Monday, July 23, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-4

கொல்கத்தா டெஸ்டில் இந்தியா அபாரவெற்றி பெற்றாலும். அதுக்கு முந்தைய மும்பை டெஸ்டில் அவுஸ்ரேலியா வென்று இருந்தால் மூன்றாவதாக சென்னையில் நடந்த டெஸ்ட் எதிர்பார்பை கிளப்பியது.

சென்னை டெஸ்ட்


அவுஸ்ரேலியா தனது முதல் இனிங்ஸில் மத்தியூ ஹெய்டனின் இரட்டை சதத்தின் உதவியுடன் 391 ஓட்டங்கள் குவித்தது.
பந்துவீச்சி ஹர்பஜன் சிங் 7 விக்கெட்டுக்களை அள்ளினார்
தனது முதலாவது இனிங்சை ஆடிய இந்திய அணியில்
ஆரம்ப துடுப்பாட்டவீரர்கள் தாஸ்-84 ஓட்டங்களையும் சடகோபன் ரமேஸ்-61 ஓட்டங்களையும் பெற்றனர்,அடுத்து வந்த லக்ஸ்மனும் தன் பங்கிற்கு 61 ஓட்டங்களை எடுக்க அடுத்துவந்த சச்சின் 126 ஓட்டங்களை எடுத்தார்.பிறகு ராவிட்டும் 81 ஓட்டங்களைப்பெற இந்திய அணி 501 ஓட்டங்களை குவித்தது
இந்தப்போட்டியில் சச்சின் பெற்ற சதமானது டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த 25வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இனிங்சில் அவுஸ்ரேலியா 264 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக இந்தியாவுக்கு 155 ரன்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 8விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அதிகபட்சமாக லக்ஸ்மன் 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

முதல் இனிங்சில் 7விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஹர்பஜன் சிங் இரண்டாவது இனிங்சில் 8 விக்கெட்டுக்களை அள்ளினார் மொத்தமாக 3வது டெஸ்டில் 15விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

2-1 என்ற கணக்கில் கங்குலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று பாடர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது.இந்த டெஸ்ட் தொட்டரின் தொடர் நாயகன் விருதையும் ஹட்பஜன் சிங்கே தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை அவுஸ்ரேலியா வென்றது குறிப்பிடத்தக்கது

கங்குலி எனக்கு ஹீரோவான தொடர்
2001 ஆண்டு என் 12வது வயதில் கிரிக்கெட் மீது தீராத காதல் ஏற்பட்ட காலம். நாட்டில் யுத்தமேகம் சூழ்ந்து இருந்த காலம் அது.குண்டு மழைகளுக்கு நடுவே வாழ்ந்த நேரம் ஆனாலும் கிரிக்கெட் மீது அளவற்றகாதல்.செய்திகளை அறிந்துகொள்ள எமக்கு இருந்த ஒரே ஒரு வழி பத்திரிகைகள் தான்.பத்திகைகளில்வரும் கிரிக்கெட் செய்திகளை சேகரித்துவைப்பதும்,அதில் வருக் கிரிக்கெட் வீரர்களின் படங்களை வெட்டி ஓட்டி அவர்கள் பற்றிய விபரங்களை தொகுத்துவைப்பதும் என் பொழுதுபோக்கு.

2001 ஆகஸ்டில் எதேர்சையாக ஒரு பத்திரிகையில் சுடர் ஓளி என்று நினைக்கின்றேன் பத்திரிக்கை பெயர் ஞாபக்ம் வரவில்லை.
சனத்,கங்குலி,ஸ்ரிபன் ப்ளமிங் ஆகியோர்களது படம் போட்டு கொக்கோ கோலா சீரிஸ் ஆரம்பம் என்று செய்தி வந்திருந்தது.இதில் கங்குலி,சனத்,ஆகியோர்களை நான் அறிந்திருந்தாலும் ஸ்ரிபன் ப்ளமிங் எனக்கு புதியவர்,அந்த படத்தை வெட்டிவைத்துக்கொண்டேன்.போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கும் வசதி ஏதுவும் அப்போது எனக்கு கிடைக்கவில்லை.எனவே வானொலி மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்வார்கள்.

அதுவும் இலங்கையில் நடைபெற்ற படியால் தமிழ் மொழிமூலமும் வர்ணனை இருக்கும் அப்போது ஆங்கிலம் பெரிதாக எனக்கு தெரியாது. அப்ப இப்ப மட்டும் என்ன நீ ஆங்கில புலவரா என்று கேட்கப்படாது. இப்போதைய அறிவுடன் ஒப்பிடும் போது அப்ப கம்மிதான். அதைவிட என்னால் இப்ப ஆங்கிலம் பேசமுடிகின்றது என்றால் அதுக்கு 50 வீதக் காரணம் கிரிக்கெட்டும்,கங்குலியும் தான் என்ன ஆச்சரியமாக இருக்கா?இது பற்றி நான் ஒரு பதிவு முன்பு எழுதியிருக்கேன் இங்கே கிளிக் செய்து படிக்க-இப்படியும் ஆங்கிலம் கற்கலாம்

சரிவிடயத்துக்கு வருவோம் அந்த தொடர் முழுவதும் ரேடியோவில் தான் ஸ்கோர் கேட்டது. அதுவும் மாலை வேளையில் எங்கள் பாடசாலை மைதானத்தில் கிரிக்கெட் விளையாட ஊரில் உள்ள இளைஞர்கள் வருவார்கள்.அப்ப நான் 12 வயது சின்னப்பையன் என்றாலும் அவர்களுடன் சேர்ந்துவிளையாடுவது வழமை அந்த நேரத்தில் ரேடியோவில் சத்தமாக கிரிக்கெட் வர்ணனையை வைத்துவிடுவார்கள் அப்போதுதான் ஸ்கோர் கேட்பது.சொந்தமாக ரேடியோ வாங்க கூட வசதிகள் அற்ற காலம் அது.

இந்த தொடரில் இலங்கை அணிக்கு கேப்டன் சனத் ஜெயசூர்யா,இந்தியாவுக்கு கங்குலி,நியூஸ்லாந்துக்கு ஸ்ரிபன் ப்ளமிங் இந்த தொடரில் நியூஸ்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும் ஸ்ரிபன் ப்ளமிங் என்னைக் கவர்ந்தார். இந்த தொடரில் இருந்துதான் நான் ஸ்ரிபன் ப்ளமிங்கின் ரசிகனானேன்,கங்குலிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் என்னைக் கவர்ந்த ஒரு வீரர் ப்ளமிங்.

ஒரு போட்டியில் ப்ளமிங்,தாதா நாணைய சுழற்சியின் போது

இந்த தொடரில் கங்குலி கங்குலி என்று யாரைப் பார்த்தாலும் கங்குலியை பற்றிய பேச்சுதான்.ஒரு போட்டியில் கங்குலிக்கு விளையாட தடைவிதிக்கப் பட அடுத்த போட்டியில் துணைக்கேப்டன் ராவிட் கேப்டனாக இருந்தார்.ராவிட் கேப்டனாக இருந்த போட்டியை நேரடியாக பார்த்த ஒரு அண்ணன் வந்து சொன்னார்.கங்குலி என்ன தில்லான ஆள் ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப் பட்டாலும் கூலாக இருந்து நூல்டிஸ் சாப்பிட்டுக்கொண்டு போட்டியை பாத்துக்கொண்டு இருந்தார் என்று.அந்த வசனம் எனக்கு மனதில் ஆளமாக பதிந்தது.கங்குலியை ஆடும் போட்டியை எப்படியும் டி,வியில் பார்த்துவிடவேண்டும் என்று.அடுத்த போட்டியில் கங்குலி தடைநீங்கி ஆடவந்துவிட்டார்.ஆனால் என்னால் டி.வியில் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.


இறுதிப்போட்டிக்கு இந்தியாவும்,இலங்கையும் வந்தது அப்போது எங்களுடன் கிரிக்கெட் விளையாடும் ஒரு அண்ணன் சொன்னார் தம்பி மாயாவீட்ட இறுதிபோட்டியை டிவியில் போடுறாங்களாம்.ஆனால் மண்ணென்னைக்கு 50 ரூபா காசு கொடுக்கனும் என்று.மாயா என்பது அந்த ஊரில் இருந்த ஒரு அண்ணன் அவர்கள் வீட்டில் டீவி.அண்டனா எல்லாம் இருந்தது.ஆனால் கரண்ட் வசதிகள் எதுவும் அப்போது வன்னியில் இல்லை எனபதால் பொதுவாக டி.வி வைத்திருப்பவர்கள் ஜெனரெட்டரில் தான் படம் போடுவார்கள். அதுக்கு மண்ணன்னை தேவை என்பதால் படம் பார்கவருபவர்களிடம் மண்ணென்னைக்கு காசுவாங்குவது வழமை.

எனக்கு இறுதிப்போட்டியை பார்க்க ஆசை போட்டியை பார்க என்பதைவிட கங்குலியை பார்க்க என்பது பொருத்தமாக இருக்கும்.வீட்டில் அம்மாவிடம் சொன்னேன்.50 ரூபா பணம் என்பது அந்த நேரத்தில் எங்களுக்கு மிகப் பெரியதொகை ஆம் நாட்டில் யுத்தமழை பொழிந்த நேரத்தில் 50 ரூபா இருந்தால் இரண்டுநாள் பசியை போக்கலாம் ஒரு ராத்தல் பாண் 12 ரூபாதான் மூன்று ராத்தல் பாண் வாங்கினால்,எங்களுக்கு அது மூன்று நாட்களுக்கு போதுமானது காரணம் கோதுமை மா இலகுவில் பசிக்காது ஒரு துண்டு பாணுடன் ஒரு ப்ளேன் டீயும் குடித்தால் ஒருநாள் முழுவதும் பசிதாங்கும்.

அம்மாவும் சரி பார்போம் என்று சொல்லிவிட்டார்.இந்த இடத்தில் என் அம்மாவை பற்றி ஒன்று சொல்லவேண்டும் என் முயற்சிகள் எதுக்கும் தடையாக இருக்கமாட்டார் நான் ஆசைப்படுவதை நிறைவேற்றுவதில் அவருக்கு ஒரு சந்தோசம்.ஆனால் நான் எதுவுமே ஆசைபப்ட்டு கேட்பது இல்லை. அப்படி ஆசைவந்தாலும்  மனசுக்குள்ளே வைத்துக்கொள்வேன் காரணம் அதை அம்மாவால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டால் அவர் மனசு கஸ்டம் படுமே என்பதால் என் ஆசைகள் மனசுக்கு புதைத்துவிடுவது என் வழமை சின்னவயசிலிருந்து இன்றுவரை அந்தப் பழக்கம் தொடர்கின்றது.


இறுதிப்போட்டிக்கான நாளும் வந்தது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கு ஆகஸ்ட் 5ம் திகதி 2001ம் ஆண்டு காலையில் இருந்தே எனக்கு ஒரே கவலை என்னடா போட்டியை பார்கமுடியாமல் போய்விடுமோ என்று அம்மாவும் அப்பா வரட்டும் காசுவேண்டித்தாரன் என்று சொன்னா.பகல் இரவு போட்டி என்பதால் எனக்கு மனசில் ஒரு நின்மதி. அப்பா பின்னேரத்துக்கு இடையில் வந்துவிடுவார் என்று.அதேபோல அப்பா வந்ததும் அம்மா 50 ரூபாய் காசுவேண்டித்தந்தார்.

அன்று எங்கள் வீட்டில் நீண்டநாளுக்கு பிறகு நல்ல கறியுடன் சாப்பாடு அப்பா இறால்வேண்டிக்கொண்டு வந்திருந்தார்.ஆனால் எனக்கு சாப்பிட மனசு இல்லை ஒரு நிமிடம் கூடதாமதிக்கவில்லை.அம்மாவுக்கு ஒரே கவலை எப்பவாவது இருந்திட்டுதான் நல்ல சாப்பாடு சமைக்கிறம் என்னால் சாப்பிட முடியவில்லை என்று.கொஞ்சம் சோறாவது சாப்பிட்டு போ என்றார் நானும் அம்மாவின் மனசு கஸ்டப் படக்கூடாது என்பதற்காக குழம்பு வெந்த பாதி வேகாதது மீதியுமாக அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு கிளம்பினேன்.

இலங்கைதான் முதலில் துடுபெடுத்தாடியது சனத் ஒரு ருத்திர தாண்டவம் ஆடி 99ஓட்டங்களை விளாசினார்.இலங்கை 5விக்கெட்டுக்களை இழந்து 295 ஓட்டங்களை குவித்தது அப்போது எல்லாம் இது மிகப்பெரிய ஸ்கோர் பந்துவீச்சில் இந்திய பந்துவீச்சாளர்களை துவைத்து எடுத்தனர் இலங்கைவீரர்கள்

இதில் சேவாக் 9 ஓவர்கள் பந்துவீசி இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார் அதில் சனத்தின் விக்கெட் மற்றும் மாவன் அத்தபத்துவின் விக்கெட்.இந்த இரண்டுவிக்கெட்டிலும் சேவாக்கின் பந்துவீச்சில் கங்குலியிடம் கேட்சாகியே ஆட்டம் இழந்தனர்.

அடுத்து ஜெயவர்த்தனவும்,ரசல் ஆர்னோல்டும் சோதித்தனர் ஜெயவர்த்தன 57 ஓட்டங்களை பெற்று ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சில் LBWஆனார்.
ரசல் அர்னோல்ட் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட பிறகு ஒருவாரு சகிர்கானின் பந்துவீச்சில் கங்குலியிடம் கேட்சாகி ஆட்டம் இழந்தார்.
இதில் ரசல் ஆர்னோல்டின் கேட்சை கங்குலி மிகவும் லாவகமாக பிடித்துவிட்டு தனக்கே உரிய பாணியில் ஒரு பார்வை பார்த்தார் பாருங்க சான்சே இல்லை என்ன ஒரு கம்பீரம்.

இந்திய துடுப்பெடுத்தாடிய இனிங்சை நான் பார்கவில்லை இரவு ஆகிவிட்டதால் வீட்டிற்கு வந்துவிட்டேன் இந்தப்போட்டியில் இந்திய அணி 174 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்து இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் சச்சின் இடம்பெறவில்லை 
இந்ததொடரில்  இந்தியா தனது முதலாவது போட்டியில் நியூஸ்லாந்துக்கு எதிராக  விளையாடியது இது சுவாரஸ்யம் என்னவென்றால் தன்னுடன் யுவராஜ் சிங் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் இறக்கிறக்கினார் கங்குலி. ஆனால் யுவராஜ் சிங் 6 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்துவிட்டார்.(சேவாக் 6வது  விக்கெட்டுக்காக மத்தியவரிசையில் களம் இறங்கினார்)இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் சேவாக் நியூஸ்லாந்துக்கு எதிரான இன்னும் ஒரு போட்டியில் 70 பந்துகளில் 19 பவுண்ரிகள் ஒரு சிக்சர் அடங்களாக 100ஓட்டங்களை விளாசினார் சேவாக்கின் அதிரடி இந்தப்போட்டியில் இருந்து ஆரம்மாகியது என்று கூறலாம்.


முதன் முதலில் கங்குலியை களத்தில் பார்க்கும் போது ஒரு படைத்தளபதி தனது படைகளை வழிநடத்துவது போல கம்பீரமான ஆளுமையுடன் வழிநடத்திக்கொண்டு இருந்தார்.அடிக்கடி நகத்தை கடித்து துப்பிக்கொண்டு பீல்டிங்கில் செட் பண்ணுவார் அது தாதாவுக்கே உரிய தனி ஸ்டைல்.

(தாதா வருவார்)

இந்த தொடரின் முன்னைய பகுதிகளை படிக்க-

Post Comment

9 comments:

பாலா said...

போகப்போக சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது. அருமை. நண்பரே

கோவி said...

தொடருங்கள்..

kaialavuman said...

நல்ல வர்ணனைத் தொடருங்கள் ராஜா...

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் வர்ணனை மறுபடியும் அந்த மேட்சை பார்த்தது போல் இருந்தது...
ஒவ்வொரு சின்ன விசயத்தையும் இவ்வளவு ஞாபகம் வைத்து எழுதுவதைப் பார்க்கும் போது,
உங்களின் கங்குலியின் மீது இருக்கும் ஈடுபாடு புரிகிறது...
தொடருங்கள். நன்றி. (த.ம. 2)

என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

K.s.s.Rajh said...

@கோவி

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@வெங்கட ஸ்ரீநிவாசன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி பாஸ்

GoCool said...

arumaiyana pathiu....!

”தளிர் சுரேஷ்” said...

தாதா நினைவுகள் அற்புதம்! அந்த தொடரை கண்முன் நிறுத்தியது. அந்த இறுதிப்போட்டியை நான் பார்த்தாலும் நினைவில் இல்லை! அருமையான பகிர்வு!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails