எனக்கு காதல் என்றால் பிடிக்காது.பிறகு ஏன் இந்தப்பதிவை எழுதினேன் என்று யோசிக்கின்றீர்களா.காரணம் உள்ளது இன்றய இளசுகள் ஏதோகாதல் ஒரு அத்தியாவசிய தேவை போலவும்(நான் படித்திருக்கிறேன் மனிதனின் அத்தியாவசிய தேவைகள்-உணவு,உடை,உறையுள்(தங்கும் இடம்/வீடு)என்று). காதல் இல்லை என்றாள் உயிர் வாழமுடியாது போலவும்.படிக்கிற வயதில் படிப்பை கவனிக்காமல் காதல் என்று சுத்தி திரியுரார்கள்.
அன்பான சகோதர சகோதரிகள்! படிக்கிற போது தயவு செய்து காதல் வேண்டாம்.
நன்றாக படித்தோ அல்லது உங்களுக்கு ஆர்வமான துறைகளில் முதலில் ஒர் நிலையை அடையுங்கள் வாழ்க்கையை நேசித்து அதில் பக்குவப்படுங்கள்.பிறகு தாராளமாக காதலியுங்கள்.
மனிதன் தோன்றிய காலம் தொட்டே காதலும் தோன்றியது.இந்த வார்த்தைக்குத்தான் எவ்வளவு வலிமை.காதல் ஒர் அற்புதமான உணர்வு காதலிப்பதும்,காதலிக்கப்படுவதும் இனிமையான விடயம்.
நான் காதலிக்கவில்லை எனக்கு காதல் வந்தது இல்லை என்று யாரும் சொல்ல முடியாது ஏன் என்றாள் எதோஒரு வகையில் எல்லோரும் நிச்சயம் காதல் வயப்பட்டிருப்போம்.அது சிலவேளைகளில் நாம் நேசித்தவர்களிடம் அதை வெளிபடுதாமலே விட்டிருக்களாம். அல்லது மனதுக்குள்ளே போட்டு அந்தக்காதலை புதைத்திருக்களாம்.அல்லது நமக்கு பிடித்தவர்களை பார்கின்ற போது அட இவர் நமக்கு வாழ்க்கை துணையாக வந்தாள் எப்படி இருக்கும் என்று மனதுக்குள்ளே நினைத்திருப்போம்.மொத்தத்தில் நிச்சயம் ஒரு நொடியேனும் காதல் வசப்பட்டிருப்போம்.
மனதுக்கு பிடித்தமானவர்களை நேசிக்கும் போது மூளையில் ஏற்படும் கோர்மோன்களின் மாற்றமே காதல் என்று சாதரனமாக சொல்லிவிடமுடியாது, ஏன் என்றாள் காதல் உயிரில் கலந்த உன்னத உணர்வு.ஆனால் இன்றைக்கு காதல் இளைமைக்கு தீனி போடும் ஒரு விடயமாக மாறிவிட்டது.தமிழில் அழகான ஒரு பழமொழி உள்ளது ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று.இது தான் இன்றைக்கு பலரது காதல்.
எத்தனை காதல் கதைகள் நம் சமூகதில் பார்த்திருப்போம்.காதலனை கைவிட்ட காதலி அல்லது காதலியை கைவிட்ட காதலன்,கள்ளக் காதலனுடன் ஒடிய மனைவி.வெளிநாட்டு மாப்பிளையை திருமணம் செய்வதற்காக காதலை மறந்த காதலி.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.தற்போது காதலால்தான் பல குற்றச்செயல்களும்,கலாச்சார சீரழிவுகளும் அதிகமாக நடக்கிறது என்றாள் மிகையாகது.
இதற்கு பிரதான காரணம் படிக்கிறவயதில் வாழ்க்கையில் பக்குவம் வராத வயதில் வரும் காதல் தான்.தமிழர்களின் கலாச்சாரம் என்றதும் உடனே நினைவுக்கு வருவது யாழ்ப்பாணம்.சிவாஜி படத்தில் கூட ஒரு காட்சிவரும் ரஜனிகாந் விவேக்கிடம் சொல்லுவார் தமிழ்கலாச்சாரம் தெரிந்த ஒரு பெண்ணைப்பார் கல்யாணம் செய்யுறதுக்கு என்று.அதற்கு விவேக் சொல்லுவார் இப்ப எங்கப்பா அப்படி பொண்ணுங்க இருக்காங்க தேடிப்பாப்பம் இல்லாட்டி நேர யாழ்ப்பாணம் போக வேண்டியதுதான் என்று.ஆனால் யாழ்ப்பாணத்தில் படிக்கிற மாணவர்களில் பலர் பாடசலைக்கு போகிறார்களோ இல்லையோ தமது காதலர்களுடன் திரிகிறார்கள்.இதனால் பல கலாச்சரா சீரழிவுகள் நடை பெறுகின்றதை பத்திரிகைகளிலும் செய்திகளிலும் கேள்விப்படுகின்றோம்.
தன்னுடைய காதல் உண்மைக்காதல் என்று வசனம் பேசித்திரியும் என் நண்பனின் காதல் கதையை பாருங்கள் அவன் பாடசாலையில் படிக்கிற போது அவனை ஒரு பெண் காதலித்துள்ளாள். இவனும் அவளுடைய காதலை ஏற்றுக் கொள்கின்றான் இப்படி இருக்கும் போது சந்தர்ப்ப வசத்தால்(உப்பு சப்பில்லாத பிரச்சனைக்காக காதலர்கள் பிரியும் போது அவர்கள் பயன் படுத்தும் வார்த்தை)
பிரிந்து விட்டார்கள்.பிறகு அவன் இடையில் வேறு பெண்களை காதலித்து நொந்து நூளாகி சிறிதுகாலம் காதலிக்காமல் இருந்தான். பிறகு மறுபடியும் ஒரு பெண்ணை காதலித்தான் அப்போது அன்பாள் என்னை கட்டி போட்டு விட்டாள் என்று வசனம் பேசிதிரிந்தான் பிறகு என்ன நடந்ததோ அவளுடனான காதலும் ஊத்திகிச்சு பிறகு மறுபடியும் படிக்கிறபோது தன்னைக்காதலிச்ச பெண்ணையே சந்தித்து மறுபடியும் அவர்கள் இப்போது காதலிக்கிறார்கள்(இதில் இன்னொரு வேடிக்கை என்ன வென்றால் இந்தப்பெண் இவனை காதலிக்க முன்பு.இவன் ஒருத்தியை ஒருதலையாக காதலித்தும் அவள் இவனது காதலை ஏற்றுக்கொள்ளாததும் வேறு கதை)
இவன் இப்ப உண்மைக்காதல் தன்னுடையது என்று வசனம் பேசித்திரிகிறான்.
இந்த கொடுமையை என்னான்னு சொல்ல.யோசித்து பாருங்கள் இதற்கு பேர் உண்மைக்காதலா?இவர்களது காதல் பிரிந்திருந்த போது இவன் பலபேரை காதலித்தது மாதிரிஏன்அந்தப்பெண்ணும் பலரை காதலித்திருப்பாள்தானே இதற்கு பேர் காதலா?( இதில் இன்னொரு விடயம் அந்தப்பெண் இப்போது உயர்தரத்தில் படித்துக் கொண்டு இருக்கிறாள் படிக்கிற வயசுல இது தேவையா)
எனவே காதல் ஒரு அருமையான உணர்வு அதை கேவலப்படுத்தாதீர்கள். அன்பான சகோதர சகோதரிகள்! படிக்கிற போது தயவு செய்து காதல் வேண்டாம்.
நன்றாக படித்தோ அல்லது உங்களுக்கு ஆர்வமான துறைகளில் முதலில் ஒர் நிலையை அடையுங்கள் வாழ்க்கையை நேசித்து அதில் பக்குவப்படுங்கள்.பிறகு தாராளமாக காதலியுங்கள்.
அன்பு உள்ளங்களில் ஊற்று எடுக்கும் அற்புதமான நதி காதல்.
|
4 comments:
அழகான பதிவு.காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் சுகமான உணர்வுகள்.அதிலும் பதிவின் கடைசியில் எழுதப்பட்டுள்ள-அன்பு உள்ளங்களில் ஊற்று எடுக்கும் அற்புதமான நதி காதல்.என்ற வரிகள் சூப்பர்,உங்கள் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
காதல் பற்றி அருமையான கருத்துக்கள்... வாழ்த்துக்கள்
நன்றி நண்பர்களே வளர்ந்து வரும் பதிவரான எனக்கு உங்களைப்போன்றோர்களின் வாழ்த்துக்கள் எனது எழுத்து ஆர்வத்தை மேலும் அதிகரிக்க உதவும்.
மிக அருமையான கருத்து
ரா.சிவக்குமார்
Post a Comment