Tuesday, September 27, 2011

இதுதான் உண்மைக்காதலா?சகோதரிகள்,நண்பிகளுக்காக ஒரு பதிவு.

இந்தப்பதிவை சில நாட்களுக்கு முன்பே எழுத நினைத்தேன் ஆனால் வேறு பல பதிவுகளை எழுதியதால் பிறகு எழுதலாம் என்று விட்டு விட்டேன் இப்போது எழுதுகின்றேன்.மங்காத்தா படம் ரீலீஸ் ஆனவுடன் படம் பார்க்கவென நானும் என் நண்பர்களும் தியேட்டருக்கு போய் இருந்தோம்.அஜித் படங்களுக்கு எங்கள் ஊர்ப்பக்கம் ரசிகர்கள் டாகுத்தருடன் ஒப்பிடும் போது குறைவுதான்..ஆனால் டாகுத்தருக்கு விட பெண் ரசிகைகள் அதிகமாக தலைக்குத்தான்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடிய பதிவு (www.cricketnanparkal.blogspot.com)




எனவே தியேட்டரில் பெண்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.....நாங்களும் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு..உள்ளே போய் அமர்ந்தோம்...எங்களுக்கு முன்,பின்,சைட்டுல,பக்கத்துல எல்லாம் ஜோடிகளாக அமர்ந்து இருந்தார்கள்.பெரும்பாலும் திருமணமான ஜோடிகள் தான் அமர்ந்து இருந்தார்கள் இது எப்படி உங்களுக்கு தெரியும் என்கிறீங்களா இதைக்கண்டு பிடிக்க என்ன இண்டப்போலா வரனும் ஹி.ஹி.ஹி.ஹி...இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடிய பதிவு (www.cricketnanparkal.blogspot.com)

படம் ஆரம்பித்தது..தலையின் அறிமுகம் அசத்தலாக இருந்தது...எங்களுக்கு முன்னுக்கு இருந்த ஒரு பெண் தனது புருசனிடம் சொன்னாள்.அஜித்துக்கு 40 வயசாகியும் எவ்வளவு அழகா இருக்கார் பாருங்கப்பா(ஈழத்தில் கணவனை மனைவி அப்பா என்று அழைப்பது வழமை)..அந்த மனுசன் ஒன்னும் சொல்லவில்லை பேசாமல் படத்தை பாத்துக்கொண்டு இருந்தார் அவர் கமலா காமேஸ் (த்ரிஷா)எப்பவருவாங்க என்று பாத்துக்கொண்டு இருந்தார் போல.

அஜித்,ஷாலினி,அவங்க மகளுடன்

அந்த பெண் விடவில்லை மேலும் ஒரு பிட்டைப்போட்டாங்க..ஷாலினி ரொம்ம அதிஸ்டக்காரங்க.இல்லையா என்று தன் புருசனைப்பாத்து கேட்டுச்சி..அவ்வளவு நேரம் அமைதியா இருந்த அவங்க புருசன்..திரும்பி பொண்டாட்டியை ஒரு டெரரா பாத்தாரு பாருங்க அந்தம்மா படம் முடியும் வரை வாய் திறக்கவில்லை.

நடிகர் வினுச்சக்கரவர்த்தி

பின்ன அவருக்கு கோபம் வராதா என்ன. வினுச்சக்கரவர்த்தி மாதிரி இவரு இருக்கும் போது அஜித்த அழகு..ஷாலினி அதிஸ்டக்காரங்க என்று சொன்னால் கோபம் பொத்துகிட்டுத்தானே வரும்.ஹி.ஹி.ஹி.ஹி..இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடிய பதிவு (www.cricketnanparkal.blogspot.com)

சரி பதிவின் தலைப்புக்கு வருவோம் மேலே உள்ள சம்பவத்துக்கும் பதிவின் தலைப்புக்கும் தொடர்பு இல்லை இந்தப்பந்தியில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது...
படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்தின் பின் ஒரு ஜோடி வந்திச்சு...அவங்களை ஜோடி என்று சொல்லவே எனக்கு ஒரு மாதிரி இருக்கு.காரணம் அந்த பொண்னுங்கு ஒரு 17 வயசுதான் இருக்கம் அவள் கூட வந்த பையனுக்கும் அந்த வயசுத்தான் வரும்..படம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் வந்ததுக்காரணம் அவங்க என்ன படம் பாக்கவா வந்தாங்க..ஹி.ஹி.ஹி.ஹி..எங்களுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்கள்..அந்தப் பொண்ணு நல்ல அழகாக இருந்தாள்
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடிய பதிவு (www.cricketnanparkal.blogspot.com)
என் நண்பன் சொன்னான் பாரு மச்சி..இந்த வயசில் இவன்(அந்தப்பொண்ணின் லவ்வர்)எப்படி குட்டிய(பிகர்)மடக்கி இருக்கான் நாங்கள் எல்லாம் வேஸ்ட் என்று நொந்து கொண்டான்.அப்ப இன்னும் ஒருத்தன் சொன்னான் ராஜ்சை வேஸ்ட் என்று சொல்லாத அவன் 15 வயசிலையே பிரியாவை ஆட்டையை போட்டவன் எங்களுக்கு அவன்தான் சீனியர் என்றான்..என்னை காலாய்துவிட்டாங்களாம்..ஹி.ஹி.ஹி.ஹி என் மேட்டர் என்ன வென்று உங்களுக்கு தெரியும்தானே மக்களே....

நானும் அவங்க என்னதான் செய்யுறாங்க என்று பார்த்து கொண்டு இருந்தன் கருமம் கருமம் இதெல்லாம் பாத்து கொண்டு இருந்தியா என்று திட்டாதீங்க நாம மீடியாவுல இருக்கோம்(அப்படியா)பல விடயங்களை ஆராயவேண்டிய தேவை இருக்கு நமக்கு ஒரு சமூகப்பொறுப்பு இருக்கு அதனால் நான் என்ன நடக்குது என்று பாத்துக்கொண்டு இருந்தன்..ஹி.ஹி.ஹி.ஹி..(பாக்கிறதையும் பாத்திட்டு எப்படி கதைவுடுறான் என்று நினைகிறீங்களா அந்த ஜோடி தப்பா ஒன்னு செய்யலை ஹி.ஹி.ஹி.ஹி)
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடிய பதிவு (www.cricketnanparkal.blogspot.com)
லக்ஸ்மிராயின் குத்தாட்டம் ஆரம்பிக்கவே அந்தப்பையன் அவளை திரும்பிப்பாத்தான் அந்தப்பொண்ணு வெக்கப்பட்டுக்கொண்டே வேறுபக்கம் பாத்துச்சி(என்ன கருமமடா)பையன் பேசாமல் இருந்தான்.மீண்டும் கமலா காமேஸ்(த்ரிஷா)வந்ததும் மீண்டும் அந்தப்பையன் அவளைப்பார்த்தான்..அந்தப்பொண்ணு இப்ப அவனைபாத்துச்சி...இருவரும் படத்தை பாக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

அஞ்சலி அக்காவுக்கும் வைபோவுக்கும் படத்தில் ஒரு டூயட்சோங்(ஷாங்) இருக்குத்தானே அந்த டூயட்டுக்கு இங்கையும் டூயட் ஆரம்பிச்சுது பாருங்க..
மெல்ல அந்தப்பையன் அந்தப்பொண்ணின் கையை பிடித்து ஒரு முத்தம் கொடுத்தான்..அந்தபொண்ணின் முகம் நாணத்தால் சிவந்து போனது தியேட்டரின் ஸ்கிரீன் வெளிச்சத்தில் அவளது முகம் பிரகாசமாக இருந்தது..
அப்பறம் என்ன பக்கத்தில் இருந்தவங்க ஒரு மாதிரி அந்த ஜோடியை பார்க்கவே அவர்கள் அத்துடன் தமது செயற்பாட்டை நிறுத்திக்கொண்டார்கள்

பிறகு படம் முடியும் முன்பே போய்விட்டார்கள் அவர்கள் படம் பார்க்கவரவில்லைதானே.இதில் நான் என்ன சொல்ல வருகின்றேன் என்றால் மிகச்சின்ன வயதில் இந்தக்காதல் இவங்களுக்கு தேவையா..காரணம் இங்கே காதலைவிட காமம்தான் மேலோங்கி இருக்கின்றது..வாழ்க்கையில் பக்குவம் வராதவயதில் வரும் காதலில் பெரும்பாலும் காமத்துக்கு காதல் என்ற போர்வை தேவைப்படுகின்றது.இப்படியான சம்பவங்களில் ஏதும் தவறு நடந்துவிட்டால்...அந்தப்பையனுக்கு ஒரு பிரச்சனையும் வரப்போவது இல்லை..ஆனா அந்தப்பெண்ணின் வாழ்க்கையை நினைச்சுப்பாருங்கள்..சின்ன வயதில் கர்ப்பமாதல்,கருக்கலைப்பு இதுகளுக்கு பிரதான காரணம் இப்படியான பக்குவப்படாதவயதில் வரும் காதல்

இந்தப்படத்தில் இருக்கும் ஜோக் ஞாபகம் இருக்கா

இதைச்சொன்னால் என்னை காதலுக்கு எதிரி என்று என் நண்பர்கள் பலர் சொல்கின்றார்கள் .எனக்கு உண்மைக்காதல் என்றால் என்னவென்று தெரியாதாம் என்று பேஸ்புக்கில் என் நண்பன் ஒருவன் எழுதுகின்றான்.இதற்கு காரணம் அவனும் பல பொண்ணுங்களை ரூட்டுவிட்டு இப்ப ஒருத்தியை காதலிக்கின்றான் அந்தப்பொண்ணுக்கும் சின்ன வயசுதான்..இதை நான் சுட்டிக்காட்டினால் எனக்கு உண்மைகாதல் என்றால் என்னவென்று தெரியாதாம்..நீங்களே சொல்லுங்க இப்படி விவஸ்தை கெட்ட காதலுக்கு பெயர் உண்மைக்காதலா?
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடிய பதிவு (www.cricketnanparkal.blogspot.com)
அத்துடன் நான் பிரியாவினால் ஏற்பட்ட வலியினால்தான் காதலை எதிர்க்கிறேனாம் என்றும் சொலுறான்...எனக்கு ஏற்பட்ட அந்தக்காதலை நான் மறுக்கவில்லை நண்பா.நான் தான் அவளைக்காதலித்தேன்....இபோது பல ஆண்டுகளுக்கு பிறகும் என்னுள் ஒரு மூலையில் அந்தக்காதல் இருந்தாலும்..அவள்,போன் நம்பர் இருந்தும் இன்றுவரை நான் அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை..ஏன் என்றால் நான் இப்போது அவளுடம் கதைத்து..அவள் என்னகாதலை புரிந்து கொண்டு என்னை காதலிக்கின்றால் என்று வைத்துக்கொள்வோம் அவளுக்கு என்னால் கொடுக்கக்கூடிய சந்தோசத்தைவிட அவள் வேறு என்னைவிட வேறு நல்ல நிலையில் உள்ள ஒருவரை திருமணம் செய்தால் அவள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்..
இப்ப சொல்லு எனது நண்பனே..எனக்கு காதலைப்பத்தி ஒன்றும் தெரியாதா?பிரியாவினால் ஏற்பட்ட வலியினால்தான் நான் காதலை எதிர்க்கின்றேனா.
காதலிப்பது தவறு இல்லை நான் மேலே சொன்ன தியேட்டர் சம்பவத்தை போல உள்ள காதல்கள் தவறு என்கின்றேன்.


என் அருமை சகோதரிகளே...நண்பிகளே...உங்களிடம் ஒன்று கேட்கின்றேன்..காதல் என்பது தவறு இல்லை..ஆனால் அறியாதவயதில் காதல் என்ற போர்வையில் சிக்கி உங்கள் வாழ்க்கை நாசம் ஆகிவிட்டால் யோசித்துப்பாருங்கள் இதனால் பசங்களுக்கு பெரியப்பிரச்சனைகள் வருவது குறைவு உங்கள் நிலமையை யோசித்து பாருங்கள்.இளவயது கர்ப்பம் இளவயதில் திருமணம் இது எல்லாம் தேவையா?நன்றாக படியுங்கள் உங்களுக்கு என்று ஒரு நிலையை அடைந்ததும் தாராளமாக காதலியுங்கள்..உங்கள் வாழ்க்கை பிரகாசமாக அமையும்.

இதை எழுதும் நான் ஒன்றும் அதிகவயதானவன் இல்லை நான் 22 வயது இளைஞன் ஆனாலும் வாழ்க்கையில் பல பக்கங்களை பல பிரச்சனைகளை கடந்துவந்தவன் என்னையும் சில பொண்ணுங்கள் காதலித்துள்ளார்கள்..ஆனால் நான் அவர்களிடம் உண்மையான அன்பு இருக்கின்றதா என்றால் நிச்சயம் இல்லை காரணம் அதில் பலருக்கு என்மேல் அனுதாபத்தில்தான் காதல் வந்து இருக்கின்றது..உதாரணமாக ஒன்றை சொல்லாம்..பிரியாமேல் எனக்கு ஏற்பட்ட காதலை தொடராக என் தளத்தில் எழுதினேன் தானே அதை படித்துவிட்டு ஒரு பொண்ணுஎனக்கு மெயில் போட்டு இருந்துச்சி..உங்கள் கதை மிகவும் கஸ்டமாக இருக்கு..எனக்கு உங்களை பிடிச்சு இருக்கு..நான் உங்களை விரும்புகின்றேன்.என்று அந்த மெயில் இருந்தது..நான் நினைச்சேன் நம்ம பசங்க யாரோ கலாய்க்கிறாங்க என்று..அப்பறமாக தெரிந்தது இல்லை உண்மையில் ஒரு பொண்ணுதான் என்று..

நான் அவளிடம் சொன்னேன் நீங்க என் கதையை படித்துவிட்டு என்னை விரும்புவதாக சொல்கின்றீர்கள் இதற்கு பெயர் காதலா நன்றாக யோசிச்சுபாருங்க....என் மேல் உங்களுக்கு அளவுக்கு மீறிய அனுதாபம்தான் இது காதல் இல்லை என்று சொன்னேன் அவள் கேட்பதாக இல்லை
நான் சொன்னேன் இங்க பாருங்க எனக்கு நிலையான வேலையும் இல்லை..அத்தோடு ஆல்ரெடி எனக்கு நிறைய பிரச்சனை இருக்கு நான் வாழ்க்கையுடன் போராடிக்கொண்டு இருக்கேன்..எனக்கு என் குடும்ப நிலைதான் முக்கியம் இப்ப நான் காதலிக்கும் எண்ணத்தில் இல்லை
என் நோக்கம் எல்லாம் என் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருவதே எனவே என்னால் உங்களை மட்டும் இல்லை இப்ப யாரையும் காதலிக்க முடியாது....ஒரு வேளை உங்களுக்கு என் மேல் உண்மையான காதல் இருந்தால் நான் ஒரு நிலைக்கு வந்தபின்னும் அப்பவும் உங்களுக்கு இதே மாதிரி காதல் இருந்தால் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் இருந்து களவாடிய பதிவு (www.cricketnanparkal.blogspot.com)
எனவே என் அன்புக்குறிய சகோதரிகளே,நண்பிகளே தயவு செய்து உங்கள் காதல்களை தீர்மானிக்கும் முன் ஒன்றுக்கு பலதடவை சிந்தியுங்கள்,உங்கள் வாழ்க்கை பிரகாசமாக அமையும்.போலியான காதல்களில் சிக்கி உங்கள் வாழ்க்கையை வீணாக்கி விட்டாதீர்கள்.ஒரு சகோதனாக உங்களிடம் கேட்கின்றேன்.

சூப்பர் பதிவு ஒன்னு போட்டதுக்காக பாஸுக்கு மஞ்சத்தண்ணி ஊத்துறன்..நீங்க..உங்கள் வேலையை மறக்காதீங்க அண்ணாக்களே....


என்னுயிர் நீதானே தொடரின் பகுதி-3 நாளை வருகின்றது நண்பர்களே.

Post Comment

107 comments:

K said...

வணக்கம் மச்சான் சார்! நல்ல விழிப்புணர்வைத்தரும் பதிவொன்று போட்டிருக்கீங்க!பெண்கள் பெரிய பெரிய விஷயங்களில் பிடிவாதமாக இருப்பார்கள்! ஆனால் சாதாரண விஷயங்களில் மனதை பறிகொடுத்துவிடுவார்கள்!

சரண்யா சொன்ன மாதிரி சூப்பர் பதிவே தான்!

K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
வணக்கம் மச்சான் சார்! நல்ல விழிப்புணர்வைத்தரும் பதிவொன்று போட்டிருக்கீங்க!பெண்கள் பெரிய பெரிய விஷயங்களில் பிடிவாதமாக இருப்பார்கள்! ஆனால் சாதாரண விஷயங்களில் மனதை பறிகொடுத்துவிடுவார்கள்!

சரண்யா சொன்ன மாதிரி சூப்பர் பதிவே தான்////

ஆம் மச்சான் சார் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான்!பெண்கள் பெரிய பெரிய விஷயங்களில் பிடிவாதமாக இருப்பார்கள்! ஆனால் சாதாரண விஷயங்களில் மனதை பறிகொடுத்துவிடுவார்கள்...

Unknown said...

சூப்பர் பதிவு இன்றைய சமூகத்துக்கு அவசியமானது.

அதென்ன கமலா காமேஸ்?
நீங்க எந்த தியேட்டரில் பார்த்தீங்க? அதுவும் எமது மண்ணில் 17 வயது பொடியன்,பெட்டை ஆச்சரியம்.

//இதை எழுதும் நான் ஒன்றும் அதிகவயதானவன் இல்லை நான் 22 வயது இளைஞன்// நான் யூத்!! நான் யூத்!!


அண்ணனன் என்னா ஒரு பொதுநலம் கொண்டவர் மனதார பாராட்டுகிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாவம் வினுசக்கரவர்த்தி........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லா படம் பாத்திருக்கீங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாவம் அந்த சின்னஞ்சிறுசுகள நிம்மதியா படம் பாக்க விடமாட்டேனுட்டீகளே? இந்தப் பாவம் பொல்லாததுய்யா......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அட தலைவரும் என்னமா லவ்ஸ் பண்ணி இருக்காரு...... பீலீங்கோ பீலிங்கு...... சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்.........

K.s.s.Rajh said...

@
M.Shanmugan கூறியது...
சூப்பர் பதிவு இன்றைய சமூகத்துக்கு அவசியமானது.

அதென்ன கமலா காமேஸ்?
நீங்க எந்த தியேட்டரில் பார்த்தீங்க? அதுவும் எமது மண்ணில் 17 வயது பொடியன்,பெட்டை ஆச்சரியம்.

//இதை எழுதும் நான் ஒன்றும் அதிகவயதானவன் இல்லை நான் 22 வயது இளைஞன்// நான் யூத்!! நான் யூத்!!


அண்ணனன் என்னா ஒரு பொதுநலம் கொண்டவர் மனதார பாராட்டுகிறேன்////
ஹி.ஹி.ஹி.ஹி
மச்சி..கமலா காமேஸ் என்பது த்ரிஷாவுக்கு நம்ம அண்ணாச்சி செங்கோவி பாஸ் வைச்ச பெயர்.

K.s.s.Rajh said...

@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
பாவம் வினுசக்கரவர்த்தி...../////

ஆமா தலைவரே பாவம் அவரு.

K.s.s.Rajh said...

@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
நல்லா படம் பாத்திருக்கீங்க.....////

ஹி.ஹி.ஹி.ஹி..

K.s.s.Rajh said...

@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
பாவம் அந்த சின்னஞ்சிறுசுகள நிம்மதியா படம் பாக்க விடமாட்டேனுட்டீகளே? இந்தப் பாவம் பொல்லாததுய்யா..../////

என்ன பன்னுறது தலைவா பப்புளிக்..பப்புளிக்..பப்புளிக்

K.s.s.Rajh said...

@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
அட தலைவரும் என்னமா லவ்ஸ் பண்ணி இருக்காரு...... பீலீங்கோ பீலிங்கு...... சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்....////

ஆமா தலைவா அது ஒரு சோகக்கதை மறக்கமுடியாத பாடசாலை நாட்கள் அப்படினு ஒரு தொடர் எழுதி இருக்கேன் நேரம் கிடைக்கும் போது படிச்சுப்பாருங்க

K.s.s.Rajh said...

@ M.Shanmugan கூறியது...
சூப்பர் பதிவு இன்றைய சமூகத்துக்கு அவசியமானது.

நீங்க எந்த தியேட்டரில் பார்த்தீங்க? அதுவும் எமது மண்ணில் 17 வயது பொடியன்,பெட்டை ஆச்சரியம்////

இது ஆச்சரியம் இல்லை பாஸ் இப்படிக்கூத்துக்கள் நிறையா நடக்குது..

K.s.s.Rajh said...

@
//இதை எழுதும் நான் ஒன்றும் அதிகவயதானவன் இல்லை நான் 22 வயது இளைஞன்// நான் யூத்!! நான் யூத்!///

அட உண்மையா நான் 22 வயசுப்பையன் தான் நண்பா

காட்டான் said...

வணக்கம் மாப்பிள.. ஒரு படத்துக்கு காச கொடுத்திட்டு ரெண்டு படம் பாத்திருக்காய்யா..!!!

Anonymous said...

பொதுவாக காதலே ஒருபெண்ணின் மீதோ இல்லை ஆணின் மீதோ ஏற்ப்படும் ஈர்ப்பின் பால் எழுவது தான் ..உண்மையை சொன்னால் அங்கே காமம் தான் அதிகமாக இருக்கும்..

ஆனால் இந்த மாதிரி சிறுவயசு காதல்கள் எல்லாம் முற்று முழுதாக பருவமாற்ரத்தின் பால் -காமத்தால் எழுவதே ..நீண்ட காலம் நிலைக்காது...

பள்ளி காலத்தில எனக்கொரு நண்பன் இருந்தான் ..வெள்ளையா அழகான பொண்ணுகள கண்டா சொல்லுவான் ..டேய் மச்சி இந்த பொண்ணை அடைஞ்சால் சொர்க்கத்துக்கே போக தேவயில்லடா எண்டு ஹிஹி

Anonymous said...

இன்னாது நீங்க 22 வயசு இளைஞனா? யோவ் அது கொழந்த'யா ..))

Anonymous said...

ஆமா அந்த வினுசக்கரவர்த்தி போட்டோ எங்க பிடிச்சிங்க ஹிஹி

F.NIHAZA said...

இன்றுதான் உங்கள் பக்கம் வந்தேன்...
மிக சுவாரஷ்யமான பதிவு ...

ஆமாம் ..ஒங்களுக்கு மங்காத்தா படத்தின் கதை புரிஞ்சுதா..ஏனென்றார்...நீங்கள் பார்த்தது திரையை அல்லவே...பக்கத்து அம்மனிகளின் வில்லங்களைத்தானே...அதான் சும்மா கேட்டேன்...

உண்மையில் நல்ல பதிவு....

இருங்கள்...இன்னும் உங்கள் தளத்தை முழுசா சுற்றிப்பார்க்கலை....

காட்டான் said...

என்னையா உனக்கு மாட்டுறதெல்லாம் கில்மா மேற்றா இருக்கேய்யா...!!

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
வணக்கம் மாப்பிள.. ஒரு படத்துக்கு காச கொடுத்திட்டு ரெண்டு படம் பாத்திருக்காய்யா..!!//////
ஹி.ஹி.ஹி.ஹி ஒன்னு பிட்டுப்படம் மாம்ஸ்

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
பொதுவாக காதலே ஒருபெண்ணின் மீதோ இல்லை ஆணின் மீதோ ஏற்ப்படும் ஈர்ப்பின் பால் எழுவது தான் ..உண்மையை சொன்னால் அங்கே காமம் தான் அதிகமாக இருக்கும்..

ஆனால் இந்த மாதிரி சிறுவயசு காதல்கள் எல்லாம் முற்று முழுதாக பருவமாற்ரத்தின் பால் -காமத்தால் எழுவதே ..நீண்ட காலம் நிலைக்காது...

பள்ளி காலத்தில எனக்கொரு நண்பன் இருந்தான் ..வெள்ளையா அழகான பொண்ணுகள கண்டா சொல்லுவான் ..டேய் மச்சி இந்த பொண்ணை அடைஞ்சால் சொர்க்கத்துக்கே போக தேவயில்லடா எண்டு ஹி.ஹி///

ஆமா மச்சி எனக்கு இப்படி கதை பேசும் நண்பர்கள் இருந்தாங்க...

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
இன்னாது நீங்க 22 வயசு இளைஞனா? யோவ் அது கொழந்த'யா ..)////
ஹி.ஹி.ஹி.ஹி.....

Mohamed Faaique said...

இந்தப் பதிவ படிக்கும் போது,

அந்த மலையப் போல மனம் படச்ச மன்னவனே!! ... பாட்டு பேக்ரவுண்ட்`ல போக நீங்க ஸ்லோவ்மோசன்`ல நடந்து வர்ர மாதிரி ஒரு ஃபீலிங்...

Mohamed Faaique said...

உங்க பக்கதுல காபி பண்ண முடியல பாஸ்.. இல்லாவிட்டால், இன்னும் காமெண்ட்ஸ் போட்டிருப்பேன். தப்பிச்சுட்டீங்க...

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
ஆமா அந்த வினுசக்கரவர்த்தி போட்டோ எங்க பிடிச்சிங்க ஹி.ஹி////
ஆமா பாஸ் இனையத்தில் தேடிப்பார்தேன் கானவில்லை..பிறகு ஒரு மாதிரி கிடைத்தது..

K.s.s.Rajh said...

@
F.NIHAZA கூறியது...
இன்றுதான் உங்கள் பக்கம் வந்தேன்...
மிக சுவாரஷ்யமான பதிவு ...

ஆமாம் ..ஒங்களுக்கு மங்காத்தா படத்தின் கதை புரிஞ்சுதா..ஏனென்றார்...நீங்கள் பார்த்தது திரையை அல்லவே...பக்கத்து அம்மனிகளின் வில்லங்களைத்தானே...அதான் சும்மா கேட்டேன்...

உண்மையில் நல்ல பதிவு....

இருங்கள்...இன்னும் உங்கள் தளத்தை முழுசா சுற்றிப்பார்க்கலை.////

வாங்க அக்கா முதல் வருகைக்கு நன்றி..என் தளத்தை சுற்றிப்பாருங்க..தொடர்ந்து வாருங்கள்

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
என்னையா உனக்கு மாட்டுறதெல்லாம் கில்மா மேற்றா இருக்கேய்யா...!////

என்ன பண்ணுறது மாம்ஸ் சமூகத்தில் ஊருபட்ட மேட்டர் நடக்குது நாம பதிவர் என்கிறதால பதியுரம்..எனக்கும் கில்மாவுக்கும் கெமிஸ்ரி ஓர்கவுடாகுது போல..ஹி.ஹி.ஹி.ஹி...

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
இந்தப் பதிவ படிக்கும் போது,

அந்த மலையப் போல மனம் படச்ச மன்னவனே!! ... பாட்டு பேக்ரவுண்ட்`ல போக நீங்க ஸ்லோவ்மோசன்`ல நடந்து வர்ர மாதிரி ஒரு ஃபீலிங்.////

ஹி.ஹி.ஹி.ஹி...கேப்டன் பாட்ட எனக்கு போடாதீங்க நண்பா...அப்பறம் வில்லங்கம் ஆகிடும்..ஹி.ஹி.ஹி.ஹி....தேவைனா டாகுத்தர் பாட்டு ஒன்னு போடுங்க..ஹி.ஹி.ஹி.ஹி.....

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
உங்க பக்கதுல காபி பண்ண முடியல பாஸ்.. இல்லாவிட்டால், இன்னும் காமெண்ட்ஸ் போட்டிருப்பேன். தப்பிச்சுட்டீங்க..////

என்ன செய்வது பாஸ் சில இனைய தளங்கள் செய்யும் வேலையால் கேட்டை போடவேண்டி இருக்கு...

சென்னை பித்தன் said...

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க!

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
சரியாத்தான் சொல்லியிருக்கீங்க////

நன்றி ஜயா

rajamelaiyur said...

நாடு கெட்டு போச்சு ..

rajamelaiyur said...

வயித்தேரிச்சளுடன் படம் பாத்திங்களா ?

rajamelaiyur said...

இன்று என் வலையில்

காடுவெட்டி குருவை கோணி பையுடன் அனுப்பினாரா ராமதாஸ்?

K.s.s.Rajh said...

@"என் ராஜபாட்டை"- ராஜா
உங்கள் பதிவை காலையிலேயே படித்துவிட்டேன் பாஸ்

தனிமரம் said...

சமுகத்தின் பார்வையில் எப்படி இருக்கிறார்கள் மற்றவர்கள் என்பதை நியாமான கேள்விகளுடன் தாங்கிவந்திருக்கின்ற பதிவு சகோ!

தனிமரம் said...

பருவ வயதில் வருவது எல்லாம் வெறும் காமம் மட்டுமே இங்கு உண்மைக்காதல் என்ற போர்வையில் காமம் தலைதூக்கியாடும் இது நியதி அந்தக்காலகட்டத்தை தாண்டுவது தான் கல்வி என்னும் துணைகொண்டு விளிப்படைவது  அதைச் செய்ய இவர்களுக்கு ஏது அவகாசம் ஆசைதான் முண்டியடிக்கும்! இந்த வயதில் வெறும் கா மம்தான் அதுதான் நியம்!

தனிமரம் said...

இந்த நிலை இலங்கையில் எல்லாப்பகுதியிலும் இருக்கு சகோ எனக்கு இந்த அனுபவம் அதிகம் இந்த லிங்கைப் பாருங்கள் நேரம் இருக்கும் போதுhttp://nesan-kalaisiva.blogspot.com/2011/06/blog-post_05.html?m=1  நாம் இருவரும் எப்ப்டி ஒரு விடயத்தை உள்வாங்கின்றோம் என்று புரியும்!

தனிமரம் said...

தலைப்பை இன்னும் கொஞ்சம் மெருகூட்டியிருந்தால் அதிகமானவர்கள் படிப்பார்களே சகோ இது என் தனிப்பட்ட கருத்து.

தனிமரம் said...

வினுச்சக்கரவர்த்தி திறமையான நடிகர் இயக்குனர் கதா ஆசிரியர் தயாரிப்பாளர் எனபன்முகத் தன்மையுள்ளவர் அவர் பற்றி ஒரு பதிவு ஏழதனும் நேரம்தான் கைகொடுக்குது இல்லை பாஸ்!

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
சமுகத்தின் பார்வையில் எப்படி இருக்கிறார்கள் மற்றவர்கள் என்பதை நியாமான கேள்விகளுடன் தாங்கிவந்திருக்கின்ற பதிவு சகோ/////

நன்றி பாஸ்..

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
பருவ வயதில் வருவது எல்லாம் வெறும் காமம் மட்டுமே இங்கு உண்மைக்காதல் என்ற போர்வையில் காமம் தலைதூக்கியாடும் இது நியதி அந்தக்காலகட்டத்தை தாண்டுவது தான் கல்வி என்னும் துணைகொண்டு விளிப்படைவது அதைச் செய்ய இவர்களுக்கு ஏது அவகாசம் ஆசைதான் முண்டியடிக்கும்! இந்த வயதில் வெறும் கா மம்தான் அதுதான் நியம்////

ஆம் பாஸ் இதைச்சொன்னால் காதலுக்கு எதிரி என்கின்றார்கள்..

தனிமரம் said...

மீண்டும் நாளைய பொழுதில் தனிமரம் சந்திக்கும் இன்று இரவுதான் ஓட்டுப்போட முடியும்!

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
இந்த நிலை இலங்கையில் எல்லாப்பகுதியிலும் இருக்கு சகோ எனக்கு இந்த அனுபவம் அதிகம் இந்த லிங்கைப் பாருங்கள் நேரம் இருக்கும் போதுhttp://nesan-kalaisiva.blogspot.com/2011/06/blog-post_05.html?m=1 நாம் இருவரும் எப்ப்டி ஒரு விடயத்தை உள்வாங்கின்றோம் என்று புரியும்/////

ஆமா பாஸ் உடன போய்ப்பார்த்தேன் நான் வலியுறுத்வதைத்தான் நீங்களும் சொல்லி இருக்கீங்க ஒரே மாதிரி உள்வாகியிருக்கம் இல்லை எனக்கே ஆச்சரியமாக இருக்கு பாஸ்..

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
தலைப்பை இன்னும் கொஞ்சம் மெருகூட்டியிருந்தால் அதிகமானவர்கள் படிப்பார்களே சகோ இது என் தனிப்பட்ட கருத்து////

மெருகூட்டி இருக்கலாம் சகோ..ஆனால் எனக்கு மெருகூட்ட தெரியவில்லை இதான் உண்மை..ஹி.ஹி.ஹி.ஹி அதான் ஒரு போக்கில் வைத்துவிட்டேன்

K.s.s.Rajh said...

@ தனிமரம் கூறியது...
வினுச்சக்கரவர்த்தி திறமையான நடிகர் இயக்குனர் கதா ஆசிரியர் தயாரிப்பாளர் எனபன்முகத் தன்மையுள்ளவர் அவர் பற்றி ஒரு பதிவு ஏழதனும் நேரம்தான் கைகொடுக்குது இல்லை பாஸ்////

எனக்கும் மிகவு பிடித்த ஒருவர் வினுச்சக்கரவர்த்தி.......

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
மீண்டும் நாளைய பொழுதில் தனிமரம் சந்திக்கும் இன்று இரவுதான் ஓட்டுப்போட முடியும்/////

நாளை வாங்க என்னுயிர் நீதானே தொடர் வருகின்றது..

நிரூபன் said...

இனிய மதிய வணக்கம் மச்சாங்....

நல்லதோர் பதிவு நண்பா,
சமூகத்தில் கண்ணுற்ற & பெற்றுக் கொண்ட அனுபவங்களை உள்ளடக்கி நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

உண்மைக் காதலுக்கும், பருவக் காதலுக்கும் இடையிலான வேறுபாட்டினை அழகாகப் பிரித்துச் சொல்லியிருக்கும் விதமும் பதிவிற்குச் சிறப்பினைத் தருகின்றது.

நிரூபன் said...

இனிய மதிய வணக்கம் மச்சாங்....

நல்லதோர் பதிவு நண்பா,
சமூகத்தில் கண்ணுற்ற & பெற்றுக் கொண்ட அனுபவங்களை உள்ளடக்கி நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

உண்மைக் காதலுக்கும், பருவக் காதலுக்கும் இடையிலான வேறுபாட்டினை அழகாகப் பிரித்துச் சொல்லியிருக்கும் விதமும் பதிவிற்குச் சிறப்பினைத் தருகின்றது.

நிரூபன் said...

ராஜ் இற்கு 22 வயசாம்...

அவ்....எல்லோரும் நோட் பண்ணி வையுங்க..

ஆளு ஓப்பின் அப்பிளிக்கேஷன் போடுறாரோ;-)))))))))))

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
இனிய மதிய வணக்கம் மச்சாங்....

நல்லதோர் பதிவு நண்பா,
சமூகத்தில் கண்ணுற்ற & பெற்றுக் கொண்ட அனுபவங்களை உள்ளடக்கி நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

உண்மைக் காதலுக்கும், பருவக் காதலுக்கும் இடையிலான வேறுபாட்டினை அழகாகப் பிரித்துச் சொல்லியிருக்கும் விதமும் பதிவிற்குச் சிறப்பினைத் தருகின்றது////

வாங்க பாஸ் மதிய வணக்கம்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
ராஜ் இற்கு 22 வயசாம்...

அவ்....எல்லோரும் நோட் பண்ணி வையுங்க..

ஆளு ஓப்பின் அப்பிளிக்கேஷன் போடுறாரோ;-)))))))))/////

ஏன் பாஸ் கோத்துவிடுறீங்க.............நல்ல காலம் கும்முறவங்க பலர் ஏற்கனவே கமண்ட் போட்டுட்டு போய்ட்டாங்க..

K.s.s.Rajh said...

@நிரூபன்

நல்லதோர் பதிவு நண்பா,
சமூகத்தில் கண்ணுற்ற & பெற்றுக் கொண்ட அனுபவங்களை உள்ளடக்கி நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

உண்மைக் காதலுக்கும், பருவக் காதலுக்கும் இடையிலான வேறுபாட்டினை அழகாகப் பிரித்துச் சொல்லியிருக்கும் விதமும் பதிவிற்குச் சிறப்பினைத் தருகின்றது////

தேங்ஸ் பாஸ்

Nirosh said...

ம்ம்ம் அருமை அருமை...!

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

நல்லாத்தான் சொல்றீங்க, ஆனா ஒரு டவுட்டு, காமம் இல்லனா காதல் வருமா? "அது" இல்லாம வந்தா அதுக்கு பேரு காதல்னு யாராவது ஒத்துக்குவாங்களா? அடுத்த பதிவில் டவுட்டு கிளியர் பண்ணவும்.

செங்கோவி said...

ஒரே டிக்கெட்ல ரெண்டு படம் பார்த்தீங்களா..சூப்பர்யா.

செங்கோவி said...

கமலா காமேஷ்.அஞ்சலியக்கா --- ஐ லைக் இட்.

செங்கோவி said...

இளம்பெண்களுக்கு சரியான அறிவுரை..கேட்பாங்களா?

ரைட்டர் நட்சத்திரா said...

நாம மீடியாவல இருக்கோம்ல நண்பரே ! ... நல்ல அறிவுரை!

காந்தி பனங்கூர் said...

ஒரே காதல் பதிவா போட்டு தாக்குறீங்களே நண்பா. அருமையான பதிவு.

குறையொன்றுமில்லை. said...

உங்க வயசு22-தான்னு சொல்ரீங்க. ஆனாலும் உருப்படியான விஷயம் இளைஞர்களுக்கு சொல்லி இருக்கீங்க. ஆமா மங்காத்தா எப்படி இருக்கு(
(யாருக்குத்தெரியும்னு கேக்குரீங்களோ?

Unknown said...

அறிமுகத்தை விட
அநுபவ அறிவுரை
மிக சிறப்பு
இக் கால இளைய சமுதாயம்
அறியவேண்டுவன
நன்றி!




புலவர் சா இராமாநுசம்

K.s.s.Rajh said...

@
Nirosh கூறியது...
ம்ம்ம் அருமை அருமை...///

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
Dr. Butti Paul கூறியது...
நல்லாத்தான் சொல்றீங்க, ஆனா ஒரு டவுட்டு, காமம் இல்லனா காதல் வருமா? "அது" இல்லாம வந்தா அதுக்கு பேரு காதல்னு யாராவது ஒத்துக்குவாங்களா? அடுத்த பதிவில் டவுட்டு கிளியர் பண்ணவும்///

அடுத்த பதிவு எதுக்கு இப்பவே கிளியர் பண்ணிடுவோம்..காமம் இல்லாமல் காதல் இல்லைதான் காமம் கலந்ததுதான் காதல் ஆனால் இபப்டி சின்ன வயதுகளில் வரும் காதலில் அன்பைவிட் காமம்தான் அதிகமாக இருக்கின்றது வெறும் உடற்கவர்சியை மட்டும்தான் இந்தவயது காதலில். இதற்கு பெயர் காதல் இல்லை நண்பா..அழகான ஒரு டவுட் கேட்டீர்கள் நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
ஒரே டிக்கெட்ல ரெண்டு படம் பார்த்தீங்களா..சூப்பர்யா/////

ஆமா பாஸ் ஒன்னு பிட்டுப்படம்..ஹி.ஹி.ஹி.ஹி...

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
கமலா காமேஷ்.அஞ்சலியக்கா --- ஐ லைக் இட்////

உங்கள் அறிவுரைதான்..ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...

@
செங்கோவி கூறியது...
இளம்பெண்களுக்கு சரியான அறிவுரை..கேட்பாங்களா////

கேட்பாங்களோ இல்லையோ நாம சொலவேண்டியதை சொல்லுவோம் பாஸ்

K.s.s.Rajh said...

@
கார்த்தி கேயனி கூறியது...
நாம மீடியாவல இருக்கோம்ல நண்பரே ! ... நல்ல அறிவுரை/////

ஆமா பாஸ் பதிவுலகம் இப்போது பவர்புள் மீடியாவாக வளர்ந்து நிற்கின்றது...

K.s.s.Rajh said...

@
காந்தி பனங்கூர் கூறியது...
ஒரே காதல் பதிவா போட்டு தாக்குறீங்களே நண்பா. அருமையான பதிவு////

என்ன பண்ணுவது பாஸ்...எல்லாம் சமூகத்தில் நான் கண்ட அனுபவங்களே..

K.s.s.Rajh said...

@
Lakshmi கூறியது...
உங்க வயசு22-தான்னு சொல்ரீங்க. ஆனாலும் உருப்படியான விஷயம் இளைஞர்களுக்கு சொல்லி இருக்கீங்க. ஆமா மங்காத்தா எப்படி இருக்கு(
(யாருக்குத்தெரியும்னு கேக்குரீங்களோ////

ஹி.ஹி.ஹி.ஹி..மங்காத்தா நல்லாத்தான் இருந்ததுமேடம்.சின்ன வயதில் ஒரு பக்குவம் வந்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லனும் மேடம்.

K.s.s.Rajh said...

@
புலவர் சா இராமாநுசம் கூறியது...
அறிமுகத்தை விட
அநுபவ அறிவுரை
மிக சிறப்பு
இக் கால இளைய சமுதாயம்
அறியவேண்டுவன
நன்றி!




புலவர் சா இராமாநுச////

வாங்க ஜயா உங்களைப்போன்ற பெரியவர்களின் ஆசிர்வாதம் என்றைக்கும் எனக்குத்தேவை...நன்றி ஜயா.

Mathuran said...

நல்லதொரு பதிவு பாஸ்
எங்க ஊரில இதெல்லாம் இப்ப சகஜமா போயிட்டுது பாஸ்.. இப்பவெல்லாம் படம் நல்லாயில்லாட்டியும் நம்பி காச குடுத்து டிக்கட் எடுக்கலாம்.. படத்தில வர்ர சீன விட நேரிலயே நிறைய பார்கலாம்

Mathuran said...

நல்லதொரு பதிவு பாஸ்
எங்க ஊரில இதெல்லாம் இப்ப சகஜமா போயிட்டுது பாஸ்.. இப்பவெல்லாம் படம் நல்லாயில்லாட்டியும் நம்பி காச குடுத்து டிக்கட் எடுக்கலாம்.. படத்தில வர்ர சீன விட நேரிலயே நிறைய பார்கலாம்

Mathuran said...

விடுங்க பாஸ்,.. இத பற்றியெல்லாம் கதைச்சா என்னடா வயசு போனவங்கள் மாதிரி கதைக்கிற என்பாங்கள்... இல்லாட்டி உன்னால முடியாட்டி விடு மற்றவங்கள தடுக்காத என்று எங்கட தன்மானத்த சீண்டுவாங்கள்.. பேசாம இருக்கிறதே நல்லது

Anonymous said...

இளம்பெண்களுக்கு சரியான அறிவுரை...ரொம்ப மஞ்சத்தண்ணி ல குளிப்பாட்டீட்டாங்களா?

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
நல்லதொரு பதிவு பாஸ்
எங்க ஊரில இதெல்லாம் இப்ப சகஜமா போயிட்டுது பாஸ்.. இப்பவெல்லாம் படம் நல்லாயில்லாட்டியும் நம்பி காச குடுத்து டிக்கட் எடுக்கலாம்.. படத்தில வர்ர சீன விட நேரிலயே நிறைய பார்கலாம்/////

ஆமா பாஸ் இது உண்மை

K.s.s.Rajh said...

@
மதுரன் கூறியது...
விடுங்க பாஸ்,.. இத பற்றியெல்லாம் கதைச்சா என்னடா வயசு போனவங்கள் மாதிரி கதைக்கிற என்பாங்கள்... இல்லாட்டி உன்னால முடியாட்டி விடு மற்றவங்கள தடுக்காத என்று எங்கட தன்மானத்த சீண்டுவாங்கள்.. பேசாம இருக்கிறதே நல்லது////
அதுவும் சரிதான் ஆனாலும் மனசு கேட்குது இல்லை.

K.s.s.Rajh said...

@
ரெவெரி கூறியது...
இளம்பெண்களுக்கு சரியான அறிவுரை...ரொம்ப மஞ்சத்தண்ணி ல குளிப்பாட்டீட்டாங்களா?////

தேங்ஸ் பாஸ்..ஆமா ரொம்ப மஞ்சத்தண்ணி ஊத்திடுச்சி.......

குறையொன்றுமில்லை. said...

சின்ன வயதில் ஒரு பக்குவம் வந்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லனும் மேடம்.


கடவுளுக்கு நன்றி சொன்னீங்களா?

M.R said...

காமம் இல்லா காதல் குறைவுதான் நண்பரே ,இப்பொழுது இருபாலருக்கும் ஒரு குணம் வந்து விட்டது ,தவறினால் துடைத்துவிட்டு அடுத்ததற்கு ரெடியாகு "

Anonymous said...

நானும் தியேட்டர் தியேட்டரா அலையுரேன் நம்ம கண்ணுல ஒன்னும் சிக்க மாட்டேன்குதே தல

ஜின்னா said...

நானும் தியேட்டர் தியேட்டரா அலையுரேன் நம்ம கண்ணுல ஒன்னும் சிக்க மாட்டேன்குதே தல

அன்னைபூமி said...

சூழ்நிலையும் நன்பர்கள், தோழிகள் பழக்கமும், தான் ஒருவரின் வாழ்க்கை நடத்தைகளை பெரிதும் நிர்ணயிக்கின்றது, இளம் வயதில் உணர்வுகள் உச்சமாகும் போது இது போன்ற தவறுகள் நிகழவே செய்கின்றன. . .

கோகுல் said...

பாதிப்பதிவு முடிஞ்சுதுன்னு நினைக்கும் போது இப்பத்தான் ஆரம்பிக்குதுன்னு போட்டின்களே ஒரு போடு!

கோகுல் said...

மீடியாவா?
எங்கே?
எங்கே?

அம்பாளடியாள் said...

சூப்பர் பதிவு போட்டதுக்கு மஞ்சத்தண்ணி ஊத்துறாங்களே ....!!!
சரி நாம ஓட்டுப் போட்டு வாழ்த்தினாப் போச்சு .மிக்க மகிழ்ச்சி
சகோ .பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் ..........

Yoga.s.FR said...

வவுனியா-வடக்கு தமிழ்ப் பகுதியிலிருந்து ஓர் அனுபவப் பதிவு,விழிப்பூட்டும் பதிவு!எங்கள் இனத்தின் தற்போதய நகர்வை தடுத்து நிறுத்தும்,வழி காட்டும் சிறு வயது இளைஞனின் ஆதங்கப் பதிவு,அல்ல பகிர்வு!வாழ்த்துக்கள் எதிர்கால தமிழினத்தின் வழிகாட்டியே!கிண்டல் அல்ல,உண்மையில் வயதான ஓர் தந்தையின் சிரம் தாழ்ந்த வாழ்த்து.வாழ்க,வளர்க!இந்த மனதுக்கு ஆண்டவன் குறை வைக்க மாட்டான்!அமோகமாக வருவீர்கள்!நன்றி,வணக்கம்!

Rizi said...

பதிவு நல்லாயிருக்கு நண்பரே.. அழகான எழுத்து நடை,,

K.s.s.Rajh said...

@
Lakshmi கூறியது...
சின்ன வயதில் ஒரு பக்குவம் வந்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லனும் மேடம்.


கடவுளுக்கு நன்றி சொன்னீங்களா///

ஆமா மேடம் சின்னவயதில் பொறுப்புக்களை சுமக்கும் பக்குவத்தை கடவுள்தான் எனக்கு தந்து இருக்கார்.

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
காமம் இல்லா காதல் குறைவுதான் நண்பரே ,இப்பொழுது இருபாலருக்கும் ஒரு குணம் வந்து விட்டது ,தவறினால் துடைத்துவிட்டு அடுத்ததற்கு ரெடியாகு///

ஆமா நண்பா இதை இப்ப ஒரு பாலிசியாக வைத்து இருக்கின்றார்கள்

K.s.s.Rajh said...

@
பெயரில்லா கூறியது...
நானும் தியேட்டர் தியேட்டரா அலையுரேன் நம்ம கண்ணுல ஒன்னும் சிக்க மாட்டேன்குதே தல/////

ஹி.ஹி.ஹி.ஹி....சிக்கும் சிக்கும் அப்ப நீங்களும் ஒரு பதிவு போடுவீங்க.....

K.s.s.Rajh said...

@
Raazi கூறியது...
பதிவு நல்லாயிருக்கு நண்பரே.. அழகான எழுத்து நடை///

நன்றி நண்பரே

K.s.s.Rajh said...

@
ஜின்னா கூறியது...
நானும் தியேட்டர் தியேட்டரா அலையுரேன் நம்ம கண்ணுல ஒன்னும் சிக்க மாட்டேன்குதே தல/////

ஹி.ஹி.ஹி.ஹி...சிக்கும் சிக்கும் அப்ப நீங்களும் ஆதங்கப்படுவீங்க இவங்க தொல்லை தாங்க முடியவில்லை நண்பரே

K.s.s.Rajh said...

@
thozhargal கூறியது...
சூழ்நிலையும் நன்பர்கள், தோழிகள் பழக்கமும், தான் ஒருவரின் வாழ்க்கை நடத்தைகளை பெரிதும் நிர்ணயிக்கின்றது, இளம் வயதில் உணர்வுகள் உச்சமாகும் போது இது போன்ற தவறுகள் நிகழவே செய்கின்றன. ////

உண்மைதான் சகோ

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
பாதிப்பதிவு முடிஞ்சுதுன்னு நினைக்கும் போது இப்பத்தான் ஆரம்பிக்குதுன்னு போட்டின்களே ஒரு போடு/////

வாங்க பாஸ் பிறந்தநாளை போய் சந்தோசமாக கொண்டாடுறதவிட்டுட்டு..ப்ளாக் ப்ளாக்கா ஏறி இறங்குறீங்க போல

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
மீடியாவா?
எங்கே?
எங்கே?///

ஆமா பாஸ்...ஆனால் பதிவுலகம் இன்று ஒரு பவர்புள் மீடியாவா வளர்ச்சி பெற்றுவருகின்றது

K.s.s.Rajh said...

@
அம்பாளடியாள் கூறியது...
சூப்பர் பதிவு போட்டதுக்கு மஞ்சத்தண்ணி ஊத்துறாங்களே ....!!!
சரி நாம ஓட்டுப் போட்டு வாழ்த்தினாப் போச்சு .மிக்க மகிழ்ச்சி
சகோ .பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் .........////

வாங்க சகோதரி..வாழ்த்துக்கு நன்றி....

K.s.s.Rajh said...

@Yoga.s.FR

வவுனியா-வடக்கு தமிழ்ப் பகுதியிலிருந்து ஓர் அனுபவப் பதிவு,விழிப்பூட்டும் பதிவு!எங்கள் இனத்தின் தற்போதய நகர்வை தடுத்து நிறுத்தும்,வழி காட்டும் சிறு வயது இளைஞனின் ஆதங்கப் பதிவு,அல்ல பகிர்வு!வாழ்த்துக்கள் எதிர்கால தமிழினத்தின் வழிகாட்டியே!கிண்டல் அல்ல,உண்மையில் வயதான ஓர் தந்தையின் சிரம் தாழ்ந்த வாழ்த்து.வாழ்க,வளர்க!இந்த மனதுக்கு ஆண்டவன் குறை வைக்க மாட்டான்!அமோகமாக வருவீர்கள்!நன்றி,வணக்கம்////

நன்றி ஜயா உங்களைப்போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதம் என்றும் எனக்குத்தேவை...இது போதும் நான் பதிவு எழுதவந்ததுக்கு.

ம.தி.சுதா said...

தங்கள் பதிவுகளில் ஈழத்தின் சில உள்ளுர் மொழி வழக்குகளை உட் செலுத்துவது மிகவும் பிடித்திருக்கிறது..

(கணவனை அப்பா என அழைப்பது)

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்

ம.தி.சுதா said...

அது சரி வினுச்சக்கரவர்த்தி படத்தை இப்படி ரெரரா போட்டு பயத்தைக் கிளப்புறிங்களே..

ம.தி.சுதா said...

அப்பாடி 100 வது சுடு சோறு எனக்குத் தானே..

K.s.s.Rajh said...

@ ♔ம.தி.சுதா♔ கூறியது...
தங்கள் பதிவுகளில் ஈழத்தின் சில உள்ளுர் மொழி வழக்குகளை உட் செலுத்துவது மிகவும் பிடித்திருக்கிறது..

(கணவனை அப்பா என அழைப்பது)

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா/////

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
♔ம.தி.சுதா♔ கூறியது...
அது சரி வினுச்சக்கரவர்த்தி படத்தை இப்படி ரெரரா போட்டு பயத்தைக் கிளப்புறிங்களே////

ஹி.ஹி.ஹி.ஹி......அந்தபுருசன் அப்படித்தான் இருந்தார்

K.s.s.Rajh said...

@
♔ம.தி.சுதா♔ கூறியது...
அப்பாடி 100 வது சுடு சோறு எனக்குத் தானே.////

ஆமா உங்களுக்குத்தான்...........

Anonymous said...

”10-15 வயசுல லவ் பண்ணாமுளைச்சு மூணு இலை விடலை அதுக்குள்ள காதலா??16-24 வயசுல லவ் ப்ண்ணா“படிக்கிற வயசுல லவ் என்னடா வேண்டியிருக்கு?25-30 வயசுல லவ் பண்ணா...“ஒழுங்கா ஒரு வேலை தேடி சம்பாரிக்கிற வழியக்காணும் காதல் கேட்குதோ.. காதல்”31-40 வயசுல லவ் பண்ணா“ கழுதை வயசாவுது இந்த வயசுல காதல் என்னடா காதல்ன்னு” கேட்குறாங்க.என்ன உலகமட சாமி...........................”

இப்படித்தான் இந்த உலகம் இருக்கு ஆனால் இந்த நண்பர் சொல்வது தப்பில்லை ஆனால் அவர்கள் உண்மையாக காதலிததால் இப்படி தப்புகள் நடக்காது ஆனால் இன்று பெண்களை அவர்கள் சின்ன வயதில் திருமனம் முடித்து வைத்து விடுகின்றனர் பெற்றோர் அப்படி செய்யும் பெண்னொ ஆண்னோ கடைசியில் விவகாரத்தில் வேண்டும் என்று நிக்கின்றனர் இதற்க்கு பதிவாலரின் கருத்து என்ன இப்படி செய்வதை விட சிறு வயதோ பெரிய வயதோ அவர்கள் உண்மையாக காதலித்தால் இப்படியான காமததின் நினைவு அவர்களின் மனதில் தோன்றாது அதைவிட சில பேர் தப்பாக பார்த்தா அப்படித்தான் தெரியும் பதிவாலரே நீங்கள் முதல் தப்பான என்னத்துடன் பக்காதீர்கள் அப்போது உங்களுக்கு இப்படி தோன்றாது.

K.s.s.Rajh said...

@பெயரில்லா


காதலிப்பது தவறு இல்லை நண்பா..ஆனால் காதல் என்ற போர்வையில் காமம் அரங்கேற்றப்பட்டு பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்துள்ளதை நான் சமூகத்தில் பார்த்துக்கொண்டுதான் இருக்கோம்..சின்ன வயதில் பக்குவப்படாத வயதில் வரும் காதல்கள் தான் பெரும்பாலும் உடல் கவர்சியை மட்டும்வைத்து வருவதால்..இங்கே காமம்தான் பிரதான இடம் வகிக்கின்றது.....இதனால் தவறுகள் இலகுவாக நடக்கின்றது..

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails