Thursday, July 12, 2012

மார்க் பவுச்சர் தென்னாபிரிக்காவின் ஒன் மேன் ஆர்மி

கீழே உள்ள செய்தியை படிக்கும் போது என் கண்ணில் இருந்து என்னையறியாமல் கண்ணீர் வந்தது காரணம்.............
அதற்கு முதலில் என்ன செய்தி என்று பார்போம்


தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பரான மார்க் பவுச்சர்  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

சரி கிரிக்கெட் என்றால் ஒரு வீரர் ஓய்வு பெறுவது சகஜம் தானே என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் பவுச்சரின் அருமை எத்தகையது என்று பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியாது

பவுச்சர் திடீர் அறிவிப்பை வெளியிட காரணம் என்ன அவராக விரும்பி இந்த அறிவிப்பை வெளியிடவில்லை.இது ஒரு துரதிஸ்டவசமான சம்பவம்

அவருடைய கண்ணில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க அணி, இப்போது இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்க அணி அங்குள்ள உள்ளூர் அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
திங்கள்கிழமை தொடங்கிய சோமர் செட் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில், கீப்பிங் செய்து கொண்டிருந்தார் பவுச்சர். தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் வீசிய பந்தில் சோமர்சேட் பேட்ஸ்மேன் ஜீமால் போல்டு ஆனார்.
மார்க் பவுச்சரின் இடது கண்ணை பதம்பார்த்த "பெய்ல்ஸ்'.

அப்போது ஸ்டெம்பில் இருந்த "பெய்ல்ஸ்' பவுச்சரின் கண்ணில் தாக்கியது. ரத்தம் கொட்டிய நிலையில் மைதானத்தில் இருந்து வெளியேறினார் பவுச்சர். இதையடுத்து அவருடைய கண்ணுக்கு 3 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இதுதொடர்பாக பவுச்சர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சோகத்தோடும், வலியோடும் ஓய்வு முடிவை அறிவிக்கிறேன். எனது கண்ணில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக இனிமேல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இங்கிலாந்து தொடருக்கு நான் தயாரானதைப் போன்று வேறு எந்தத் தொடருக்கும் தயாரானதில்லை. இங்கிலாந்துத் தொடரில் நான் ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டியிருக்கும் என்று நினைக்கவில்லை. ஆனாலும் சூழ்நிலை என்னை ஓய்வுக்கு தள்ளிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.


கிரிக்கெட்டில் எத்தனையோ வீரர்கள் தோன்றியிருக்கின்றார்கள் ஆனால் எல்லா வீரர்களும்  புகழ்பெருவதும் இல்லை.ஏன் சில வீரர்கள் பெரிதும் அறியப் படாத வீரர்களாக இருப்பார்கள்.ஆனால் அணியை தன் தோள்களில் சுமக்கும் பெரும் வேலையை செய்வார்கள் இவர்கள் சத்தம் இல்லாமல் சாதனைபடைத்துக்கொண்டும் இருப்பார்கள்.தற்போது விளையாடும்  வீரர்களில் மேற்கிந்திய தீவுகளின் சர்வான்,சந்திரபோல் முதல் பல வீரர்களை உதாரணம் சொல்லாம் அப்படி சத்தம் இல்லாமல் சாதனை படைத்த தென்னாபிரிக்க அணியை 15 ஆண்டுகள் தன் தோள்களில் சுமந்த ஒருவர்தான் மார்க் பவுச்சர்.

கிரிக்கெட்டில் சச்சினையும்,கங்குலியையும்,லாராவையும்,ராவிட்டையும்,கவாஸ்கரையும்,கபில்தேவ்வையும்,ஏன் இப்ப உள்ள விராட் கோலி,முதல் பல வீரர்களை தெரிந்தவர்களில் எத்தனை பேருக்கு மார்க் பவுச்சரை தெரியும் அப்படியே தெரிந்தாலும் தென்னாபிரிக்க அணியின் விக்கெட் கீர்ப்பர் அவ்வளவுதான்.

பவுச்சரின் ஓய்வு குறித்து தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மித் சொல்லியிருக்கும் கருத்தை பார்த்தால் புரியும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியில் பவுச்சரின்  பங்களிப்பு எத்தகையது என்று.
நானும், பவுச்சரும் வாழ்க்கைப் பயணத்தில் மிக நீண்ட தொலைவை ஒன்றாக கடந்து வந்தோம். ஆனால் தற்போது பிரிந்து செல்வது எனக்கு துயரத்தை ஏற்படுத்துகிறது. கடந்த 14 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் நீங்கள் தென்ஆப்பிரிக்காவின் உண்மையான போர்வீரனாக இருந்தீர்கள். ஒரு போர்வீரன் போல் எதுவும் கேட்காமல் நாட்டுக்காக 100 சதவீத பங்களிப்பை அளித்தீர்கள் 

இதை சொன்னவர் வேறுயாரும் இல்லை தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் கிரேம் ஸ்மித்

ஆம் கிரிக்கெட் உலகில் பவுச்சர் ஒரு வித்தியாசமான போராளி தன்னம்பிக்கை மிக்க ஒரு வீரர் பல நேரங்களில் தென்னாபிரிக்க அணி தடுமாறிய போது எல்லாம் அந்த அணியை தன் சிறப்பான ஆட்டத்தால் கரைசேர்த்த போர்வீரன்.உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்.விக்கெட் கீப்பிங்கில் பல சாதனைகள் புரிந்த வீரர்


மார்க் பவுச்சர் இதுவரை 147 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 555 பேரை ஆட்டமிழக்க செய்துள்ளார். இதில் 532 கேட்ச்களும், 23 ஸ்டெம்பிங்களும் அடங்கும். மேலும் 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பவுச்சர் 425 பேரை ஆட்டமிழக்க செய்துள்ளார். 25 டுவென்டி20 போட்டிகளில் பங்கேற்று 19 பேரை அவுட்டாக்கி உள்ளார்.

சர்வதேச அளவில் அதிக விக்கெட் வீழ்த்த காரணமான விக்கெட் கீப்பர் என்ற பட்டியலில் மார்க் பவுச்சர் 999 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
இது ஒரு மகத்தான சாதனையாகும்.

இரண்டாவது இடத்தில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்(905), 3வது இடத்தில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் லேன் ஹூலி(628), 4வது இடத்தில் இலங்கையின் சங்கக்காரா(621), 5வது இடத்தில் இந்திய கேப்டன் தோனி(496) ஆகியோர் உள்ளனர்.இதில் தற்போது தோனியும்,சங்கக்காராவும் மட்டுமே விளையாடிவருகின்றனர் இவர்கள் பவுச்சரின் சாதனையை நெருங்குவது இலகுவானது இல்லை அதிலும் சங்கக்காரா டெஸ்ட் போட்டிகளுக்கு விக்கெட் கீப்பராக செயல் படுவது இல்லை  எனவே சங்கக்காரா நெருங்குவது கடினம் தான் தோனிக்கு சிலவேளை சந்தர்ப்பம் உண்டு.

இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்த காரணமாக பவுச்சர் இருந்திருந்தால் 1000ம் விக்கெட் வீழத்தகாரணமாக இருந்த மகத்தான சாதனையை புரிந்திருப்பார் துரதிஸ்டவசமாக அவரால் முடியவில்லை.ஆனால் பவுச்சர் விரைவில் குணமடையவேண்டும் மீண்டும் அவர் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பவேண்டும் அவர் அந்த 1000ம் விக்கெட் வீழத்த காரணமான சாதனையை படைக்கவேண்டும் என்பது என்னைப்போல அவரது ரசிகர்களின் பிராத்தனையாகும்.

பெரும்பாலும் என் வயது இளைஞர்களின்  அபிமான வீரர்கள் ஓவ்வொறுவராக ஓய்வு பெரும் போது அல்லது இனி ஓய்வு பெறும் போது கிரிக்கெட் மீதே வெறுப்பு வருகின்றது.
கங்குலி,ராவிட்,சனத்,இம்சமாம் உல் ஹக்,கில்கிறிஸ்ட்,ஸ்டீபன் ப்ளமிங்,லாரா,முரளி,இப்படி எத்தனை வீரர்கள் ஓய்வு பெரும் போது கிரிக்கெட் மீதே வெறுப்பு வந்தது எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்களில் மார்க் பவுச்சரும் ஒருவர் அவரும் தற்போது ஓய்வை அறிவித்துள்ளது பெரும் கவலையளிக்கின்றது.

இந்தியாவின் ஷேவாக்,யுவராஜ் சிங்,ஹர்பஜன் சிங்,சகிர்கான் இலங்கையின் சங்கா,மகேல,தரங்க,பாகிஸ்தானின் அப்ரிடி,யுனிஸ்கான்,இங்கிலாந்தின் அலிஸ்டர்குக்,ஸ்ரோரஸ்,அவுஸ்ரேலியாவின் பொண்டிங்,மேற்கு இந்திய தீவுகளின் சந்திரபோல்,சர்வான்,நியூஸ்லாந்தின் டானியல் விட்டோரி,ரோஸ் டெய்ல்ர்,

மேலே சொன்ன வீரர்கள் உட்பட இன்னும் சில வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் நான் கிரிக்கெட் பார்பதையே நிறுத்திவிடப்போகின்றேன்.எப்படியும் சில ஆண்டுகளில் இவர்கள் ஓய்வு பெற்றுவிடுவார்கள். ஏனோ தற்போது விளையாடும் இளம் வீரர்களை ரசிக்கவோ இல்லை  அவர்களினது ஆட்டம்.மேலே நான் சொன்ன வீரர்களைப் போல என்னைக் கவரவில்லை.

இந்த இடத்தின் இன்னும் ஒன்றையும் சொல்லவேண்டும் ஸிம்பாவே அணியின் விக்கெட் கீர்ப்பர் தைபுவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்துள்ளார்.இவருக்கும் ஒரு பெருமையுண்டு அதாவது குறைந்தவயதில் டெஸ்ட் அணிக்கு தலைமைதாங்கியவர் என்னும் பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளார் தைபு 21 வயதில் ஸிம்பாவே டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப் பட்ட போது இவருக்கு இந்தப் பெருமை கிடைத்தது.

மார்க் பவுச்சர் பற்றி என் கருத்து- தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் ஒன் மேன் ஆர்மி இது மிகைப்படுத்தப் பட்ட கருத்தாக சிலருக்கு தெரியலாம் ஆனால் நிச்சயம் பவுச்சர் ஒரு தன்னிகர் இல்லாத கிரிக்கெட் போர்வீரன்.

கிரிக்கெட் உலகில் இனி இப்படி ஒரு விக்கெட் கீப்பர் தோன்றுவார் என்பது சந்தேகமே கிரிக்கெட் உள்ள காலம் வரை பவுச்சரின் பெயர் கிரிக்கெட் உலகில் நிலைத்து நிற்கும்.


Post Comment

9 comments:

Riyas said...

எனக்கும் இவரை மிகவும் பிடிக்கும்..

ஒரு திறமையான வீரர் என்பதுடன்,, மைதானத்தில் சக வீரர்களுடன் ஒழுக்கமாக நடந்து கொள்பவர்..

தென்னாபிரிக்காவுக்கு இழப்புத்தான் அவரது ஓய்வு,, நல்ல பதிவு ராஜ்..

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் வருத்தப்பட வைக்கும் சம்பவம்...
இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்த காரணமாக இருந்தால்,
அவரின் சாதனை 1000-யை தொட்டு விடும்...
நீங்கள் சொன்னது போல் மிகச் சிறந்த போர் வீரர் தான்...
விரைவில் குணமடைந்து வருவார்... சாதிப்பார் என நம்புவோம்...
நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (த.ம.3)


ஆஸ்திரேலியா வாங்கின உதைகளைப் பற்றி ஒரு கட்டுரை போடலாமே... நன்றி...

Minmalar said...

அவர் கண் பூரண குணமாகி ஏதாவது ஒரு அணிக்கு கோச்சாக வருவார் என நினைக்கிறேன்.

Athisaya said...

எனக்கு இந்த மனிதர் ணாரென தெரியாது...ஆனால் இன்த மனிதரின் ஓய்விற்குப்பின்னான சோகம் இங்கும் இழையோடுகிறது!

Thozhirkalam Channel said...

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்!நலமா?///கிரிக்கட்?????எஸ்கேப்!

காப்பிகாரன் said...

எனக்கும் பிடிச்ச கிரிகெட் வீரர் எனக்கு ரொம்ப பிடிச்சது சவுத் ஆப்ரிக்கா லான்சே க்ளுச்னர்

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே இனைய இணைப்பு பிரச்சனை காரணமாக பதிவுலகில் சீராக இயங்க முடியவில்லை மன்னிக்கவேண்டும் நண்பர்களே

kaialavuman said...

நிதானமாக ஆட வேண்டியிருந்தாலும் அடித்து ஆட வேண்டியிருந்தாலும் அவரை நம்பி களம் இறக்கலாம். நல்ல ஆட்டக்காரர். இந்த தொடர் முடிந்ததும் விலக நினைத்திருந்தார். ஆனால், அதற்குள் இந்த மாதிரி ஆகிவிட்டது.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails