கையுடன் சொல்லிவிட்டுப்போனார்.

இரண்டு நாட்களாக வைஸ்னவி அக்காவிடம் இருந்து எந்த தொடர்பும் இல்லை.நான் கூட சந்தோசப்பட்டேன் ஒரு வேளை கிருபாவை சந்தித்து கதைத்துவிட்டார் என்று.ஆனால் மூன்றாவது நாள் அவரிடம் இருந்து கோல் வந்தது.கிருபா வந்திருக்கின்றார் ராம்.பட் எனக்கு அவர் கிட்ட போய் கதைக்க ஒரு மாதிரி இருக்கு என்று.

ஏன் போய் கதைங்க இதுதான் உங்களுக்கு கடைசி சந்தர்ப்பம் இப்ப தவறவிட்டால் பிறகு எப்போதும் சந்தர்ப்பம் அமைவது கஸ்டம் சோ கதைங்க என்றேன்.

இல்லை ராம் என்னால் அவர் முகத்தை பார்த்து கதைக்கமுடியாது அந்த சக்தி இல்லை எனக்கு

எனக்கு கோபம் வந்துவிட்டது ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சொன்னேன் எப்படியாவது முயற்சி செய்யுங்க இல்லாவிட்டால் அவரை பற்றி கொஞ்சம் விபரம் ஆவது அறிந்து கொண்டு வாருங்கள்.அதை வைத்து அழகாபுரியில் அவரை சந்தித்து கதைப்போம் என்று.

சரி என்று போனை வைத்துவிட்டார்.ஜந்து ஆறு நாள் கழித்த கல்லூரிக்கு வைஸ்னவி அக்கா வந்தார்.எமது கல்லூரிக்கு அருகில் இருக்கும் ஒரு ஊரின் பெயரை சொல்லி அதுதான் கிருபாவின் ஊர் என்றும்.அங்கே தான் அவர் இருக்கின்றார் என்றும் தான் விசாரித்து அறிந்துகொண்டாதாக சொன்னார்.

சரி இது போதும் நேராக அங்கே சென்று விசாரித்தால் மேட்டர் ஒவர் என்றேன்

சரி அவரிடம் ஏதும் கதைக்கவில்லையா நீங்க

இல்லை ராம் கதைப்போம் என்றுதான் கிட்ட போனேன் அப்போது அவர் இளநீர் குடித்துக்கொண்டு இருந்தார் நான் ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு போய்விட்டேன் கதைக்கும் சக்தி எனக்கு இல்லை அதற்கு அவர் ”நாங்கள் இளநியத்தானே குடிச்சோம் ” ஏன் இப்படி பாக்குறீங்கனு என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு இருந்தார்.

அட என்ன நீங்க இதைவிட ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா? நான் உங்களையா பார்த்தேன் அப்படி இப்படினு ஏதாவது கதைச்சிருக்கலாமே

கதைச்சிருக்கலாம் தான் ராம் பட் எனக்கு அந்த மனுசனின் குரலைக்கேட்டதும் பேச்சு மூச்சி இல்லாமல் போய்விட்டது..


ம்ஹும் இது வேறயா? சரி சரி விடுங்க இப்ப ஊர் பெயர் தெரியும் தானே நான் நேரடியாக போய் பார்க்கின்றேன் அப்படி ஒரு நபர் இருந்தால் உங்களையும் கூட்டிக்கொண்டு போகின்றேன் இருவரும் போய் கதைப்போம்.சரி ராம் என்று தலையாட்டினார்.எனக்கு அவரை பார்க்க பாவமாகவும் அந்த கிருபா மேல கோபமாகவும் வந்தது.

வைஸ்னவி அக்கா கிருபா இருப்பதாக சொன்ன ஊரில் தான் என்னுடன் சின்னவயதில் இருந்து படித்த அர்ஜுன் என்ற நண்பன் இருக்கின்றான்.எங்கள் ஊரில் வந்து படித்தான் 9ம் வகுப்பில் இருந்து உயர்தரம் வரை ஒன்றாக படித்தவன் நல்ல நண்பன் எனவே அவனிடம் இது பற்றி சொன்னேன் அவன் சொன்னான் இது சின்ன விடயம் நான் விசாரித்து சொல்லுகின்றேன் என்று.

அதற்குள் வைஸ்னவி அக்கா அவரது ஊருக்கு போய்விட்டார்.எனக்கும் பரீட்சை நெருங்கியதால் அர்ஜுனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பரீட்சையில் கவனம் செலுத்த தொடங்கினேன்.அழகா புரியில் பரீட்சை எழுதுவதற்கு எனக்கு அனுமதி கிடைக்கவில்லை எனவே வைஸ்னவி
அக்காவின் ஊர் நாட்டின் தலை நகரம் என்பதால் இலகுவாக அனுமதி கிடைத்துவிடும் என்பதால் அங்கே பரீட்சை எழுத விண்ணப்பித்து இருந்தேன்.அனுமதி கிடைத்து அங்கே பரீட்சை எழுதுவதற்காக சென்று இருந்தேன்.

நானும்,எனது சின்ன வயது நண்பன் ஒருவனும் போயிருந்தோம்.வைஸ்னவி அக்கா கண்டிப்பாக சொல்லிவிட்டார் வீட்டிற்கு வாருங்கள் என்று.சரி என்று பரீட்சை எழுதிவிட்டு அடுத்த நாள் வைஸ்னவி அக்காவின் வீட்டிற்கு சென்றோம்.இந்த இடத்திற்கு வாங்க நான் வந்து கூட்டிக்கொண்டு போகின்றேன் என்று சொல்லியிருந்தார்.அதன் படி அங்கே போயிருந்தோம் போகும் போது வர்ஷியின் எச்சரிக்கையையும் மீறி வைஸ்னவி அக்கா வாங்கித்தந்த டீசேர்டை போட்டுக்கொண்டு போயிருந்தேன்.


தூரத்தே வைஸ்னவி அக்கா வந்து கொண்டு இருந்தார் கூடவே அவரின் தம்பியும் வந்திருந்தார்.இவர் தான் என்னுடைய தம்பி என்று அவரை அறிமுகம் செய்து வைத்தார்.நானும் நான் ராம் என்றேன் தெரியும் அண்ணா வைஸ்னவி அக்காஉங்களை பற்றி சொல்லியிருக்காங்க  இந்த அண்ணா யார்?

இது கிருபா என்னுடைய ப்ரண்ட்

கிருபா என்றது வைஸ்னவி அக்கா ஒருகணம் என்னைய பார்த்தார்

என்ன அப்படி பாக்குறீங்க இது உங்கட கிருபா இல்லை இது வேற கிருப்பா என்னுடைய நண்பன்.அந்த பெயரை கேட்டது அவ்வளவு சந்தோசமா என்று அவரது காதில் கிசுகிசுத்தேன்

பரவாயில்லை தம்பிக்கு தெரியும் சத்தமாவே சொல்லுங்க ராம் என்றார் 

அட என்ன சொல்லுறீங்க தம்பிக்கு உங்கள் கதை தெரியுமா?

ஆமா ராம் .சரி வாங்க வீட்டுக்கு போய் பேசலாம் என்று சொல்லிவிட்டு ஆட்டோவைக்கூப்பிட்டார்

அப்போதுதான் நான் ஒன்றைக் கவனித்தேன்.சில விடயங்கள் இயல்பாக நம்மையறியாமல் நடக்கும் அப்படித்தான் நான் அணிந்திருந்த நாவல் கலர் டீசேர்டை போலவே வைஸ்னவி அக்காவும் நாவல் கலர் சுடிதார் அணிந்திருந்தார்.எதேர்சையாக இது அமைந்தது.ஆனால் ஏன் இப்படி எதேர்சையாக அமையவேண்டும் என்ன ஒரு விந்தை என்று நான் சிந்தித்துக்கொண்டு இருக்கும் போது 


அது பற்றி வைஸ்னவி அக்காவே கேட்டார்

ஏன் பாஸ் நான் போட்ட நாவல் கலர் உடுப்பே நீங்களும் போட்டு இருக்கீங்க என்று.சிரித்துக்கொண்டு கேட்டார்

நான் சொன்னேன் எனக்கு எப்படி தெரியும்? நீங்களும் நாவல் கலர் தான் போடுவீங்க என்று.நான் என்ன சாஸ்த்திரமா பார்த்தேன்

சரி சரி சும்மா கேட்டேன் பாஸ் டென்சன் ஆகாதீங்க வாங்க வீட்டுக்கு போவோம் என்று ஒரு ஆட்டோ பிடித்து அவரின் வீட்டிற்கு சென்றோம்.

(தொடரும்)

இந்த தொடரின் முன்னய பகுதிகளை படிக்க-
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
பகுதி-4


அரும்பதங்கள்-உடுப்பு-ஆடை
நாவல்-உதா கலர்

Post Comment

5 comments:

mahesh said...

adutha pakuthikaaka waiting anna.

Subramaniam Yogarasa said...

நல்லாப் போகுது பாஸூ,கதை ஹ!ஹ!!ஹா!!!

K.s.s.Rajh said...

@mahesh

done

K.s.s.Rajh said...

@Subramaniam Yogarasa

இந்த உள்குத்துதானே வேணாங்கிறது ஹி.ஹி.ஹி.ஹி.........நன்றி ஜயா

தனிமரம் said...

தொடர்கின்றேன் நாவல் கலர் எனக்கும் பிடிக்கும்!ஹீ

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails