இது ஒரு கற்பனை பதிவுங்க,எமது நண்பர்கள் சேர்ந்து நாங்கள் ஒரு கிறிக்கெட் அணியாகவும் ,எமது அதிரடி அணியும்(நாங்களாக கூறிக்கொள்வது),எமக்கு பிடித்த நட்சத்திரகிறிக்கெட் அணியுடன் ஒரு T20 போட்டி விளையாடினால் அந்தப் போட்டி எப்படி இருக்கும்,
முதலில் அணி விவரத்தை பார்ப்போம்,
உலக நட்சத்திர அணி(உலக அணி வீரர்களை உங்களுக்கு தெரியும் என்பதால் அவங்க படத்தை போடவில்லை)
சச்சின்
சேவாக்
கங்குலி(தலைவர்)
பொண்டிங்
சங்ககாரா(வி.கீ)
யுவராஜ் சிங்
அப்ரடி
பிரட்லி
அக்தர்
முரளி(உபதலைவர்)
மெக்ராத்
எமது அணி/(படத்தைபார்க்க)
கிஸ்ணா(தலைவர்)
|
ஆரம்பதுடுப்பாட்டவீரர்
|
கே.எஸ்.எஸ்.ராஜ்(விக்கட்காப்பாளர்)
|
ஆரம்பதுடுப்பாட்டவீரர்
|
சுகந்தன்
|
துடுப்பாட்டவீரர்
|
விமல்
|
சகலதுறை ஆட்டக்காரர்
|
ஜியந்தன்(உபதலைவர்)/ அடம்பிடித்து உபதலைவர் ஆனவர்/
|
சகலதுறை ஆட்டக்காரர்
|
கிருபா
|
துடுப்பாட்டவீரர்(எமது அணியின் அப்ரடி(தன்னைத்தானே கூறிக்கொள்வவர்)
|
சுஜிதன்
|
பந்துவீச்சாளர்
|
சுஜிவன்
|
பந்துவீச்சாளர்
|
திலிப்
|
பந்துவீச்சாளர்
|
ரவீன்
|
பந்துவீச்சாளர்
|
புவி
|
பந்துவீச்சாளர்(அக்தர் என்று எம்மால் அழைக்கப்படுபவர்(வேகமாக பந்துவீசுவதாள் அல்ல)
|
இனி போட்டிக்கு வருவோம்.
நாணையச்சுழற்சி-உலக நட்சத்திர அணியின் தலைவர் கங்குலி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்து ஆடுவதாக அறிவித்தார்,
(நமது தலைவர் நாணையச்சுழற்சியில் தோற்று விட்டார்(இதில் கூட எமது அணியால் வெல்லமுடியவில்லை போட்டி எப்படி இருக்கப் போகுதோ)
சச்சினும் சேவாக்கும் ஆரம்பதுடுப்பாட்டவீரர்களாக களம் புகுந்தார்கள்,புவி
ஆரம்ப ஒவரை வீசினார்,
முதல் பந்தையே லிட்டில் மாஸ்டர் சச்சின் பவுண்டரிக்கு விளாசினார்(எத்தனை பந்து வீச்சாளர்களைப்பாத்திருப்பார்)
முதலாவது ஒவரில் 20 ஒட்டம் பெறப்படுகின்றது,
தொடர்ந்து எமது பந்து வீச்சாளர்கள்,சேவாக்கால் பந்தாடப்படுகிறார்கள்,சச்சினும் சேவாக்கும் ருந்திர தாண்டவம் ஆடினர்,
எமது கேப்டன் கிஸ்னாவோ பந்து வீச்சாளர்களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்தார் என்ன பயன்,
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல எமது பந்து வீச்சாளர்களின் நிலை
ஒருவாரு 10ஒவர் முடிந்தது,
நட்சத்திர அணி விக்கட் இழப்பு இன்றி 106 ஒட்டங்கள்,சச்சின் 40,சேவாக்61,உதிரிகளாக- 5ஒட்டங்கள்,
11 அவது ஒவரை ஜியந்தன் வீசினார்,
முதலாவது பந்தில் சச்சின் விக்கட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழக்கிறார்(அப்பாடா......)
தொடர்ந்து வந்த வங்கத்துப்புலி கங்குலி தன்பங்கிற்கு 1சிக்சர் 1பவுண்ரியுடன்,20 பந்தில் 15 ஒடடங்களைப்பெற்று,15 ஆவது ஒவரில் எமது அக்தரின்(புவி)பந்து வீச்சில்
போல்ட்டாகி வெளியேரினார்,அடுத்து வந்த ரிக்கி பொண்டிங்,எமது பந்து வீச்சாளர்களை இரக்கம் இன்றி விளாசினார்,மறு முனையில் சேவாக் வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார்,கடைசியில் 20 ஒவர் நிறைவில் உலக நட்சத்திர அணி 2 விக்கட்டுக்களை இழந்து 185 ஒட்டங்களைப்பெற்றுக்கொண்டது,சேவாக்,45 பந்துகளில் 5சிக்சர்,10 பவுண்ரிகளுடன் ஆட்டம் இழக்காது 85 ஒட்டங்களைப்பெற்றார்.
பொண்டிங் 30 பந்துகளில் 2சிக்சர் 4பவுண்ரியுடன்,ஆட்டம் இழக்காது 40 ஒட்டங்களைப்பெற்றார்.
உலக நட்சத்திர அணி துடுப்பாட்டம்
2 விக்கட் இழப்பிற்கு 185 ஒடடங்கள்(20 ஒவர்)
சச்சின் – 40out (c) கே.எஸ்.எஸ்.ராஜ்(b) ஜியந்தன்
சேவாக்-85*
கங்குலி-15(b) புவி
பொண்டிங்-40*
(உதிரிகளாக-5)
பந்து வீச்சு-புவி 4 over,1w,40 runs/ரவீன் 4 over,36runs/சுஜிவன் 4 over,44runs/திலீப் 2 over,22runs/ ஜியந்தன் 3 over,1w,18runs/சுஜிதன் 3over,25 runs/
|
எமது அணிதுடுப்பெடுத்து ஆட ஆரம்பித்தது,கிஸ்னாவும்,கே.எஸ்.எஸ்.ராஜ்யும் ஆரம்பவீரர்களாக களம் இறங்கினர்,
வேகப் புயல் பிரட்லி முதல் ஒவரை வீசினார்,நிதானத்துடன் எமது துடுப்பாட்டத்தை ஆரம் பித்தோம்,முதல் ஒவரில் எம்மால் 8 ஒட்டங்களைத்தான் பெறமுடிந்த்து,தொடர்ந்து நாம் மிக அவதானத்துடன் விளையாடிக்கொண்டிருந்தோம்,5 ஒவர்கள் முடிவில் எமது அணிவிக்கட் இழப்பு இன்றி 60 ஒட்டங்களைப்பெற்றது(வேகப்பந்து வீச்சாளர்ளை ஒரளவு எதிர் கொண் டோம்,இனி முரளியை என்னபண்ணுவது)பந்து வீச்சை போல் இல்லாமல் துடுப்பாட்டத்தில் நாங்கள் ஒரளவு நன்றாக ஆடிக்கொண்டிருந்தோம்,
ஆரம்பவிக்கெட்டுக்காக கே.எஸ்.எஸ்.ராஜ்,கிஸ்னாவும்,மிகச்சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தார்கள்,10 வது, ஒவரில் இந்த ஜோடியை, முரளிதரன் பிரித்தார்,கிஸ்னா 56 ஒட்டங்களைப்பெற்று முரளியின் சுழலில் போல்டானார்,முதல் விக்கட்டுக்காக இந்த ஜோடி100 ஒட்டங்களைச்சேர்த்தது,கிஸ்னாவின் ஸ்கோரில் 1சிக்சரும்,5 பவுண்ரியும் அடங்கும்,அடுத்த ஒவரில் அப்ரடியின் பந்தை பவுண்ரிக்கு அனுப்பிய கே.எஸ்.எஸ்.ராஜ் 50 ஒட்டங்களைப் பெற்றார்.கிஸ்னாவுக்குபிறகு வந்த சுகந்தன் 4 ஒட்டங்களை பெற்று அக்தரின் பந்தில் போல்டானார்,அடுத்து வந்தவிமல் மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார்,மறுமுனையில் கே.எஸ்.எஸ்.ராஜ்-60 ஒட்டங்களைப்பெற்று ஆடிக்கொண்டிருந் தார்,15 ஒவர் நிறைவில் எமது அணி 2விக்கட்டை மாத்திறம் இழந்து 140 ஒட்டங்களைப் பெற்று இருந்தது,வெற்றி பெற்று விடுவோமோ என்று நாம் நினைத்த பொழுது தான்,முரளியின் சுழலில் எமது அணியின் விக்கட்டுக்கள் சிதறின,
65 ஒட்டங்களைப்பெற்று கே.எஸ்.எஸ்.ராஜ்(3சிக்சர்,5பவுண்ரி)முரளியின் பந்துவீச்சில் முரளியிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து வந்த ஜியந்தன்,5 ஒட்டங்களைப்பெற்று மெக்க்ராத்தின் பந்தில் கங்குலியிடம் கேட்ச்கொடுத்து ஆட்டம் இழந்தார்,
அடுத்து கிருபா ஒட்டம் எதுவுப் பெறாமல்,மெக்ராத்தின் பந்தில் போல்ட்டானார்,
ஒரு முனையில் விக்கேட்டுக்கள் விழுந்தாலும்,மறுமுனையில் விமல் நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருந்தார்.
தொடர்ந்து சுஜிதன் 5 ஒட்டங்களுடன் முரளியின் பந்தில் போல்டாகினார்,அடுத்து சுஜிவன் ஒட்டம் எதுவும் பெறாமல்,முரளியின் பந்தில் விக்கட் காப்பாளர் சங்கக்காராவிடம் கேட்ச்கொடுத்தும்,திலிப் 5 ஒட்டங்களுடன் முரளியின் பந்தில் போல்டாகியும், ரவீன் ஒட்டம் எதுவும் பெறாமல் அப்ரடியின் பந்தில் போல்டாகியும்,புவி முரளியின் பந்தில் போல்டாகியும் ஆட்டம் இழக்க,(19.3over) எமது இனிங்ஸ் முடிவுக்கு வந்தது,
விமல் ஆட்டம் இழக்காது 30 ஒட்டங்களைப் பெற்றுக்கொண்டார்,175 ஒட்டங்களுக்கு சகலவிக்கட்டுக்களையும் இழந்து. 10 ஒட்டங்களால் தோல்லியடைந்தோம்.ஒருகட்டத்தில் 140 ஒட்டங்களுக்கு 2விக்கட் என்ற நிலையில் இருந்த் எமது அணி மேலும் 30 ஒட்டங்களைப்பெறுவதற்குள் எஞ்சிய 8விக்கட்டுக்களையும் இழந்தது,இருந்தாலும்
175 ஒட்டங்களைப்பெற்றதே எமது அணிக்கு பெருமைதான்,
கிஸ்ணா(தலைவர்)
|
56 out(b) முரளி
|
கே.எஸ்.எஸ்.ராஜ்(வி.கா)
|
65 out(c)&(b) முரளி
|
சுகந்தன்
|
4 out(b) அக்தர்
|
விமல்
|
30*not out
|
ஜியந்தன்(உபதலைவர்)
|
5 out(c) கங்குலி(b) மெக்ராத்
|
கிருபா
|
0 out(b) மெக்ராத்
|
சுஜிதன்
|
5 out(b) முரளி
|
சுஜிவன்
|
0 out(c)சங்கக்காரா (b) முரளி
|
திலிப்
|
5 out(b) முரளி
|
ரவீன்
|
0 out(b) அப்ரடி
|
புவி
|
0 out(b) முரளி
|
(உதிரிகளாக-5) Allout-19.3over(175runs)/
பந்து வீச்சு- முரளி 4 over,6w,30 runs/ மெக்ராத் 4 over,2w,35runs/ பிரட்லி 4 over,40runs/ அக்தர் 4 over,1w,35/ அப்ரடி 4 over,1w,35runs/
|
எப்படி இருந்தது கற்பனை கிறிக்கெட் போட்டி, பதிவுகளை வாசித்தபின் மறக்காமல்,உங்கள் கருத்துக்களை இட்டுச்செல்லுங்கள்,
|
0 comments:
Post a Comment