Monday, December 20, 2010

ச‌ச்சின் 50 வ‌து டெஸ்ட்ச‌த‌ம்/தற்போது விளையாடுகின்ற‌ வீர‌ர்க‌ளால் முடிய‌டிக்க‌முடியுமா?(Kss.Rajh)



கிறிக்கெட்டில் சாத‌னை ப‌டைப்ப‌தில் சாத‌னை ப‌டைக்கின்ற‌வ‌ரின் 1வ‌து டெஸ்ட்ச‌த‌ம்(1990/இங்கிலாந்து)
 

கிறிக்கெட்டில் சாத‌னை ப‌டைப்ப‌தில் சாத‌னை ப‌டைக்கின்ற‌வ‌ரின் 50வ‌து டெஸ்ட்ச‌த‌ம்(2010/ தென்னாபிரிக்கா)

கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் நேற்று புதிய வரலாறு படைத்தார். செஞ்சுரியன் மைதானத்தில் நடந்து வரும்,தென்னாபிரிக்காவிற்கு எதிரான‌ முதல் டெஸ்ட் போட்டியில்இந்தியா தோல்வியைத்த‌விர்க்க‌ க‌டுமையாகபோராடிவ‌ரும் நிலையில்,ச‌ச்சின்  மிக அருமையாக ஆடி தனது 50வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்து புதிய சாதனை படைத்தார்.

டெஸ்ட் வரலாற்றில் ஒரு வீரர் எடுக்கும் முதலாவது 50வது சதமாகும். இந்த வகையில் சச்சின் புதிய வரலாறு படைத்துள்ளார்.

மொத்தம் 197 பந்துகளைச் சந்தித்து தனது 50வது சதத்தை பூர்த்தி செய்தார் சச்சின். இதில் 12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடக்கம்.
சச்சின் சதமடித்ததும் ஒட்டுமொத்த ஸ்டேடியத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி சச்சினைப் பாராட்டினர். தென் ஆப்பிரிக்க வீரர்களும் சச்சினின் சதத்தை வரவேற்றனர்.
இந்த‌ சாத‌னையை இன்னும் ஒரு வீர‌ரால் முடிய‌டிக்க‌முடியுமா?தற்போது விளையாடுகின்ற‌ வீர‌ர்க‌ளால் முறிய‌டிப்ப‌து அவ்வ‌ள‌வு எளிதான‌து அல்ல‌,ஏன் எனில் டெஸ்போட்டியில் அதிக‌ ச‌த‌ம் பெற்ற‌வ‌ர்க‌ள் வ‌ரிசையில் ச‌ச்சினுக்கு அடுத்த‌ இட‌த்தில் உள்ள‌ அவுஸ்ரேலிய‌ கேப்ட‌ன் ரிக்கி பொண்டிங் 39 ச‌த‌ங்க‌ளைத்தான் எடுத்துள்ளார்.

இந்த‌ வ‌ய‌திலும் சத‌ங்க‌ளாக‌ விளாசுவ‌த‌ற்கு ச‌ச்சினால் ம‌ட்டும் எப்ப‌டி முடியுது?
ந‌ம்ம‌லால‌ முடியாது.
 ஆனால் த‌ற்போது 36 வ‌ய‌தாகும் பொண்டிங்கால் ச‌ச்சினை நெருங்குவ‌து என்ப‌துக‌டின‌ம், கார‌ண‌ம் ச‌ச்சினுக்கு வ‌ய‌து அதிக‌ரிக்க‌ அதிக‌ரிக்க‌ அவ‌ர‌து ஆட்ட‌த்திற‌ன் மேம்ப‌டுகின்ற‌து,ஆனால் பொண்டிங்கின் அண்மைக்கால துடுப்பாட்ட‌ம் மிக‌மோச‌மாக‌ உள்ள‌து,ஒரு வேளை பொண்டிங் டெஸ்ட்டில் 50 ச‌த‌ங்க‌ள் எடுத்தாலும்,ச‌ச்சினை முந்துவ‌து என்ப‌து க‌டின‌மே,த‌ற்போது ச‌ச்சினின் ஆட்ட‌த்தை பார்க்கும் போது அவ‌ர் ஒய்யு பெறும் போது இன்னும் 15,20,ச‌த‌ங்க‌ளாவ‌து எடுக்க‌ளாம்,என‌வே பொண்டிங்கால்,ச‌ச்சினை முந்துவ‌து என்ப‌து க‌டின‌மே,
ந‌ம்ம‌லால‌ ச‌ச்சினை முந்த‌ முடியுமா?
பொண்டிங்க்கு அடுத்த இட‌த்தில் உள்ள‌ தென்னாவிரிக்காவின் ச‌க‌ல‌துறை வீர‌ர் ஜ‌க்க‌லிஸ் 38 ச‌த‌ங்க‌ள் எடுத்துள்ளார். அவ‌ர் த‌ற்போது மிக‌ச்சிற‌ப்பான‌ துடுப்பாட்ட‌த்தை வெளிப்ப‌டுத்தி வ‌ருகின்றார்,
எனினும் க‌லிஸ்சுக்கு த‌ற்போது 35 வ‌ய‌து ஆகின்ற‌து,ச‌ச்சினுக்கு 37 வ‌ய‌து என்ப‌தால் இருவ‌ரும் ச‌ம‌கால‌த்தில் பெற‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் உள்ள‌து,அப்ப‌டி க‌லிஸ் ச‌ச்சினை விட‌ 2,3ஆண்டுக‌ள் அதிக‌மாக‌ விளையாடினாலும்,க‌லிஸ் சில‌வேளை 50 ச‌த‌ங்க‌ள் எடுத்தாலும்,ச‌ச்சினை முந்த‌முடியாது,ஏன் எனில் ச‌ச்சின் ஒய்வு பெறும் போது குறைந்த‌து இன்னும் 15,ச‌த‌ங்க‌ளாவ‌து எடுப்பார் என‌வே ச‌ச்சினை க‌லிஸ் முந்த‌முடியாது,
த‌ற்போது விளையாடும் வீர‌ர்க‌ளில் அதிக‌ ச‌த‌ம் எடுத்துள்ள‌ வீர‌ர்க‌ளான‌ ராகுல்திராவிட்(31 ச‌த‌ம்)ச‌ச்சினின் வ‌ய‌து தான்,என‌வே திராவிட்டால் ச‌ச்சினை முந்த‌ முடியாது,இல‌ங்கையின்
ம‌கேல‌ ஜெய‌வ‌ர்த்த‌ன‌(33வ‌ய‌து)28ச‌த‌ம்/ச‌ங்க‌கார‌(33வ‌ய‌து)-23ச‌த‌ம்/இந்தியாவின் சேவாக்(32வ‌ய‌து)-22ச‌த‌ம்/, போன்றோரும் ச‌ச்சினின் சாத‌னையை முறிய‌டிப்ப‌து க‌டினமே ,என‌வே ச‌ச்சினின் டெஸ்போட்டிக‌ளில் அதிக‌ ச‌த‌ம் எடுத்த‌ சாத‌னை நீண்ட‌கால‌த்திற்கு நிலைத்து நிற்கும் என்ப‌தில் ச‌ந்தேக‌ம் இல்லை,இதை ம‌ட்டும் அல்ல‌ ச‌ச்சினின்,ஒரு நாள் போட்டிக‌ளில்,17000 ஒட்ட‌ங்க‌ளுக்கு மேல் குவித்துள்ளார்,46 ச‌த‌ங்க‌ளையும் விளாசியுள்ள‌ ச‌ச்சின் விரைவில் ஒருநாள் போட்டிக‌ளிலும் 50வ‌து ச‌த‌த்தை எடுப்பர் என‌ எதிர்பார்க‌க‌ளாம்,(ஒரு நாள் போட்டிக‌ளில் ச‌ச்சின் இர‌ட்டைச்ச‌த‌த்தை எடுத்த‌த‌ற்கு பிற‌கு, அண்மையில் இந்தியாவிளையாடிய‌ நிறைய‌ போட்டிக‌ளில் ச‌ச்சின் விளையாட‌வில்லை,நிறைய‌ போட்டிக‌ளில் அவ‌ருக்கு ஒய்யு அளிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து இல்லை எனில் ஒரு நாள் போட்டிக‌ளிலுமம் இன்னேர‌ம் 50 ச‌த‌ங்க‌ளை எடுத்திருப்பார்)
என‌வே கிறிக்க‌ட்டின் க‌ட‌வுள் என‌ போற்ற‌ப்ப‌டும் லிட்டில் மாஸ்ட‌ர் ச‌ச்சினின்,சாத‌னைக‌ள் முறிய‌டிப்ப‌தாயின் இன்னொரு வீர‌ர் ச‌ச்சினைப்போல் 16 வ‌ய‌தில் அறிமுக‌மாகி 20 ஆண்டுக‌ளுக்கு மேல் விளையாடினால் ஒரு வேளை சாத்திய‌மாக‌லாம்,எவ்வாராயினும் ச‌ச்சினின் சாத‌னைக‌ள் கிறிக்கெட் உல‌கில் நீண்ட‌கால‌த்திற்கு நிலைத்து நிற்கும்.

 

Post Comment

0 comments:

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails