Wednesday, July 04, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-1

40 வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் கொல்கத்தாவில் 1972ம் ஆண்டு ஜுலை 8ம் திகதி ஒரு குழந்தை பிறந்தது.அடுத்த 30ஆண்டுகளில் கிரிக்கெட் உலகில் இந்திய கிரிக்கெட் அணியை தலைநிமிரவைக்கும் ஆற்றல் அந்தக் குழந்தைக்கு இருந்தது என்று யாரும் அப்போது நினைத்திருக்க மாட்டார்கள்.
ஆம் அந்தக் குழந்தை வேறுயாரும் இல்லை கிரிக்கெட் உலகில் இந்திய அணியை தலைநிமிரவைத்த தாதா சவ்ரவ் சந்திதாஸ் கங்குலி.

இவரை தெரிகின்றத?நம்ம தாதாதான்
பிறப்பால் செல்வந்தக் குடும்பத்தை சேர்ந்தவர் கங்குலி.கிரிக்கெட் மீது அளவற்ற காதல் இவரை கிரிக்கெட் வீரராக மாற்றியது.1992ம் ஆண்டு ஜனவரி11ம் திகதி கிரிக்கெட் உலகில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் கங்குலி என்ற ஒரு புதுமுகம் அறிமுகம் ஆனார்.ஆனால் முதல் போட்டியில் 13 பந்துகளை எதிர்கொண்டு 3 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

கொல்கத்தா இளவரசன் சிறுவனாக
அதன் பிறகு கங்குலி வெளியிட்ட ஒரு கருத்து பிரமிப்பானது அதாவது தான் கிரிக்கெட் விளையாடவே வந்திருக்கின்றேன் 12வது வீரராக தண்ணீர் பாட்டில்களை காவிக்கொண்டு திரிவதற்கு இல்லை என்று அதிரடியாக ஒரு கருத்தை வெளியிட்டார் தாதா.எந்தப் புதுமுக வீரராவது இப்படி ஒரு கருத்தை சொல்வார்களா? ஆனால் தாதா சொன்னார்.விளைவு அடுத்த நான்கு ஆண்டுகள் கிரிக்கெட் உலகம் இவரை தள்ளிவைத்தது.

தனது முதல் டெஸ்ட் போட்டியில் கங்குலி சாதனை நாயகன் சச்சினுடன்
அதன் பின் 1996ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டெஸ்ட் அறிமுகம் கிடைத்தது தனது முதல் டெஸ்ட் போட்டியிலே சதம் விளாசி தனது கங்குலி என்ற பெயரை அழுத்தமாக பதிவு செய்தார். அதைவிட இந்த டெஸ்ட்போட்டியில் முதல் இனிங்ஸ்லில் 2விக்கெட்டுக்களையும் இரண்டாவது இனிங்ஸில் 1 விக்கெட்டையும் கைப்பெற்றி பந்துவீச்சிலும் தனது முத்திரையை பதித்தார்.கங்குலியின் முதல் டெஸ்ட் விக்கெட் இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த வீராகவும்,பின்னாலில் கங்குலி லோஸ்ட் மைதானத்தில் சட்டையை கழற்றி சுற்றிய போது இங்கிலாந்து அணியின் தலைவராகவும் இருந்த நஸார் ஹுசைன்.இவர் இந்தியாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தப் போட்டியில் இந்தியாவின் முதல் இனிங்ஸில் 3வது வீரராக களம் இறங்கிய கங்குலி 301 பந்துகளை எதிர்கொண்டு 20 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 131 ஓட்டங்களை பெற்றார்.இந்தப் போட்டியில் தான் ராகுல் ராவிட்டும் தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார் என்பது இன்னும் சிறப்பம்சம் 7வது துடுப்பாட்ட வீரராக களம் இறங்கிய ராவிட் 267 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டங்களுடன் 95 ஓட்டங்களை பெற்று ஆட்டம் இழந்து அறிமுகப் போட்டியில் சதம் பெரும் வாய்ப்பை 5 ஓட்டங்களினால் தவறவிட்டார்.

ஆனால் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் அந்தப் போட்டியில் கங்குலி,ராவிட் வடிவில் எழுதப் பட்டது என்றால் மிகையாகாது.

இந்தப் போட்டியில் கங்குலிக்கு இன்னும் ஒரு பெருமையும் கிடைத்தது அதாவது கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் லோட்ஸ் மைதானத்தில் சதம் பெறுவது ஓவ்வொறு கிரிக்கெட் வீரரின் கனவாக இருக்கும். ஆனால் தனது அறிமுக டெஸ்டிலே அந்த பெருமையை தாதா பெற்றார்.
சாதனை நாயகன் சச்சின் கூட இதுவரை லோட்ஸ் மைந்தானத்தில் ஒரு சதம் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த டெஸ்ட் போட்டியிலும் சதம் விளாசி தனது முத்திரை தாதா அழுத்தமாக பதித்தார்.கங்குலியை கிரிக்கெட் உலகம் திரும்ப்பி பார்த்தது.

ஓப்சைட்டின்கடவுள்(he was God on the off-side) என்று வர்ணிக்கப் பட்டவர் ஆம் எத்தனை பீல்ட்டர்களை ஓப்சைட்டில் நிறுத்தினாலும் அவர்களையும் மீறி பந்தை எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்புவதில் கங்குலிக்கு நிகர் கங்குலிதான்.

அறிமுகப் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த தாதா


அடுத்தபதிவில்-அப்போதைய கேப்டன் அசாருதீனால் ஒரு நாள் போட்டிகளில்சச்சினுடன் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களம் இறக்கப் பட்ட கங்குலி(ஒருநாள் போட்டிகளில் சச்சின்,கங்குலி,ஜோடி கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடியாக ஜொளித்தது பல சாதனைகள் படைத்தது அதில் பல சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது),தாதாவின் எழுச்சி,ஒரு வரலாற்று சாதனையை தடுத்த தாதா,இன்னும் பல சுவாரஸ்யமான விடயங்களை எதிர்பாருங்கள்

(தாதா தொடர்ந்து வருவார்)


படங்கள்-கூகுள்
வீடியோ-youtube


இந்த தொடரின் அறிமுகப் பதிவை படிக்க இங்கே கிளிக்-வரலாற்றை மாற்றிய தாதா-தொடர் அறிமுகம்


முஸ்கி-இன்று வெளிவரவேண்டிய பதிவுலக அரசியல் தொடரின் அடுத்த பாகம் அடுத்த வாரம் வெளிவரும் தாமதத்துக்கு மன்னிக்கவேண்டும் நண்பர்களே

Post Comment

10 comments:

ராஜி said...

எனக்கு பிடித்த கங்குலியை பற்றி அரிய தகவலையும், படங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.

dhanu said...

Sourav என்ற பெயரை வாசித்தாலே நான் மிக மகிழ்ச்சி அடைவேன்.. Sourav ஐ பற்றிய தொடர் என்றால் சொல்லவா வேண்டும்... Thank You so much for this.. All the best..
இத்தொடர் Sourav ரசிகர்களுக்கு ஒரு விருந்து .. Sourav ஐ பற்றி நன்கு அறியாதவர்களுக்கு உண்மையை தெரிந்துகொள்ள ஒரு சந்தர்பம்..
Great effort.. :)

K.s.s.Rajh said...

@வலைஞன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ராஜி

நன்றி அக்கா

K.s.s.Rajh said...

@dhanu

உங்களை மாதிரித்தான் நானும் தாதா ரசிகர்கள் எல்லோறும் ஒரே மாதிரி இருக்கோம் இல்ல

நன்றி சகோ

dhanu said...

@K.s.s.Rajh
:) :) :)

திண்டுக்கல் தனபாலன் said...

முதல் பதிவே நம்ம 'தாதா' வைப் பற்றி நிறைய தகவல் சொல்லி அசத்திட்டீங்க... தொடருங்கள் நண்பரே ! வாழ்த்துக்கள் ! நன்றி ! (TM->4)

எல் கே said...

DADA is best

Athisaya said...

தொடருங்கள் நண்பா...1வாழ்த்துக்கள்.
http://athisaya.blogspot.com/2012/07/blog-post.html

”தளிர் சுரேஷ்” said...

கங்குலியைப் பற்றி மிகச்சிறப்பாக எழுதி அசத்தி உள்ளீர்கள்! தொடரட்டும்! வாழ்த்துக்கள்!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails