Friday, July 20, 2012

வரலாற்றை மாற்றிய தாதா-3

கங்குலி ஒரு சாதாரன கிரிக்கெட் வீரர் இல்லை. ஒரு மகா திறமைசாலி ஏற்கனவே சீராக இயங்கிய அணியை வழிநடத்தி அதில் வெற்றி அடைவது இலகு. ஆனால் கங்குலியின் தலையில் சுமத்தப் பட்ட கேப்டன் பதவி அப்படியில்லை குருவிதலையில் பனங்காய் வைத்தது போல அவர் தலையில் வைக்கப் பட்டது.அதை சுமக்க தயார் ஆனார் தாதா. தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அதில் வெற்றிகண்டவர்.

சூதாட்ட பிரச்சனையில் இந்திய அணி சிக்கி தவித்த நேரம்,தொடர் தோல்விகளால் இந்திய அணி துவண்டு போயிருந்த காலம்,சச்சின் தனக்கு கேப்டன் பதவி சரிப்பட்டுவராது என்று நீங்க.தாதாவிடம் வருகின்றது அதிகாரம்.


இந்திய கிரிக்கெட் வரலாற்றை கங்குலிக்கு முன் கங்குலிக்கு பின் என்று பிரிக்கலாம். கங்குலிக்கு முன் வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெருவது என்பது கடினமான காரியம் என்று நினைத்தனர் இந்திய அணியினர்.
ஆனால் தாதா அசால்ட்டாக அதைசாதித்துகாட்டினார்.
கிரிக்கெட் உலகம் கங்குலியின் தலைமைத்துவத்தை திரும்பிபார்த்தது.

அதைவிட அவுஸ்ரேலியா போன்ற அணிகளின் கேப்டன்கள் ஒரு பார்முலாவை வைத்திருந்தனர் அதாவது போட்டி தொடர் தொடங்குவதற்கு முன் எதிரணியினரை ஏளனமாக சொல்வது இதனால் அவர்கள் மனரீதியாக குழப்பம் அடைவர் என்று அவர்கள் எண்ணம்.


கங்குலி கண்ணாடி போல அவர்கள் எதைக் காட்டினார்களோ அதை திருப்பி காட்டினார்.எதிரணிகேப்டன்கள் திக்குமுக்கு ஆடிப்போனார்கள் ஆகா இவன் சாதாரன ஆள் இல்லை என்று.அதுவரை மைதானத்தில் எதிரணிவீரர்கள் ஏதாவது கூறினார் தலையை குனிந்து கொண்டு செல்லும் இந்திய வீரர்களிடம் தன்னிடம் இருந்த ஆக்ரோச குணத்தை கங்குலி புகுத்தினார்.இதனால் இந்திய அணிவீரர்களை  கேலி செய்யும் எதிரணி வீரர்கள் அடக்கிவாசித்தார்கள்.

ஹகிர்கான்,யுவராஜ் சிங்,சேவாக்,மொகமட் கைப்,இர்பான் பதான்,ஏன் தோனி,தினேஸ்கார்த்திக் என்று பல இளம் வீரரகளை உருவாக்கிய பெருமை தாதாவையே சாரும் இந்திய கிரிக்கெட்டுக்கு தாதா வழங்கிய பங்களிப்பில் இது மிகவும் முக்கியமானது பல இளம்வீரர்களை உருவாக்கிவிட்டது.

தன்னிகரில்லா தலைவனுடன் யுவராஜ் சிங்

பல முடிவுகளை அசால்ட்டாக எடுப்பதில் கங்குலிக்கு நிகர் கங்குலிதான் இதை சச்சின் கூட ஒரு முறை சொல்லியிருந்தார்.

இந்திய கிரிக்கெட்டில் சச்சின் என்ற பெயருக்கு இருக்கும் மகத்துவம் மிகப்பெரியது எனவே எந்த ஒரு வீரரும் சச்சினை சீண்டுவதை விரும்புவது இல்லை

ஆனால் தாதா சச்சினிலும் கையைவைத்தார் ஆம் அவரை ஆரம்பத்துடுப்பாட்டவீரராக களம் இறக்க மாட்டேன் என்று ஒரு அதிரடி முடிவை எடுத்து. பதிலாக சேவாக்கை ஆரம்பதுடுப்பாட்ட வீரராக களம் இறக்கினார். விளைவு இந்திய அணிக்கு உலகதரம் வாய்ந்த ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உருவாகினார் உருவாகினார் என்பதைவிட கங்குலியால் உருவாக்கப் பட்டார் எனபதே மிகப்பொருத்தம்.

ஒரு திறமையான விக்கெட் கீப்பர் இன்றி இந்திய அணிதவித்த போது மேலதிகமாக ஒரு விக்கெட் கீப்பரை சேர்ப்பதை கங்குலிவிரும்பவில்லை அதற்கு பதிலாக ராகுல் ராவிட்டையே விக்கெட்கீப்பராக்கி தனது வெற்றிப் பயணத்தில் ராவிட்டுக்கு ஒரு முக்கிய பொறுப்பை சுமத்தினார்.ராவிட்டும் கங்குலி தலைமையில் ஒரு திறமையான இளம் அணியாக இந்திய அணி உருவாகிய போது விக்கெட் கீப்பர்,துணைக்கேப்டன்,போன்ற பல்வேறு பணிகளை தாதாவின் பணிப்பின் பேரில் சிறப்பாக செய்தார்.கங்குலி தலைமையிலான இந்திய அணியில் ராவிட் ஒரு தூணாக இருந்தார் என்றால் மிகையாகாது.

விக்கெட் கீப்பராக ராகுல் ராவிட்
உலககிரிக்கெட் வரலாற்றில் என்று மறக்கமுடியாது ஒரு டெஸ்ட் போட்டி  2001ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்காடன் மைதாணத்தில் நடந்தது. கங்குலி தலைமையில் ஒரு அதிசயம் நடந்தது அந்தப்போட்டியில்.தொடர்ச்சியாக 16 டெஸ்ட் போட்டிகளில் வென்று இறுமாப்புடன் இந்தியா வந்த ஸ்ரிவோக் தலைமையிலான அவுஸ்ரேலிய அணிக்கு பாடம் புகட்டிய பெருமை நம்ம தாதாவையே சாரும்.

நாணய சுழற்சியில் ஈடுபடுவதற்காக செல்லும் தாதாவும் அவுஸ்ரேலிய கேப்டன் ஸ்ரிவோக்கும்

ஆம் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பாலோ ஒன் ஆகியும் அந்தப் போட்டியில் வென்றது.அதுக்கு காரணம் தாதாவின் ஆக்ரோசமான தலைமைத்துவம்தான்.

2001 இல் வரலாற்றை தாதா மாற்றிய போட்டியில் புதிய வரலாறு எழுதிய தருணம் லக்ஸ்மன்,ராவிட்

லக்ஸ்மன்,ராவிட்டிடம் கங்குலி சொன்னாராம் வருவது வரட்டும் நீங்கள்  சிறப்பாக ஆடுங்கள் என்று .லக்ஸ்மன் 281 ஓட்டங்களை விளாசினார் ராவிட் 180 ஓட்டங்கள்.அன்றில் இருந்து இன்றுவரை அவுஸ்ரேலிய அணிக்கு லக்ஸ்மன் வில்லன் தான்.

பின் பந்துவீச்சில்  ஹர்பஜன் சிங்கை வைத்து சுழலில் ஒரு தாக்குதலை தொடுத்தார் தாதா.விளைவு ஹர்பஜன் சிக் ஹெட்ரிக் சாதனை நிகழ்த்தியது மட்டும் இல்லை அவுஸ்ரேலியாவுக்கு மரண அடி கொடுத்து இந்தியாவை வெற்றி பெறவைத்தார் தாதா.

ஹெட்ரிக் நாயகன் ஹர்பஜன் சிங்
அந்த டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்டுகளை 196 ரன்களுக்கு வீழ்த்தினார் ஹர்பஜன் சிங். இந்தப்போட்டியில் ஹர்பஜன் சிங் பெற்ற ஹட்ரிக் விக்கெட்டானது இந்திய வீச்சாளர் டெஸ்ட் போட்டியில் சாதிக்கும் முதல் ஹெட்ரிக் என்பது குறிப்பிடத்தக்கது.பின் இர்பான் பதான் பாகிஸ்தானுக்கு எதிராக ஹெட்ரிக் சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி நாளன்று தேநீர் இடைவேளை வரை ஆஸ்ட்ரேலியா 161/3 என்று இருந்தது. அப்போது ஆட்டம் டிரா என்றே பலரும் கருதினர். ஆனால் மீண்டும் ஹர்பஜன் சிங், சச்சின் டெண்டுல்கர் சுழற்பந்து வீச்சு ஆஸ்ட்ரேலியாவுக்கு அதிர்ச்சி தரும் தோல்வியை பெற்றுத் தந்தது.

சச்சினின் பந்துவீச்சில் கில்கிறிஸ்ட்டின் விக்கெட்டிற்காக   LBW முறையீடு 

இந்தப் போட்டியில் கங்குலி சச்சினையும் பந்துவீச்சாளராக பயன் படுத்தினார்.முதல் இனிங்சில் 2 ஓவர் பந்துவீசிய சச்சின் 7 ரன்களை விட்டுக்கொடுத்தார்.இரண்டாவது இனிங்சில் 11ஓவர்கள் பந்துவீச்சி 3 மெடின் ஓவர்கள் அடங்களாக 31 ஓட்டங்களைவிட்டுக்கொடுத்து 3விக்கெட்டுக்களை வீழ்த்தினார் இந்த 3 விக்கெட்டுக்களில் ஹெய்டன்,கிஸ்கிறிஸ்ட்,ஷேன் வான் ஆகியோரது விட்கெட்டுக்கள் ஆகும்.

கங்குலியும் முதல் இனிங்ஸில் ஒருவிக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

சச்சின் ஒரு திறமையான பந்துவீச்சாளர் என்பது பலருக்கு தெரிந்திருக்கும் சச்சினை சரியான தருனங்களில்  பந்துவீச்சாளராக பயன் படுத்தியது கங்குலிதான்

அவுஸ்ரேலியாவின் இறுதி விக்கெட்டை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்ற அந்த தருணம்

ஸ்ரிவோக் தன் வாழ்நாளில் இந்தப் போட்டியை மறக்கமாட்டார்.

(தாதா இன்னும் வருவார்)

இந்த தொடரின் முன்னைய பகுதிகளை படிக்க-
தொடர் அறிமுகம்
பகுதி-1
பகுதி-2
*********************************************************************************


உங்கள் நண்பர்கள் தளத்தில் இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கின் மூலமாகவும் பதிவு பற்றிய கருத்துக்களை கூறலாம் பதிவின் கீழே ஓட்டுப் பட்டைக்கு கீழ் பேஸ்புக் கமண்ட் பெட்டி இருக்கின்றது பாருங்கள் அன்பு நண்பர்களே
*********************************************************************************

Post Comment

11 comments:

கோகுல் said...

சிறந்த,திறமையான வீரர்களை இனம் கண்டு மதிப்பளிப்பதில் தாதாக்கு இணை அவர்தான்

கோகுல் said...

உங்க போஸ்ட் என் டாஸ்போர்ட்கு வர்ல.

K.s.s.Rajh said...

@கோகுல்

வாங்க பாஸ் நீண்டகாலத்துக்கு பிறகு உங்களை இங்கே சந்திப்பதில் மகிழ்ச்சி

என்ன என்று பாக்கின்றேன் பாஸ்

பால கணேஷ் said...

ராஜ்... மிகச்சரி நீங்க சொன்ன ரெண்டு விஷயங்களும். தொடர் வெற்றிகளையே ருசித்த ஆஸ்திரேலியாவை மண் கவ்வ வைத்ததும். வீரர்களின் போராட்ட குணத்தை வளர்த்ததிலும் முழுப் பெருமையும் தாதாவையே சேரும். அந்த விளையாட்டு வீரனை எவ்வளவு தூரம் நீங்கள் ரசித்திருக்கிறீர்கள் என்று தொடரின் ஒவ்வொரு பகுதியும் சொல்கிறது. அருமை. தொடரட்டும்...

K.s.s.Rajh said...

@பால கணேஷ்

மிக்க நன்றி பாஸ்

”தளிர் சுரேஷ்” said...

தாதாவை பற்றிய நினைவுகள் சூப்பர்! அந்த கொல்கத்தா போட்டி மறக்கமுடியாத ஒன்று! லக்ஷ்மணுக்கு பந்து வீசி நொந்து போனார்கள் ஆஸ்திரேலியர்கள்! தொடரட்டும் பயணம்! வாழ்த்துக்களுடன்!

திண்டுக்கல் தனபாலன் said...

உடனுக்குடன் முடிவு எடுப்பதிலும் வல்லவர்...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
(த.ம. 4)

கோவி said...

நிறைய புதியவர்களை அறிமுகபடுத்தி அணிக்கு ஊக்கமும் வேகமும் அளித்தவர் இவர் என்பதில் சந்தேகம் இல்லை..

K.s.s.Rajh said...

@s suresh

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@கோவி

நன்றி பாஸ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails