கிருபாவின் போன் நம்பரைக்கண்டு பிடித்து கொடுத்தற்கு பிறகு ஊருக்கு போன வைஸ்னவி அக்காவிடம் இருந்து எந்த தொடர்பும் சில நாட்கள் இல்லை.நான் கூட நினைத்தேன் அவருடன் போனில் கதைக்க தொடங்கிவிட்டார் போல அதான் பிசியாகிவிட்டார் என்று.ஏதோ சந்தோசமாக இருந்தால் சரி என்று நினைத்துக்கொண்டு நான் என் வேலையில் மூழ்கிவிட்டேன்.
ஒரு நாள் வைஸ்னவி அக்காவிடம் இருந்து போன்.வழமையான சுகம் விசாரிப்புக்களுக்கு பிறகு.நான் கேட்டேன் என்ன போன் நம்பர் வேண்டிகிட்டு போனீங்க என்ன நடந்தது என்று.சிறிது மெளனத்தின் பின் பேசத்தொடங்கினார்.
நான் கோல் எடுத்தேன் ராம் பட் அவர் அதற்குறிய மரியாதையை குடுக்கவில்லை பெரிய அப்பாடக்கர் போல பேசினார்.நான் சொல்லவேண்டியதை எல்லாம் என் மனசில் இருந்ததை எல்லாம் எஸ்.எம்.எஸ் இல் டைப்பண்ணி போட்டேன்.அவர் என்னுடன் கதைக்காவிட்டாலும்.என்னை அவாய்ட் பண்ணினாலும்.நான் சொல்லவேண்டிய விடயத்தை சொல்லிவிட்டேன் அதுவே எனக்கு போதும்.
அட உங்கள் குரல் நல்லாயிருக்காது சிலவேளை யாரும் மொக்கை பிகர் என்று நினைச்சிட்டாரோ உங்களை நேர பார்த்தால் பயபுள்ளை அவாய்ட் பண்ணி இருக்காது............
என்ன பாஸ் நக்கலா குரல் அப்படி இருக்குறதுக்கு நான் என்ன ராம் செய்யுறது.ஒருவரின் கருத்துக்கு மதிப்புகுடுக்கத்தெரியாத அவரிடம் அதுக்குமேல் எனக்கு பேசத்தோன்றவில்லை.நான் சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன் ராம் அது போதும் எனக்கு.இனி ஒரளவு திருப்தியுடன் வெளிநாடுபோவேன்.
அதுக்கு பிறகு சில நாட்களுக்கு வைஸ்னவி அக்காவிடம் இருந்து எந்த தொடர்பும் இல்லை.............
சில வாரங்களின் பின்பு ஒரு நாள் கோல் எடுத்து சொன்னார்.தனக்கு வீஸா வந்துவிட்டது என்றும் ஒன்று இரண்டு வாரங்களில் போய்விடுவேன் என்றும்
நான் சாரி கிருபாவை சந்திக்கவைக்க முடியவில்லை மன்னித்துக்கொள்ளுங்கள் என்றேன்
இல்லை பரவாயில்லை ராம் இவ்வளவு தூரம் அவரை கண்டுபிடித்து நம்பர் எடுத்து தந்ததே பெரியவிடயம் நான் சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன்.அந்த திருப்த்திபோதும் நான் கொஞ்சம் பிசியாக நிற்கின்றேன் பிறகு போன் எடுக்கின்றேன் என்று சொல்லிவிட்டுவைத்துவிட்டார்.அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த தொடர்புகளும் இல்லை அவர் போன் நம்பரும் கட்டாகிவிட்டது வேலை செய்யவில்லை.
எனக்கு மனதில் ஒரு சின்ன உறுத்தல் கிருபாவை சந்திக்கவைக்கமுடியவில்லை என்று.இந்த உலகத்திலேயே மிகவும் துரதிஸ்டசாலியான மனிதர்களில் கிருபாவும் ஒருவர்,வைஸ்னவி அக்கா போன்று ஒரு அழகான அன்பானவரின் காதலை அவரால் அடையாளம் காணமுடியாமல் அந்த பரிசுத்தமான அன்பை உணரமுடியாமல் போன கிருபா நிச்சயம் துரதிஸ்டசாலிதான்.
இந்த உலகம் விசித்திரமானது மாயைகள் நிறைந்தது.விதியின் விளையாட்டுக்களில் நாம் எல்லாம் கைப்பொம்மைகள். விதி ஆட்டுவிக்கும் படி ஆடவேண்டியதுதான்.நாம் நேசித்தவர்களுடன் தான் வாழனும் என்றால் இந்த உலகில் யாருக்குமே கல்யாணம் நடக்காது.எல்லோறுடைய மனதிலும் நிச்சயம் ஒரு நிறைவேறாத காதல் ஆசை இருக்கும்.அது சொன்ன காதலாகவோ சொல்லாமல் விட்டகாதலாகவோ சொல்லி தோல்வியடைந்த காதலாகவோ எதுவாகவேணும் என்றாலும் இருக்கலாம் ஆனால் நிச்சயம் ஒரு நிறைவேறாத காதலின் வலி எல்லோறுக்கும் இருக்கும்.அதை எல்லாம் தாண்டி வெளியே வந்தால் தான் வாழ்கை என்றும் இந்த பெரிய கடலில் எதிர்நீச்சல் போடமுடியும்.
நாம் நேசித்தவர்களிடம் அந்த நேசிப்பை கடைசிவரைக்கும் சொல்லாமலே விடும் வலி மிகவும் கொடியது ஆயுளுக்கும் அந்த வலி நின்று மெல்லக்கொல்லும்.ஆனால் வைஸ்னவி அக்கா தன் மனதில் உள்ளதை கிருபாவிடம் எம்.எஸ்சில் சொல்லிவிட்டேன் இனி எனக்கு பிரச்சனையில்லை நான் அவர் மீதான நினைப்பை மெல்ல மெல்ல மறந்துவிடுவேன் என்று சொன்னாலும்
அவரின் மனதில் இருந்து கிருபா மீதான நினைப்பு என்றும் அகலப்போவது இல்லை கால ஒட்டத்தில் அவர் மறந்து போனாலும் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் அந்த முதற்காதலின் வலி நிச்சயம் இருக்கும்..ஆன்மாவில் கலந்து போன சில வலிகள் ஆயுளுக்கும் மறைவதில்லை.
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா..........................
ஓடோடி வா..........................
காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
வைஸ்னவி அக்காவுக்கு மிகவும் பிடித்த பாடல் இது.........அவரது இதயம் கருகிய வாசத்தை கிருபாவின் நுரையீரகள் சுவாசிக்கவில்லை.ஆனால் கிருபாவின் சுவாசத்தை காற்றின் ஊடாக வைஸ்னவி அக்காவின் நுரையீரல்கள் சுவாசித்துக்கொண்டதால் தான் உயிரின் துளி காயும் முன்னே அவரது விழிகள் அவனை பார்பதற்காக ஏங்கியது................
சின்ன பூவொன்று பாறையை தாங்குமா
உன்னை சேராமல் என் விழி தூங்குமா
தனிமை உயிரை வதைக்கின்றது
கண்ணில் தீ வைத்து போனது நியாயமா
என்னை சேமித்து வை நெஞ்சில் ஓரமா
கொலுசும் உன் பேர் ஜபிக்கின்றது
தூண்டிலினை தேடும் ஒரு மீன் போலானேன்
துயரங்கள் கூட அட சுவையாகுது
இந்த வாழ்கை இன்னும் இன்னும் ரொம்ப ருசிக்கின்றது
காதல் சுகமானது
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது
ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா
நீயும் ஆனந்த பைரவி ராகமா
இதயம் அலை மேல் சருகானதே
உன்னை சேராமல் என் விழி தூங்குமா
தனிமை உயிரை வதைக்கின்றது
கண்ணில் தீ வைத்து போனது நியாயமா
என்னை சேமித்து வை நெஞ்சில் ஓரமா
கொலுசும் உன் பேர் ஜபிக்கின்றது
தூண்டிலினை தேடும் ஒரு மீன் போலானேன்
துயரங்கள் கூட அட சுவையாகுது
இந்த வாழ்கை இன்னும் இன்னும் ரொம்ப ருசிக்கின்றது
காதல் சுகமானது
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது
ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா
நீயும் ஆனந்த பைரவி ராகமா
இதயம் அலை மேல் சருகானதே
கடைசிவரைக்கும் கானல் நீராகவே வைஸ்னவி அக்காவின் காதல் மாறிப்போய்விட்டது.கிருபாவை சந்தித்து பேசவில்லை அவர் வெளிநாடு போய்விட்டால் மீண்டும் எப்போது அவர் அவனை பார்பாரோ தெரியாது.விதி எழுதிய பாதையில் பயணிக்கும் சாமானியர்கள் நாம் என்ன செய்யமுடியும்.
இந்த உலகில் பலரும் விரும்பிய வாழ்கையை வாழாமல் கிடைத்த வாழ்கையைத்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்.அதற்கு வைஸ்னவி அக்காவும் விதிவிலக்கு இல்லை. விதி என்ற ஒன்றை மீறி நம்மால் ஒன்றும் செய்யமுடியாது விதியின் விளையாட்டினால் நமக்கு எழுகின்ற ஏன்? எதற்கு? என்ற சில கேள்விகளுக்கு ஆயுளுக்கும் விடைகிடைப்பது இல்லை. விடை தெரியாத சில கேள்விகளுக்கு விடைதேடுவதிலே நம் வாழ்கைப் பயணம் முழுவதும் தொலைந்துபோய்விடும்.ஆனாலும் நம்மால் விடையை மட்டும் கண்டு பிடிக்கவேமுடியாது.
வைஸ்னவி அக்காவின் வாழ்கையை அவர் நம்பும் அந்த கடவுள் தான் நல்ல வழிகாட்டவேண்டும் என்று அவருக்காக நான் நம்பாத கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்
போனும் வேலை செய்யவில்லை எனவே வெளிநாடு போய்விட்டார் என்று நினைத்துக்கொண்டேன் அவர் சொல்லாமல் போனாலும் வைஸ்னவி அக்கா எங்க இருந்தாலும் நன்றாக இருக்கவேண்டும் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டேன்.
ஒரு இரண்டு வாரம் ஒடிமறைந்தது
மார்ச் மாதத்தில் முதல் வாரத்தில் எட்டாம் திகதி ஒரு நாள் காலையில்
நான் வேலைக்கு போய்க்கொண்டு இருக்கும் போது புது நம்பரில் இருந்து ஒரு கோல் வந்தது
எடுத்து பேசினேன் எதிர்முனையில் ஒரு ஆண்குரல்
ஹலோ ராம் அண்ணாவா
யா நீங்க யாரு?
நான் வைஸ்னவி அக்காவின் தம்பி கதைக்கிறேன்
யா சொல்லுங்க? வைஸ்னவி அக்கா எப்படி இருக்கார் எங்க போயிட்டாரா?
இல்லை அண்ணா வரும் 25ம் திகதிதான் போறார்
ஒக்கே கேட்டதாக சொல்லுங்க.
சரி அண்ணா?
உங்கட போன் எங்க வந்து தாரது?
(எனது போன் ஒன்று வைஸ்னவி அக்காவிடம் இருந்தது அவரின் போன் ஒன்று என்னிடம் இருந்தது இரண்டையும் மாற்றவேண்டும்.என்பதால்)
நான் இப்ப வேலைக்கு போய்கொண்டு இருக்கேன் தம்பி....நீங்க இப்ப எங்க நிற்குறீங்க?
நான் அழகாபுரியில நிக்குறன் வந்து ஒரு கிழமையாகிவிட்டது இன்று எங்கள் ஊருக்கு போகப்போகின்றோம்.
சரி தம்பி இரவு தானே வெளிக்கிடுவீங்க எங்கள் ஊரைக்கடந்துதானே உங்கள் ஊருக்கு போகனும் எனவே எங்கள் ஊரைக்கடந்து போகும் போது வந்து தருகின்றேன்
சரி அண்ணா பட் பஸ் உங்கள் ஊருக்கு வர இரவு எட்டு மணியாகுமே
அது பரவாயில்லை நான் வருகின்றேன் என்று சொல்லிவிட்டு வேலையில் மூழ்கிவிட்டேன்.மனசு முழுவது ஒரு வெருமை வைஸ்னவி அக்காமேல கோபம் ஒரு பக்கம் ஒரு போன் கூட எடுத்து சொல்லமுடியவில்லை.அவர் தம்பிதான் கதைக்கின்றான்.அப்படி அவருக்கு என்னில் என்ன கோபம் என்று நினைத்துக்கொண்டே வேலையில் இருந்தேன் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.
வைஸ்னவி அக்காவின் தம்பிக்கு போன் பண்ணினேன்
ஹலோ தம்பி நான் அழகாபுரிக்கு வருகின்றேன் அங்க நில்லுங்க வந்து சந்தித்து போனை மாற்றிக்கொள்ளாம்.
சரி அண்ணா என்று போனை கட் பண்ணிவிட்டார்
நாலு மணிக்கு எங்கள் ஊரில் இருந்து அழகாபுரி நோக்கி பஸ்சில் புறப்பட்டேன் ஒருமணித்தியால பயணம்.மனசு வெருமையாக கிடந்தது. வைஸ்னவி அக்காவின் தம்பி போன் பண்ணிகேட்டுக்கொண்டே இருந்தார் எங்க வந்திட்டீங்க வந்திட்டீங்க என்று.நானும் இந்த பஸ் வந்துவிட்டது இங்க வந்திட்டன் என்று நேரடி கமண்ட்ரி கொடுத்துக்கொண்டே போய்க்கொண்டு இருந்தேன்.
ஏதேர்ச்சையாக அந்த பாடல் ஒலித்தது ஆம் வைஸ்னவி அக்காவுக்கு மிகவும் பிடித்த பாடல்
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
ஏதேர்ச்சையாகத்தான் ஒலித்தது ஆனாலும் அந்த நேரம் ஏன் ஒலிக்கவேண்டும் இதுதான் விதியின் விந்தை.
அழகாபுரி பஸ்டாண்டில் இறங்கி வைஸ்னவி அக்காவின் தம்பிக்கு கோல் எடுத்தேன்..
ஹலோ தம்பி எங்க நிக்குறீங்க
அண்ணா நான் இந்த சிடிபி பஸ் நிப்பாட்டும் இடத்திற்கு பக்கத்தில் நிற்குறன் வாங்க
சரி என்று சொல்லிவிட்டு அங்கே போய்பார்த்தேன் காணவில்லை
மறுபடியும் கோல் எடுத்தேன்.
ஹலோ.................
எதிர்முனையில் பெண்குரல்..........
ஆம் நீங்கள் நினைப்பது சரிதான் வைஸ்னவி அக்காவின் குரல்தான்.........
ஆம் நீங்கள் நினைப்பது சரிதான் வைஸ்னவி அக்காவின் குரல்தான்.........
ராம் வந்திட்டீங்களா எங்க நிற்குறீங்க நாங்க இங்க 5ம் நம்பர் ஸ்டாண்டில் நிற்கிறம் வாங்க
அப்பத்தான் எனக்குத்தெரியும் வைஸ்னவி அக்காவும் அழகாபுரிக்கு வந்திருக்கார் என்று...........அதுவரை நான் நினைத்துக்கொண்டு இருந்தேன் அவரின் தம்பி மட்டும் தான் வந்திருக்கார்.வைஸ்னவி அக்கா வெளிநாட்டுக்கு போகமுன் ஒருக்கா பார்கலாம் என்றால் முடியவில்லையே என்று யோசித்துக்கொண்டு இருந்தேன் பட் அவரும் வந்திருக்கார் என்றது மனம் முழுவதும் ஒருவித இனம்புரியாத சந்தோசம்.அதே நேரம் வலியும் கூடவே வந்துவிட்டது இதுதானே இறுதிசந்திப்பு இனி எப்போது அவரை சந்திக்கப்போகின்றோம் என்று.
அவர் குறிப்பிட்ட 5ம் இலக்க ஸ்டாண்டிற்கு சென்றே அங்கே வைஸ்னவி அக்காவும் அவரது தம்பியும் நின்று கொண்டு இருந்ததார்கள்.
என்னைக்கண்டதும் வைஸ்னவி அக்கா கையை காட்டினார் இங்கே நிற்கின்றோம் வாங்க என்று
நேரம் மாலை 5-30
அவர்கள் இடத்தில் சென்ற எனக்கு பேச்சு வரவில்லை அவருக்கும் அப்படியே சிறுது நேர மெளந்த்தின் பிறகு நானே பேச்சுக்கொடுத்தேன் எப்படி இருக்கீங்க? என்று.வழமையான விசாரிப்புக்களுக்கு பிறகு.வாங்க ஒரு இடத்தில் அமர்ந்து பேசுவோம் என்று ஒரு இடத்தில் போய் அமர்ந்தோம்.தனது கைப்பையை திறந்து ஒரு பார்சலை எடுத்து என்னிடம் தந்தார்
என்ன என்றேன்
சின்ன கிஃப்ட் பாஸ் என்றார்
உடனே பிரிக்கபோனேன்
இங்க பிரிக்காதீங்க வீட்ட போய் பாருங்க
இல்லை எனக்கு பொறுமையில்லை நான் பிரித்துப்பார்க்கப்போகின்றேன்
சரி பிரிங்க என்றார்
பிரித்துப்பார்த்தேன் ஒரு அழகான மக் Mug
நன்றி
நன்றி எல்லாம் எதுக்கு பாஸ்.ஒரு சின்ன கிஃப்ட் கொடுக்கனும் என்று தோனுச்சி கண்ணன் சிலை ஒன்றுதான் வாங்கித்தருவம் என்று நினைத்தேன் பிறகு கடவுள் நம்பிக்கை இல்லாதவருக்கு அதைகொடுத்து என்ன செய்வது என்றுதான் இதை வாங்கினேன்..
நன்றி
அப்போதுதான் எனக்கு தோன்றியது அட நான் ஒரு கிஃப்டும் வாங்கவில்லையே என்று.எனக்கு வைஸ்னவி அக்கா வந்தவிடயம் தெரியாது.சரி ஏதாவது வேண்டி குடுப்பம் என்றால் அவருக்கு முன்னால் எப்படி வேண்டுவது.என்று நினைத்துக்கொண்டேன்.அப்போதுதான் எனக்கு அந்த ஜடியா தோன்றியது.
கிட்ட தட்ட 50 வருடங்களுக்கு பிறகு அப்பாவை அவரின் சொந்த நாடான இந்தியாவுக்கு அழைத்து போயிருந்தபோது அப்பாவின் உறவிணர் ஒருவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து ஞாபகார்ததமாக எனக்கு ஒரு இருபது ரூபாய் இந்திய காசை தந்திருந்தார்.அதை பத்திரமாக பேர்சில் வைத்திருந்தேன்.....
கிட்ட தட்ட 50 வருடங்களுக்கு பிறகு அப்பாவை அவரின் சொந்த நாடான இந்தியாவுக்கு அழைத்து போயிருந்தபோது அப்பாவின் உறவிணர் ஒருவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து ஞாபகார்ததமாக எனக்கு ஒரு இருபது ரூபாய் இந்திய காசை தந்திருந்தார்.அதை பத்திரமாக பேர்சில் வைத்திருந்தேன்.....
காசின் பெறுமதி இருபது ரூபாய் என்றாலும் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும். கடவுளின் ஆலயத்தில் வைத்து ஒருவர் தந்ததை அதுவும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற வரலாற்று தளத்தில் வைத்து தந்ததை அவரின் அன்புக்காக வாங்கி வைத்திருந்தேன்.புனிதமான ஒரு இடத்தில் வைத்து கடவுளை நம்பும் ஒருவர் எனக்கு அன்பாக தந்ததை
கடவுள் மேல் அளவுக்கு அதிகமாக நம்பிக்கைவைத்திருக்கும்,
என்னில் அன்பைப்பொழியும் வைஸ்னவி அக்காவுக்கு அந்த இருபது ரூபாய் நாணயத்தாளை(இந்திய காசு) விட உடனடியாக ஒரு புனிதமான கிஃப்டை குடுக்கமுடியாது எனவே அந்த காசை அவரிற்கு ஞாபகமாக கிஃப்டாக குடுப்பது என்று நினைத்துக்கொண்டேன்.
வாங்க ராம் ஏதாவது கூலாக குடித்துக்கொண்டே பேசலாம் என்று அருகே இருந்த ஒரு ரெஸ்ரோரண்டுக்குள் நுழைந்தோம்.
(தொடரும்)
|
2 comments:
வணக்கம்,பாஸ்!நலமா?///இன்றோடு தொடர் முடிந்து விடும் என்று நினைத்து வாசித்துக் கொண்டே போனேன்,'தொடரும்' அடைப்புக் குறிக்குள்.சூப்பர் திருப்பம் யா!
@Yoga.S.
நன்றி ஜயா எல்லாம் இந்த மெகாசீரியல்கள் பார்கிறதால வந்த ஜடியாதான் அவ்வ்வ்வ்வ்வ்வ்
Post a Comment